Posts

Showing posts with the label sekar kammula

Life Is Beautiful

Image
சேகர் கம்மூலாவின் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பிடேஸ், லீடர் என்று வரிசைக்கட்டி எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். இவரது படங்கள் எல்லாம் மிக மெல்லிதான நகைச்சுவையுடன், பெரும்பாலும் லைட்டான உணர்வுகளூடே பயணிக்கும் கதைகளாகத்தானிருக்கும். அதில் கொஞ்சம் விலகியது லீடர் திரைப்படம். இவரது ஹாப்பி டேஸை இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதே படத்தை வேறு ஒரு மொந்தையில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அமலா கணவனை இழந்தவர். அவருடய மகன் சீனு, இரண்டு மகள்களை ஹைதராபாத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி அங்கேயே படிக்க சொல்கிறார். மூவரில் சீனு இன்ஜினியரிங் பைனல், அடுத்த சத்யா டாக்டருக்கு படிக்கவிருப்பவள், கடைக்குட்டி சின்னி. இவர்கள் மூவரும் ஹைதையில் செட்டிலாகிறார்கள்.  இவர்கள் இருக்கும் காலனிக்கும் பக்கத்தில் இருக்கும் பணக்கார காலனிக்கும் எப்போதும் தகராறு. காலனியில் சீனுவின்  முறைப்பெண் பத்மா இருக்க, இருவருக்கும் காதல். சீனு வரும் அதே நாளில் புதியதாய் குடிவரும் லஷ்மி எனும் பெண...

Happy Days

Image
ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்.. படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம். தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா.. ...