Thottal Thodarum

Sep 30, 2008

கலைஞர் v/s மாற்ன் ப்ரதர்ஸ்


காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களில் வெளியிட முடியவில்லை. அதற்கு காரணம் முதல்வரின் மகன் திரு.மு.க. அழகிரிதான் என்றும் அவரின் பேரில் தியேட்டர்காரர்கள் மிரட்ட படுகிறார்கள் என்று கூறுகிறது சன் பிக்சர்ஸ்.
இதற்கு முதல்வர் தலையிட்டு ப்ரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.அதற்கு முதல்வர் அவர்கள், சென்சார் சர்டிபிகேட் பெற்ற எந்த படங்களும் மக்கள் பார்வைக்கு தடை செய்ய முடியாது என்றும், இது குறித்து மதுரை போலீசாரிடம் புகார் கொடுக்காமல், தலைமை செயலருக்கு ஃபாக்ஸ் ஏன் செய்தார்கள்? என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேவையேயில்லாமல் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போல் சன் குழுமம் அரசாஙக் கேபிளுக்கு சிக்னலை தர மறுத்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
ஓரு வேளை நீ உன் சிக்னலை எங்களுக்கு கொடுத்தால் உங்கள் பிரச்சனையை சரி செய்யப்படும் என்று அர்தமா?ஏனென்றால் மதுரையில் அழகிரி நடத்தும் ஆர்.சி.வி கேபிளுக்கும் அவர்கள் சிக்னலை தரவில்லை. அதனால் மதுரை முழுவதும் சன் டிவியின் சீரியல்கள் எல்லாம் ரெக்கார்ட் செய்யப்பட்டு அரைமணி நேர இடைவெளியில் ஓளிபரப்பபடுவதாக தெரிகிறது. இந்த பிரசனையால் எஸ்.சி.வியைவிட ஆதிகம் லாபமடைந்தது சன் டைரக்ட் டி.டி.எச்தான். ஆனால் பாதிக்கபட்டதோ அங்கிருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள். பெரிய வீட்டு சண்டையில் இவர்கள் பிழைப்பு கெட்டு, சந்தாதாரர்களை இழந்து நிற்கிறார்கள். தங்களுடய அரசு, மற்றும் ஆர்.சி.வி நெட்வொர்களுக்கு சிக்கனல் தராததினாலே தான் பெரிய மார்கெட்டான மதுரை, ராமநாடபுரம் மாவட்டத்தில் படத்தை ரிலீஸ் செய்ய தடை செய்திருப்பார்களோ என்று முதல்வரின் பதிலுக்கு எண்ண தோன்றுகிறது.அதற்காக சன் குழுமன் செய்வது நியாய்ம் என்று கூறவில்லை.அவர்கள் செய்வதும் அராஜகம் தான் தங்கள் கையில் மக்கள் விரும்பும் சேனல் இருக்கிறது என்கிற தெம்பில் சன் குழுமம் செய்கிறது. ஆனால் இதையெல்லாம் கற்றுக் கொடுத்ததே அவர்கள் தானே.. எல்லோரும் ஓரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே. அதனால் தான் இவர்களின் வீக்ன்ஸ் என்ன் என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களது இவர்களுக்கு.சன் குழுமம் காதலில் விழுந்தேன் படத்தை உலக தர படமாக விளம்பர படுத்தியிருப்ப்து பற்றி பல விதமான பதிவுகள் வருகிறது. ஓன்றை மற்றும் சொல்கிறேன், கலாநிதி மாறன் ஓரு சிறந்த பிஸினெஸ்மேன் தாங்கள் செய்கிற தொழில்களில் எப்படி முண்ண்னிக்கு வருவது என்பதை சிறந்த முறையில் அறிந்தவர். சென்ற முறை திமுக அணி வெற்றி பெற எப்படி தன்னுடய சேனலை வைத்து விளையாடினார் என்று மனசாட்சி உள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள்.ஓரு விஷயத்தை யோசித்து பாருங்கள் சுமார் 3.75 கோடிக்கு வாங்கப்பட்ட காதலில் விழுந்தேன் திரைபடதிற்கு ரஜினி ரோபோ கூட இந்த அளவிற்கு தொலைக்காட்சிகளில் விளம்பரபடுத்த படவில்லை. ஆனால் கடந்த 10 நாட்களில் சன் குழும தொலைக்காட்சியில் எல்லா சேனல்களிலும், மாறி, மாறி விளம்பரம் செய்து, ஓரு புதுமுக டைரக்டர், நடிகர்கள் நடித்த படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் ஏற்படுத்தியிருப்பதே அவர்களின் வியாபார வெற்றி. அவர்கள் விளம்பரம் செய்த செலவை வேறு ஏதாவது படத்திற்கு அவர்களிடம் செய்திருந்தால் சுமார் 10 கோடிகளாவது ஆகியிரு.கும். அவர்களின் விளம்பர ஸ்லாட்டுகளின் விலை என்பதை அறிந்தவர்களுக்கு தெரியும்


எல்லா கட்சிகளுக்கும் சேனல் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம கட்சி பத்திரிக்கை போலத்தான் செயல் படுகிறது. அதனால் தான் அவை எல்லாம் எல்லா கால கட்டத்திலும் முண்ணனியில் வர முடியவில்லை.அப்படி வர முடியும் என்று நினைத்திருந்தால் சென்ற ஆட்சி காலத்தில் ஜெயா டிவிதான் நெ1 ஆகியிருக்க வேண்டும்.ஆனால் நிலைமை என்ன
என்று எல்லாருக்கும் தெரியும்.

அவர்களை பொறுத்தவரை இது வியாபாரம் அதனால் அதில் வெற்றி கொள்ள என்ன வழிவகை செய்ய முடியுமோ, எப்படியெல்லாம் விளம்பரபடுத்த முடியுமோ, அதையெல்லாம் செய்யத்தான் செய்வார்கள். அவ்வாறு விளம்பரபடுத்தும் எல்லாமும் வெற்றி பெறுகிறதா என்று கேட்டால் அது இல்லை என்று தான் சொல்வேன். அது அவர்களுக்கும் தெரியும். ப்ராடக்ட் மக்களுக்கு பிடித்திருந்தால்தான் என்ன பப்ளிசிட்டி செய்தாலும் தாங்கும் இல்லாவிட்டால் அந்த விளம்பரமே அவர்க்ளுக்கு எமனாக மாறும் என்பதே உண்மை.

அதனால்.. கலைஞர் போன்றவர்கள் இவர்களை போன்ற வியாபரிகளிடம் சண்டை போடுவதற்காக மாற்று வழியை யோசிப்பதை விட்டு, அவர்களை போலவே யோசித்து தன்னுடய் பெயரையும், தன் ஆட்சியின் பெயரையும் இறக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும்.

Sep 29, 2008

பதிவர்களுக்கு ஓரு ஆனந்த அறிவிப்பு

ஆம் பதிவர்களுக்கெல்லாம் ஓரு ஆனந்த அறிவிப்புதான். நாம் என்னதான் பதிவுகள் எழுதினாலும் அதையெல்லாம் திரட்டி ஓரே இடத்தில் தருவதற்கு தமிழ்மணம், தேன்கூடு, மாற்று, தமிழ்வெளி போன்றவைக்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

சமீபகாலமாய் தேன்கூடு திரட்டி காணவில்லை. யாருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல. சரி அதவிடுங்க. சமீபத்தில் புதிதாய் தமிலிஷ், தமிழ்பெஸ்ட்,தமிழகம், என்று மூன்று புதிய திரட்டிகள் வந்திருக்கிறது.. என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்து கொள்கிறேன்.

www.tamilish.com
www.thamilbest.com
www.tamilagam.net


செக்ஸ்....செக்ஸ்....sex.....

சைல்ட் செக்ஸ் இன் கம்போடியா1

சைல்ட் செக்ஸ் இன் கம்போடியா..2


இந்த கொடுமையெல்லாம் எங்க போய் சொல்றது... எதாவது செய்யணும் சார்..

