தூங்கா நகரம்
மதுரை பேஸ்டு படமென்றாலே அலறி அடித்து ஓடும் அளவுக்கு தமிழ் சினிமா ஆகிவிட்ட நிலையில் இன்னுமொரு மதுரை களப்படமா? என்ற பயத்தோடுதான் படம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஷேவ் செய்யப்படாத தாடியுடன், பட்டாப்பட்டி தெரிய லுங்கிக் கட்டிக் கொண்டு, எப்போதும் தண்ணியடித்துக் கொண்டும், எவளையாவது நொட்டிக் கொண்டும், அருவாளை எடுத்து அலைந்து கொண்டும் இருப்பதே மதுரை ஆட்களின் வேலையாக காட்டிக் கொண்டிருக்கும் “லைவ் ஃபீல்” படங்களாய் பார்த்து நொந்து போயிருக்கும் நேரத்தில் தூங்கா நகரம்.