Posts

Showing posts with the label குமுதம்.

கொத்து பரோட்டா 2.0-61

கொத்து பரோட்டா 2.0-61 மாதக்கடைசி. உதயம் தியேட்டரிலிருந்து காசிக்கு போக அசோக் பில்லரில் ஒரு சிக்னல் இருக்கும். அது ஒன்வே தான் இருந்தாலும் அங்கே முனையில் இருக்கும் கோவிலருகே மக்கள் கிராஸ் செய்ய என அந்த சிக்னல் வைக்கப்பட்டிருப்பதாய் சொல்வார்கள். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து என்றைக்கும், எப்போதும் அங்கே ஆட்கள் கிராஸ் செய்வதோ, அல்லது, வண்டிகள் நின்றோ போனதே கிடையாது. இத்தனைக்கும் பில்லர் அருகே தான் போலீஸ் தன் பரிவாரங்களோடு எப்போதும் இருப்பார்கள். இரவு நேரங்களீல் பேரிகேட் போட்டு, டிரிங் அண்ட் ட்ரைவ் கேஸ் பிடிப்பார்கள். மேற்ச் சொன்ன மாதக்கடைசி நாட்களில் ஒரு நாள் வழக்கம் போல வண்டியை திருப்பினேன். குடுகுடுவென ஓரத்தில் மறைந்திருந்த ஒரு போலீஸ் வண்டியின் குறுக்கே வந்து நின்று ஓரம் கட்ட சொன்னார். காரை ஓரம் கட்டினேன். கதவருகில் வந்து நின்று இறங்குங்க என்றார். நான் வண்டியை ஆப் செய்து சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே, இறங்கியபடி. “என்ன விஷயம்? என்றேன். தெரிந்தே. சிக்னல் மீறிட்டீங்க. பைன் கட்டிட்டு போங்க என்றார். அப்படி கட்டணும்னா கட்டுறேன். ஆனால் நீங்க எதுக்கு ஒளிஞ்சுட்டு ஓடி வந்து பிடிக...

கொத்து பரோட்டா 2.0-48

Trapped நூரிக்கு மூன்று வாரங்களில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் செளரியாவுக்கும், நூரிக்குமிடையே காதல். பாய்ஸ் ஆஸ்டலில் வசிக்கும் செளரியாவிடம் என் வீட்டை விட்டு வந்தால் நாம் எங்கு தங்குவது. பாஸ் ஆஸ்டலிலா?” என்று கேட்க, உடனடியாய் வீடு பார்க்கிறேன் என்று பார்க்கிறான். ரெண்டு நாளில் நூரியின் திருமணம் இருக்க, மும்பையின் அவுட்ஸ்கர்ட்டில் காலியாய் உள்ள முப்பது மாடி குடியிருப்பில் ஒரு வீடு கிடைக்கிறது.. அந்த பில்டிங் கோர்ட் கேஸில் இருப்பதால் இன்னும் யாருக்கும் குடி புக அனுமதியில்லை. ஒரு செவிட்டு வாட்ச்மேனைத் தவிர வேறொருவரும் இல்லாத அந்த ப்ளாட்டில் ராவோடு ராவாக அந்த வீட்டில் அவன் குடி புகுகிறான். அடுத்தநாள் காலையில் அவசரத்தில் கிளம்பும் போது போனை அறையில் விட்டு வர, ஆட்டோமேடிக் டோரில் சாவியை வைத்துவிட்டு எடுக்கப் போகிறான். காற்றில் கதவு மூடிக் கொள்ள அந்த வீட்டினுள் மாட்டிக் கொள்கிறான். கரண்ட், தண்ணீர் என எதுவுமில்லாத நிலை. மொபைலில் பேட்டரி இல்லை. இப்படி பல இல்லை. கிட்டத்தட்ட என்பது சதவிகித படம் ஒர் அறையில் மட்டுமே சுழல்கிறது. செளரியாவாக நடித்த ராஜ்குமார் ராவின் நடிப்பு அட்டகாசம். ஆர...

