Posts

Showing posts with the label Once upon a time in mumbai

Once Upon A Time In Mumbai (2010)

Image
1970-80களில்  மும்பையை,  கோலோச்சியிருந்த ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ரஹீமின் நிஜ நிழலுலக வாழ்க்கையை கடை விரித்திருக்கிறார்கள். ஏற்கனவே மும்பை முழுவதும், ஹாஜி மஸ்தானின் கட்சியினரும் படத்துக்கான தடை செய்வதற்கான முயற்சி செய்து தோற்றுவிட்டனர். மும்பையில் படம் நன்றாக போவதாய் கேள்வி. ஏற்கனவே இதே போன்ற கேங்ஸ்டர் கதைகளை நாம் முன்னமே பார்த்திருந்தாலும் கேரக்டர்களின் பலத்தினாலும், மேக்கிங்கினாலும் சாதித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சுல்தான் மும்பையின் மிகப்பெரிய கடத்தல்காரன். ஷோஹப் லோக்கல் ஏரியாவில் சின்ன, சின்ன திருட்டுகளை செய்து கொண்டிருக்கும் ஒரு சிறு குற்றவாளி. ஒரு போலீஸ்காரனின் மகன். ஒரு கட்டத்தில் சுல்தானிடம் வேலைக்கு சேரும் ஷோஹப். கொஞ்சம் கொஞ்சமாக அவனது வலதுகரமாக மாற, சுல்தானின் பர்சனல் ப்ரச்சனை மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக இடம் மாற வேண்டிய சூழ்நிலையில் பொறுப்பை ஷோஹப்பிடம் கொடுக்க, பணமும், பலமும் ஷோஹப்பின் கண் மறைக்க, சுல்தானுக்கும், ஷோஹப்புக்கும் இடையே இடைவெளி வருகிறது. முடிவை வெள்ளித்திரையில் கண்டு கொள்ளுங்கள். நாம் ஏற்கனவே தமிழ் நாயகன், ராம்கோபால் வர்மாவின் கம்பெனி, ...