Posts

Showing posts with the label web series review

Flesh - Web Series Review

Image
முதல் எபிசோடிலிருந்து கடைசி எட்டாவது எபிசோட் வரை பெரிய குறையொன்றுமில்லாத வெப் சீரீஸ். என்ன ஆங்காங்கே லாஜிக் மீறல்களும், பெனிச ஆக்‌ஷன்களும் கொஞ்சம் ப்ரேசிலியன் படமான ட்ரேடின் சாயலும் இருந்தாலும், நல்ல கிரிப்பிங் கதை, நடிப்பு எல்லாமே. சுவரா பாஸ்கர் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். பட் நல்ல பர்பாமென்ஸ். வழக்கப்படி கெட்ட வார்த்தை, கொஞ்சம் வயலன்ஸ் என்று உறுத்தாமல் இருக்கிறது. நீங்க ஜியோ நம்பர் வைத்திருந்தால், ஜியோ சினிமாவில் ஈராஸ் நவ் ஓடிடி இலவசம். அதில் வந்திருக்கிறது இந்த #flesh @erosnow

Fuck Buddies | tamil web series review | Mx Player

Image

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் மற்றும் வெப் படங்கள் – ஒரு பார்வை-1

ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒர் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இண்டர்நெட்டின் வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் சாட்டிலைட் சேனல் உரிமை வியாபாரம் மிகப் பெரிய கேள்விக் குறியாய் இருக்கும் நேரத்தில், ஸ்ட்ரீமிங் உரிமை எனும் இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை கொஞ்சம் ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது. படங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது போலவே,  வெப் சீரீஸ்கள் எனும் புதிய கதவு திறந்திருக்கிறது. வழக்கம் போல இந்தி பெரிய மார்கெட் என்பதால் அனுராக் காஷ்யப், விக்ரம் மோத்வானி, போன்ற பெரும் தலைகள் எல்லாம் சடுதியில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து பெரும் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.  மற்ற மொழிகளில் வழக்கம் போல பட்ஜெட் மற்றும் வெப் சீரீஸ்களைப் பற்றிய கண்டெண்ட் அறியாமைகளோடு, களம் இறங்கியிருக்கிறார்கள். இதில் பெரும் கை நெட்ப்ளிக்ஸ் என்றாலும், இந்திய அளவில் பெரும் முதலாளி அமேசான் ப்ரைம் தான். இவர்களுடன் பாலாஜி டெலி பிலிம்ஸின் ஆல்ட் பாலாஜி, ஸ்டாரின் ஹாட் ஸ்டார், கலர்ஸின் வூட், சன் நெட்வொர்க...

Subbura – Blood on Rome -web series

Subbura – Blood on Rome அமெரிக்க படங்களுக்கும் மற்ற நாட்டு படங்களுக்கும் நிறைய வித்யாசம் இருக்கும். குறிப்பாய் ஐரோப்பிய படங்களுக்கும் ஹாலிவுட்டுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. ஆக்‌ஷன் கதைகளைக்கூட கொஞ்சம் அழகுணர்வோடுதான் அவர்கள் எடுக்கிறார்கள். கொஞ்சம் எமோஷனுக்கு முக்யத்துவம் கொடுக்கிறார்கள். ஹாலிவுட் போல ப்ளாஸ்டிக் தனமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். நம்மூர்  படங்களுக்கும் கொரிய படங்களுக்கும், உடை, உணவு போன்றவற்றில் வித்யாசம் இருந்தாலும், குடும்ப அமைப்புகளில், உறவுகளில் உள்ள பின்னல்கள் எல்லாம் கிட்டதட்ட தமிழ் படம் போலவே இருப்பதால் தான் மிக ஈஸியாக சுட்டுத்தள்ள முடிகிறது.  படங்களைப் போலத்தான் வெப் சீரீஸ்களும். ஹாலிவுட் சீரீஸ்கள், கொரிய சீரிஸ்கள் என வரிசைக் கட்டி அணிவகுத்திருக்கும் நெட்பிளிக்ஸில் நிறைய ஐரோப்பிய சீரீஸ்களும் உண்டு. சமீபத்தில் பார்த்த சீரீஸ் சுப்பூரா எனும் இத்தாலிய சீரீஸ். வாடிகனுக்கு சொந்தமான நிலம் ஒன்று இருக்கிறது. அதை அடைய சமுராய் எனும் தாதா கும்பலும், அரசியல் பலமுள்ள ஒரு லாபியிஸ்ட் பெண்ணும், அந்த இடத்துக்கு பக்கத்திலேயே இன்னொரு இடம் வைத்திருக்கும் இன்னொரு த...