கொத்து பரோட்டா 2.0-39

கொத்து பரோட்டா 2.0-40 Play test – Black Mirror கூப்பர் ஒரு அமெரிக்கன். உலகம் சுற்றும் வாலிபன்.  லண்டனில் சுற்றி வரும் போது சோஞ்சா எனும் டெக் ஜர்னலிஸ்டை சந்திக்கிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள். அன்றிரவை அவளுடன் கழிக்கிறான். அடுத்த நாள் தன் டூரை தொடர நினைக்கும் போது அவனுடய க்ரெடிட் கார்ட் நம்பர் திருடப்பட்டு, பயணத்திற்கு பணமில்லாமல் போகிறது. வேறு வழியில்லாமல் மீண்டும் சோஞ்சாவிடம் போய் உதவி கேட்க, “ஆட் ஜாப்” எனும் ஆப் மூலம் ஒரு பிரபல கேம் கம்பெனியின் விளையாட்டை டெஸ்ட் செய்யும் ஆளாய் போகிறான். அங்கே அவனுடய கழுத்துக்கு பின் ஒர் பட்டன் போன்ற ஒன்றை வைத்துவிட்டு, கிட்டத்தட்ட விர்சுவல் ரியாலிட்டி போன்ற ஒரு விளையாட்டை விளையாட சொல்கிறார்கள். அதில் அவன் தன் முடிவுகளை சொல்ல, இதனிடையில் அவனை அங்கே கூட்டிச் செல்லும் பெண் போனவுடன் அவனுடய செல் போனை அணைக்கச் சொல்கிறாள். விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் அக்ரிமெண்ட் காப்பி எடுத்து வர அவள் போகின்ற நேரத்தில் கூப்பர் போனை ஆன் செய்து அந்த மெஷினின் படத்தை சோஞ்சாவுக்கு அனுப்புகிறான். முதல் ஆட்டத்தை முடித்தவுடன் அந்த கேம் கம்பெனியின் ஓனர் தங்களிடம...

கொத்து பரோட்டா -2.0-36

கொத்து பரோட்டா 2.0-36 The Affair -குறும்படம். தமிழில் தற்காலத்தில் வரும் பெரும்பாலான குறும்படங்களில் ஒரு கேரக்டரைக்  காட்டி, இவர் பெயர் ராமசாமி. செம்ம காமெடியா பேசுவார்னு அறிமுகபடுத்தி ஆரம்பிப்பதுதான் லேட்டஸ்ட். வழக்கம். காமெடியா பேசுவார்னு முன்னமே சொல்லிட்டோமேன்கிற உரிமையில்,  பெரும்பாலான குறும்படங்கள், ப்ளாக், ப்ளூ, வொயிட் என பல கலர்களில் காமெடியாய் நினைத்து கொடுக்கும் பல விஷயங்கள் சோகமாய் முடிவதுண்டு. உறவுகள் பற்றியோ, அதன் முரண்கள் பற்றியோ பேசும் படங்கள் மிகக்குறைவு. பாஸ்ட் கட்டில்யே படம் எடுத்து பழகி, உணர்வுகளை வெளிப்படுத்த சில மாண்டேஜ் ஷாட்களோ, நிறுத்தி நிதானமாய் நடிக்க வாய்பிருக்கும் காட்சிகளோ வைத்தால் அது லேக் என்று முடிவாகி, சட்சட்டென எகிறும் எடிட் தான் சாஸ்வதம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படம் விதிவிலக்கு.. உடல்நலமில்லாத படுத்த படுக்கையான மனைவி, காதல் கல்யாணம் செய்ததால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட மகன், திருமணமான மகள். மகனின் மனைவி மூலமாய் தங்கள் அப்பாவிற்கு வேறு ஒரு சிறு வயது பெண்ணுடன் தொடர்பு என்று அறிகிறான் மகன். மகள் குமுறுகிறாள். இனி அம்மா...

கொத்து பரோட்டா 2.0-35

டாஸ்மாக் சந்திப்புகள் இரவு எட்டு மணியிருக்கும். எதிரே வரும் ஆள் தெரியக்கூடிய வெளிச்சம் ரோட்டில் இருந்தது. கால் டாக்ஸிக்காக காத்திருந்தேன். தாகமாய் இருக்க, எதிர்பக்கம் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று மோர் ஒன்றை குடித்துவிட்டு, மீண்டும் என் இடத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எனக்கு நேர் எதிரே கரு கும்மென்ற ஒருவர். என் மேல் மோதி விடுவது போல வந்து நான் போகவா.. நீ போறியா என்பது போல கீழ் பார்வை பார்த்தார். மூச்சில் டாஸ்மாக் மணத்தது. நான் கொஞ்சம் வழி விட்டு, ”போங்கண்ணே..” என்றேன். ”என்ன போங்கண்ணே… ஒழுங்கா ரோட்டுல நடக்கக்கூட தெரியாதா?’ என்றவர் கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்து, ”ஒழுங்கு மரியாதையா போ.” என்றார். காண்டாகிப் போன நான் “எல்லாம் எனக்கு தெரியும் போய்யா” என்றேன். வேகமாய் வருவதாய் நினைத்து, இரண்டடியை இடதும் வலதுமாய் நடந்து தேவர் மகன் நாசர் போல என் முகத்துக்கு அருகில் அவர் முகத்தை வைத்து “யாரைப் பார்த்து போய்யாண்ணே?’.த்தா.. கொன்ருவேன்”.  எனக்கு அவரின் மூச்சும் பேச்சும் அசூசையை வரவழைக்க, முகத்தை அந்த பக்கமாய் திருப்பிவிட்டு, “ரொம்ப நாறுதுன்ணே கிளம்புங்க” என்றேன். விருட்டென த...

