இதுதான்டா க்ளைமாக்ஸ் -1
Horrifying Warning: Dear Gentle ladies and Gentlemen, The below post is highly recommended for the adults whose mental capacuty is absolutely equivalent to 14 years or less aged children. It is going to be a mind and stomach teasing journey. Hence you are depanetly requested to keep one andaa full of chilled drinks. Gulp it at regular intervals in order to avoid smoke bursting out of your ears/stomach etc. Here we go..... அதிர்ஷ்ட ரேகையின் அனைத்து கோடுகளும் நடுமுதுகில் ஆழமாய்ப்பதிந்த சுபயோக தினமது. அம்மகோன்னத நாளின் நள்ளிரவில் சன் டி.வி.யில் துர்கா க்ளைமாக்ஸ். பராசக்தி, முள்ளும் மலரும், மௌனராகம் போன்ற ரசனையற்ற படங்களால் அக்மார்க் தமிழ் சினிமா ரசிகர்களை சீரழித்த ராகுகால யுகமொன்றில் இவ்வனைத்தையும்...