Posts

Showing posts with the label திரை விமர்ச்னம்

கொத்து பரோட்டா -21/09/15

Image
வேளச்சேரி லூக்ஸ் சத்யமிடமிருந்து வேளச்சேரி லூக்ஸ் ஜாஸ் சினிமாஸின் வசம் போய் விட்டது. ஆன்லைன் புக்கிங்கில் புக் செய்து  அரை மணி நேரம் கழித்து எஸ்.எம்.எஸ் வந்தது. எல்லாருக்கும் வயலட் கலரில் யூனிபார்ம் கொடுத்திருந்தார்கள். வழக்கமான சத்யம் சினிமாஸின் விளம்பரங்கள் இல்லை. அதே பட்டர் பாப்கார்னுடன், டாப் அப் செய்யும் பவுடர்கள் வைத்திருந்தது பல சத்யம் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. நிர்வாகம் கை மாறியிருப்பதை உணர முடியாத வகையில் சமாளிக்கிறார்கள். முன்பெல்லாம் சத்யமிடம் இருந்த வகையில் பத்து ரூபாய் டிக்கெட்டை கொடுக்க மாட்டார்கள் அல்லது காலையிலேயே கொடுப்பார்கள் என்று சொல்வார்கள். இவர்கள் அந்த வரிசையையும் 120 ரூபாய்க்கே ஆன்லைனிலேயே விற்கிறார்கள்.காரணம் எப்படி என்று சொல்லியா தெரிய வேண்டும். ஆல்ரெடி மாயாஜாலில் பத்து ருபாய் டிக்கெட்டை 120 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்.

நஞ்சுபுரம்

Image
ரொம்ப நாளாய் நஞ்சு பரவாமல் பெட்டியில் இருந்த படம். அதை இராமநாராயணன் தட்டி வெளிகொணர்ந்ததற்கு பாராட்டுக்கள். சின்னத்திரை புகழ் ராகவ் இசை, நடிப்பு, தயாரிப்பில் உருவான படம். பிரபல சின்னத்திரை இயக்குனர் சார்லஸ் இயக்கியபடம். முக்கியமாய் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட படம். இயக்குனர் ஒரு பதிவரும் கூட.

World Invasion: Battle Los Angeles. ங்கொய்யால.. வந்துருச்சு.. ஓடு..

Image
  தமிழ் சினிமாவிற்கு ஒரு டெம்ப்ளேட் மசாலாக் கதைகள் போல் ஹாலிவுட்டுக்கென்று சில டெம்ப்ளேட் மசாலாக் கதைகள் இருக்கிறது. அதுவும் ஒரு படம் ஹிட் ஆகிவிட்டதென்றால், தொடர்ந்து அதே போல் பார்ட்டு பார்ட்டாக எடுத்து தள்ளுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

நில்.. கவனி.. செல்லாதே…

Image
வெண்ணிலாக் கபடிக்குழு படத்தயாரிப்பாளர் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு சின்ன பட்ஜெட் படம். இப்படி வாரம் ஐந்து படங்கள் புற்றீசல் போல வந்துக் கொண்டிருந்தால் படத்தில் அடுத்தடுத்து விழும் சாவு போல படங்களும் விழுந்து கொண்டேத்தானிருக்கும். சம காலத்தில் பெரிதாய் ஒரு ஹாரர் பேஸ்டு த்ரில்லர் படங்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது த்ரில்லர் ஜெனரை  தொடுவது கூட இல்லை. அப்படியில்லாமல் இப்படம்.. ஓரளவுக்கு ஆரம்பத்திலிருந்து நல்ல ப்ளோவோடு போவது சந்தோஷமாய் இருந்தது. புதிதாய் ஏதுமில்லை வழக்கமான ஒரு ஆளில்லாத இடத்தில் நான்கு பேர் மாட்டிக் கொள்வது, ஒவ்வொருவராய் சாவது, ஏன்? எது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் கதை.  நண்பர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள். அதில் ஒருவர் காமெடியன், மற்றவர்கள் காதலர்கள். கதையில் இவர்களது காதலுக்கோ… அல்லது இவர்களுக்கோ வீட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. வழக்கமான ஆரம்ப பூர்வாங்க காதல் காட்சிகள், பாடல்கள் எல்லாம் முடிந்து இண்டர்வெல்லின் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதற்கு அப்புறம் நடக்கும் விஷயங்கள் எல்லாம் வழக்கமாய் ஹ...

