Thottal Thodarum

Aug 31, 2012

முகமூடி

தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட படம். மிஷ்கின், ஜீவா, யுடிவி என்று ஒரு நல்ல டீம். நிச்சயம் ஒரு நல்ல படத்தை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருந்தது.  அந்த நம்பிக்கையை லேசாய் ஆட்டிப் பார்த்தது இந்த படத்தின் ட்ரைலர்.  சரி..  நம்மாளு கொரிய, ஜப்பானிய படங்களையே இன்ஸ்பிரேஷனில் பின்னியெடுப்பவர். கிட்டானோவின் சிஷ்யர் என்று தன்னை சொல்லிக் கொள்பவர் பேட்மேன், சூப்பர் மேன் படங்களின் பாதியையாவது கொடுத்துவிடமாட்டாரா? என்ற எண்ணம் ஒரு மூலையில் கூவிக் கொண்டிருந்தது. 

சினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாகம்

கடந்த சில வருடங்களுக்கு முன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்த, குற்றம் சாட்டிக் கொண்டிருந்த விஷயம் சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. எல்லா தியேட்டர்களையும் முதல்வரின் குடும்பமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்றார்கள். ஆனாலும் அன்றைய காலத்திலும் வாரத்திற்கு எட்டு படங்கள் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டுதானிருக்கிறது.  சரி அதுதான் ஆட்சி மாறிவிட்டதே சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, கிடைக்கிறது சென்ற ஆட்சியில் கிடைத்தது போலவே பெரிய படங்களுக்கு நடுவில் இரண்டு காட்சிகளோ, ஒரு காட்சியோ, அல்லது மொத்தமாய் ஒரு நாளோ ஓடுகிறார்ப் போல கிடைக்கிறது. சென்ற ஆட்சியில் ஒரு குடும்பமே ஆக்கிரமித்திருந்தது என்று சொன்னவர்கள் இன்று யாரைச் சொல்வது என்று புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்

Aug 29, 2012

சாப்பாட்டுக்கடை - மன்சுக்

 மன்சுக்லால் சேட் சுவீட் கடை என்றால் சவுக்கார்பேட்டையில் பிரபலம். அவர்களின் டோக்லா, மற்றும் சமோசா, கச்சோடி, போன்றவை போட்ட மாத்திரத்திலேயே காலியாகிவிடும் அளவிற்கு பிரசித்தி பெற்ற கடை. இவர்களின் உணவகம் கம் ஸ்வீட் கடை ஒன்றை வெகு காலத்திற்கு முன்பே ராமசாமி தெருவில் ஆரம்பித்திருந்தார்கள். இவர்களிடம் மதிய நேரத்தில் சூடான சப்பாத்தி, புல்கா, வெஜ் ப்ரைட் ரைஸ் மற்றும் புலாவ் அயிட்டங்கள் பாஸ்ட் புட் முறையில் வெகு காலத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் படு சாப்டான சப்பாத்தி மற்றும் புல்காவிற்காகவே கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்தாலும் அவ்வப்போது சென்று சாப்பிட்டு வருவேன். 

Aug 28, 2012

18 வயசு

55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர்
ரெடியாகி ரொம்ப நாளாக வெளிவராமல் இருந்த படம். ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய அடுத்த படம் என்கிற போது ஏற்பட்ட எதிர்பார்பை படம் காப்பாற்றியதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ரேணி குண்டா படம் வசூல் ரீதியாய் சரியாய் போகாவிட்டாலும், டெக்னிக்கலாகவும், க்ரிட்டிகலாகவும் பெயர் வாங்கிக் கொடுத்தபடம். அதே தயாரிப்பாளருக்கு மற்றொரு படம், அதுவும் மீண்டும் அவரின் மகனுக்காகவே எனும் போது பாவம் மனிதருக்கு என்ன பிரச்சனையோ? தன்னை அடமானம் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது.