சைல்ட் செக்ஸ் இன் இந்தியா..அடுத்த பதிவுகளில்

Sep 28, 2008

காதலில் விழுந்தேன் மதுரையில்


காதலில் விழுந்தேன் திரைப்படத்தை சன் தொலைக்காட்சி குழுமம் தயாரித்து வெளியிட்டிருப்பது எல்லோரும் அறிந்ததே.. ஆனால் காதலில் விழுந்தேன் திரைப்படம் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியிடப்படவேயில்லை. மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் சுமார் 15 தியேட்டர்களில் வெளியிடபட இருந்த காதலில் விழுந்தேன் படத்தை வெளீயிட்டால் அதற்கு பின்னால் நடக்கும் விபரீதங்களையும் சந்திக்க தயாராகுங்கள் என்று தியேட்டர் அதிபர்கள் மிரட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. இன்றளவில் காதலில் விழுந்தேன் படம் மதுரையில் திரையிடப்படவில்லையென்றாலும் சென்னை மற்றும் தமிழகம் எங்கும் மிகப் பெரிய ஓபனிங்கோடு ஓடிக்கொண்டிருப்ப்தாக தகவல்.

இதுக்கு முன்னால் முதல்வன் படத்தை கேபிள் டிவியில் ஓட்டியவர்கள் தானே..அதனால் என்ன முதல்வன் ஓடாமல போய்விட்டது.

சக்கரகட்டி தாணுவின் டவுசரை அவிழ்த்து விட்டதாக தெரிகிறது (நன்றி: லக்கிலுக்)

சன் குழுமத்திற்கு போட்டியாய் கலைஞர் டிவியும் திரைப்படம் தயாரிக்க இருக்கிறது.

அது பற்றிய தகவல் அடுத்த பதிவில்
காதலில் விழுந்தேன் விமர்சனம் - இங்கே அழுத்தவும்

Sep 27, 2008

சக்கரகட்டி - விமர்சனம்


என்னத்த எழுதறதுன்னே தெரியல.. அவ்வளவு நல்லாயிருக்கான்னு கேட்காதீங்க..ஹிந்தியில் “ஜானே தூ “போன்ற படங்களில் இருக்கும் இயல்பான எல்லோருக்கும் தெரிந்த கதையோட்டமாய் இருந்தாலும் படத்திலிருக்கும் கேரக்டர்களினால் சுவாரஸ்யமாய் சொல்ல முடியும் என்பதற்கு அந்த இந்தி படம் உதாரணம்.

எ.எம்.ரத்னதுக்கு ஓரு ஜோதி கிருஷ்ணா மாதிரி, தாணுவிக்கு ஓரு கலாபிரபு. என்ன மத்த டைரக்டரை எல்லாம் திட்டுன மாதிரி தன்னோட பையன திட்ட முடியாது. வழக்கமா தாணு படம் ஆரம்பிக்கும் போது “தம்பி, ஓரு கதை சொல்லிச்சு. அப்படி ஓரு கதைன்னு “ அறிக்கை விடுவாறு. படம் முடிஞ்சதும் “அந்த தம்பிக்கு படமெடுக்க தெரியல.. அது சரியில்ல.. இது சரியில்ல்ன்னு அறிக்கை விட்டு பப்ளீசிட்டி ஆக்கிடுவாரு.. இப்ப என்ன செய்வாருன்னு பாக்கலாம்

ரஹ்மான் இனிமே கதையை கேட்டுட்டு படத்தை ஓத்துக்கலாம். ஏன்னா.. அவர் அருமையா போட்ட பாடல்களை எல்லாம் படு கேவலமா சூட் பண்ணியிருக்காங்க..

சாந்தனுவுக்கு நடிக்க யாராவது க்ளாஸ் எடுத்தா நல்லாயிருக்கும். அவரு அப்பா ஓருத்தரே போதும் அவர் கேரியரை காலி பண்ண. ஏன்னா.. அவர் முதல்ல ரிஜெக்ட் பண்ண சப்ஜெக்ட் பாலாஜி சக்திவேலோட “காதல்’ அடுத்து “சுப்ரமணியபுரம்”. எப்போர்பட்ட திரைக்கதையாசிரியர்.. என்ன பண்றது வயசாயிடுச்சுல்ல..

இயல்பா எடுக்கிறதா நினைச்சு.. நம்ம்ளை இம்சை செய்கிறார் இயக்குனர். அடுத்த முறையாவது தெரிஞ்சிகிட்டு எடுக்கட்டும்.

ம்..ஹூம்ம் என்னத்தை சொல்ல சக்கரகட்டி.. கசப்புகட்டி

இதைவிட சிறந்த விமர்சனத்திற்கு இங்கே அழுத்தவும்

காதலில் விழுந்தேன் / சக்கரகட்டி - லேட்டஸ்ட் நிலவரம்


இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி ஓரு நாள் ஆகிவிட்ட நிலையில், இரு படங்களில் காதலில் விழுந்தேன் படத்திற்கு கூட்டம் மேலும் ஏறியிருப்பதாக தெரிகிறது. படத்தை பற்றி ரொம்ப நல்லாயிருக்குன்னு ரிப்போர்ட் இல்லைன்னாலும் விஜய் ஆண்டனியின் பாடல்கள், அதிலும் குறிப்பாக” நாக்க மூக்க” பாடலினாலும், சன் டிவியின் ஆரவாரமான விளம்பரத்தினாலும் வெற்றியை தொடும் என்று தெரிகிற்து. சக்கரகட்டி நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டதாகதான் தெரிகிற்து.

சக்கரகட்டி விமர்சனம்

காதலில் விழுந்தேன் - விமர்சனம்காதலில் விழுந்தேன் என்கிற படத்தின் தலைப்பை பார்த்த்துவிட்டு ஓரு அழகிய காதல் கதையை எதிர்பார்த்தீர்களானால...உங்களுக்கு ஏமாற்றமே. குணா, 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன், ஒண்டரி(தெலுங்கு) போன்ற பல படங்களின் பட்டறையே காதலில் விழுந்தேன்.

சபாபதி வீல்சேரில் மீராவை வைத்துக் இருளில் தள்ளிக் கொண்டு தப்பி ஓடி ஊட்டிக்கு போகும் ரயிலில் வித்அவுட்டில் அந்த வீல் சேருடன் காதலியை தூக்கிக் கொண்டு ஏறும்போதே அட என்று நாமும் ஏறுகிறோம். சபாபதி மீராவை டிரையினில் படுக்க வைத்துவிட்டு தன்னுடய காதல் கதையை டி.டி.ஆர். லிவிங்ஸ்டனிடம் சொல்ல ஆரம்பிக்கிறார்.

எவ்வளவு அமெச்சூர் தனமான காதல் காட்சிகள். நடிகர்கள் நடிக்க முடியாமல் இருக்கும் இடத்தில் எல்லாம் எடிட்டர் வி.டி.விஜயன் தன் திறமையை காட்டியிருக்கிறார். ப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்து 6வது காட்சியில் காதல் வந்துவிடுகிறது. சரி அடுத்து என்ன என்ற கேள்வி எழும் முன்னே மீராவிடம், சபாபதி முத்தம் கேட்க, நீ புட்பால் மேட்ச் பைனல் விண் செய்தால் தருவேன் என்று சொல்லிவிட்டு பஸ் ஓடும் முன்பு ஓரு கிஸ் அடிக்கிறார். (அப்படி ஓண்றும் சொல்லிக்கொள்ளும்படியான கிஸ் இல்லை).

புட்பால் மேட்ச் ஜெயித்து வரும் போது அவருக்கு ஓரு விஷயம் சொல்லப்படுகிறது. (அதை நான் என்னவென்று சொன்னால் படம் பார்பவர்களுக்கு சப்பென்று ஆகிவிடும் ஆகையால் தியேட்ட்ரில் பார்கவும்) அவர் அதை நம்பாமல் அடுத்தடுத்து அவர் செய்யும் செயல்கள் எல்லாம் குணா.. அதே போல் மலை கொடைக்கானலுக்கு பதிலாக ஊட்டி, பின்னாலேயே துறத்துற எ.பி.பிக்கு பதிலா இன்னொரு போலீஸ் ஆபிஸர். குகை போல் உள்ள இடங்களில் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல”ன்னு சொல்ற மாதிரி, சபாவும் “மனிதன் என்பதால் காதலிக்கிறேன்” ன்னு பாடறார். இடைவேளைக்கு அப்புறம் ஓரே ரத்தக்களறி. ஸ்கிரீன் பூராவும் ஓரே ரத்தமா தெரியுது.

சபாவாக வரும் நகுலுக்கு ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருந்தாலும், போக, போக வெறி கொண்டவனின் வேகத்தை சரியாக செய்திருக்கிறார். மீராவாக வரும் சுனைனா எப்போதும் படுத்துக் கொண்டே இருப்பதால் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை.. (அடடா.. சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன்.. சொல்லிட்டேனே..).காதல் சோகம், விரகம், எல்லாவற்றுக்கும் இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைத்துக் கொள்கிறார்.

