Thottal Thodarum

Mar 6, 2013

சாப்பாட்டுக்கடை - Door.No.27

நண்பர் மகேஷ் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டேயிருந்தார். ஈகா தியேட்டர் அருகே ஒரு ரெஸ்ட்டாரண்ட் திறக்கப் போகிறார்கள். ஒரு நாள் தங்கள் உணவு வகைகளை டேஸ்ட் செய்து பார்ப்பதற்காகவே பல்வேறு நபர்களை அழைத்து வந்து நிறை குறைகளை கேட்டறிந்ததாகவும், அவர்களுடய பிரியாணி சூப்பராக இருக்கிறது என்று சொன்னார். உணவகம் திறந்துவிட்டார்கள் என்று ஞாயிறு மதியம் உணவுக்கு என்னை அங்கே அழைத்துச் சென்றார். மகேஷை பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். மனுஷன் சாப்பிட மட்டும் இல்லை. சுவையாய் சமைக்கவும் தெரிந்தவர். நல்ல வெய்யிலில் போயிருந்தேன். உள்ளே நுழைந்ததும் அந்த இடத்தின் அட்மாஸ்பியரைப் பார்த்ததும் அட என அசந்து போனேன். ஈகா தியேட்டருக்கு நேர் எதிரில் ஒர் பழைய ஹாஸ்பிட்டல் ஒன்று இருந்ததது அதைத்தான் இவர்கள் எடுத்து புதுப்பித்திருக்கிறார்கள். இடத்தையே தலைகீழாய் மாற்றி விட்டார்கள்.


அவர்களின் உள் அலங்கார வேலைப்பாடும், ஒவ்வொரு டேபிளுக்கும்  கொடுத்திருக்கும்  ப்ரைவஸியும் ஆச்சர்யமாய் இருந்தது. இருக்கிற இடத்தில் எல்லாம் டேபிளைப் போட்டு ரொம்புகிற காலத்தில் மிக ஸ்மூத்தான  என்விரான்மெண்ட். ஆனால் அதே சமயத்தில் எங்கே பர்ஸ் பழுத்துவிடுமோ என்ற பயமும் ஏற்படத்தான் செய்தது. கடையின் பங்குதாரரின் ஒருவரான புருஷ் என்பவரை அறிமுகப்படுத்தினார் மகேஷ். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துவிட்டு அவரும் அவரது நண்பரும் வேலையை விட்டு விட்டு இந்த உணவகத் தொழிலில் இறங்கியிருக்கிறார்கள்.  மகேஷ் ‘என்ன சாப்பிடலாம் என்று கேட்டார். உங்க பேவரேட் என்னுடய பேவரேட் பிரியாணி என்றதும் ஒரு மட்டன் பிரியாணியும், உடன் பெப்பர் சிக்கனும் கொண்டு வரச் சொன்னோம். நடுவே புருஷும் உடன் வந்து உட்கார, அவர் தன்னுடய உணவக ஆசையைப் பற்றியும், உணவுத்தேடலைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.  இவர்களுடய செஃப் தாஜ் கோரமெண்டல் விமான போக்குவரத்துக்கு சப்ளை செய்யும் உணவக செஃப் என்றும் தாங்கள் அஜினோமோட்டோ, கெமிக்கல் கலரிங் ஆகியவைகளை உபயோகிப்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மட்டன் பிரியாணி, பெப்பர் சிக்கன், ஆனியன் ரைத்தா, உடன் கத்திரிக்காய் சட்னியும் வந்தது.

