Posts

Showing posts with the label telugu cinema

Sammohanam

Sammohanam ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து பாட்டு பாடுவாங்களோ என்று கற்பனையிலாவது கடைசி ரீலுக்கு முன் ஒரு குத்துப் பாட்டை போட்டு நம்மை ஜெர்க்காக்கி உட்கார வைக்கும் தெலுங்கு சினிமாவில் அவ்வவ்ப்போது தென்றலாய் படங்கள் வருவதுண்டு. அதில் முக்கியமானவர் சேகர் கம்மூலா. இவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பி டேஸ், சமிபத்திய ஃபிடா வரைக்கும் என சொல்லலாம்.  அதே நேரத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன பட்ஜெடுகளில் ஃபீல் குட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கிய இயக்குனர் மோகனகிருஷ்ணா இந்திராகாந்தி. இவரது முதல் படமான கிரகணம் தேசிய விருது பெற்ற படம். அதன் பிறகு இவர் எடுத்த படங்களில் அஸ்தா சம்மா, கோல்கொண்டா ஹைஸ்கூல், அந்தாக்க முந்து ஆ தரவாத்தா, ஜெண்டில்மேன், அமிதுமி போன்ற படங்கள் கிரிட்டிக்கலாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களே. மினிமம் கேரண்டி காதல் கதை. அதில் கொஞ்சம் நகைச்சுவை, நல்ல எமோஷன் என கலவையாய் அமையப் பெற்ற படங்கள். இவரது புதி...

Evuda Subramaniyam - Telugu Film

Image
சந்தோஷத்தை, கொண்டாட்டத்தை தரக்கூடிய படங்களே அதிகம் கோலோச்சும் தெலுங்கு சினிமாவிலிருந்து ஒரு அதிசய படம். எல்லா நேரங்களிலும் ஒரு சினிமா நமக்குள் தாக்கத்தை கொடுப்பதில்லை. கொண்ட்டாட்டமோ, அல்லது துக்கமோ படம் பார்த்துவிட்டு வந்த விநாடிகளில் ட்ராபிக் கூட்டத்தில் கரைந்து போயிவிடக்கூடிய அளவே இருக்கும். ஆனால் மிகச் சில படங்களே வீட்டிற்கு வந்தும் நம்மை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். அது போன்ற படம் தான் இந்த எவுடா சுப்ரமணியம். 

King - Telugu Cinema Review

Image
ராஜ குடும்பத்தின் மகன் கிங் என்கிற ராஜா சந்திரபிரதாப் வர்மா(நாகார்ஜூன்).. தன் தந்தையின் இறப்புக்கு பிறகு, குடும்ப பிஸினெஸ்ஸை எடுத்து நடத்துக்கிறார். வீட்டிற்குள்ளேயே அவருக்கு எதிரிகள் இருக்க, ஆஸ்திரேலியாவில் அவரின் பரம எதிரியான சுவப்னா(மம்தா மோகன்தாஸ்)வால் கொல்லபடுகிறார். இப்போது ஹைதராபாத்தில் பொட்டு சீனு என்கிற பெரிய ரவுடி அசல் கிங்கை போலவே இருக்க, அவர் மிகப் பெரிய பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் ஷரவணியின் (திரிஷா)மேல் காதல் கொள்கிறார். திரிஷாவிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்லாமல் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று உட்டாலக்கடி அடித்து மடிக்கிறார். ஒரு கட்டத்தில் கிங்கின் இடத்தில் பொட்டு சீனு இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிறது. கிங்கை கொலை செய்தது யார்..? அதன் பிண்ணனி என்ன? என்று படம் முடிகிறது. நாகார்ஜூனுக்கு ஏற்கனவே பல படங்களில் செய்த கேரக்டர்தான். மனுசன் இன்னும் கூட இவ்வளவு யங்கா இருக்காறே..? அதிலும் பாடல்கள் காட்சிகளில் சும்மா சூப்பர். திரிஷா வரவர சப்பி போட்ட மாங்கொட்டை கணக்காய் இருக்கிறார். படத்தில் வருகிறார், சிரிக்கிறார், போகிறார். பொட்டு சீனுவாகவும், திரிஷாவிடம் சாப்ட்வேர் இன்ஜின...