ஊட்டி விஞ்ச் சண்டைகாட்சியிலும், ஓரே ஷாட்டில் வரும் நீளமான சண்டைக்காட்சியிலும் ஓளிப்பதிவாளர் விஜய் மில்டன் தெரிகிறார்.

படத்தை காப்பாற்றியிருப்வர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான். “நாக்க மூக்க, உனக்கெனநான்,உன் தலைமுடி” போன்ற பாடல்களிலும், செகண்ட் ஹாப்பில் ரிரிக்காடிங்கிலும் விஜய ஆண்டனியின் உழைப்பு தெரிகிறது.

ரொம்ப எதிர்பார்த “நாக்க மூக்க” அந்த அளவுக்கு “கேலப்பாக” இல்லை. ஓகே. இரண்டாவது முறையாக வரும்போது பரவாயில்லை.

மொத்தத்தில் “நாக்க மூக்க” காதலில் விழுந்தேன் “நாக்க மொக்க” என்று சொல்லலாம் என்று நினைத்தால் இண்டர்வெல்லுக்கு அப்புறம் ஏதோ தட்டுத்தடுமாறி தப்பிவிடுகிறது. இவ்வளவு வயலிண்டிக்கான உணர்வுகளை நியாயப்படுத்த வேண்டும் என்றால் முன்பாதியில் மிக அற்புதமான காதல் காட்சிகள் வேண்டும் அது இல்லாததால் படம் விட்டு வெளிவரும்போது குமட்டும் மார்சுவரியிலிருந்து வெளிவரும் உணர்வு உங்களுக்கு வராமல் இருந்தால் ஆச்சர்யம்தான்.

Sep 26, 2008

காதலில் விழுந்தேன் / சக்கரக்கட்டி- நிலவரம்இன்று தமிழகம் எங்கும் ரிலீஸ் ஆகியிருக்கும் “காதலில் விழுந்தேன்” “சக்கரக்கட்டி” இருபடங்களூம் புதியவர்களும்,இளையவர்கள் பங்கு பெற்று இருக்கும் திரைப்படங்கள். இன்றைய காலை காட்சி நிலவரப்படி “நாக்க மூக்க” காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு மிக பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. சக்கரைக்கட்டி ஓரு படி கீழே தான் உள்ளது. இரண்டு படங்களின் பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆகி உள்ளது. சன் டிவியின் மார்கெடிங்கில் இளைஞர்கள் மத்தியில் “நாக்க மூக்க” பாடல் ஏற்படுத்திய பாதிப்புமே இந்த் ஓப்பனிங்கிற்கு காரணம். பொறுத்திருந்து பார்போம்..

காதலில் விழுந்தேன் விமர்சனம் நாளை

Sep 25, 2008

சிவாஜி, தசாவதாரம், தாம்தூம், ராமன் தேடிய சீதை.....


ஓரு விஷயம் மட்டும் புரியமாட்டேன் என்கிறது.. எவ்வள்வோ படங்களை பார்த்து நாம் விமர்சிக்கிறோம். ஆனால் நாம் நல்ல படம் என்று நினக்கிற படங்கள் விமர்சனங்களில் வேண்டுமானால் நல்ல வரவேற்பை பெறுகிறதே தவிர.. வசூலில் பெரிதாககூட சாதிப்பதில்லை.உதாரணத்திற்கு நமது விமர்சனத்திலும் சரி, வசூலிலும் சரி சாதித்த படங்கள், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்களே..இவை தவிர நமது விமர்சகர்களால் பிய்த்து, கடித்து குதறப்பட்ட சிவாஜி, தசாவதாரம், தாம் தூம், போன்ற படங்கள் நமது விமர்சனங்களை மீறி வெற்றி படங்களாய் வலம் வருகிறது.மிக நல்ல படம் என்று பலராலும் பாராட்ட படுகிற அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், போன்ற படங்கள் எல்லாம் டீவியிலும், டிவிடியிலும் பார்த்து நன்றாகயிருக்கிறது என்று இன்ன்மும் சொல்கிறார்கள். ஆனால் அந்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியில் மிகப் பெரிய சரிவை சந்தித்த ப்டங்கள்.


தற்போது சமீபத்தில் ரிலீசான ராமன் தேடிய சீதை படம் விமர்சகர்களால் மிகவும் பாராட்ட பட்டு, மிக நல்ல படம் என்று படம் பார்த்த மக்கள் சொன்னாலும் கூட, வசூலில் மிக மிக பின் தங்கிய் நிலையிலேயே உள்ளது. ஆனால் சரோஜா, போன்ற இளைஞர்களுக்கான படங்கள் நன்றாகவே பிக் அப் ஆகியிருக்கிறது. இதற்கு காரணம் இளைஞர்களை மிகவும் கவர்ந்ததே என்பது என் கருத்து.


தமிழில் நல்ல படங்கள் வருவதேயில்லை என்று சொல்பவர்கள் முக்கால்வாசி பேர் தியேட்டர்களில் போய் படம் பார்பதில்லை.. முடிந்தவரை திருட்டு டிவிடியிலேயோ, தரவிறக்கம் செய்தோதான் படம் பார்க்கிறார்கள். தியேட்டருக்கு போக கட்டுபடியாகாது என்று சொல்பவர்கள், தசாவதாரம், சிவாஜி, போன்ற படங்களை தியேட்டரில் சென்று பார்க்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை தியேட்டரில் ஓடாத நல்ல படங்கள் தொடருமேயானால்.. பெறும்பான்மை இளைஞர்களை கவரும் மசாலா படங்கள்தான் வெளிவரும் என்பது என் கருத்து.எனென்றால் சினிமா துறையில் இருப்பதால் பல நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கதை சொல்ல போகும் போது அவர்க்ள சொல்வதெல்லாம் “கமர்சியலா ஓரு கதை சொல்லுங்க” தான் சொல்கிறார்கள்.

எனவே நல்ல படங்களையும் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரியுங்கள் என்ற் என் வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன்.

காமெடி டைம்Sep 24, 2008

வானமெனும் வீதியிலே....


எப்படியாவது பறந்து போகணும்னு எனக்கு ஆசை வந்திருச்சு. அதுவும் என் பையன் ரெண்டு வாட்டி பெங்களூருக்கும், பாம்பேக்கும் என்னோட ரிலேஷன்ஸ் கூட போய்ட்டு வந்ததுக்கப்புறம், எனக்கு அந்த ஆசை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கென்னவோ ப்ளைட்டுல போறதுக்கு பிடிக்கல, ஏன்னு யோசிச்சா..ரொம்ப சீக்கிரமே போகணும்கிறது ஓரு முக்கியமான விஷயம்.

நானெல்லாம் வழக்கமா 9 மணி டிரெயினுக்கு, 8மணிக்கு வீட்டிலேர்ந்து கிளம்பி, செண்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு, சாவகாசமா கிளம்பி போனோம்னா நம்ம ரயில் தன் பின்பக்கத்தை 'X' மார்கை காட்டிகிட்டு போய்ட்டுருக்கும். அதை நம்ம தமிழ்பட ஹீரோ கணக்கா..ஹைஸ்பீடுல ஓடி ஏறியே பழக்கப்பட்ட நமக்கு இப்படி சீக்கிரம் போறதே கஷ்டம்தான்.

இருந்தாலும் எப்படியாவது ப்ளைட்டுல போயிறணூங்கற முடிவ எடுத்து,ஹைதராபாதுக்கு போக டிக்கெட் புக் பண்ணலாம்னு நெட்டுல போய் தேடினேன். 6000 ரூபாயிலேர்ந்து டிக்கெட் இருந்துச்சு..கடைசியா ஓரு வழியா “கோ ஏர்” ன்னு ஓரு ஏர்வேஸுல 500 ரூபாய்க்கு டிக்கெட்ன்னு சொன்னதும், அடிச்சு பிடிச்சு புக் பண்ணா..மொத்தமா 2500 ரூபாய் கிட்ட ஆயிடுச்சு.. டிக்கெட் சார்ஜ் 500 ரூபாயாம்.. ஆனா ஏர்போர்ட் டாக்ஸ்,அந்த டாக்ஸ்ன்னு 2000ரூபாயை அமுத்திட்டான். ராத்திரி 10.30 மணி ப்ளைட்டு. ஒண்ணரை மணி நேரம் முன்னாடியே வரணும்னு சொல்லிட்டான். வேற வழி..

