தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான். ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, கல்யாண்.
தன் தங்கை அவனை காதலிப்பதாய் சொல்ல, அவன் கிக்குக்காக எதையும் செய்பவன் என்று சொல்லச் சொல்லி அவனிடம் கேட்க, அவனும் அப்படியே சொல்லி ஆனால் அவன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.
காதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் கல்யாண் அலைய, திருடன் கல்யாணுக்கும், போலீஸ் கல்யாணுக்கு நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் கல்யாண் திருடனானான்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்தத.? என்பது தான் கதை.
ரவிதேஜா வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் நடித்திருகிறார். படம் முழுக்க அவரின் ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள். க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
இலியானா கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். அழகாய் இருக்கிறார். ரவிதேஜாவுக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்
ரவிதேஜாவை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் நம்ம ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். படு ஹார்டான வாய்ஸை அவருக்கு டப் செய்திருக்கிறார்கள். அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.
வழக்கம் போல் ப்ரம்மானந்தம் தூள் பரத்துகிறார். அதிலும் ரவிதேஜாவிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்ஷனும்.. இலியானா ரவிதேஜாவை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவிதேஷாவிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.
ரசூலின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. எம்.எம் தமனின் இசையில் மூன்று பாடல்கள் ஓகே.
வழக்கமாய் பழிவாங்கும் ஆக்ஷண் படங்களையே இயக்கும் சுரேந்திரா ரெட்டி, இம்முறை காதலுக்கு முக்ய்த்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் ரவிதேஜா, இலியானா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைகதையின் வேகம் அருமை. இரண்டாவது பாதியில் நடுவுல் தொங்கினாலும், போலீஸ் ஆபீஸர், ரவிதேஜாவுக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ.
Kick - ஒரு ‘கிக்’குக்காக பார்க்கலாம்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
41 comments:
நல்ல விமர்சனம்..
ஆனா, போலீஸ் வேடத்தில் ஷாம் நினைத்தால்தான் பயமா இருக்கு..!
\டக்ளஸ்....... said...
நல்ல விமர்சனம்..
ஆனா, போலீஸ் வேடத்தில் ஷாம் நினைத்தால்தான் பயமா இருக்கு..!\\
ரீப்பிட்டு.
மீசையில்லாம ஒருத்தர் போட்டோ போட்டிருக்கீங்களே.. மொழி படத்திலே கடுகடுவென திரிவார். அவர் பேர் - ப்ரம்மானந்தம் ஆ?
தெரிஞ்சுக்கிட்டேன்.
தெலுங்கு படத்திற்கு விமர்சனம் எழுதி ஹிட்டடிப்பதில் நீங்கதான் தல சூ ப் ப் ர்.
நன்றி
கவலை படாதீங்க டக்ளஸ், வித்யா.. படத்தில அவர் போலீஸ் டிரஸ் போட்டு வர்றதேயில்லை.. புல் மப்டிதான். அதிலேயும் மலேசியாவுல..
இவர் போலீஸ் டிரஸுக்கே அலற்றீங்களே.. ரவிதேஜா போட்டுட்டு வர்றாரு கடைசியில.. வாட்ச்மேன் கணக்கா.. அதை என்ன சொல்வீங்க..?
இலியானா பற்றி வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லையாண்ணா?
HOT SPOT ல எப்போ இலியானா வருவாங்க?
இந்தப் படம் டப் ஆகுமாமே! watch worhtya?
இலியானா ஸ்டில்ஸ் சரியா பெரிசா போடாத உங்கள வன்மையாக கண்டிக்கிறேன்.
தல, அங்கிதா கொஞ்சம் சப்ப ஃபிகரா தெரியல?
இலியானா போடலாமே?
கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இலியானாவின் க்ளோசப் ஸ்டில் போடாததற்கு....
சங்கர் அண்ணா - கம்பெனி பக்கம் வந்ததுக்கு நெம்ப நன்றி.உங்க ஆலோசனைபடி சொல்பிழை திருத்தும் வசதி நீக்கபட்டது.மேலும் பல கருத்துக்களை அவ்வபொழுது கூறி கம்பெனி வளர்ச்சியில் பங்கு பெறுமாறு அழைக்கின்றோம்.நம்ப கம்பெனி விலாசத்யும் உங்க "பீட்ஸ்"ல இணைச்சுக்கிட்டு நாங்க போடுறே மொக்கை பதிவை பார்த்து ரசிங்க(சகிச்சுங்க)நன்றி.
தல, படம் அக்கட அப்பீட்டுன்னு ஆஃபிஸ்ல சொன்னாங்க
"வழக்கம் போல் ப்ரம்மானந்தம் தூள் பரத்துகிறார். அதிலும் ரவிதேஜாவிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும்"- இந்த படத்தை போலவே "ரெடி" (தெலுகு) படத்தில் அவர் ராமிடம் மாட்டிக்கொண்டு படும் கஷ்டத்தை மிக அழகாக தனது நடிப்பின் முலம் வெளிபடுத்தியிருப்பார்.முக பிரதிபலிப்பில் பெயர் பெற்றவர்.அவரை போலவே புகழ்பெற்ற இன்னொருவர் M.S. நாராயணா அவரது நடிப்பில் மிகவும் பிடித்து "நுவே நுவே"(தெலுகு) படகில் வரும் பண்டு நகைச்சுவை.வெகுளிதனமான நடிப்பின் முலம் புகழ் பெற்றவர்.அவர் இரண்டு படைங்களையும் இயக்கியவர்.
