Posts

Showing posts with the label Kick

Kick – Telugu Film Review

Image
தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான்.  ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, கல்யாண். தன் தங்கை அவனை காதலிப்பதாய் சொல்ல, அவன் கிக்குக்காக எதையும் செய்பவன் என்று சொல்லச் சொல்லி அவனிடம் கேட்க, அவனும் அப்படியே சொல்லி ஆனால் அவன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி. காதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் கல்யாண் அலைய, திருடன் கல்யாணுக்கும், போலீஸ் கல்யாணுக்கு நடக்கும் கேட் & ம...