ஓரு வழியா கையில லேப்டாப், ஓரு பேக் சகிதமா கிளம்பி, சைதாப்பேட்டையிலேர்ந்து, திருசூலத்திக்கு எலக்டிரிக் ரயில் பிடிச்சி போய் வேர்த்து விருவிருத்து போய் சேர்ந்தேன். (செலவ மிச்சம் பிடிக்கிறேனாம்). உள்ளே போனதும் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. ஏன்னா எவ்வளவோ தடவ பல பேரை அனுப்பி வைக்கிறதுக்காக, போயிருக்க்கேன். அதனால எனக்கு எந்த விதமான ஓரு நர்வஸூம் இல்லை. எனக்கென்னவோ உள்ளே நுழைந்ததிலிருந்து ரொம்ப பழக்கப்பட்ட விஷயமாகதான் தெரிந்தது.

ஓரு வழியா செக்-இன் பண்ணதுக்கு அப்புறம் வேற என்ன செய்யறதுன்னே தெரியல.. சும்மாவே உக்காந்திருக்க பிடிக்கல.. மெல்லமா ஓரு ரவுண்ட் அடிக்க ஆரம்பிச்சேன்... டெல்லி ப்ளைட்டுக்காக காத்திருந்த நமது மேயர் தனது சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஓரு சேட்டு பையன் ஓருவன் அங்கே இருந்த பேக்கரியில் ஏதோ வேண்டுமென கேட்டு அழ, அவனின் “மா” “நை.. பேட்டா..நை..” என்று அவனை அந்த பக்கதிலிருந்து இழுத்துபோக முயற்சிக்க, அவன் அவளைவிட பலமாய்.. பிடிங்கிக் கொண்டு ஓடினான். ஓரு முஸ்லிம் குடும்பம் கிட்டத்தட்ட ஓரு 15 பேர் இருப்பார்கள் அந்த கேண்டின் அருகிலேயே இருந்து கொண்டு ஆளுக்கு ஆள் மாற்றி,மாற்றி எதையாவது தின்று கொண்டே இருந்தார்கள்.. அதில் ஓரு புர்கா அணியாத ஓரு அமலா..( ம்ஹூம்.. நமக்கில்ல..), அவசர லேப்டாப் யுவதிகளும்,யுவன்களும், ஓவ்வொரு விமான கிளம்பலுக்கும் முன்னால் ஓரு சிறிய பரபரப்பு, அங்கே இருக்க, லேப்டாப் யு.யுக்க்ள் கிளம்புகையில் இறுக அணைத்து முத்தமிட்டு கிளம்பினார்கள்.. அவள் வேறு யாருடனோ.. அவன் வேறு யாருடனோ,, வேறு வேறு விமானங்களில்.

கிட்டதட்ட பத்து மணியாயிருச்சு.. ஏர்போர்ட்டுல கூட்டம் கம்மியாயிடுச்சு.. அப்போ என் பக்கதுல ஓருத்தர் வந்து “சார்.. ஹைதரபாத் ப்ளைட் எங்க வரும்னு?”ன்னு என்னை பார்த்து கேட்க, நானும் மனசுக்குள்ள அந்த் கேள்வியதான் கேட்டுக்கிட்டிருந்தேன்.. அனா கேக்கல,, என்ன பார்த்தா புதுசு மாதிரி தெரியல போலருக்கே..ன்னு நினைச்சுகிட்டு, “இருங்க.. அவங்க அனொன்ஸ் பண்ணுவாங்க.” ன்னு சொல்லிட்டு போர்டிங் போர்டை பார்த்தேன். 10.45க்கு மாடியில இருக்கிற ஓருகேட்டுக்கு வர சொன்னாங்க.. பளைட்டுக்கு முத முதலா காலடியெடுத்து வைச்சேன்.. சும்மா சிலு, சிலுன்னு தான் இருந்துச்சு.. நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது. என் டிக்கெட்டை பார்த்த அவ எகானமி டிக்கட்டுன்னு சொல்லியதில் ஓரு சின்ன எள்ளல் இருந்தது போல் இருந்தது. சே அடுத்த வாட்டி வேற டிக்கெட் எடுக்கணும்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டு உள்ளே போனா ஆம்னி பஸ் கூட கொஞ்சம் நல்லா இருக்கும் போலருக்கு,, அதவிட் கீக்கிடமா ஓரு சீட்டிங் அரெஞ்மெண்ட்.. இடுக்கிட்டுதான் போகணும்.. எனக்கு நல்ல வேல விண்டோ சீட் கரெக்டா ரக்கை பக்கத்தில.. எனக்கு பக்கதில என்கிட்ட ப்ளைட் டைம் கேட்ட ஆசாமி, அவருகூட அவருடய மனைவி, ஓரு கைக்குழந்தை பெண், ஓரு பத்து வயது பையன். அந்த பெண்ணுக்கும், பையனுகும் நிறைய வயது வித்யாச்மிருக்கும் போலருக்கிறது. ரொமான்சின் மிச்சம்.

ஓரு வழியாய் ப்ளைட் கிளம்ப ஆயத்தமாக, சற்றே பெறிய சத்தமாய் ” டகா டக்” என்றது. பக்கதிலிருந்த பெரியவர்..கண்ணை மூடி “பெருமாளே” என்று முணுமுணுத்தார். பக்கதிலிருந்த தன் மனைவியிடம் “நன்னா சேவிச்சிக்கோடி”ன்னு சொல்ல அவங்களூம் “பெருமாளே”ன்னாங்க.. இதற்குள் அவரின் பையன் எழுந்து சார் எனக்கு விண்டோ சீட் தரீங்களா சார்..ன்னு கேட்டு அரிக்க ஆரம்பிக்க, பெரியவர்.. “சார் கொடுப்பார்டா.. அவர் என்ன இப்பதான் ப்ளைட்டுல போறாறா என்ன.. கொடுப்பார்.” என்றார். நான் அவரை பார்த்து மையமாய் தலையாட்டிவிட்டு.. இப்ப மாறகூடாது சார்.. சீட் பெல்ட் போட்டுக்கோங்க..” அட்லீஸ்ட் டேக் ஆப் பாக்கிற வரைக்குமாவது சீட்டை விடக்கூடாதுன்னு முடிவோட சொன்னேன். ப்ளைட் டேக் ஆப் ஆகும் போது அடி வயிற்றில் ஓரு சின்ன அழுத்தம், ஏற்பட்டு காதை அடைத்தது.. என்ன அழகு மேலிருந்து நம் செனனையை பார்பது அதிலும் கீழேயிருந்து தெரியும் மின்விளக்குளுடன் பார்க்கும் போது சிம்பிளி சூப்பர்ப்..

இப்போது ஹோஸ்டஸ் குட்டிகள் விமானம் ஏதாவது ப்ரச்சனைக்குட்பட்டால் எவ்வாறு முதல் உதவி கருவிகளை உபயோக படுத்துவது என்று செய்முறை விளக்கம் சொல்ல.. பக்கத்து பெரிசு.. சனியன்கள் கிள்ம்பும் போதே அபசகுனமா ஆக்ஸிடெண்ட் ஆறத பத்தி பேசறதுகள் பார்.என்று திட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு அவர் சொன்னது அவ்வளவாக காதில் ஏற்வில்லை ப்ரியாமணி செய்யும் ஆக்‌ஷனெல்லாம் ஹைஸ்பீடில் என்னை பார்த்தபடி செய்த்தாக தெரிந்தது. அப்போது திடீரென ஓரு அழுகுரல் பக்கத்து சீட் ஆளின் பெண்ணின் கைக்குழந்தை.. அப்போது அழ ஆரம்பித்ததுதான் அடுத்த ஹைதராபாத்தில் இறங்கும் வரை அழுது கொண்டே இருந்த்து..அந்த குழந்தையை அந்த பெண் “ஓணாம்மா..ஓணாம்மா.. என்று கொஞ்சி சமாதான படுத்த மொத்த ப்ளைட்டிலும் நடந்த படியே இருந்தாள்.

நடுராத்திரி 12.30 மணிக்கு மேல் புது ஏர்போர்டில் வந்திறங்கியதும், தேவலோகம் போல் இருந்தது.. வெளியே வந்து டாக்ஸி கேட்டால் ப்ளைட் சார்ஜைவிட அதிகம் கேட்டான்.. அதனால் ஏர்போர்ட் வோல்வோவில் 90 கொடுத்து ஹைதராபாத் சேரும்போது மணி 2. அதுக்கப்புறம் ரூம் தெடி அலைந்தது எல்லாம் இன்னொரு விஷயம்..

