Thottal Thodarum

Jun 29, 2013

Balupu

 ரவி தேஜா ஒரு பேங்க கலெக்டிங் ஏஜெண்ட், அவரது அப்பா, ப்ரகாஷ்ராஜுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ப்ரம்மானந்தமும், ஸ்ருதியும் பணக்கார வீட்டு ஆட்கள், பொழுது போக்கிற்கு இளவயது பையன்களை காதலிப்பதாய் சொல்லி அவர்களிடமிருந்து பணம் பறித்து அழ விடுவதுதான் இவர்களது வாடிக்கை. இவர்களின் ஆட்டம் தெரிந்த ரவிதேஜா ஸ்ருதிக்கு பாடம் புகட்ட நினைத்து பழக, அவர்களுக்குள் காதல் உண்டாகிறது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் வில்லன் கும்பல் ஸ்ருதியை கடத்துகிறது. அவர்கள் தேடி வந்த ஷங்கரும், நானாஜியும், வந்தால்தால் தான் ஸ்ருதியை விடுவோம் என்று சொல்ல, பின்பு என்னவாகிறது என்பதுதான் கதை.

Jun 25, 2013

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ மங்களாம்பிகா

 
வெஜ் உணவு என்றால் சென்னையை பொருத்தவரையில் பதினோரு மணிக்குள் தேடினால் தான் கிடைக்கும். அதற்கு மேல் நல்ல சுவையான குவாலிட்டியான வெஜ் உணவு என்றால் நிச்சயம் ரோடு ரோடாய் அலைய வேண்டியதுதான். அந்த வகையில் 11.30 வரை அசோக் நகர் சரவண பவன் தான் கை கொடுக்கும். 3ஸ்டார் ஓட்டல் விலையென்றாலும், நல்ல சுவையான வயிற்றைக் கெடுக்காத உணவு நிச்சயம் என்பதால் பெரும்பாலான நேரங்களில் இரவில் சரவணபவனே தஞ்சம். சாப்பிட்டதற்கான பில் கொடுத்த அடுத்த நிமிடம் எடத்தை காலி பண்ணு என்று வெளியே துறத்தும் உணவகங்கள் இருக்குமிடத்தில், அதுவும் மூடுகிற நேரத்தில் நின்று நிதானித்து வேறெதுவும் வேண்டுமா என்று கேட்டு விட்டு கல்லாவை மூடும் பண்பிற்காகவே இங்கே சாப்பிட போகலாம். அசோக்நகரில் இவர்களுக்கு பதிலாய் இன்னொரு சைவ ஓட்டல் திறக்காதா? என்று யோசித்துக் கொண்டிருந்த போதே அசோக்நகர் கிட்டத்தட்ட சரவணபவன் ரிப்ளிக்காவில் ஒரு பாஸ்ட் புட் உணவகத்தை 7வது அவின்யூவில் திறந்திருந்தார்கள். அவர்களைப் போலவே ஓப்பன் கிச்சன். நின்று கொண்டும், உட்கார்ந்து சாப்பிடும் வசதியென்று. மங்களாம்பிகா என்ற பெயரில் இவர்கள் ஏற்கனவே கல்யாண கேட்டரிங் செய்து பிரபலமானவர்கள். இவர்களின் முதல் உணவகம் இது.

