Posts

Showing posts with the label mayor

பகலில் எரியும் விளக்குகள்

Image
மொத்த தமிழ்நாடே மின்வெட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது  எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அதற்கு நீ காரணம், நான் காரணம் என்று ஆளாளுக்கு கை நீட்டி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாலும் கடைசியில் அவதிப்படுவது பொதுமக்கள் தான். சரி அதை விடுங்கள். மின்சாரத்தேவை 3500 மெகாவாட்டுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் புதியதாய் உற்பத்தி செய்வதை பற்றி யோசிப்பதை விட உபயோகிக்கும் மின்சாரத்தை எப்படி மிச்சப்படுத்துவது என்று சற்றே சிந்தித்தால் எவ்வளவு மின்சாரம் மிச்சமாகும்?. ஆனால் பெரும்பாலான அரசு துறை அலுவலகங்களில் வீணாக ஓடும் ஏஸிக்கள், மற்றும் பேன்களுக்கான மின்சார வீணடிப்பை யாரும் கவனிப்பதேயில்லை. கவர்மெண்ட் காசுதானே என்ற ஒரு அலட்சிய மனப்பான்மை அவர்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.