வ- குவாட்டர் கட்டிங்
தமிழ் சினிமாவில் சினிமாவை கிண்டலடித்து நிறைய நகைச்சுவை காட்சிகள் வந்திருந்தாலும், முழு முதல் ஸ்பூப் வகை படமாய் வந்து வெற்றிப் பெற்ற படம் தமிழ்படம். அப்படத்தை வழங்கிய அதே டீம் மீண்டும் இம்முறை குவாட்டர் கட்டிங் என்கிற பெயரில் ஒரு வித்யாசமான கல்ட் படத்தை தர முயன்றிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் harold and kumar என்கிற பெயரில் white Castle என்கிற படம் ஒன்று வந்ததாய் ஞாபகம். அதில் அந்த வைட் காஸ்டில் என்கிற இடத்தில் கிடைக்கும் பர்கரை சாப்பிடுவதற்காக நண்பர்கள் இருவரும் கிளம்பி போய், பல பிரச்சனைகளீல் மாட்டிக் கொண்டு அவஸ்தை படுவார்கள். அக்கதையின் லைனை ஞாபகப்படுத்தும் கதை தான் வா குவாட்டர் கட்டிங் படத்தின் கதை என்றாலும். நிச்சயமாய் அதனுடய ரிப்ளீக்கா அல்ல என்பதை சொல்லத்தான் வேண்டும். புஷ்கர் காயத்ரி இயக்கிய ஒரம்போ எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் ஆதாரத் தழுவலாய் இருந்தாலும் இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்களின் மூலம் நன்றாகவே தந்திருந்தார்கள். அந்த நம்பிக்கையில் இப்படத்திற்கு போய் உட்கார்ந்தேன். சவுதி அரேபியாவில் சரக்கு அடிக்க முடியாது என்பதற்காக அங்கே வேலை க...