Aug 27, 2012

கொத்து பரோட்டா 27/08/12

தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் முதல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்கள், வாசகர்கள், வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அங்கேயே ஒரு சிறு புத்தகக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காலையில் மூத்த பதிவர்களோடு ஆரம்பித்த நிகழ்வு,  தொடர்ந்து இளைய பதிவர்கள் மூத்த பதிவர்களை பாராட்டி மகிழ, அதன் பிறகு வந்திருந்த அத்துனை பதிவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சியை நானும், சி.பியும், சிராஜுதீனும், சங்கவியும் சேர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடத்தினோம். மதியம் அருமையான வெஜ் விருந்து. அடுத்த ஒரு மணி நேரத்தில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் விழாவை சிறப்பிக்க வந்தார். கவியரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் நானும் ஒரு எண்டர் கவிதையை படித்தேன். நிறைய பேர் கைதட்டியது நான் சீக்கிரம் முடித்தேன் என்பதற்கா அல்லது நிஜமாகவே கவிதையாய் வந்துவிட்டதற்கா? என்று தெரியவில்லை.சென்னையில் உள்ள முக்கிய பதிவர்கள் அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பித்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வெளிநாடு, வெளி மாநிலம், வெளியூரிலிருந்து எல்லாம் பதிவர்கள் வந்திருந்ததும்,  குறிப்பாய் இருபதுக்கும் மேற்பட்ட பெண் பதிவர்களும் கலந்து கொண்ட விழாவாக அமைந்தது இதுவே முதல் முறை என்று சொல்ல வேண்டும். விழாவையும், அதற்கான ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக கட்டமைத்து நடத்திய சக பதிவர்கள், விழாக் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 25, 2012

பெருமான்

இந்தவாரத்தின் மற்றொரு சிறு முதலீட்டு டிஜிட்டல் படம். பெருமான் என்கிற ரஜினிகாந்த் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்பு ரஜினிபெயரை எடுத்துவிட்டார்கள். ஆச்சரியங்கள் படத்தைப் போலவே இவர்களும் வழக்கமான ஒரு கதைக் களனை எடுக்காமல் இருந்ததற்காக பாராட்டப்பட வேண்டும்.

Aug 24, 2012

ஆச்சரியங்கள்

மீண்டுமொரு சின்ன பட்ஜெட் படம். அது அவர்களின் விளம்பரங்களிலேயே தெரிந்தது. பல சின்ன பட்ஜெட் டிஜிட்டல் படங்களைப் பார்த்து சலித்துப் போன நேரத்தில் ஆச்சர்யமாய் வந்திருக்கும் படம்.

Aug 22, 2012

வலிக்காமல் கொள்ளையடிக்கும் மால்கள்

தமிழகத்தில் பல இடங்களில் மால் கலாச்சாரம் பரவிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இன்னும் சில வருடங்களில் சுமார் இருபது மால்கள் திறக்கப்பட இருக்கிறது. சிற்றூர்களிலும், மேலும் பல முக்கிய நகரங்களிலும் சிறு சிறு மால்கள் தியேட்டர்களோடு திறக்கப்படவிருக்க, பார்க்கிங் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளையைப் போல புது புதுசாய் யோசித்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். கவர்ச்சிகரமான ஸ்டைலில். முக்கியமாய் புட்கோர்ட்டில், கேம்ஸ் செக்‌ஷனில்.

Aug 21, 2012

HP

55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர்
ஒரு மாதத்திற்கு முன் புதியதாய் ஹெச்.பி பிரிண்டர் கம் ஸ்கேனர் ஒன்றை வாங்கினேன். வாங்கிய சில நாட்களிலேயே ப்ரிண்ட் செய்ய கமாண்ட் கொடுத்தவுடன் ப்ரிண்ட் சரசரவென வர வேண்டிய ப்ரிண்டர் திக்கித் திணறி ப்ரிண்ட் செய்தது. நாளாக.. நாளாக பிரிண்ட் கொடுத்தால் அது பிரிண்டாகி வருவதற்கு குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆனது. 