எனக்கென்னவோ.. சென்ட்ரல் ஸ்டேசன், கட்டிங், கோலா பாட்டில், ஏறி குடிச்சி முடிச்சதும், ஆடிக்கிட்டே ஓரு அருமையான தூக்கம், நமக்கு டிரையின் தான் சொர்கம்..

Sep 23, 2008

என்ன கொடுமை சார் இது?- வழக்கமான தலைப்பல்ல....

இது நீங்கள் நினைக்குபடியான பதிவல்ல.. ஒரு அதிர்ச்சி..ரிப்போர்ட்..உங்கள் கருத்துக்களை பதித்து எதிர்பை காட்டுங்கள்Sep 22, 2008

மீனாட்சீ.. சாமான் நிக்காலோ.....சாந்தி மீனாட்சியை நான் மீண்டும் பார்பேன் என்று நினைக்கவில்லை..அவள்தானா?..அவள்தானா? யெஸ்.. அவளேதான்.. எப்படி மறக்க முடியும் அவளை... அவளால் அடிவாங்கியதை எப்படி மறைக்க முடியும்? எதற்கு அடி வாங்கினேன்.. என்று தெரியாமல் நான் அலைந்ததை எப்படி மறைக்க முடியும்?

நானும் ஆனந்த ராஜூம ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆம் ஓவ்வொரு திங்கட்கிழமையும்தான்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் குடும்பத்தோடு எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்..

அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம மியூசிக்கோட சொல்லுவான்.. அப்படி அவன் அந்த வாரம் சொன்ன படம் சூப்பர் படம் ..அந்த படத்தோட பாட்டுவேற சும்மா சூப்பர் டூப்பர் ஹிட்.. தமிழ்நாடே பத்திக்கிட்டு எறிஞ்சுது..

அவன் சொல்ல, சொல்ல, எப்படியாவது அந்த படத்த பாக்கணும்னு முடிவெடுத்துட்டேன்..அவன் கதைசொன்ன இம்பாக்டுல அன்னைக்கு பூரா எனக்குள்ள அந்த பாட்டுதான்.

க்ளாஸ் முடிஞ்சி வெளியே போகும்போதும் அதே பாட்டுதான், அந்த பாட்டு என்னையும், என் திங்கட்கிழமை நண்பனுக்கும் ரொம்ப பிடிச்சதினாலே.. தெருவெல்லாம் “ஷோலே” பட “ஏ..தோஸுதி’” வருமே அது போல தோளில் மேல் இருவரும் கைபோட்டுக் கொண்டு, பாடிக் கொண்டே போனோம்..அதை , அந்த நிமிஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியல..சும்மா மனசெல்லாம் பூ கணக்கா இருந்திச்சு..

அடுத்த நாள் காலையில க்ளாஸூக்கு போனவுடனே..வழக்கபடி நாங்க ரெண்டுபேரும் அவங்க, அவங்க சீட்ல போய் உட்காந்திக்கிட்டோம்.. க்ளாஸ் எடுக்க வந்த அமுதவல்லி மேடம்.. எதையும் பத்தியும் பேசாம..எடுத்த்வுடனேயே என்னையும் என் திங்ககிழமை நண்பன் ஆனந்த ராஜையும் கூப்பிட..என்ன ஏதுன்னு புரியாம.. இரண்டு பேரும் எழுந்து நின்னோம்..

“இங்க வாங்கடா” மேடம் கூப்ப்டாங்க..

எதுக்கா இருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே.. மெல்ல அவங்க பக்கத்தில போக,, மேடமுக்கு என்ன ஆச்சோ தெரியல.. எங்க தெருமுனையில குறி சொல்ற முனியம்மா மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்திகிட்டு அங்கே இருந்த ஓரு கழிய எடுத்து சும்மா.. கையிலயும், முதுகிலெயும்.. ரெண்டு பேரையும் பின்னி எடுத்துட்டாங்க.. ஓவ்வொரு முறை அடிக்கும் போதும்..

“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள..அதுக்குள்ள..”ன்னு சொல்லிகிட்டே அடிச்சாங்க..

எங்களுக்கு என்னனு புரியவே இல்ல.. நான் மட்டும் வீரனா “எங்கள எதுக்கா மேடம் அடிக்கீறீங்கன்னு கேட்டதுக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு எனக்கு கிடைச்சுது.. இதையேல்லாம் பார்த்த என் க்ளாஸ் மேட்க்ளுக்கு ரொம்ப வருத்தமாயி..என் க்ளோஸ் கேர்ள் ப்ரண்ட்..ஆண்டாள் என்னிடம் மட்டும் தனியாக வந்து “எல்லாத்துக்கு காரணம் அவதான்னு “சொன்னா.. அவதான் மேடத்துக்கிட்ட என்னவோ காலையிலேயே சொன்னான்னு சொன்னதும் நான் மீனாட்சிய பார்த்தேன்..அவ என்னவோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லங்கற கணக்கா.. என்னைப் பார்த்ததும் மூஞ்சிய திரும்பிக்கிட்டா..

என்ன சொன்னேன்னு அப்ப கேட்கிற தைரியம் அப்ப எனக்கு இல்ல.. ஆனா இப்ப இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் மீனாட்சிய பார்த்ததும் கேட்கணும்னு தோணிச்சு.. கொஞ்ச நேரம் சகஜமா பேசினதுக்கு அப்புறம் மீனாட்சியிடம் “ஆமா.. அப்ப எதுக்காக மேடத்துக்கிட்ட அடிவாங்க வச்சே..?”

மீனாட்சி ஆச்சர்யத்துடன் சிரித்தபடியே.. “அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா..?”கேட்டா.. எப்படி மறக்க முடியும்ன்னு நினைச்சுகிட்டே.. அவளை பார்க்க..

“அது ஓண்ணுமில்ல அன்னைக்கு நீயும் ஆனந்த ராஜூம்.. என் பின்னாடி வந்துகிட்டே.. என்னை பத்தி பாட்டு பாடி கிண்டல் பண்ணீங்களா..அதத்தாஅன் மேடத்துக்கிட்ட சொன்னேன்.. அதுக்குதான் அடிச்சாங்க...ன்னு சொல்லிட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா..

”என்ன கொடுமை சார் இது? நாலாம் க்ளாஸ் படிக்கும் போது, “என்னடி மீனாட்சீ.. ன்னு எங்களுக்கு முன்னால் போன சாந்தி மீனாட்சிய பார்த்துகிண்டல் பண்ணி பாடற வயசா சார் அது.. ?? ஆனந்தராஜூ எங்கடா இருக்கே..???

Sep 20, 2008

முதல் முதல் முதல் வரை - திரை விமர்சனம்


முதல் முதலாய் தமிழில் வழக்கமான விதத்தில் வரும் கமர்சியல் பார்மேட் இல்லாத ஓரு தமிழ் படம்... உதாரணமாய் இந்த படம் எந்த மாதிரிபடம் என்று கேட்டால்..ஆங்கிலத்தில் சில இண்டிபெண்டண்ட் ப்ரொடக்‌ஷன் கம்பெனிகள் தங்களது டிஜிட்டல் விடியோவில் படமெடுத்து சில சமயம் அந்த படம் வழக்கமான ஹாலிவுட் சினிமாவிலிருந்து விலகியிருக்க, ஹிட்டாகிவிடும்,sex,lies, and videotape போன்ற படங்கள் இந்த வகைப்படும்.

மு.மு.மு.வரை கூட அதுபோல்தான். ஓரு அட்பிலிம் மேக்கர் திரைப்பட இயக்குனராவதற்கு நடத்தும் போராட்டம் தான் கதை. அதை வழக்கமான் திரைக்கதை பார்மெட்டில் சொல்லாமல் ஓரு டாகு-பில்ம் என்கிற் பாணியில் ஓருவரது பார்வையில் சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் படம் ஆரம்பம் முதலே.. நாயகன் டைரக்டர் ஆவது பற்றியே சொல்லி போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அவருக்கு ஓரு காதலி அவளுக்கு எதோ ஓரு வியாதி.. அதனால் அவள் எப்போது வேண்டுமென்றாலும் இறந்து போகலாம் அதனால் அவன் டைரக்டர் ஆகி அதை பார்த்து விட்டு தான் சாகவேண்டும் என்கிறாள்.

படத்தில் டெக்னிகலாக் சொல்ல வேண்டுமென்றால் பெளசியாவின் கேமராவும் கோணங்களும் அபாரம்.. அநேகமாய் ஹெ.டி எனப்படும் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டிருப்பதால் மிக வித்யாசமான கோணங்கள் அமைந்திருக்கிறது.