Brindavanam

Image
முதல் தேதியில் தெலுங்கு எந்திரன். அடுத்த வாரம் மஹேஷ்பாபுவின் கலேஜா, இந்த வாரம் ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம். என்று தெலுங்கு சினிமா பரபரப்பாய் தான் இருக்கிறது. அநேகமாய் அடுத்த வாரமோ, அதற்கு அடுத்த வாரமோ நாகார்ஜுன் வருகிறார் என்று நினைக்கிறேன். இப்படி கோலாகலாமாய் இருக்கிறது தெலுங்கு படவுலகம். அதே போன்ற ஒரு கோலாகலமான, கொண்டாட்டமான படம் தான் பிருந்தாவனம். கிருஷ்ணா என்கிற கிருஷ் ஒரு பில்லியனர் முகேஷின் ஒரே செல்ல மகன். கிருஷ்ஷுக்கு ஒரு பழக்கம் என்னவென்றால் காதலர்களை எப்பாடு பட்டாவது சேர்த்து வைப்பது. கிருஷ்ஷுக்கு ஏற்கனவே சமந்தாவுடனான காதல் இருக்க, சமந்தா தன் சிநேகிதியான பூமிக்கு அவளுடய அப்பா பிரகாஷ் ராஜ் அவளுக்கு பிடிக்காத மாமா மகனை திருமணம் செய்து வைக்க ப்ளான் செய்வதால் தனக்கு ஹைதராபாத்தில் ஒரு பாய் ப்ரெண்ட் இருப்பதாக பொய் சொல்லிவிட்டாள். ஆனால் இப்போது அவளுடய அப்பா பூமியின் பாய்ப்ரெண்டை கூட்டி வர சொல்லி விட்டார். அதனால் கொஞ்ச நாள் நீ அங்கு போய் அவளுடய பாய் ப்ரெண்டாக நடிக்க வேண்டும் என்று சொல்லி பூமியுடம் அனுப்புகிறாள். ஒரு கட்டட்தில் பூமி, கிருஷ்ஷை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள்....

எ.வ.த.இ.மா.படம் -Peepli (Live)

Image
எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படம்னு ஏங்க வைகிற படம் பீப்லி. வெகு சிம்பிளான மேக்கிங். ஆனால் மனதில் அறையும் கதை. மிகவும் கசப்பான விஷயத்தை சிரிப்பு என்கிற மருந்தோடு முழுங்க கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு இயல்பாக ஒரு கதையை சொல்ல முடியுமா? மேக்கப்பில்லாத அழுக்கு முகங்களை வைத்து நம்மை வசீகரீக்க முடியுமா? கொஞ்சம் கூட கமர்ஷியல் இல்லாத ஒரு படத்தை அமீர்கான் தயாரிக்க முன்வந்ததை போல தமிழில் எந்த நிதிகளுக்காகவாவது தைரியம் இருக்கிறதா?. படத்தில் தான் கமர்ஷியல் விஷயம் இல்லையே தவிர படத்தை பொறுத்த வரை கமர்ஷியல் ஹிட் தான். ஏனென்றால் பிவிஆர், சத்யம், ஐநாக்ஸில் தொடர்ந்து வீக்கெண்டில் ஹவுஸ்புல். விவசாயிகள் தற்கொலைதான் படத்தின் அடிநாதம், விவசாயம் நொடித்துப் போய், வறுமையிலும், பேங்க் லோன்கள் கட்ட முடியாமல் கடனிலும் நிலத்தை இழப்பது மானக்கேடு என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை பற்றிய படம்.  நத்தாவும் அவனுடய அண்ணன் புடியாவும் பேங்க் லோன் கட்ட முடியாமல் அவர்களது நிலத்தை பேங்கிடம் இழக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் பணம் புரட்ட முடிய்வில்லை. எனவே லோக்கல் அரசியல் வாதியிடம் போய் ...

Aisha (2010)

Image
ஒரு அழகான, புத்திசாலியான, Self Centered,  சுயநலவதியான, மற்றவர்கள் விஷயத்தில், அவர்களது வாழ்க்கை முடிவில் மூக்கை நுழைக்கும்,  பெண்ணை கண்டால் உங்களூக்கு எரிச்சல் வரும் ஆனால் இவளை கண்டால் உங்களால் ரசிக்காமல், காதலிக்காமல் இருக்க முடியாது. எ லவ்வபிள், அரகண்ட் பியூட்டியான அயிஷாவை பற்றிய கதை. அயிஷா டெல்லியில் வாழும் ஒரு உயர்தர வகுப்பை சேர்ந்த பெண், அவளுடய பொழுது போக்கு, அப்பாவின் பணத்தை செலவு செய்து கொண்டும், ஷாப்பிங் செய்து கொண்டும், டெல்லியில் நடக்கும் உயர்தர மக்களின் பார்டிகளில் கலந்து கொள்வதும், ஜோடி பொருத்தம் பார்த்து இவன், இவள்தான் உன் ஜோடி என்று தான்  நினைப்பதை மற்றவர்களிடம் திணிப்பவள். அவளுடய ஆண்டிக்கு ஒருவரை பார்த்து செலக்ட் செய்தவள். அடுத்து அவளுடய டார்கெட்டில் வருபவள் மிடில் க்ளாஸ்  பெண்ணான ஷிபாலியை தன்னைப் போலவே மாற்றி, அவளுக்கு சரியானவன் ரந்திர் என்கிறவன் தான் என்றும். அவனை தான் ஷிபாலி காதலிக்கவேண்டும் என்றும் அவன் தான் உனக்கு சரியான் ஜோடி என்று ஏத்திவிட்டு தன் எண்ணத்தை அவள் மூலம் செயல்படுத்த நினைக்கிறாள். அயிஷா ஷிபாலியை ஒரு ப்ராஜெக்டாகவே நினைக்கிறாள். ...