Aug 19, 2012

கொத்து பரோட்டா -20/08/12

55 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து அன்பு செலுத்திவரும் நண்பர்கள், வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள் -கேபிள் சங்கர்
மீண்டுமொரு பள்ளி விபத்தும், உயிரிழப்பும். இப்படி சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது நாட்டில் நிகழும் பள்ளிச் சிறுவர்களின் மரண நிகழ்வுகள். சிறுவன் ரஞ்சித்தின் மரணம் பெற்றோர்களிடையே ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மேலாளர்களை கைது செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் திடீர் புரட்சியாளர்கள், பார்பனிய எதிர்பாளர்கள், நிஜமாகவே சமூக அக்கறைக் கொண்டவர்கள் என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பும், போராட்டமும் கிளம்பியிருப்பது நல்ல விஷயம்தான் என்றாலும் இவ்வளவு எழுச்சியும் , கேள்விகளும் இம்மாதிரியான பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்க்கும் போது கேட்கிறோமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நல்ல பள்ளி, பிரபலமான பள்ளி என்பதை மட்டுமே வைத்து டொனேஷன் கொடுத்தெல்லாம் அப்பள்ளியில் நம் பிள்ளைகளை சேர்க்கிறோம். ஆனால் எப்போது நாம் அவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் தட்டிக் கேட்கிறோம்?. நீச்சல் குளத்தில் அதிகப்படியான மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். சரியான ஆள் பலம் இல்லை என்று இன்று குற்றச்சாட்டு சொல்பவர்கள் அதை உணர்ந்த அன்றே எதிர்த்து போராடியிருக்க வேண்டும். கேட்டிருக்க வேண்டும். இப்படி எல்லோரும் கேட்டிருந்தால் நிச்சயம் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக வைத்திருக்கும் பள்ளியும் யோசித்திருக்கும். நான் அந்த பள்ளிக்காக வாதாடவில்லை. அவர்கள் மேல் குற்றம் இருக்கிறதா இல்லையா? என்பதை சிறுவனின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் தான் முடிவு செய்யும் என்று தெரியும் என்கிறார்கள். பஸ்ஸில் ஓட்டையை வைத்துக் கொண்டு ஓட்டியதற்கும் இந்த விபத்துக்கும் நிறைய வித்யாசம் இருந்தாலும், இந்நிகழ்வுகள் எல்லாம் பள்ளியின் பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. போராட்டக்காரர்களின் ப்ரெஷர் காரணமாய் பள்ளியின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டார்கள். அன்றிரவே ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார்கள். சரி.. திருப்தி என்று அடுத்த வேலையைப் பார்க்க போகாமல்  நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, வேன் மற்றும் அவர்களின் பாதுகாப்பு முறைகள் எல்லாம் சரியாக உள்ளனவா? இல்லையென்றால் பணம் கட்டி படிக்க வைக்கும் நமக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. கேளுங்கள் தனியாய் கேட்டு பதில் இல்லை என்றால் இப்போது ஒன்று கூடி போராட்டம் நடத்த குழுமும் கூட்டம் போல கூடி கேளுங்கள் நிச்சயம் சரியான பதில் கிடைக்கும். 
@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 18, 2012

Follow Up - சென்னை மாநகராட்சி

இம்மாதத்தின் இரண்டாம் தேதியன்று தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும் என்கிற தலைப்பில்  மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு அரசு கொடுக்கும் உதவிப் பணம் மறுக்கப்படுகிறது என்றும், அதற்கு காரணம் எந்த ஏரியாவில் மருத்துவ உதவி பெற்றார்களோ அந்த ஏரியாவில் இருக்கும் பேங்கில் தான் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டும் என்றும் கூறி அலைய விட்டுக் கொண்டிருந்தார்கள். பேங்குகளோ, ப்ரூப் எல்லாம் கொடுத்தும், அவர்களின் வீட்டிற்கு அருகில் இருக்கும் பேங்குகளில் தான் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியும் என்று அலைக்கழித்துக் கொண்டிருந்தததை பற்றி எழுதியிருந்தேன்.

Aug 17, 2012

Ek Tha Tiger

சமீபத்தில் வசேப்பூர் படம் பார்க்க போயிருந்த போது இப்படத்தின் ட்ரைலரை பார்த்தேன். மிகவும் ஸ்லீக்காக செய்திருந்தார்கள். கேத்தரீனா கைஃப் வேறு இருப்பதால் பார்த்து தொலைத்தே ஆக வேண்டிய பட லிஸ்டில் சேர்ந்துவிட்டதால் பார்த்தாகிவிட்டது.