பிரியாணியின் மேல் மெல்லியதாய் துருவிய வெங்காயத்தை பொரித்து போட்டிருக்க, பிரியாணியை பரிமாறினார்கள். உடன் தொட்டுக் கொள்ள சிக்கனிலிருந்து டேபிளில் இருந்த அனைத்து அயிட்டங்களையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுக் கொண்டோம். பிரியாணியில் அதிக மசாலாவும் இல்லாமல், முக்கியமாய் ஆயில் இல்லாமல், கையில் ஒட்டாத பாஸுமதி அரிசியோடு, காரம் குறைவான பிரியாணி. ஆனால் சுவைக்கு பஞ்சமில்லை.  ரைத்தா புளிக்காமல், லேசான தித்திப்போடு இருந்தது. பெப்பர் சிக்கன் நன்றாக வெந்திருந்தது. பெப்பர் சிக்கன் தான் என்றாலும் காரம் அதிகமில்லை. கிரேவி கொஞ்சம் நீர்த்து இருந்தது காரணமாய் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட, என்னை அசத்திப் போட்டது கத்திரிக்காய் சட்னிதான். வழக்கமாய் பிரியாணியுடன் வரும் கத்திரிக்காய் சட்னியில் எண்ணைய் மிதந்து பார்க்கும் போதே கொஞ்சம் ஆட்டம் காட்டும். சில இடங்களில் அதீத புளீப்பும் காரமும் இருக்கும். ஆனால் இந்த சட்னி பர்பெக்ட். எண்ணைய் கத்திரிக்காய் சட்னி. கத்திரிக்காயை நல்லெண்ணெயில் போட்டு பிரட்டி, அதை கத்திரிக்காய் விழுதுகளோடு தருகிறார்கள். செம திக். அதையும் பிரியாணியையும் ஒரு வாய் சேர்த்துப்  சாப்பிட்டு பாருங்கள்.அதிக காரமில்லாத பிரியாணிக்கு இந்த கத்திரிக்காய் சட்னி செம்ம காம்பினேஷன். நான் இந்த கத்திரிக்காய் சட்னிக்காகவே பிரியாணி சாப்பிடுவேன். என்ன சட்னி மூணு பாக்கெட் வேண்டும்.
அடுத்து அவர்களுடய ரொட்டி வகைகளை சாப்பிடலாம் என்று தவா ரோட்டியையும், புல்காவும், பட்டர் சிக்கன் மசாலாவும் ஆர்டர் செய்தோம். தவா ரோட்டி செம சாப்டாக, கிரிஸ்பாக வாயில் போட்டால் கரைந்தது. உடன் வந்த பட்டர் சிக்கனில் இருந்த மிதமான காரமும், புளிப்பும், மோதி மஹால் பட்டர் சிக்கனை லேசாய் நினைவுப் படுத்தியது. புல்கா நல்ல சைசில் இலகுவாய் பிய்க்க முடிந்தது. வழக்கமாய் இம்மாதிரியான உணவகங்களில் தந்தூரி ரோட்டி அயிட்டங்களின் விலை மிக அநியாயமாய் இருக்கும் முக்கியமாய் ரோட்டிவகைகள். ஆனால் இங்கே எல்லா ரொட்டி வகைகளும் வெறும் 20 ரூபாய்தான். புல்காவிற்கான விலை மட்டும் 20 ரூபாய் என்பது கொஞ்சம் அதிகம் என்று தோன்றினாலும், மற்ற ரோட்டிகளின் விலை சல்லிசாக இருப்பதால் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். பிந்தி மசாலாவை படித்ததும் கொஞ்சம் டேஸ்டுக்கு தர முடியுமா? என்று கேட்டேன். ஒர் குட்டிக் கப்பில் கொண்டு வந்து கொடுத்தார். அவர்கள் ஆர்டிபீசியல் கலர்கள் உபயோகிப்பது இல்லை என்பது நிருபணமானது. நிஜமான வேக வைத்த பச்சையில் வெண்டைக்காய் நன்றாய் வதக்கி, அவ்வளவாக காரமில்லாத மசாலாக்களோடு ம்ம்ம்... நிஜமாகவே டிவைன். ஒரு கப் சாதமிருந்தால் அதனுடன் சேர்த்து சாப்பிடலாம். சும்மா டேஸ்டுக்காக டால் மக்கானியையும் சுவைத்தோம். நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் லேசான உப்பு வேண்டும் என்று தோன்றியது. உப்பு குறைவாக இருந்ததால் கொஞ்சம் ப்ளண்டாக இருந்தது. 
பினிஷிங் டச்சாய் டெசர்ட் ஏதாவது சாப்பிடலாம் என்றால் ஹெவியாகிவிடும் என்ற எண்ணிக் கொண்டிருந்த போது எங்களுடய மாக்டெயிலை ட்ரை பண்ணிப் பாருங்கள் என்றார் புருஷ். நீங்களே ரெகமெண்ட் பண்ணுங்க என்றதும்.  Smooth & Naughty என்ற ஒன்றை எடுத்து வரச் சொன்னார். நிஜமாகவே நாட்டியாகத்தான் இருந்தது. கொஞ்சம் தித்திப்பாய், முடியும் போது நாக்கில் சுர்ரென்று லேசாய் துவர்த்து. என்ன மிக்ஸிங் என்று கேட்டேன் சிம்பிள் “கொஞ்சம் ஐஸ்க்ரீம், கோலா” என்றார். கோலாவில் உள்ள சோடா தான் அந்த சுர்ரான நாட்டிக்கு காரணம் என்றேன். “யூ காட் இட்” என்று சிரித்தார். ஸ்வீட்டுகளைப் பற்றி பேச்சு வந்த போது தான் ஒரு பெங்காலி என்பதால் ஸ்வீட்டிற்கென்று ஸ்பெஷலாய் கவனம் செலுத்தியிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மிஷ்டிதோய் இருக்கிறதா? என்றேன். ஒய்நாட் என்றவர் ஒரு கப் மிஸ்டிதோய் எடுத்த வரச்சொன்னார்.
மிஷ்டி தோய் எனும் இந்த யோகர்ட் வகை டெஸர்ட் கொல்கத்தாவில் மிகவும் பிரபலமானது. பாலை சுண்டக் காய்ச்சி, அதில் சக்கரையை பாகாக்கி, இரண்டையும் ஒரு சேர கலந்து ஒருவிதமான மிக்ஸ்ரில் மண் சட்டியில் சில்லென தருவார்கள். இங்கே மண் சட்டியில் இல்லை. ப்ளாஸ்டிக் கப்தான் பட் டிவைன். மேலும் ரெண்டு பார்சல் வாங்கி வந்தேன். ஒரு மட்டன் பிரியாணி, பெப்பர் சிக்கன், தவா ரொட்டி, புல்கா, பட்டர் சிக்கன் மசாலா, ஸுமூத் அண்ட் நாட்டி காக்டெயில், மூன்று மிஷ்டி தோய் எல்லாம் சேர்த்து 700 ஆகியது.  நிச்சயம் உங்கள் பர்ஸ் பழுக்காத, அருமையான உணவின் சுவையையும் அளிக்கக்கூடிய ஒர் உணவகம் இந்த Door.No.27.