படத்தில் கிட்டத்ட்ட 100 புதுமுகங்கள்.. இருக்கிறார்கள். கதாநாயகியும், ஹீரோவும், ஆங்காங்கே வரும் சில முகங்களூம் பரவாயில்லை. கதை சொல்லும் முறையை தவிர அவ்வளவு ஓண்ணும் இம்ப்ரஸிவாக இல்லை. ஆரம்பத்திலிருந்து பார்க்க, .....பொறுமை வேண்டும்..

பேசாம பந்தயத்துக்கே போயிருக்கலாமோ.. சிந்து துலானியையாவது பார்த்திருக்கலாம்...

Sep 18, 2008

ராமன் தேடிய சீதை - விமர்சனம்


இயக்குனர் ஜெகன்நாத் தனக்கு கிடைத்த மூன்றாவது சான்ஸில் தனது வெற்றி எனும் சீதையை கண்டு விட்டார். இதற்கு முன்னால் அவர் ஜெகன் என்ற பேரில் விஜயின் புதியகீதை, ஜெகன்.ஜி என்ற பெயரில் கோடம்பாக்கம் என்று இயக்கிய படங்கள் எல்லாமே பப்படமாகி டப்பாவுக்கு போய்விட்ட நிலையில்.. இதோ.. ஜெகன்நாத என்ற பெயரில் ராமன் தேடிய சீதை..

ஸ்டேட் லெவலில் இரண்டாவது ரேங்க் டென்த்தில் வாங்கிய மாணவனை எல்லோரும் பாராட்ட,அவனது தாய் மட்டும் திட்ட, அதனால் +2வில் முதல் மாணவன் ஆகவேண்டிய கட்டாயத்தில் அதிகமாய் படிக்க, மெண்டல் ஸ்டெரெஸ் ஏற்பட்டு மனநல மருத்துவமனையில் 8 மாதம் சிகிச்சை பெற்று , படிப்பை விட்டு சொந்தமாய் தொழில் செய்து வாழ்கையில் உயர்ந்து நிற்கும் வேணுவுக்கு, கல்யாணத்திற்கு நாகர்கோயிலில் பெண் பார்க்க போகிறார்..
அங்கே பார்கும் பெண்ணிடம் (விமலா ராமன்)தனியாய் பேச வேண்டும் என்று சொல்லி, தன்னை பற்றிய எல்லா விவரங்களையும் சொல்ல, அவர் வேணுவை திருமணம் செய்ய மறுக்கிறா. அவரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை சொன்னதனாலேயே வருகிற வரன்கள் எல்லாம் தட்டி போக, ஒரு சமயம் மணிவண்ணனின் மகளுக்கு நிச்சயம் செய்து திருமணம் வரைக்கும் வந்து, மணப்பெண் ஓடிப் போய்விட, அதனால் கல்யாணம் தடைபடுகிறது.


வாழ்கையே நொந்து போய்.. மன் அமைதியின்றி கால் போனபோக்கில் போகும் வேணு ஓரு காரில் அடிபடப் போக, அப்போது அங்கே இருக்கும் கண் தெரியாத பசுபதி அவரை காப்பாற்றுகிறார். அந்த சம்பவத்தில் அவரும், வேணுவும் ந்ண்பர்களாக.. அந்த நட்பினால் வேணுவின் வாழ்வில் மேல் நம்பிக்கை எழுகிறது.

வேணுவுக்கு வேறு ஓரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்தால்தான் என் மகள் செய்த தப்பிற்கு பரிகாரம் என்று நினக்கும் மணிவண்ணன் வேணுவிக்கு வேறு ஓரு பெண்ணை நாகர்கோவிலில் பெண் பார்க்க போகிறார்கள். போன இடத்தில் ஓடிப்போன மணிவண்ண்னின் மகளை நிறைமாத கர்பிணீயாக, மிக ஏழ்மை நிலையில் பார்க்க, அவளூக்கு உதவி செய்ய ஹாஸ்பிடலுக்கு செல்ல..அங்கே ரிசப்ஷ்னிஸ்ட் ஆக வேலைப் பார்க்கும் விமலாராமனிடம் சொல்லி வைத்து அவளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறான்.


இதற்கிடையில் நாகர்கோவில் பெண் கார்திகாவை ஓரு கோயிலில் வைத்து பெண் பார்த்துவிட்டு, திரும்பும் போது ஓரு ஆட்டோ டிரைவரின் கதையை கேட்டு நெகிழ்ந்து போய் அந்த பெண் யார் என்று கேட்க, அவன் தன்னுடய ஆட்டோவில் கார்திகாவின் படத்தை காட்ட, வேணு அதிர்ந்து போய் என்ன் செய்வது என்று தெரியாமல் அந்த பெண்ணிடம் பேச, அவளும் என்ன முடிவு செய்வது என்று தெரியாமல் முழித்ததால் தான் பத்து நாள் டயம் கேட்டதாக சொல்ல.. வேணு விரக்தியுடன் சிரிக்கிறான்

அந்த சமயத்தில் மணிவண்ணனின் பெண்ணிற்கு பிரசவ வலி வந்து ஹாஸ்பிடலில் அட்மிடாக, வேணுவிக்கு போன் செய்யும் விமலா ராமன் , வேணு வந்ததும் பணம் கட்ட சொல்கிறான். மணிவண்ணனுக்கு அப்போது தான் விஷயத்தை சொல்கிறான். கோபத்தில் வந்த மணிவண்ணன் வேணுவை அடிக்க, அப்போது அங்கே வரும் விமலா ராமன் தடுக்க, உண்மையை சொல்கிறார் மணிவண்ணன். அதிலிருந்து வேணுவின் மேல் மரியாதையும் , அவனையா தான் வேண்டாம் என்று சொன்னோம் , என்று எப்ப்டி தன் காதலை சொல்லவது என்று உருக, அந்த் நேரத்தில் அதே ஊரில் இன்ஸ்பெக்டராக வேலைப் பார்க்கும் நவ்யா நாயரை பெண் பார்கக, விமலா ராமனை கூட்டி சென்று போக.. மீதி என்ன வென்று வெள்ளித்திரையில் பார்க்க..


கஜாலா, பசுபதியின் சேப்டர் கொஞ்சம் ஓல்ட் என்றாலும் கோல்ட்.. பசுபதி கண்தெரியாமல் சண்டை போடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

அதே போல் திருட வரும் நிதின் சத்யா ஓவர் நைட்டில் திருந்தி அவரை காதலிக்க ஆரம்பிப்பதும், அவருக்காக திருந்துவதும் கார்திகாவின் பிரண்டின் வண்டியை திருடி சென்று விற்றவ்னிடம் சண்டை போட்டுவதும்,கொஞ்சம் பழசு. ஆனால் நாலு பேருக்கு முன் பாராட்டும்படி நடந்தால் பேசுவேன் என்றதும் லோக்கல் மாராத்தானில் 10கிமீ ஓடி வெற்றி பெற்றுவது.. அதை கொண்டு போய் கார்திகாவிடம் கொடுக்க அதற்கு அவர் இனிமேல் தன்னை எப்போதும் பார்க்க கூடாதென்று சொல்ல.. அப்போது வர்ரும் வித்யாசகரின் பாடல்" என்ன செஞ்சே புள்ளே" பாடல் மனதை அறுக்கிறது.

அதே போல் வேணுவும்,மணிவண்ணனின் மகளும் சந்தித்து கொள்ளும் இடமும் சிம்ப்ளி சூப்பர்ப்..

ஆங்காங்கே.. சில இடங்களில் நாடகதனம் தெரிந்தாலும், இயல்பான நெகிழ்சியான பல காட்சிகள் நம் மனதை லேசாக பிசையத்தான் செய்கிறது.

மீண்டும் சொல்கிறேன் இந்த முறை இயக்குனருக்கு வெற்றி எனும் சீதை கிடைத்துவிட்டாள்..

எ.த.வ.கூ.படம் - TEETH (அந்த இடத்தில் பல்)


வாலிப, வயோதிக அன்பர்களே...இந்த பதிவை படிக்க,நல்ல நகைச்சுவை உணர்வும்,சகிப்புதன்மையும் தேவை.. அதனால்..உங்களூக்கு 10 எண்ணுகிறேன்..
1,2,3,4,5,6,7,8,9,10...அவ்வளவுதான் கவுண்ட்டவுன் க்ளோஸ்...சொல்லலன்னுசொல்ல
கூடாது..(சுஜாதா)

ஆம் நீங்கள் நினைக்கும் “அந்த” இடத்தில் தான் .. அந்த இடத்தில் பல் இருந்தால்.. ???

