அலெக்ஸ் பாண்டியன்
சினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமையும் கூட. ஆனால் அதைக்கூட முயற்சிக்காமல் சில படங்கள் வெளிவரும்.. வந்து கொண்டுமிருக்கிறது. ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து படமெடுப்பது என்பது சாதாரண காரியம் அன்று. ஆனால் இப்படக் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் ரசனையை, விருப்பத்தை அறிந்து படமெடுத்திருக்கிறார்கள்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவை கையைக் காலைக் கட்டி, தொட்டித் தண்ணீரில் மூழ்கியடித்திருக்க, இன்னொரு பக்கத்தில் வில்லனின் மிரட்டல் காரணமாய் கதாநாயகியின் தந்தை வில்லனின் வியாபார ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒரு மணி நேரம் டைம் கேட்க, அது வரை என்ன செய்வது என்று புரியாத வில்லன்கள், ரொப்பிய தொட்டித் தண்ணீரில் மூழ்கி இருக்கும் கதாநாயகன் உயிருடன் இருந்தால் விளையாடலாம் என்று சொல்லியபடி அவனை தண்ணீரிலிருந்து தூக்க, பல மணி நேரம் கை,கால் கட்டப்பட்ட ஹீரோ தண்ணீரிலிருந்து மேலே வந்தது மூச்சு விட்டு கண் முழிக்க, கைகள் கட்டப்பட்ட நிலையில் ஹீரோயினும் இருக்க, ஹீரோவை கட்டவிழ்க்காமல் அடிக்கிறார்கள். ஹீரோயின் துடிக்கிறார். வேதனைப் படுகிறார். கடைசியாய் வில்லன்களைப் பார்த்து சவால் விடுகிறார். “நீங்க ஆம்பளையா இருந்தா அவரு கைக் கட்டை அவிழ்த்துவிட்டு அடிங்கடா” என்று கண்ணாம்பா போல கத்த, வில்லனும், “நாங்க ஆம்பளையா இலலையான்னு நிருபிக்கிறோம்” என்று சொல்லி கட்டை அவிழ்க்க ஒரு அல்லக்கை அடியாளை அனுப்புகிறார். இது வரை படம் பார்த்துக் கொண்டிருந்த ஆடியன்ஸில் ஒருவர் “பாரு மச்சான் கட்டு அவிழ்க்க போறவன் அப்படியே அந்தரத்துல பறந்து வந்து வில்லன் காலடியில விழுவான் பாரு..” என்று சொல்ல, ரசிகர்களின் நாடித்துடிப்பை துல்லியமாய் அறிந்த இப்படக்குழுவினர் அந்த ரசிகர் எதிர்பார்த்தபடியே காட்சியை வைத்திருந்தார். இதை விட ஒர் சிறந்த படைப்பை, ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப யாராலும் தரமுடியாது.
சமயங்களில் நமக்கு சில பிரச்சனைகள் வரும், ஆனால் அப்பிரச்சனையை விட பெரிய ப்ரச்சனை வரும் போது முந்தைய ப்ரச்சனை மிகச் சாதாரணமாகிவிடும். அப்படித்தான் சுறாதான் ஒலக மொக்கை என்று நினைத்துக் கொண்டிருந்த போது “சே.. அப்படி மனசை விட்டுறக்கூடாது’ என்று பதில் சொல்வது போல வந்திருப்பதுதான் நம் “அலெக்ஸ் பாண்டியன்” அபாரம், அற்புதம். வந்தனம். இதுக்கு மேல முடியல.. அவ்வ்வ்வ்வ்வ்
Comments
கலைஞர் - பேராசை குடும்பத்திற்கு போட்டியாக
வளர்ந்து வருகிறது சிவகுமார் குடும்பம் . . .
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
இங்க பாருங்க நான் எப்படி கழுவி ஊத்தி இருக்கேன்னு ...
http://anjaasingam.blogspot.com/2013/01/blog-post.html
நான் தப்பிச்சேன் ! !
டிரைலர் பாத்துமா, தியேட்டருக்கு போனீங்க?
அப்ப அவ்வ்வ்வ்வ்வ்வ்....ன்னு தான் வெளிய வரணும்.
அதுக்கு நாங்க ஒன்னும் செய்யமுடியாது.
வெளியே வந்து தியேட்டர்இல் வேலை செய்யும் நண்பர் ஒருவரிடம் பேசிய பொழுது, முதல் நாள் நூறு ருபாய் போடாமல் ஐம்பது ருபாய் டிக்கெட் போடும் போதே நீங்க உசாராகி இருக்கணும்.. அதோட இன்னும் பத்து நாள் தான் , அதுக்குள்ள கமல் படம் ரிலீஸ் ஆகும். அதுவரைக்கும் இந்த படம் தாக்கு புடிச்சா போதும் என்றார்... கொடுமையடா சாமி..
சந்தானத்தின் இரட்டை அர்த்த வசனங்களுக்காகவும் கமல் தயவிலும் 10 நாள் ஓடிவிடும் / ஒட்டி விடுவார்கள் என்று நினைக்கிறன்!
-ஜெ .
இணைய பரிச்சயம் இல்லாத
நான்கைந்து நண்பர்களை காப்பாத்திட்டேன்......
FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?
Padam romba bore
என்னுடைய நண்பன் ஒருவன் டிக்கெட் எடுத்து விட்டேன் என்று சொன்னதால் அலெக்ஸ் பாண்டியன் போய் பார்த்தேன். பேராசையின் மொத்த உருவம் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்கும் . தெலுங்கில் ஒரு 80 கோடி தமிழில் ஒரு 50 கோடி , கல்லா கட்டிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிருக்கிறார்கள்.
படம் பார்க்கும் யாராவது லாஜிக்கோ கதையோ கேட்டால் செருப்பால் அடிப்பது என்று முடிவு எடுத்து விட்டு படம் எடுத்து இருக்கிறார்கள்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் வந்த மிக மோசமான தமிழ்ப்படம் என்று இந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தை தைரியமாக சொல்லலாம். எல்லா காமெடியும் டபுள் மீனிங் காமெடி, காதில் ஒரு வரி கூட நிக்காத பாடல்கள், கதை என்ற வஸ்து மருந்துக்குக்கூட இல்லை, பார்த்துப் பார்த்துப் போன புளித்துப்போன காட்சிகள், அதைவிட புளித்துப் போன சண்டை காட்சிகள்……………………..சுருக்கமாகச் சொன்னால்…………………………………………… தூத்தேறி.
இந்த மாதிரி ஒரு மகனும் இப்படி சில உறவினர்களும் வாய்த்திருப்பதற்கு சிவகுமார் எத்தனை தடவை கம்ப ராமாயணம் படித்தாலும் பாவம் போகாது.