Jun 24, 2013

கொத்து பரோட்டா-24/06/13

விலையில்லா பொருட்களில் ஆரம்பித்து, மலிவு விலையில் உணவகம் தந்த வெற்றி, மேலும் அம்மாவை அம்மா வாட்டர், அம்மா காய்கறிக்கடை என்று ஆரம்பிக்க வைத்திருக்கிறது. வெளியே விற்கும் பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்படும் மக்களை காப்பாற்றவே இந்த முயற்சி என்று உட்டாலக்கடி அடித்தாலும், அரசின் இயலாமையைத்தான் காட்டுகிறது. ஒரு மாநிலத்தில் விலைவாசி உயர்கிறது என்றால் அதை கட்டுக்குள் கொண்டு வர அந்த மாநில ஆட்சியாளர்கள் தான் செய்ய முடியும். ஆனால் அதை விடுத்து, அரசே அதற்கு மானியம் கொடுத்து மானிய விலையில் கடை விரிக்கிறேன் என்று ஆரம்பிப்பது சரியான வழியாய் தெரியவில்லை. பத்து ரூபாய்க்கு  தண்ணீர் பாட்டில் என்று இன்றைக்கு அறிவித்தாலும், பிற்காலத்தில் அதே தண்ணீரை பிரிட்ஜில் வைத்து மேலு ஐந்து ரூபாய் வாங்கத்தான் போகிறார்கள் அதை நாமும் கேட்காமல் வாங்கிக் கொண்டுதான் வருவோம். நிச்சயம் மற்ற வாட்டர் கம்பெனிக்காரர்களின் லாபியிங்கை அரசு தடுக்க முடியாது. அல்லது முயற்சிக்காது. ஒரு வேளை பஸ் ஸ்டாண்டுகளில் அரசு அம்மா தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் விற்ககூடாது என்கிற மோனோபாலி விஷயத்தை அமல்படுத்தினால் ஓகே ஆகலாம். இது வரை அம்மா உணவகம் நல்ல படியாய் நடந்து கொண்டிருந்தாலும் அதனால் சுற்றியுள்ள கடைகளில் விலை குறைந்த பாடில்லை. அதே நிலைதான் காய்கறி கடைகளுக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. அரசு நினைத்தால் இம்மாதிரியான விஷயங்களில் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமான இடைதரகர்களை ஒழித்து, எம்.ஆர்.பியில் விற்கும் முறையை தயவு தாட்சண்யம் பாராமல் அமல் படுத்தினால் நிச்சயம் நடக்கும். ம்ம்ம்.. எங்கே.. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வாங்குவதையே தடுக்க முடியவில்லை. போகிற போக்கில் பார்த்தால் தமிழ்படத்தில் வருவது போல, அம்மா.. ஹாஸ்பிட்டல், ஓட்டல், பார், தண்ணீர், ஏர்போர்ட் என்று லைனாக ஆரம்பித்துவிடுவார்கள் போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 22, 2013

Raanjhanna

சில படங்களை ட்ரைலர் பார்த்த மாத்திரல் பிடிக்க ஆரம்பித்துவிடும். சிலதை நாலு பேர் சொல்லி அப்புறம் பார்க்க விரும்பம் ஏற்படும். இந்தப் படம் முதல் வகை. அதற்கு காரணம் முதல் முறையாய் தனுஷ் ஹிந்தியில். அடுத்தது ஏற்கனவே ஹிட்டடித்த தனு வெட்ஸ் மனுவின் இயக்குனர் இயக்கியது. மூன்றாவது காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்.

Jun 21, 2013

Inglorious Basterds


குவாண்டின் இவரது பாதிப்பில்லாத இளைய தலைமுறை இயக்குனர்கள் இருப்பார்களா என்று சந்தேகமே. இவரின் படங்களை விரும்ப ஆரம்பித்தவர்கள் கிட்டத்தட்ட போதைக்கு அடிமையானவர்களைப் போல. அவரிடமிருந்து விடுபட முடியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார்கள். பஃல்ப் பிக்‌ஷனை இன்றைக்கு ரிப்ரெஷ் செய்து கொள்ள பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புதியதாய் ஒரு விஷயம் புலப்படும்.  

Jun 20, 2013

சினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து.