Aug 16, 2012

நான்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாய் நடிப்பில் முதல் படமாகவும், இசையில் 25வது படமாகவும் வெளிவந்திருக்கும் படம். Identity Theft தான் படத்தின் கான்செப்ட். அதை புதிய இயக்குனர் ஜீவா சங்கர் சரியாக கையாண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Aug 15, 2012

அட்டக்கத்தி

இன்ஜினியரிங் டிப்ளமோ படிக்கும் காலத்தில் தினமும் பல்லாவரம் வரைக்கும் மின்சார ரயில் பயணம். அங்கிருந்து பம்மல் வரை பஸ் என ஃபீக் அவரில்  பயணம் செய்து படித்த காலத்தில் பஸ்ஸிலிருக்கும் கூட்டமோ, காத்திருப்போ, எதுவுமே பெரிய விஷயமாய் தெரியாது. ஏனென்றால் 7.50க்கு வரும் பவுசியாவுக்காகவோ, 8மணி ஸ்டெல்லாவுக்காகவோ, 8.05க்கு வரும் கருப்பு ஜெயந்திக்காகவோ, முத்தமிழ் நகரில் ப்ராக்டீஸ் செய்யும், இளம் பெண் டாக்டருக்காகவோ, காத்திருந்து அவர்களின் கடைக்கண் பார்வைக்காகவும், லேசான சிரிப்புக்காகவும்,சின்ன ஹாய்க்காகவும் எத்தனை விதமான சில்லு வேலைகளை செய்திருப்போம் என்று இப்போது நினைக்கும் போது சிரிப்பாய் இருக்கிறது. பஸ்களில், ரயிலில் யாராவது புட்போர்ட் அடித்துக் கொண்டோ, ஆதீதமாய் சிரித்துக் கொண்டோ வரும் இளைஞர்களைப் பார்க்கும் போது, உடன் அவர்கள் யாருக்காக இப்படியெல்லாம் செய்து கொண்டு வருகிறார்கள் என்று அவர்களைப் பார்க்கத் தோன்றும். காதல் என்ற ஒன்றை, அந்த வயதில் வருவது இனக்கவர்ச்சி, அது இது என்று என்னதான் உட்டாலக்கடி அடித்தாலும், அந்த ஒரு சிரிப்புக்கும், பார்வைக்கும் இருக்கும் பவரை அனுபவிக்காமல் க்ராஸ் செய்திருக்கவே முடியாது. அந்த சமயங்களில் காதலிக்கும் பெண்கள் வேண்டுமானால் மாறிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் காதல் மாறவே மாறாது. இதைத்தான் படமாய் கொடுத்திருக்கிறார்கள்.

Aug 13, 2012

எப்படி மனசுக்குள் வந்தாய்?

காதலில் விழுந்தேன் இயக்குனரின் அடுத்த படைப்பு.என்று எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஸ்டைலில் ஸ்டாம்ப் எல்லாம் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதே காதலில் விழுந்தேன் பாணிக் கதையையே வேறு ஒரு மொந்தையில் போட்டு கொடுத்திருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

கொத்து பரோட்டா -13/08/12

வெள்ளியன்று திரைப்பட இலக்கிய சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டேன். ஏற்கனவே இச்சங்கத்தின் இரண்டாவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தேன். இந்நிகழ்வினை நடத்தும் உதவி இயக்குனர் விஜயன் கைக் காசை செலவழித்து கடந்த ஓராண்டாய் இந்நிகழ்வை நடத்தி வருகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள். எழுத்தாளர் தமிழ்மகன் திரைத்துறையில் எழுத்தாளர்கள் பங்கினை பற்றியும், களஞ்சியம் தமிழ் திரைத்துறை இன்றைக்கு சந்தித்து வரும் ப்ரச்சனைகள் குறித்து ஆவேசமாய் பேசினார். தனஞ்செயன் தமிழ் திரையில் இலக்கியவாதிகளை எப்படி பயன் படுகிறார்கள். அப்படியே பயன் படுத்த நினைத்தாலும் அதை செயல்படுத்த முடியாது போன காரணம் என்ன என்பதை சுவாரஸ்யமாய் விளக்கினார். சுரேகாவும் தமிழ் சினிமாவின் சூழல் பற்றி பேசினார். பாலு மகேந்திரா சினிமாவுக்கு எல்லோரும் கதை தேவை என்று சொன்னார்கள் சொல்கிறார்கள். நான் எடுத்த அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை போன்ற படங்களில் என்ன கதை இருந்தது ஓடியது? என்று கேட்டார் பதிலில்லை. நான் இந்த ஆண்டு வெளியான படங்களைப் பற்றியும், தமிழ் சினிமா ஏன் தோல்வியின் பின் செல்கிறது? எங்கே தமிழ் சினிமா எனும் பொன்முட்டையிடும் வாத்தை அறுக்கிறார்கள் என்பதை எனக்கு தெரிந்த வியாபார முறையில் சொன்னேன். விழா இனிதே நிறைவுற்றது. நன்றி விஜயன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 11, 2012