விரைவில் பஃபே முறையை பகுதியைஆரம்பிக்க இருக்கிறார்கள். அவர்களுடய மெனுவே அட்டகாசமாய் இருக்கிறது. நார்த் இண்டியன், மற்றும் காண்டினண்டல் உணவு வகைகளின் மிக்ஸராய் இருப்பதால் நிச்சயம் வித்யாசமான அனுபவமாய் இருக்கும் என்று தோன்றுகிறது. நம்ம சாப்பாட்டுக்கடை மீட்டை இங்கே வைக்கலாம் என்று யோசிக்கிறேன்.
Door No.27
27, Vasu st, Kilpauk
chennai-10
Opp to Ega theatre Entrance
Ph:64612727/64622727 
கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

arul said...

thanks for sharing with photos

குரங்குபெடல் said...

ஒரு படத்துல ஒரு டயலாக் வரும் . . .இது வயிறா இல்ல . .சலவை தொழிலாளர்கள் துணிகளை பத்திரபடுத்தும்பாத்திரமா என்று . .
அதான் நெனப்புக்கு வருது
Cable சங்கர் said...

mister குரங்கு பெடல்.. இது ரெண்டு பேரு சாப்ட்டோம்.. கண்ணு வைக்காதய்யா..

ஜீவன் சுப்பு said...

தயிர் சாதமும் , தக்காளி சாதமும் சாப்ட்டுட்டு இருக்க என்ன மாதிரி ஆளுங்க வயித்தெரிச்சல கொடிக்கிரிங்க. நல்லா கொட்டுங்க ....!

கட பேர்லருந்து டிஷ் பேரு வரைக்கும் ,வரிசலுகைக்காக தமிழ் ல பேரு வச்சு பின்ன இங்கிலீசுல சப் டைட்டில் வைப்பாங்களே அது மாதிரி இருக்கு.

அமர பாரதி said...

நான் ஒரு பிரியானிப் பிரியன். இந்த பிரியானியைப் பற்றிப் படிக்கும் போது நாக்கு ஊறுகிறது. 20 ரூபாய் என்பது மிக குறைந்த விலையே. மொத்தம் 700 என்பது கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மற்ற உணவகங்களுடன் ஒப்பிடும் போது குறைவுதான். கொஞ்சம் பிக்கப் ஆனவுடன் விலையை ஏற்றி சுவயையைக் குறைக்காமல் இருக்க வேண்டும்.

Kavin said...

சம்முகம் டோர் நெம்பர் 27க்கு வண்டிய திருப்புலே. . .
:)