ஆமாம் இன்னொரு ஆபத்துதான். ஏற்கனவே டிக்கெட் விலையேற்றத்தாலும், பைரஸியினாலும், நொந்து நூலாகிப் போய் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் வாழ்நாளே மூன்று வாரங்கள் தான் என்று வந்துவிட்ட நிலையில் இருக்கிற தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு ப்ரச்சனை உருவாகியிருக்கிறது. அதைப் பற்றி இப்போதே திரைத் துறையினர் யோசித்து முடிவெடுக்க முடியவில்லையென்றால் இன்றைய நிலையில் வருமானம் வந்து கொண்டிருக்கும் மல்ட்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸையும் நாம் இழந்துவிடுவோம்.

Jun 19, 2013

Man Of Steel

சமீப காலமாய் சூப்பர் ஹீரோ படங்களை பார்ப்பதற்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் தான் சூப்பர் ஹீரோ என்ற விஷயத்தை மீறி அவனும் ஒர் சாதாரணன். அவனுக்கு உணர்விருக்கிறது, காதல் இருக்கிறது என்று பழைய எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் தூசு தட்டி படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் நோலன் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே போய் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோவை ஏசு ரேஞ்சுக்கெல்லாம் தூக்கிப்பிடிப்பதை பார்க்கும் போது இனி ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்பேனா என்று சந்தேகமே.

Jun 18, 2013

Ankur Arora Murder Case

அங்கூர் ஆரோரா என்கிற சிறுவன் வயிற்று வலி காரணமாய்  ஷெகாவத் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு சாதாரண அப்பண்டிஸ் ஐய்டீஸ் என்று முடிவெடுக்கப்பட்டு ஆபரேஷன் நடக்கிறது. ஆபரேஷனுக்கு முன் வாய் மூலமாய் ஏதும் சாப்பிடக் கூடாது என்ற விதியை சிறுவன் மீறி விடுகிறான். ஆனால் அதை ஆபரேஷனுக்கு முன் சொல்லியும் விடுகிறான். ஆனால் அதை கண்டு கொள்ளாத சீப் டாக்டர் கே.கே.மேனன் ஆபரேஷன் செய்துவிடுகிறார். வெற்றிகரமாய் முடிக்கப்பட்ட ஆபரேஷனுக்கு பின் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிறுவன் கோமாவுக்கு போய் இறந்துவிடுகிறான். ஆஸ்பிட்டலில் இருக்கும் நேர்மையான ட்ரையினி டாக்டர் ஒருவரால் அது டாக்டரின் கவனமின்மை காரணமாய் ஏற்பட்டது என்று தெரிய கோர்டுக்கு வருகிறது கேஸ். பின்பு என்ன ஆனது என்பது தான் கதை.

Jun 17, 2013

கொத்து பரோட்டா -17/06/13

நேற்று கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக எக்மோர் சென்றிருந்தேன். அமிர்தம் சூர்யா, வளர்மதி, லதா சரவணன், எஸ்.சங்கர நாராயணன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வந்திருந்து வாழ்த்தி புத்தகத்தைப் பற்றிய கருத்துகளை சொன்னார்கள். எனக்கு அமிர்தம் சூர்யாவை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதுவரை அவர் கலந்து கொண்டு பேச வேண்டிய புத்தகத்தைப் பற்றி படிக்காமல் வந்து பேசியதேயில்லை. முழுக்க படித்து, அப்புத்தகத்தைப் பற்றிய மிக இயல்பான விமர்சனத்தோடு சுவாரஸ்யமான பேச்சை பேசுவார். நேற்றும் அப்படித்தான் ஒரிரு கவிதைகளை படித்துக் காட்டியவர் அக்கவிதைகளை வரி பிரித்து சொல்லும் போது நிறைய அர்த்தங்கள் புரிபட ஆரம்பித்தது. கவிதைகளை எப்படி படிக்க வேண்டும் என்று புரிய ஆரம்பித்தது. கவிதைக்கும் எனக்குமான தூரம் அதிகம் என்று நினைப்பில் கவனமில்லாம இருந்த என்னைப் போன்றவர்களுக்கு அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு இன்ஞ் முன்னேறியிருக்கிறது  என தோன்றியது. நன்றி அமிர்தம் சூர்யா.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 16, 2013

Yeh Jawaani Hai Deewani

 நூறு கோடி வசூல். சூப்பர் ஹிட் என்றெல்லாம் செய்தி வந்தாலும் எப்படி இம்மாம் பெரிய படம் ஹிட்டானது என்று குழப்பமாகவே இருக்கிறது. வழக்கமான டெம்ப்ளேட் காதல் கதை. அதிலும் கரன் ஜோகர் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு ஓடுகிறது.

