என்னத்தை சொல்ல...?
போன் ஒலித்தது. வெளிநாட்டு நம்பர். வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். “ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பண்றீங்களா?” என்று யார் என்று கூட கேட்காமல் சொன்னேன். லைன் உடன் கட்டானது. பல சமயங்களில் இம்மாதிரி சொல்லும் போது அதை கவனிக்காமலோ, அல்லது நாம் போன் பண்ணியாச்சு பேசித்தான் ஆகணும் என்ற எண்ணத்தில் அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. சரியாய் பத்து நிமிடம் கழித்து கூப்பிட்டார்.