கொத்து பரோட்டா -10/02/14 - பால்யகால சகி, புலிவால், நடுநிசிக் கதைகள், கேட்டால் கிடைக்கும், பீனிக்ஸ் மால்
80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகேபிள் சங்கர் நடுநிசிக் கதைகள்-7 நைட் ஷோ முடித்துவிட்டு, சிஜடி நகர் வழியாய் வந்து கொண்டிருந்த போது வழக்கம் போல போலீஸ் மறித்தார். “எங்கிருந்து வர்றீங்க?” என்று கேட்டுவிட்டு அசுவரஸ்யமாய் எதிர் திசை தெருவில் தெரிந்த நடமாட்டத்தை நோட்டம் விட்டார். ”படம் பார்த்துட்டு வர்றேன் சார்.” “டிக்கெட் இருக்கா?” “இல்லை” “அதெப்படி டிக்கெட் இல்லாம?” “நெட் புக்கிங் சார்” ”அப்படின்னா..” என்று கேட்டுவிட்டு எங்கே தனக்கு தெரியவில்லை என்று காட்டிவிட்டால் மரியாதை குறைவாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் “நெட் ஓகே..ஓகே”.. சரி.. என்ன படம்?” எனக்கு எரிச்சலாய் இருந்தது. நான் பார்த்துவிட்டு வந்த இந்திப்படத்தின் பேரை சொன்னால் இவருக்கு தெரியுமா? எந்த ஷோ எந்த தியேட்டரில் ஓடுகிறது என்று தெரியுமா? “இந்தி படம் சார்.” ”என்ன படம்?” “சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நடு ராத்திரி பனியில நீங்க இப்படி விசாரிக்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக படம் பேரெல்லாம் கேட்டு விசார...