கொத்து பரோட்டா 2.0-34

கொத்து பரோட்டா 2.0-34 மே மாதம் முதல் தமிழ் சினிமாவிற்கு இனி வரும் மாதங்கள் கொஞ்சம் ப்ரச்சனையானதாய் தான் தெரிகிறது.  ஜி.எஸ்.டி. , பைரசி , தியேட்டர் விலையேற்றம் என பல கோரிக்கைகளை அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்திருக்கிறது. தவறினால் மே 30 முதல் திரையீடு முதல் தயாரிப்பு வரை ஸ்ட்ரைக் என்று அறிவித்திருக்கிறது. இன்னொரு புறம் தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் வருகிற மே மாதம் முதல் எந்த படத்திற்கும் எம்.ஜி. கிடையாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அவுட் ரைட் மற்றும் அட்வான்ஸ் முறையில் மட்டுமே வியாபாரம் செய்யபடுமென்றும் , ஐந்து கோடிக்கும் கிழ் உள்ள பட்ஜெட் படங்களை இனி கமிஷனுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுமென்றும் சொல்லியிருக்கிறார்கள். மற்றுமொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இனி யாரும் எந்த படத்தையும் மொத்தமாக வாங்கிக் கொள்ள முடியாது. தயாரிப்பாளர் அந்தந்த ஏரியாக்களுக்கு என்று தனியே தான் வியாபாரம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. மே மாதம் அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ரைக்கிற்கும் , இதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் இந்...

கொத்து பரோட்டா -2.0-31

கொத்து பரோட்டா 2.0-31 காற்றில்லாமல் புழுங்கியபடி இருக்கும் தமிழ் சினிமா உலகிற்கு புத்துணர்ச்சி கொண்டு வருவதாய் உறுதியிட்டு பதவியேற்றிருக்கும் புதிய தலைவர்களுக்கு ஒர் வேண்டுகோள், பைரஸி, அதிக படங்கள், திரையரங்கு கட்டணம், என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கிடையே முக்கியமாய் பார்க்க வேண்டிய ஒன்று டிஜிட்டல் சினிமா. இனிமேல் நெகட்டிவ் வேண்டாம் டிஜிட்டலில் படமெடுத்தால் படப்பிடிப்பின் செலவில் பாதி குறைந்துவிடும் என்று அதை ப்ரொமோட் செய்தார்கள். படமெடுக்க மட்டுமல்ல இனி படத்தை ஒளிபரப்ப டிஜிட்டல் முறை ஒரு ப்ரிண்டுக்கு அன்றைய தொகை சுமார் அறுபதாயிரம். டி.டிஎஸ் ராயல்டியோடு. அதற்கு பதிலாய் திரையரங்கில் டிஜிட்டல் ப்ரொஜக்டரை வைத்துவிட்டு, டிஜிட்டல் மூலம் ஒளிபரப்பினால் வெறும் ஏழாயிரம் ரூபாய் தான் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் க்யூப் நிறுவனம். அட பரவாயில்லையே ஒரு பிரிண்ட் அறுபதாயிரத்துக்கு பதிலாய் ஏழாயிரத்து சில்லறையில் புத்தம் புதிய ப்ரிண்டாய் நூறு நாட்கள் ஓடுமே என்று தயாரிப்பாளர்களும் ஆதரிக்க, டிஜிட்டல் படப்பிடிப்பும், ப்ரொஜக்‌ஷனுக்கும் டிமாண்ட் வர, அதை திரையரங்குகளில் விதவிதமான வகைகளில் சுலப தவணை, விளம்ப்ர வரு...

