60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர் ஹைதராபாத் என்றதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நினைவு வரும் ஆனால் எனக்கு பிரியாணிதான் நினைவுக்கு வரும். பாவர்சி, பாரடைஸ் பிரியாணி, செகந்தராபாத் ஸ்டேஷனின் வாசலில் இருக்கும் ஒரு பிரியாணி என்று தேடித் தேடி சாப்பிடுவேன். என்னதான் சென்னை முழுவதும் ஹைதராபாத் பிரியாணி என்று போர்டு வைத்து கூவிக் கூவி அழைத்தாலும் ஒரிஜினல் ஹைதராபாத் பிரியாணியை யாரும் கொடுப்பதில்லை. பெரும்பாலும் வழக்கமான பாஸ்மதி பிரியாணியையே தருகிறார்கள். ஹைதை பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டீர்கள் என்றால் அதை சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.