மெய்பொருள் - திரைவிமர்சனம்
குழந்தையை கடத்தும் ஒரு பெண்னைபற்றி கதாநாயகி தகவல் கொடுத்து அவள் பிடி படுகிறாள். பத்திரிக்கை கார மனைவியும், நியூரோ சர்ஜன கணவன், மிக அன்னியோன்யமான தம்பதிகள், ஒரு நாள் பாரில் ஒருவன் அறிமுகமாகிறான். தனக்கு ஈ.எஸ்.பி பவர் உள்ளதாகவும், தான் சொல்வதெல்லாம் நடக்கிறது என்று சொல்கிறான். பின்பு அவன் சொல்லும் விஷயங்கள் எல்லாம் நடக்க, அவன் மீது நம்பிக்கை கொள்கிறான். ஒருநாள் அவன் கதாநாயகனை அழைத்து அவன் இன்னும் 10 நாட்களில் இறக்க போவதாகவும், அதற்கு காரணம் அவனது மனைவி என்று சொல்கிறான். அவன் சொன்னபடி நடந்ததா இல்லையா என்பதே கதை. சொல்லும் போது பரபாப்பாக இருப்பது போல தோன்றும் கதை. படத்தை பார்க்கும் போது ஆமை ஸ்லோ.. அதிலும் முழுவது புது முக நடிகர்கள், ஆளுக்கு 2000$ கொடுத்து நடிதிருப்பார்கள் போலிருக்கிறது. படு அமெஞ்சூர் தனம். ஹைடெபனிஷன் டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்திருகிறார்க்ள். படம் முழுவதும், கலிபோர்னியாவிலும், சான் ப்ரான்சிஸ்கோவிலும் எடுத்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் நகருவேனா என்கிறது திரைக்கதை. பாதி நேரம் இங்கிலீஷிலேயே பேசிக் கொள்கிறார்கள். எடிட்டர் லெனின் படு பயங்கர முயற்ச...