பனித்துளி

தமிழ்நாட்டில் படமெடுப்பதைவிட, வெளிநாட்டில் படமெடுப்பது சுலபம், செலவும் குறைவு. அதிலும் பெரிய நடிகர்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் செளகர்யம். படம் பூராவும் அமெரிக்காவிலோ, அண்டார்டிக்காவிலோ எடுத்துவிட்டு, ஒரு பாட்டு, ரெண்டு காமெடி, என்று பத்து நிமிஷம் இங்கே உள்ள யூனிட், டெக்னிஷியன்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படமாக்கிவிடலாம். அப்படிப்பட்ட ஐடியாவில் பல வெளிநாட்டு எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் கதையை அவர்கள் ஊரில் வைத்து தயாரிக்கிறார்கள். ஆனால் படத்தை  வெளிநாட்டில் எடுத்துவிட்டு, பார்க்க மட்டும் நமக்கு விதித்திருக்கிறதே என்று நினைக்கும் போது கொடுமையாய் இருக்கிறது.அப்படிப்பட்ட ஒரு படமாய்த்தான் பனித்துளியை உருவாக்கியிருக்கிறார்கள்.

Aug 10, 2012

Julayi

அல்லு அர்ஜுன், இலியானா, த்ரிவிக்ரம், தேவி ஸ்ரீ ப்ரசாத், என்று மெகா டீம். ஏற்கனவே ட்ரைலரும், பாடல்களும் ஹிட்டடித்திருக்க, அல்லு அர்ஜுனின் திருமணத்திற்கு பிறகு வரும் படம். இப்படி பல எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டிருந்த படம்.

Aug 9, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012

இந்த ஆண்டின் வெற்றிப் படங்களின் ஒன்றான கலகலப்பின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி பட ஜுரம் எல்லா இயக்குனர்களுக்கு தொற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் வழக்கம் போல நிறைய சின்னப் படங்களும், பெரிய படங்களும் வெளியான மாதமிது.

Aug 8, 2012

கேட்டால் கிடைக்கும்

ஆம் கேட்டால் கிடைக்கும்தான். இக்குழுமத்தைப் பற்றி நான் ஏற்கனவே நிறைய முறை எழுதியிருக்கிறேன். நானும் சுரேகாவும் இணைந்து ஆரம்பித்த இந்த ஃபேஸ்புக் குழுவில் 1541 உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இக்குழுவின் மூலம் சாதித்த விஷயங்களைப் பற்றி நானும், சுரேகாவும் அவ்வப்போது பதிவெழுதி வருகிறோம். இது எங்களின் வெற்றியை மார்தட்டிக் கொள்ள அல்ல இப்பதிவுகளின் மூலம் அதைப் படிக்கும் ஒவ்வொருவரும் சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை தட்டிக் கேட்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஒரு நேர்மையான சமுதாயம் அமையும் என்பதே எங்களது ஆசை. எங்கள் குழுவில் உள்ளவர்களின் ஆசையும்.

Aug 7, 2012

சாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்

இந்தக் கடையைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னால் சிறு குறிப்பாய் கொத்து பரோட்டாவில் எழுதியிருந்தேன். சென்னை மேற்கு மாம்பலத்தில்  லேக் வியூ ரோடுக்கு நேர் பின்புறம் இருக்கிறது இந்தக் கடை.  சைவ டிபன்  மற்றும் சாப்பாட்டுப் பிரியர்களின் வேடந்தாங்கல் என்று சொன்னால் சாப்பிட்டவர்கள் அதை ஆமோதிப்பார்கள். 

