சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ மங்களாம்பிகா
வெஜ் உணவு என்றால் சென்னையை பொருத்தவரையில் பதினோரு மணிக்குள் தேடினால் தான் கிடைக்கும். அதற்கு மேல் நல்ல சுவையான குவாலிட்டியான வெஜ் உணவு என்றால் நிச்சயம் ரோடு ரோடாய் அலைய வேண்டியதுதான். அந்த வகையில் 11.30 வரை அசோக் நகர் சரவண பவன் தான் கை கொடுக்கும். 3ஸ்டார் ஓட்டல் விலையென்றாலும், நல்ல சுவையான வயிற்றைக் கெடுக்காத உணவு நிச்சயம் என்பதால் பெரும்பாலான நேரங்களில் இரவில் சரவணபவனே தஞ்சம். சாப்பிட்டதற்கான பில் கொடுத்த அடுத்த நிமிடம் எடத்தை காலி பண்ணு என்று வெளியே துறத்தும் உணவகங்கள் இருக்குமிடத்தில், அதுவும் மூடுகிற நேரத்தில் நின்று நிதானித்து வேறெதுவும் வேண்டுமா என்று கேட்டு விட்டு கல்லாவை மூடும் பண்பிற்காகவே இங்கே சாப்பிட போகலாம். அசோக்நகரில் இவர்களுக்கு பதிலாய் இன்னொரு சைவ ஓட்டல் திறக்காதா? என்று யோசித்துக் கொண்டிருந்த போதே அசோக்நகர் கிட்டத்தட்ட சரவணபவன் ரிப்ளிக்காவில் ஒரு பாஸ்ட் புட் உணவகத்தை 7வது அவின்யூவில் திறந்திருந்தார்கள். அவர்களைப் போலவே ஓப்பன் கிச்சன். நின்று கொண்டும், உட்கார்ந்து சாப்பிடும் வசதியென்று. மங்களாம்பிகா என்ற பெயரில் இவர்கள் ஏற்கனவே கல்யாண கேட்டரிங் செய்து பிரப...