Jun 15, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு!!

காதலித்து கல்யாணம் செய்து கொள்வதையே பரம்பரை பெருமையாய் கொண்ட  குடும்பத்தின் பெருமையை குலைப்பதற்காகவே பெண்கள், காதல் என்றாலே எட்டிக்காயாய் கசந்து திரியும் இளைஞனாய் வலைய வருகிறார் சித்தார்த். காரணம் பெண்களால் ஏமாற்றப்பட்டது வலி மிகுந்த நிகழ்வுகள். இவராய் காதலிக்கலாம் என்று நினைத்தாலும் ஒர்க்கவுட் ஆகாமல் இருக்கும் நேரத்தில் சந்தானம் என்கிற லவ் குருவின் கைடன்ஸில் தன் ஆபீஸில் புதியதாய் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை மடக்க எத்தனிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் லவ் ஐடியாக்கள் ஓகே ஆகிவிடுகிறது.  அப்போதுதான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது சித்தார்த்துக்கு ஐடியா கொடுத்து மடிக்க சொன்ன பிகர் தன் தங்கை என்று. பின்பு அண்ணனாய் அவர்களின் காதல பிரிக்க முயற்சிக்கிறார் சந்தானம். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.

Jun 14, 2013

தில்லு முல்லு


ஹிந்தியில் கோல்மாலாய் வந்து பெரும் வெற்றி பெற்ற படம். பின்பு அதே படத்தை தமிழில் ரஜினி, பாலசந்தர் காம்பினேஷனில் வெளிவந்து, தமிழ் சினிமாவின் க்ளாஸிக்காய் இருந்து வரும் படம் தில்லு முல்லு. அந்த படத்தை மீண்டும் ரீமேக்கி வெளிவந்திருக்கும் படம். இத்திரைப்படத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன். நேற்றைக்கு பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யோக காட்சி திரையிட்டார்கள். மொத்த தியேட்டரும் குலுங்கி, குலுங்கி சிரித்ததை பார்த்த போது மகிழ்ச்சியாய் இருந்தது. ரசிகர்களுக்கும் அதே மகிழ்ச்சியும் சந்தோஷமும்  தொடரும் என்ற நம்பிக்கையோடு.. 
கேபிள் சங்கர்

Jun 10, 2013

கொத்து பரோட்டா-10/06/13

மாலை நேரங்களில் சாலிக்கிராமத்திலிருந்து வடபழனி பஸ்ஸ்டாண்ட் வருவதற்கு தாவூ தீர்ந்து விடுகிறது. சரி அங்கே வந்த பிறகாவது வடபழனி வரை ஈஸியாய் போய்விட முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. முக்கியமாய் அருணாசலம் சாலையிலிருந்து கே.கே.சாலைக்கு திரும்பும் வண்டிகள், அம்பிகா எம்பயரிலிருந்து ப்ரசாத் லேப் பின் பக்கம் இருக்கும் ஏரியாவிலிருந்து வரும் வண்டிகள், எதிர்புறம் வரும் வண்டிகள் என்று பாட்டில் நெக் இடமாய் அமைந்துவிட்டது. மாலை நேரங்களில் அங்கே போலீஸாரை போட்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தலாம். நேற்று ஆறரை மணிக்கு காரெடுத்து கிளம்பவன் அடுத்த நூறு மீட்டர் போவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆனது. அதுவும் நான் போக வேண்டிய ரோட்டுக்கு போக முடியாமல் மேலும் அரை மணி நேரம் காத்திருந்தும் பிரயோஜனமில்லாமல் கிலோ மீட்டர் சுற்றி போய் அங்கேயும் கொஞ்சம் நேரம் ட்ராபிக்கில் மாட்டி மெயின் ரோடை பிடித்தேன். ஏற்கனவே ஒரு கொத்து பரோட்டாவில் சொல்லியிருந்தது போல, வடபழனியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மாலில் உள்ள தியேட்டர்கள் திறந்தவுடன் தான் தெரிய போவுது வடபழனியின் லட்சணம். கொஞ்சம் கவனிங்க போலீஸ் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@

