Posts

Showing posts with the label கொள்ளை

பார்கிங் எனும் பகல் கொள்ளை

Image
ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்... சென்னையில் எனக்கு தெரிந்து ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களில் கூட சைக்கிளுக்கு 3 ரூபாயும், பைக்குக்கு 5 ரூபாயும், கார்களுக்கு 10 ரூபாயும் வாங்கி கொண்டிருந்தார்கள். பின்னாளில் பல காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களில் சைக்கிள் பார்க்கிங் என்பதே இல்லாமல் வழக்கொழிந்துவிட்டது. சென்னையில் பைக் பார்க்கிங்குக்கு பத்து ரூபாய் வாங்கிய புண்ணியத்தை கட்டிக் கொண்டவர்கள் சென்னையில் ஏன் தமிழ் நாட்டிலேயே முதல் முதலாய் மல்ட்டிப்ளெக்ஸ் எனும் கான்செப்டை அளித்த சத்யம் தியேட்டர் நிறுவனத்தினர் தான். அருமையான உள் கட்டமைப்பு வசதியோடு ஒளி, ஒலி அமைப்புடன், முதல் தரமான வசதிகளூடன் அமைக்கப்பட்ட தியேட்டருக்கு மக்களின் அமோக ஆதரவினால் இன்றளவிலும் சென்னையின் மிக சிறந்த மல்ட்டிப்ளெக்ஸாக உருவெடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. முதலில் பைக்குக்கு பத்து ரூபாய் என்பது கஷ்டமாக இருந்தாலும், மெல்ல, மெல்ல அது பழகிவிட...

ஏர்டெல் கொள்ளை

Image
    இரண்டு கம்பெனி, மூன்று கம்பெனி என்று இப்போது, ஏர்டெல், ஏர்செல், வோடோபோன், ரிலையன்ஸ், டோகோமோ, எம்.டி.எஸ், யுனிநார், என்று ஜி.எஸ்.எம்மிலும், சிடி.எம்.ஏ டெக்னாலஜியிலும் நிறைய மொபைல் சர்வீஸ் கொடுக்கும் கம்பெனிகள் வந்தாலும் நமக்குதான் விடிய மாட்டென் என்கிறது. அளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம்.  ஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்களின் சர்வீஸை பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்த எனக்கு அவர்கள் செய்திருந்த ஒரு விஷயம் கடும் கோபத்தை ஏற்றிவிட்டது. என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களு...