Aug 6, 2012

கொத்து பரோட்டா -06/08/12

சென்ற வாரம் சில சினிமா நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது பெரிய விவாதம் வந்தது. அதாவது பட்ஜெட் பற்றியும் வசூலைப் பற்றியும் யோசித்தால் நல்ல இயக்குனராக முடியாது என்று நண்பர் ஒருவர் வாதிட்டார். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குனர் படத்தில் யார் நடிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன வியாபாரம் இருக்கிறது, என்பதையெல்லாம் கணக்கிட்டுத்தான் ஒரு படத்தின் பட்ஜெட் இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அப்படம் சுமாரான வெற்றி பெற்றால் கூட தயாரிப்பாளர் தப்பிக்கமுடியும் என்றும் சொன்னேன். இன்று வரை பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாத பல இயக்குனர்களின் படங்களைப் பற்றி பத்திரிக்கைகள் வேண்டுமானால் பாராட்டலாம் ஆனால் அடுத்த படம் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் வர மாட்டார்கள். என்ன தான் கலை அது இது என்று உட்டாலக்கடி அடித்தாலும், பணம் போட்டு பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபாரம் தான் சினிமா. அதில் நூற்றில் ரெண்டு படம் ஹிட்டாவதைவிட, சரியான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படும் சிறிய படங்களின் வெற்றி விகிதம்  அதிகமாய் இருந்தால்தான் சினிமாவின் நிலையும் புதிய இயக்குனர்களுக்கு வாழ்வும் கிடைக்கும் என்றேன். அதற்கு உதாரணமாய் பல படங்களைச் சொன்னேன். வியாபாரமே இல்லாமல் ஏழெட்டு கோடிக்கு படமெடுத்துவிட்டு, வெறும் இரண்டு கோடி மட்டுமே வசூல் செய்த படங்கள் பல, ஆனால் பத்திரிக்கைகளில் நல்ல பெயர் கிடைத்ததால் இயக்குனருக்கு வேறு படம் கிடைக்கும் ஆனால் அந்தத் தயாரிப்பாளர் அவ்வளவு தான் திரும்ப வருவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 5, 2012

சினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.

சமீபத்தில் கேபிள் சங்கர் எழுதி, மும்மொழிகளில் வெளியான  சினிமா விமர்சனங்கள் அடங்கிய புத்தகம் இது. ஆங்கிலமும் உள்ளது. என் வாழ்வில் முதல் முறையாக புத்தகக் கடைக்குள்  ஒரு புத்தகத்தை , ஒரு இயக்குநர் வெளியிட நான் அன்புடன் பெற்றுக் கொண்ட நிகழ்வில் பங்கேற்ரேன். தமிழ்ச்சூழலில் நான் கொஞ்சம் பழைய ஆள். அந்த வானலையின் வரிகள் என்ற புத்தகமும் பழையது.(இரு பதிப்பு கண்ட நூல்). இந்நிகழ்வு, பேச்சு, எல்லாம் புதுசு. ஏன் இந்தக் கதை எனில், சில வருடங்களாக நான் என் புத்தகங்களை வெளியிட்ட போது கிடைத்த நிம்மதியை விட இந்நிகழ்வு மட்டும் எனக்கு மிகுந்த மன நிம்மதியைத் தந்தது. குடும்பத்தின் சுப நிகழ்வு மாதிரி இருந்ததும் காரணம்.

Aug 4, 2012

மதுபானக்கடையின் அவலங்கள்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சினிமாவை தயாரிக்கப் படும் பிரயத்தனங்களை விட அதை வெளிக் கொண்டு வருவதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டும். அதுவும் மதுபானக்கடை போன்ற படங்கள் வெளிவர எல்லா குட்டிக்கரணங்களும் அடித்தே ஆக வேண்டும் எனும் போது ஏண்டா படம் தயாரித்தோம் என்று யோசிக்கத் தோன்றும்.

Aug 2, 2012

தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும்.

ஆமாம் இளம் தாய்மார்களை நாயாய் அலைய வைக்கிறது மாநகராட்சி மருத்துவமனைகள். அதற்கு  கொஞ்சமும் குறையாமல் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும். மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கபட்டு பிறக்கும் ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.12 ஆயிரம் அரசு உதவிப் பணமாய் தருகிறது. இது இந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட தொகையாகும். ஆனால் இத்தொகையை வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களை அலைய வைக்கிறார்கள். 

மதுபானக்கடை

தமிழ் திரையுலகில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு, வெகு சில நல்ல படங்களும், பல மொக்கை படங்களும் வந்து கொண்டிருக்கும் காலத்தில்,  அட இந்த டெக்னாலஜியினால் இம்மாதிரி படங்களும் வரும் என்றால் அவற்றை சகித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது.