Posts

Showing posts with the label மாநகராட்சி

கொத்து பரோட்டா- 04/03/13

Image
சனியன்று இரவு  சன் செய்திகள் விவாத மேடையில்  32 நாட்களாய் பூரண மது விலக்கை அமல் படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் பெரியவர் சசி பெருமாளின் போராட்டத்தை முன் வைத்து பூரண மதுவிலக்கு வருமா? அமல் படுத்த முடியுமா? என்று விவாதித்தார்கள். அதில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, மற்றும் பமக சார்பில் ஒர் வக்கில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எல்லோரும் பேசினார்கள். அதில் தல சாரு மட்டும்தான் நிஜத்தில் டாஸமாக்கில் நல்ல சரக்கு கொடுப்பதில்லை என்றும், நல்ல சரக்கை கொடுங்கள் என்றும் சொன்னார். நிச்சயம் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வாய்ப்பேயில்லை என்று ஆணித்தரமாய் சொன்னார். தமிழ்நாட்டில்தான் இப்படி கேடுகெட்ட தரமற்ற சரக்கை தருகிறார்கள் என்று புலம்பினார். பல சமயங்களில் அவர் எடுத்து வைத்த வாதம் சரியாகவேயிருந்தது. என்ன எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும் வேலையில் தமிழ்நாட்டைத்தவிர, இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்ட முடியாது Arrest செய்துவிடுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க,  அடுத்த ஸ்டேட்மெண்டில் ப்ரான்சில் ஜானிவாக்க...

Follow Up - சென்னை மாநகராட்சி

இம்மாதத்தின் இரண்டாம் தேதியன்று தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும் என்கிற தலைப்பில்  மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு அரசு கொடுக்கும் உதவிப் பணம் மறுக்கப்படுகிறது என்றும், அதற்கு காரணம் எந்த ஏரியாவில் மருத்துவ உதவி பெற்றார்களோ அந்த ஏரியாவில் இருக்கும் பேங்கில் தான் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டும் என்றும் கூறி அலைய விட்டுக் கொண்டிருந்தார்கள். பேங்குகளோ, ப்ரூப் எல்லாம் கொடுத்தும், அவர்களின் வீட்டிற்கு அருகில் இருக்கும் பேங்குகளில் தான் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியும் என்று அலைக்கழித்துக் கொண்டிருந்தததை பற்றி எழுதியிருந்தேன்.

தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும்.

ஆமாம் இளம் தாய்மார்களை நாயாய் அலைய வைக்கிறது மாநகராட்சி மருத்துவமனைகள். அதற்கு  கொஞ்சமும் குறையாமல் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும். மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கபட்டு பிறக்கும் ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.12 ஆயிரம் அரசு உதவிப் பணமாய் தருகிறது. இது இந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட தொகையாகும். ஆனால் இத்தொகையை வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களை அலைய வைக்கிறார்கள்.