மக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்ஷனும்
இண்டர்வெல் முடிந்து பரபரப்பாய் போய் கொண்டிருந்தது அயன் திரைப்படம், திடீரென்று படம் கட் ஆகியது. மெலொடி தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்ஷன் என்பதால் படம் திரும்ப வருவதற்கு சற்று நேரம் ஆனது. (ஏன் என்பதற்கான காரண்ம் பின்னால்). நொந்து போன ரசிகர்கள்களின் விசிலும், சத்தமுமாய் தியேட்டரே அல்லோல கல்லோலபட, திடீரென படம் முதலில் இருந்து ஆரம்பித்தது, திரும்பவும் கட் ஆகி, பாதியிலிருந்து ஆரம்பிக்கபட்டு, கட், மீண்டும் ஸ்டார்ட். ஆனால் இப்போது ஆரம்பித்ததோ நாங்கள் பார்த்து கொண்டிருந்த காட்சியிலிருந்து அரை மணி நேரம் கழித்து வரும் காட்சியிலிருந்து. ஏற்கனவே முதல் காட்சியில் படம் பார்த்திருந்த ரசிகர்கள் காட்சிகளில் ஜம்ப் ஆகிவிட்டது எதிர்த்து புரொஜெக்டரில் துணியை வைத்து மூடி, கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள். தியேட்டர்காரர்களோ, அப்படியே ஓட்டினால் சரியாகிவிடுவார்கள் என்று நினைத்து மேலும் படத்தை ஓட்ட நினைக்க, உயரமான ஒருவர் சீட்டின் மீது ஏறி தன்னுடய டவலால் முழு புரொஜெக்ஷன் திரையையும் மறைக்க, தியேட்டர் மேனேஜர் ஆட்களுடன் வந்து, மிரட்ட, மக்களும் ஒன்று சேர்ந்து கத்த, வேறுவழியில்லாமல் மறுபடியும் கட் ஆக...