அப்படி ஓரு பெண்ணிற்கு இருக்க, அதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை. பிறந்ததிலிருந்தே அவளுக்கு அந்த பிரச்சனை இருக்கிறது. அவளது ஸ்டெப் பாதரின் மகனும், அவளும் சிறு குழந்தைகளாய் இருக்கும் போது பாத்டப்பில் குளிக்கையில் “நி உனதை..நான் எனதை’ விளையாட்டாய் காட்ட, அந்த இடத்தில் கைவைக்கும் பையன் விரல் கடிபடுகிறது. (கவலைபடாதீர்கள்.. எந்த விதமான செக்ஸூவல் காட்சியமைப்பும் இல்லாத ஓரு செக்ஸ், காமெடி,படம்.

வளர்ந்து பெரியவளாகும் அவளுக்கு ஓரு குழுவின் உந்துதலால் தன் கன்னிதன்மையை,ஒருவனுக்கே கொடுக்க வேண்டும் என்ற எணணத்தில் இருக்க, அங்கே.. பழகும் ஓரு பையனை பிடித்து போக..ஓரு சுபயோக சுபதினத்தில்... ஓரு அழகிய அருவின் மடியில் மிக ரொமாண்டிக்கான ஓரு இடத்தில் அற்புதமான லொகேஷன், அவர்கள் இருவரின் தவிப்பும், நடிப்பும் அருமை...

அது நடக்க ஆரம்பிக்க.. சிறிது நேரத்தில் பையன் துடிதுடித்து..கீழே பார்த்தால்.. துண்டாய் அவனது “லுல்லா”..இப்படி தன்னை டெஸ்ட் செய்யும் டாக்டரின் நான்கு விரல்கள்.. தன்னை பாதி மயக்கதில் அடைந்த இன்னொரு நண்பன் ,பின்னர் மயக்கம் தெளிந்த பின் அவனையும், தன்னுடய ஸ்டெப் பாதரின் மகனையும்,./என்று தொடர்கிறது...

இதையெல்லாம் மீறி அவளை வெற்றி கொண்டு எவனாவது அடைந்தால்தான் உண்டு.. ஆனால் அவள் வாழ்கை போய்க் கொண்டுடிருக்கிறது.

என்னதான் படம் என்றாலும்..கொஞ்சம் ஓவர்தான்.. ஹாலிவுட்டில் கூட இந்த படம் வெற்றி பெறவில்லை... இருந்தாலும் படத்தின் டைட்டிலும், அதன் ஸினோப்ஸிஸும் என்னை இழுத்தென்னவோ.. ஹி..ஹி..ஹி.. (படத்தில ஓரு செம சூடான மேட்ட்ர் ஓன்னு சும்மா வாலை மீன் கணக்கா.. ஹூம்... ஆமா சொல்லிட்டேன்.. சொல்லன்னு சொல்ல கூடாது..

அது சரி அது என்ன எ.த.வ.கூ.படம்ன்னு கேக்கிறீங்களா?

எப்பவும் தமிழில் வர கூடாத படம்.. (ஏன்னா..நமக்கு ......தன்மை கொஞம் கம்மி)

சன் v/s கலைஞர் டி.ஆர்.பி. தொடர்ச்சி....

டி.ஆர்.பி ரேடிங்கின் லிங்கை உங்களுக்கு அளிக்கிறேன். இது ஓரு உதாரணம் தான் இந்த மாதம் வரை இதே நிலைதான். இங்கே க்ளிக்கவும்

Sep 17, 2008

எ.வ.த.இ.ம.படம் - தன்மாத்ரா-கொஞம் பழசுதான் ஆனாலும் மிக நல்ல படம். இதை பற்றி பதியாமல் இருக்க முடியவில்லை.
செரட்டேரியட்டில் வேலைபார்க்கும் ரமேசன் அவரின் கனவுதன் மகனை எப்படியாவது சிவில் சர்வீஸ் பரிட்சையில் தேர்ச்சியாக வேண்டும் என்பது.

ஆயிரம் தான் லட்சம் லட்சமாய் ஐ.டி, மற்றும் மற்ற துறைகளீல் சம்பாதித்தாலும் சிவில் ச்ர்வீஸ் துறையில் கிடைக்கும் மரியாதை தனி என்பது அவரது எண்ணம். துடியான மகன் மனு, குட்டி மணியா ஓரு பெண் குழந்தை, இவர்க்ளுக்கு எல்லாம் மணியாய் இப்படி ஓரு மனைவி அமையாதா என்று ஏங்க வைக்கும் மனைவி.

மனுவிக்கு எல்லாமே அப்பா தான். அவர் தான் ஆதர்சம். மனு தன் சிநேகிதியுடன் பர்த்டேக்கு பிஸ்சா கார்னர் போய்விட்டு லேட்டாய் வர, அதை சொல்லாமல் மறைக்க அவன் பொய் சொல்ல, அதை அறிந்த மோகன்லால் (ரமேசன்) அதை பற்றி பேசாமல் தான் சிறுவயதில் பொய் சொல்லிவிட்டு ப்ரச்சனையில் மாட்டியதாகவும், ஆனால் அவரின் அம்மா அவரை விட்டுக் கொடுக்காமல் பேசியதாகவும். அதனால் இனிமேல் வாழ்கையில் பொய் சொல்ல கூடாது என்று முடிவெடுத்ததை சொல்ல.. அதை கேட்டு மனு கலங்கி போய் அழுது உண்மை சொல்வதும்.. இது வெறும் காட்சியல்ல.. ஓரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை இதைவிட எப்படி சொல்லவது.

பாரதியார் பாடல்களின் மேல் அளவில்லா காதல் கொண்ட மோகன்லால் “காற்றுவெளீய்டை கண்ணம்மா” பாடலை பாடுவது அமோகம். ஞாபகசக்தியை பற்றி தன் மகனின் ஸ்கூலில் ஓரு லெக்சர் அடிப்பதாகட்டும், உங்களுடய மனைவியைவிட அழகான பெண்க்ளை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டு யாரும் பதில் சொல்லாமல் இருக்க, உங்களூக்கு எல்லோருக்கும் இங்கிருக்கும் யாரோ ஓருவர் உங்கள் மனைவியை விட அழகானவர் யார் என்று தெரியும்,ஆனால் சொல்ல விருப்பமில்லை..ஏனென்றால் அப்படி சொன்னால் உங்கள் மனைவி மனது புண்படும் என்பதால். ஆனால் ஆதே பெற்றோகளாக இருக்கும் போது உங்கள் மகனிடம் அவன் எப்படி படிக்கிறான் இவ்ன் எப்படி படிக்கிறான் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்க.. பெற்றோர்களுக்கு ஓரு பாடம். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்த கணவனாய், தகப்பனாய், புத்திசாலியாய், மிகுந்த ஞாபக சக்தி வாய்ந்தவனாய் இருக்கும் மோகன்லாலுக்கு அல்சைமர் என்ற நோய் வந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகங்கள் மறைய ஆரம்பிக்க.. கண்களிலில் க்ண்ணீர் மழையை உங்களால் கட்டுபடுத்த முடியாது.

அவரின் தந்தையாக நெடுமுடி வேணு, மனுசன் சும்மா பின்னியிருக்கார். ஓரு முறை ஊருக்கு வரும் மோகன்லால் உயரமான வீட்டுக்கு படிக்க்ட்டு ஏறுவதற்கு சுலபமாய் மண அடித்து ரோடு போட்டு மேடு பண்ணி உன் முட்டிக்கு ரெஸ்ட் கொடுக்கணும்ன்னு சொல்ல, அதே வீட்டிற்கு முழு குழந்தையாய் மோகன்லாலை வேலை முடிந்து மேடு செய்த வீட்டின் வாசலில் வண்டி நிற்க, காரை விட்டு இறங்காத வேணு எந்த வித ப்ளாஷ்கட்டும் இல்லாமல் தன் கண்களில கண்ணீர் சேர்ந்து நிற்க. பார்க்கும் பார்வையிலேயே ஆயிரம் காட்சிகள் ஓடும்.

மோகன்லாலின் நண்பனாக ஜெகதி.. மனுசனுக்கு, காமெடியும் வரும், குணசித்திரமும் வரும்..மோகன்லாலின் சின்ன வயது நட்பான சீதா.. மனைவி மீரா வாசுதேவன்.. என்று யாரையும் சும்மா சொல்லிவிடமுடியாது..

