Posts

Showing posts with the label தெனாவெட்டு..

யாருக்கு தெனாவெட்டு..???

Image
சட சடவென பெரும் மழை, மார்கெட் மாதிரியான ஓரு செட்டப், ஜீவாவுக்கு பின் மழையில் நினைந்த கோழியாய் பூனம் பாஜ்வா, ஜீவாவுக்கு எதிராய் ஓரு வில்லன்.. இவர்கள் இருவரை சுற்றி ரவுண்ட் டிராலி போட்டு ஓரு சுற்று சுற்றிவிட்டு ஜீவா க்ளோஸப்பில் “வேணான்னே தப்பு..” “டேய்.. நான் யாருன்னு தெரியுமா?” என்று கோபத்துடன் கையில் கத்தியுடன் பொறிய.. “நீ.. யாரா இருந்தா என்ன தப்புண்ணே..” என்று ஓரு ஹிட் விடுகிறார். இது தெனாவட்டின் டிரைலர்..யாருக்கோ சொல்வது போலிருக்கிறது.. யாருக்கு??? ஆனால் ஓரு விஷயம் தெனாவெட்டின் முந்தய டிரைலரை விட இந்த டீசர் அருமை.. ********************* கமலின் மர்மயோகி ட்ராப் செய்யபட்டுவிட்டது. ராஜ்கமல் நிறுவனத்துடன் கார்பரேட் பிரமிட் சாய்மீரா சேர்ந்து தயாரிக்கவிருந்த அந்த படம், சாய்மீராவின் கவலைக்கிடமான நிதி நிலமை காரணமாய் கைவிடப்பட்டது..கமலின் தரப்பில் “தலைவர் இருக்கிறார்” என்னும் புதிய படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக செய்கிறார். இந்த படம் சுமார் 50 முதல் 60 கோடி வரையிலான பட்ஜெட்டுடன் தயாராகவுள்ளது.. இந்த படத்தில் மோகன்லால், வெங்கடேஷ், ரிஷிகபூர் போன்ற் நடிகர்கள் நடிக்கிறார...