மன்மதன் அம்பு
சென்ற வருட வெற்றிப் படமான உன்னைப் போல் ஒருவனுக்கு பிறகு கமலின் அடுத்த படம். மன்மதன் அம்பு. மன்னார், மதன், அம்புஜாக்ஷி எனும் மூன்று பேரை குறிக்கும் பெயர் தான் என்றாலும் மன்மதனின் அம்பு பாய்ந்ததில் காதலர்களுக்கிடையே நடக்கும் ஊடலையும், பிரிவையும் பற்றிய நகைச்சுவை படம் தான். அம்புஜாக்ஷி என்கிற நிஷா ஒரு வெற்றி பட நடிகை. அவளுடய காதலனும், வருங்கால கணவனுமாகிய மதன கோபாலுக்கு அவள் மற்ற நடிகர்களிடம் நெருக்கமாய் பழகுவது பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அவனுடய அம்மா. அவளுக்கு ஒரு நடிகை தன் மருமகளாய் வருவது பிடிக்கவில்லை. மதன கோபாலின் சந்தேகப் புத்தியினால் அம்புஜாக்ஷி என்கிற நிஷா அவனை விட்டு பிரிகிறாள். மூன்று வருடங்களுக்கு பிறகு தன் பள்ளித் தோழியான தீபாவுடன் ஒரு ஹாலிடே டூருக்காக வெனீஸ் வருகிறாள். தீபா ரெண்டு குழந்தைகளுடன் வாழும் டைவர்ஸி. அம்புஜாக்ஷியை பற்றி டிடெக்டிவ் வேலை செய்யச் சொல்லி மன்னார் என்கிற மேஜர் ராஜ மன்னாரை அனுப்புகிறான் மதன கோபால். மன்னார் அவளை பற்றி நல்ல தகவலாய் கொடுக்கிறான். நல்லவளை நல்லவள் என்று சொல்வதற்கு நான் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மதன் பணம் தர மறுக...