கொத்து பரோட்டா - 2.0-29

கொத்து பரோட்டா 2.0-29 Take off 2014 ஆம் ஈராக் நாட்டு ராணுவத்திற்கும்,  ஐஎஸ் ஐஎஸ்ஸுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரில்  அகதிகளாய் மாட்டிக் கொண்ட 41 இந்திய நர்ஸுகளை அங்கிருந்து தப்பிக்க வைத்த கதை தான் இந்த டேக் ஆப். இம்மாதீரியான நிஜ ரெஸ்க்யூ கதைகளில் விற்பன்னர்கள் ஹாலிவுட்காரர்கள்.  ஆர்கோ போன்ற ஏராளமான படங்கள் உதாரணம். சமீபகாலங்களில் ஹிந்திப்படங்களும் அதில் திறன் பெற்று விட்டார்கள். ஏர்லிப்ட், பேபி, போன்ற படங்கள் உலக அளவில் நல்ல வசூலும் பெற்றுவிட்டார்கள். இம்முறை மலையாள சினிமா முயற்சி செய்துள்ளது. ஈராக்கில் நடந்த சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு, கொஞ்சம் கற்பனையை தூவி 41 நர்ஸுகளுக்கு பதிலாய் 19 நர்ஸுகளாய் மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் மகேஷ் நாராயணன். ரெஸ்க்யூ, ஈராக், போர், என அதிரும் விஷயமாய் படம் ஆரம்பிக்காமல், டிபிக்கல் மலையாள படமாய் ஆரம்பித்து இடைவேளைக்கு பிறகுதான் போருக்கே வருகிறார்கள். அது வரை, டைவர்ஸ், நர்ஸுகளின் வாழ்வு, பொருளாதார நிலை, முதல் கணவன் மூலமாய் பெற்ற பையன், புதிய கணவன் என டிபிக்கல் குடும்ப படமாய் போகிறது. இதையே தனிப்படமாய் எடுத்திருக்கலாம்...

கொத்து பரோட்டா -2.0-25

கொத்து பரோட்டா 2.0-25 ஒவ்வொரு பெரிய படம் வரும் போதும், படம் வெளியான அடுத்த நாளே 40 கோடி, 60 கோடி கலக்‌ஷன் என்று வீறிட்டு அலறும் வழக்கங்கள் எல்லாமே சோசியல் மீடியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிறகே. அதிலும் ரசிகர்களும், காசு வாங்கிக் கொண்டு ப்ரோமோட் பண்ணும் ஆட்களும், கைக்கு வந்த தொகையை போட்டு குறிப்பிட்ட நடிகர், தயாரிப்பாளரின் பெயரோடு டேக் செய்து விட்டுவிடுவார். தயாரிப்பாளருக்கு நிஜமான கலக்‌ஷன் தெரியும் என்றாலும் வேறு வழியில்லை. பப்ளிக்கில் அதெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. ஓசியில கிடைக்கிற பப்ளிசிட்டியை எதுக்கு கெடுத்துக்கணும்னு விட்டுவிடுவார். சமீபத்தில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேசிய ஆடியோ தமிழ் சினிமாவில் சும்மாவாச்சும் நூறு கோடி, நானூறு கோடி என்று சொல்லிக் கொண்டு, நடிகர்களின் மனதை குளிர்விப்பதைவிட நிஜத்தை சொல்லி, சம்பளத்தை குறைத்து நாலு காசு நிஜமாகவே பாருங்க என்று சொன்னதற்கு மொக்கையாய் என்ன நீ கையப்பிடிச்சி இழுத்தியா என்கிற ரேஞ்சுக்கு, தியேட்டர் விளம்பரங்களில் பங்கு தந்தாயா?, பாப்கார்ன் விற்றதில் பாதி கொடுத்தாயா? என்று குற்றம் சாட்டுகிறார். தியேட்டரில் வரும் விளம்...

கொத்து பரோட்டா -2.0-5

கேட்டால் கிடைக்கும் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் டெலவரியின் போது ஐம்பதிலிருந்து சில இடங்களில் 100 ரூபாய் வரை கூட சிலிண்டர் பில்லுக்கு மேலாக வாங்குகிறார்கள். கேஸ் விலை ஏற ஏற இதுவும் ஏறி கொண்டேதானிருக்கிறது. ஆரம்ப காலங்களில் பாவம் இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு வருகிறார்களே என்ற பரிதாபத்தில் கொடுத்தது போக, இன்றைக்கு கொடுக்காவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்கிற பயம் ஏற்படும் அளவிற்கு மாறியிருக்கிறது. ஆனால் சட்டப்படி நாம் டெலிவரி செய்யும் ஆட்களுக்கு பணம் கொடுக்க தேவையேயில்லை. நாம் சிலிண்டருக்கு கொடுக்கும் விலையிலேயே அவர்களுக்கான டெலிவரி சார்ஜும் சேர்த்துத்தான் வாங்குகிறார்கள். இதே சிலிண்டரை நேரிடையாய் ஏஜென்சியிடம் போய் நீங்களே வாங்கி வந்தால் டெலிவரி சார்ஜ் குறைத்துத்தான் பணம் வாங்க வேண்டும். டெலிவரி செய்கிறவர்களுக்கு பணம் கொடுக்காவிடில் சிலிண்டரை கொடுக்காமல் போய்விடுவார்கள் என்ற பயம் தான் நாம் பணம் கொடுப்பதற்கு காரணம். ஆனால் உங்களுக்கு பில்லான சிலிண்டரை நீங்க வாங்க மறுத்தால் அதை உடனடியாய் எல்லாம் வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாது. உங்கள் வீட்டில் ஆள் இல்லை என்று எழுதி கொடுக்க முட...