பாணா காத்தாடி
ஸ்கூல் படிக்கும் வடசென்னை ஸ்லம் பையனுக்கும், பேஷன் டெக்னாலஜி படிக்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்படும், காதல், மோதலை பற்றிய படம். நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமாயிருக்கும் படம். சத்யஜோதியின் பேனரில் வரும் படம் என்பதால் ஒரு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த படம். ஒவ்வொரு க்ளாஸிலும் இரண்டிரண்டு வருடங்கள் நின்று நிதானமாய் படித்து வரும் ரமேஷ், காத்தாடி விடுவதில் மன்னன். ஒரு டீலில் அறுந்த காத்தாடியை பிடிக்க ஓடும் போது சமந்தாவின் மேல் மோதிவிட, அவள் கழுத்தில் மாட்டியிருக்கும் பென் ட்ரைவ் அதர்வாவின் பைக்குள் மாட்டிவிட, இது தெரிந்து சமந்தா அவனை தொடர்ந்து டார்ச்சர் செய்கிறாள். ஒரு கட்டத்தில் தன் பாக்கெட்டில் பென் ட்ரைவ் இருப்பதை கண்டு அவளிடம் கொடுக்க, இருவரும் நண்பர்களானார்கள். நட்பு காதலாகிறது. அதர்வா தன் காதலை சொல்லப் போகும் போது நடக்கும் பிரச்சனையில் இருவரும் பிரிய. முடிவில் காதலர்கள் இருவரும் சேர்ந்தாரக்ளா? இல்லையா என்று சொல்லியிருக்கிறார்கள். நடிகர் முரளியின் மகன் அதர்வா.. ஆள் நன்றாக இருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். ஆனால் மெட்ராஸ் பாஷை தான் வாயி...