Posts

Showing posts with the label நான் மகான் அல்ல

நான் மகான் அல்ல

Image
ஆயிரம் பாலோயர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றியோ.. நன்றி.. எல்லாரும் நம்ம புத்தக வெளியீட்டுக்கு வந்துருங்கோ...கேபிள் சங்கர் வெண்ணிலா கபடிக்குழு வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம். அப்பாவை கொன்றவனை பழிவாங்கும் வழக்கமான கதை தான். அதை முடிந்த வரையில் இண்ட்ரஸ்டாக சொல்லியிருப்பதில் தான் இயக்குனரின் கைவண்ணம் தெரிகிறது. வாழ்க்கையை பற்றி பெரிதாய் எதுவும் கவலைப்படாத கால்டாக்ஸி ட்ரைவரின் பையனான கார்த்திக்கு ஒரு கல்யாணத்தில் காஜல் அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்துவிட, முதல் பாதி முழுவதும், காதலும், கொண்டாட்டமுமாய் போகிறது. ஒரு இரட்டை கொலை சம்பத்தில் ஈடுபட்ட ஆட்களை கார்த்தியின் அப்பா பார்த்ததினால் அவரை டெம்போ ஏற்றி கொலை செய்ய முயற்சிக்க ஆரம்பிக்கும் போது கதையின் டெம்போ ஏறுகிறது. பின்பு அவரை கொன்றவுடன், என்ன கார்த்தி அவரை பழிவாங்க போகிறார் என்று சாதாரணமாக சொன்னாலும் திரையில் பார்க்க ஒரு விஷுவல் பரபரப்பை கொடுத்திருப்பதை திரையில காணுங்கள். கண்களில் பல்பும், உதட்டில் சுழித்த சிரிப்புமாய் படம் பூராவும் சந்தோஷத்தை தவிர எதையும் சந்திக்காத இளைஞனை ...