நல்ல பொழுதுபோக்கு படம் போல் தெரிகிறது.விமர்சனத்திற்கு நன்றி.
Hot spot சூப்பரோ சூப்பர்.
வழக்கம் போல கலக்கல் விமர்சனம்.
பின்னூடங்கள்ள ஹாட் ஸ்பாட்டைப் பத்தித்தான் அதிகப் பேச்சா இருக்கு.
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் படம் கமர்ஷியலாக வெற்றிபெறும் போல் தோன்றுகிறதே,ஷங்கர்.
அனுஷ்கா இல்லாத இந்தப் பக்கத்தை நான் புறக்கணிக்கிறேன்..,
//pappu said...
இந்தப் படம் டப் ஆகுமாமே! watch worhtya?
இலியானா ஸ்டில்ஸ் சரியா பெரிசா போடாத உங்கள வன்மையாக கண்டிக்கிறேன்.//
ரிப்பீட்
எப்படி நீங்க இலியான படம் பெரிசா போடாம விடலாம்
படம் பார்த்த திருப்தி..நல்லா இருக்குங்க..
தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009
சங்கர் இலியானா போட்டோ இல்லையா??? டூ பேட் சங்கர்
என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு வெளியீடு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது? ஹெல்ப் மி?
ஒய்?...ஒய்?....ஒய்?
ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?
HOT SPOT
அய்யய்யோ... வேணாம் ..
அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்
சங்கர் அவர்களே, உங்கள் அன்னைக்கு...
என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!!
அப்படியே நம்ம வூட்டுக்கும் வந்துட்டு போங்க!
http://www.kalakalkalai.blogspot.com
அண்ணா காரு.... உங்க விமர்சனம்லு பாக உந்தி...
ரவி தேஜா படம் ந காமெடி நல்லா இருக்கும். இதுலயும் காமெடி சூப்பர் ...இலீயான சூப்பர் .... இலீயான கிக் கு காக இன்னொரு தடவை பாக்கலாம் தல
என்ன சாம் , காக்க காக்க சூர்யா மாதிரி nadikka try பண்ணி irukkar .
Hello,
We are pleased to announce the launch of 'Chakpak Picture Gallery Widgets - beta' . Movie Picture Gallery Widgets are small HTML scriptlets which you can copy to your blog and they show nifty picture gallery for the configured movie. They are a neat addition to your blog entry.
It looks like you are a movie buff, and frequently blog about movies. These Picture Gallery Widgets would be a great addition to the movie reviews that you write.
To start just go to http://telugu-tamil-widget.blogspot.com/ Find the widget which you like. Click on Grab this widget and copy-paste the HTML scriptlet to your blog.
We hope you like them. Please send us any feedback on the widgets and help us improve the widgets further.
Regards,
Chakpak Team
http://www.chakpak.com http://telugu-tamil-widget.blogspot.com/
ஓரு படம் விட மாட்டீங்க போல... பகிர்விற்கு நன்றி..
"மரியாதை" யை மிஸ் பண்ணியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
//இலியானா பற்றி வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லையாண்ணா?
HOT SPOT ல எப்போ இலியானா வருவாங்க?//
விரைவில் போட்டுட்டா போச்சு.. பீர்.
//இந்தப் படம் டப் ஆகுமாமே! watch worhtya?
இலியானா ஸ்டில்ஸ் சரியா பெரிசா போடாத உங்கள வன்மையாக கண்டிக்கிறேன்//
எப்பவும் தெலுங்கு படங்களை டப்பிங்கில் பார்க்காதீர்கள்.. பப்பு..
நன்றி இரா.சிவகுமாரன்.
நன்றி ராசுக்கண்ணு..
கார்கி.. படத்தோட ஆந்திரா ரிசல்டை சொல்லுங்க
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.. பிரேம்ஜி.. இந்தியன் அவர்களுக்கு
//பின்னூடங்கள்ள ஹாட் ஸ்பாட்டைப் பத்தித்தான் அதிகப் பேச்சா இருக்கு//
மக்கள் வேண்டுகோளுக்காக முரளி
//நீங்கள் சொல்வதைப் பார்த்தால் படம் கமர்ஷியலாக வெற்றிபெறும் போல் தோன்றுகிறதே,ஷங்கர்.
//
ஆமாம் ஷண்முகப்பிரியன் சார்.
//அனுஷ்கா இல்லாத இந்தப் பக்கத்தை நான் புறக்கணிக்கிறேன்..,
//
கோச்சிக்காதீங்க சுரேஷ். அடுத்த படம் அனுஷ்காதான்..
நன்றி/./ முக்கோணம், நான் ஆதவன், தமிழ்நெஞ்சம்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//HOT SPOT
அய்யய்யோ... வேணாம் ..
6:43 AM
//
ஏன் வேணாமா.. இந்த போட்டோ.. பீர்..
//ஓரு படம் விட மாட்டீங்க போல... பகிர்விற்கு நன்றி..
"மரியாதை" யை மிஸ் பண்ணியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
12:33 PM
//
எனக்கென்னவோ.. விஜயகாந்த் விக்கை பார்த்தாலே பேதிக்கு வருது வண்ணத்து பூச்சியாரே..
நன்றி கலையரசன், சுகுமார், சேஷஷாயி.. அவர்களின் வருகைக்கும், கருத்துக்கும்..
இலியானா வெய்ட் போட்டிருக்காமே. மெய்யாலுமா?
Post a Comment