எல்லோரையும் விட பாராட்ட வார்தைகளே கிடைக்காத ஓருவர் இயக்குனர் ப்ளசி..நிஜமாகவே அவரிடம் நேரில் பேச வாய்ப்பு கிடைத்தபோது என்னால் பேச முடியவில்லை. எவ்வளவோ ஜாம்பவான்களூடன் நான் பேசியிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை. என்னால் முடியவில்லை.

சினிமா பார்த்து நான் அழுவது என்பது பல நேரங்களில் எனக்கு சிரிப்பாய் இருந்திருக்கிறது...அங்கும், இங்கும் சில நேரங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.. ஆனால் படம் முழுவதும் நெகிழ்ந்தும், உருகியும், பொல..பொலவென்று அழுதும் படம் பார்த்ததில்லை..

படத்தில் வரும் பலகாட்சிகளை பற்றி உங்களிடம் பகிந்து கொள்ள முயன்று எழுத ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.. படத்தின் காட்சிகளை நினைக்கும்போது என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை..

ம்...ஹூம்..எ.வ.த.இ.மா.படம்?

சன் V/S கலைஞர். டி.ஆர்.பி யில் முந்தியது யார்?

கடந்த சில நாட்களாய் பதிவில் போட்ட ச்ர்வேயினபடி நெ.1 சேனல் எது என்ற சர்வேக்கு ஆதரவளித்த பதிவர்களூக்கு மிக்க நன்றி.முதலில் நமது டி.ஆர்.பியில் முதலில் வந்தது யார் என்பதை உங்க்ளுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1 . சன்
2 . விஜய்
3 . கலைஞர் என்று முறையே முதல் மூன்று இடங்களை கைபபற்றியுள்ளது.

இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவெண்றால் சன் டிவி -100 வோட்டுகளை பெற்று 40 சதவிகதம் எடுத்து மீண்டும் ஓரு முறை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நெ.1 என்று தன்னை நிறுபிப்திறுக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மொத்தம் வோட்டு போட்ட பதிவர்கள்-247
சன் டிவி 100 வோட்டுகளும், விஜய் டிவி -83 வோட்டுகளும், கலைஞர் டிவி -31 ஓட்டுக்களும், மக்கள் டிவி -23 ஓட்டுகளும் பெற்று இருக்கிறது.

இது தான் ஓரிஜினலான டி.ஆர்.பி என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று நீங்கள் கேட்டால்.. இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஏன் என்றால் டி.ஆர்.பி பற்றி என்ன என்பதை பதிவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே லக்கிலுக்கின் பதிவிலிருந்து புரிந்திருக்கும். அதனால் நான் விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இப்போதைய நிலவரப்படி நிஜமான டி.ஆர்.பி ரேடிங்கில் முதலிடம் வகிப்பது சன் டிவியே..
முதல் 100 நிகழ்ச்சிகளூக்குள் 98 ப்ரோக்ராம்கள் சன் டிவியின் நிகழ்ச்சிகளே என்று அடித்து கூறுவதற்கு என்னிடம் டி.ஆர்.பி ரேடிங் ரிப்போர்ட் உள்ளது. கடந்த ஜூலை 20 திலிருந்து ஜூலை 27 ஆம் தேதிக்கான டி.ஆர்.பி ரேடிங் ரிப்போர்ட்படி உள்ள நிலை. ஏதோ ஓருபடம், இரண்டு படம் போடுவதால் டி.ஆர்.பி என்பது கொஞ்சம் முன்னே பின்னே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கலைஞர் டிவியில் லாபம் மற்றும் டி.ஆர்.பி தரும் ஓரே நிகழ்ச்சி “மானாட மயிலாட” டாக்டர் அய்யா பாஷையில் “மானாட மார்பாட” .அதுவும் 11.91 .48வது இடத்தில், நூறாவது இடம் “கலைஞர் செய்திகள்”

வருடத்திற்கு 50 படங்கள் வேண்டும் அவ்வளவு படங்களை தயாரிப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுவது நியாயமே..ஆனால் வருடம் பூராவும் புதுபுது படங்களையே போடவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கலைஞர் டிவியின் முதலாம் ஆண்டு விழாவுக்கு போட்ட பருத்திவீரன் படமே ஓரு ரிப்பீட்டு தான். அதனால் வருடம் பூராவும் புது படம்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அடுத்து நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பான்மை மக்கள் பார்பது சீரியல்களே.. அதில் முதல் 100 இடங்களூக்குள் ஓரு கலைஞர் டிவி சீரியலும் வரவில்லை எனக்கு தெரிந்து, ஓரு வருட்மாய். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கூட முதல் 100 இடங்களில் வந்திருக்கிறது ஆனால் ஓரு முறை கூட கலைஞர் டிவி சீரியல்கள் வந்தது இல்லை. மானாட மயிலாட தவிர.

கலைஞர் டிவியில் எல்லா புதுப் படங்களையும் வாங்கிவிட்டதாக சொல்லிக் கொண்டிருப்பது எல்லாம் ஓரு பேச்சுதான். என்னதான் புதுப் படங்களை வாங்கியிருந்தாலும் பெரும்பாலும் பெரிய படங்கள் எல்லாம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் போட வேண்டிய அக்ரிமெண்டில் இருப்பதால் அப்படி ஓன்றும் பெரிதாக பாதித்து விடாது. அதுவும் ஆட்சி இருக்கும் வரைதான் இவர்களால் இப்படி வாங்க முடியும். அதற்கு அப்புறம் கொஞ்சம் கஷ்டம்தான். போன முறையே சந்திரமுகியை ரொம்பவும் முட்டி மோதியே சன் டிவி வாங்கியிருப்பதும் அந்த படத்தை இன்னமும் டிவி ஓளிபரப்பவில்லை என்பது தெரிந்ததே.
நான் ஏதோ சன் டிவிக்கு பரிந்து பேசுவதாக நினைக்க வேண்டாம். எல்லாருமே ஓரே குட்டையில் ஊறிய மட்டைதான்.

அதோடு ஓவ்வொரு படத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கி வருவதால் அவ்வளவு பணத்தையும் ஓரே நாள் ஓளிபரப்பில் சம்பாதிப்பது சாத்தியமில்லை. அதனால் மிக ஹிட்டான படங்களை மீண்டும் மீண்டும் ஓளிபரப்பினால் மட்டுமே அந்த படத்தினால் லாபம் சம்பாதிப்பது சாத்தியம் என்பதை இந்த துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததே..

கலைஞர் டிவியின் வரவால் சன் டிவிக்கு கொஞ்சம் , கொஞ்சமே கொஞ்சம் காம்படிஷன் வந்திருப்பது உண்மைதான். ஆனால் இதோ கலைஞர்டிவிக்கு, விஜய் டிவிக்கும் ஆப்பு வைப்பதை போல் வரப் போகிறது ஜீ தமிழ். அவர்களும் பாலாவின் நான் கடவுள் உட்பட பல படங்களை வாங்கி வருகிறார்கள். சோ.. அவர்க்ள் ஆரம்பிக்கும் போது தான் உண்மையான போட்டி ஆரம்பமாகும். ஏற்கனவே ராஜ் டிவியும் தன் பங்கிற்கு வருடத்திற்கு 12 படங்களை தயாரிக்க அரம்பித்துவிட்டது.

இதுநாள் வரை ஆட்சியின் அதிகாரத்தை வைத்தே சன் டிவி முன்னுக்கு வந்த்து போல் ஓரு மாயை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அது அல்ல உண்மை, யார் ஆட்சியில் இருந்தாலும் நெ.1 சேனலாக உருவாவதற்கு அதன் பின்னே உழைப்பு வேண்டும்.ஏன் என்றால் டிவி ரிமோட் உங்க்ள் கையில் உள்ளது. எந்த ஆட்சியும் உங்களை இந்த, இந்த சேனலைத்தான் பாரக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவ்து இல்லை. அப்படி இருந்தால் கடந்த ஆட்சியில் ஜெயா டிவிதான் நெ.1 ஆகியிருக்க வேண்டும். இதெல்லாம் கொஞ்சம் தான் இன்னமும் டிவிக்கு பின்னால் நிறைய இருக்கு. அதையெல்லாம் அடுத்த பதிவுகளில் சொல்கிறேன். ஜூலை20முதல் ஜூலை 27 வரைக்கான டி.ஆர்.பி ரிப்போட்டை என்னிடம் எக்ஸெல் ஷீட்டாயிருப்பதால் விரைவில் மாற்றி லிங்க் செய்கிறேன். மீண்டும் டி.ஆர்.பி யோடு சந்திக்கிறேன்.