Jun 7, 2013

கேட்டால் கிடைக்கும் - விஜயா ஃபோரம் மால் வடபழனி

கேட்டால் கிடைக்கும் இந்தக்குழுவை முகப்புத்தகத்தில் ஆரம்பித்த போது நிறைய கிண்டலும் கேலியும் இருக்கத்தான் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர, வளர, குழுவிலிருப்பவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். சமுதாயத்தில் ஒவ்வொரு சாதாரணனுக்கும் மறுக்கப்படும் அவனது உரிமைகளை கேட்டுப் பெற வேண்டிய நிலையை குறைக்க வேண்டுமென்பதே அக்குழுவின் இலக்கு. அப்படி கேட்டுப் பெற்ற வெற்றிகளும், தோல்விகளும் நிறைய என்றாலும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட போராட்டம் ஒன்று தான் மால்களின் புட் கோர்ட்டுகளில் நடக்கும் கொள்ளை.  

Jun 6, 2013

Hang Over -3

உலகெங்கும் பாஸ்ட் அண்ட் புயூரியஸ் 6 வசூலில் கலக்கிக் கொண்டிருக்க, இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருந்தாலும், விமர்சகர்களிடையேயும், பாக்ஸ் ஆபீஸிலும் கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட் தான் கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் ரீலீஸான நாள் முதல் ஹவுஸ்புல்லாத்தான் போகிறது.

Jun 4, 2013

சாப்பாட்டுக்கடை -Door No.27 Bada Kana Buffet

நன்றாக சாப்பிடவேண்டும் அதுலேயும் விதவிதமாய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமிருக்கிறவர்களுக்கு சிறந்தது ப்ஃபேதான். கல்யாணங்களில் கூட இப்போதெல்லாம் 500 பேருக்கு மேல் என்றால் பஃபே சிஸ்டம்தான் வசதியாயிருக்கிறது வைத்து விடுகிறார்கள். டோர் நெ. 27 பற்றி சில மாதங்களுக்கு முன் தான் எழுதியிருந்தேன். முக்கியமாய் அவர்களுடய பிரியாணியையும் எண்ணெய் கத்திரிக்காயையும் சாப்பிட்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போதே சொன்னார்கள் விரைவில் பஃபே சர்வீஸ் ஆரம்பிக்கப் போவதாய். அதுவும் வார இறுதி நாட்களில் மட்டும். அவர்கள் ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு பிறகு சென்றிருந்தேன். 450 ரூபாய் என்றதும் கொஞ்சம் யோசனையாய்த்தான் இருந்தது. 50 அயிட்டங்களின் லிஸ்டைப் பார்த்ததும் சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஆட்டத்தில் இறங்க ஆரம்பித்தேன். நான் போயிருந்தது மதிய லஞ்சுக்கு.

Jun 1, 2013

Iddarammayilatho


இரண்டு பெண்களுடன் அதுவும் அல்லு அர்ஜுனோடு எனும் போது ஏற்படும் எதிர்பார்ப்பு ஒரு புறம் என்றால் பூரி ஜெகன்னாத்தின் இயக்கம் வேறு, டீசர்கள் வேறு பெரும் பில்டைப்பை கொடுத்திருக்க சென்னையிலேயே செம ஓப்பனிங்.