Avatar -2009
ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படம் வெளியாகி 12 வருடங்களுக்கு பிறகு வெளிவரும் படம். உலகிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்க பட்ட படம். 3டியில் எடுப்பதற்காக புதிய கேமராவை வடிவமைத்து தயாரித்திருக்கும் படம், அது இது என்று ஏகமாய் பிரஸ்தாபிக்கப்பட்ட அவதார் சென்னையில் நேற்று இரவு பீரிமியர் செய்யப்பட்டது. உலகளவில் 178 ஐமாக்ஸ் தியேட்டர்களில் 18 ஆம் தேதியும், 83 ஐமாக்ஸ் தியேட்டரில் 3டியிலும், மொத்தம் 261 ஐமாக்ஸ் தியேட்டர்களில் வெளியாகி இருக்கும் ஒரே படம். சரி படத்திற்கு வருவோம் 2154வருடத்தில் பூமியில் ஒரு போரில் இடுப்புக்கு கீழ் செயலிழந்த ஜாக் என்பவனை அவதார் என்னும் ஒரு ப்ராஜெக்டுக்காக செலக்ட் செய்யப்பட, இந்த ப்ராஜெக்டின் மூலமாய் அவனால் நடக்க முடியும் என்று சொல்லப்பட, அதற்காக ஆவலுடன் பண்டோராவுக்கு வருகிறான். பண்டோரா எனும் ஒரு இடம் பல விசித்திரங்களையும், ஆபத்துகளையும் தன்னுள்ளே அடக்கி கொண்டுள்ள, சாட்டிலைட்டுகளால் கூட தேடி பிடிக்க முடியாத ஒரு அடர்ந்த காடாகும் அந்த காட்டில் நவி எனும் ஒரு விதமான மனிதர்களை விட திறமையான, உயரமான சுமார் பத்து அடி என்று வைத்துக் கொள்ளுங்கள், வித்யாசமான முகம், காது, மற்றும் ...