Thottal Thodarum

Jan 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

ayirathil oruvan

35 கோடி பட்ஜெட் படம், நிறைய பஞ்சாயத்துகளை சந்தித்த படம், கிட்டத்தட்ட மூன்று வருடம் தயாரிப்பில் இருந்த படம். ஆண்ட்ரியாவின் மாலை நேரம் பாடல் முதல் கொண்டு ஹிட் பாடல்களை கொண்ட படம், செல்வராகவனின் ஃபாண்டஸி படம், கிட்டத்தட்ட மூன்று வருடஙக்ளுக்கு பிறகு கார்த்தி நடித்து வெளிவரும் படம் என்று பல சர்சைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்த படம்.

படத்தின் ஆரம்ப காட்சியில் சோழ மன்னன் தன் மகனை வேறொருவனிடம் கொடுத்து பாதுகாக்க சொல்லி அனுப்பும் தெருக்கூத்தோடு ஆரம்பிக்கிறது.அதன் பிறகு அப்படியே ஒரு பாழடைந்த இடத்தில் பிரதாப்போத்தன் உள்ளே செல்ல பின்னால் தொடரும் நிழல் அவரை விழுங்க.. அவரை தேடி அவரது பெண்ணும், அவர் செய்த சோழர் கால ஆராய்ச்சியை தொடர அமர்த்தப்படும் பெண் ரீமா, அவர்களுக்கு அடி பொடி வேலை செய்ய அழைக்கப்படும் கார்த்தி. இவர்களுடன் நம்முடய சோழர்களை தேடும் படலமும் ஆரம்பிக்கிறது.
aayirathil-oruvan-001 கப்பலில் ஏறும் காட்சியிலிருந்து சல,சலவென ஓடும் ஆறு போல ஓடுகிறது படம். பெரியதாய் கதை ஏதும் நகராவிட்டாலும், ரீமாவின் அதிரடி கேரக்டரும், ஆண்ட்ரியாவின் அமைதியான கேரக்டரும், கார்த்தியின் அடாவடி, தடாலடி வெட்டி பேச்சு கேரக்டரும் நம்மை ஈர்த்து உட்கார வைக்கிறது. இரண்டு பேரிடமும் கார்த்தி முதல் காட்சியிலேயே அவர்களை படுக்க அழைப்பதும், மாறி மாறி பார்த்ததுமே கல்யாணம் செய்யனூமின்ன உங்களை தான் பண்ணிக்குவேன் என்று சொல்வது ஓவராக இருந்தாலும், செல்வாவின் பலம் அந்த கேரக்டர்களும் அதன் பலவீனங்களும் ஆதலால் ரசிக்க முடிகிறது. காண்டமிருக்கிறது வரியா என்று கேட்டதற்கு அருகில் அழைத்து மெல்ல அணைத்து காதில் “கீழேபார்” என்று சொல்ல துப்பாக்கி வைத்து கார்த்தியினுடய லுல்லாவை குறிபார்பதாகட்டும், அதன்பிறகு ரீமாவிடம் சற்று எட்டவே நின்று, ஆண்ட்ரியாவிடம் ஒட்டுவதாகட்டும், சாப்பாட்டில் எக்ஸ்ட்ராவாய் சிக்கன் பீஸை போட்டு கவர் செய்வதாகட்டும், புட்டத்தில் ஊசி போட அலம்பல் செய்யுமிடமாகட்டும்.. செல்வா தெரிந்து கொண்டேயிருக்கிறார்.
Aayirathil-oruvan-Stills-040 அதன் பிறகு அவர்கள் தேடிப் போகும் இடம் வந்து ஒரு மாதிரி பித்து பிடித்த நிலைக்கு வரும் போது நமக்கும் கொஞ்சம், கொஞ்சமாய் அதே நிலை வர ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இடைவேளை விடுவதால் கொஞ்சம் ரிலாக்ஸாகி தெளிவடைகிறோம். அதன் பின்பு வரும் சோழன், அவனின் மக்கள் இளவரசி, பசி வறுமையோடு கூடிய ராஜாங்கம். பாண்டிய பெண்ணான ரீமா, சோழனுடம் புணர்தல், பழிக்கு பழி, போர்,என்று ஒரே பேண்டஸி மயம். ஆனால் அங்குதான் செல்வா சறுக்கியிருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதும் ஒரே குழப்பத்தின் உச்சகட்டம், பேண்டஸி என்று முடிவெடுத்துவிட்டால் அதனுடய உச்சத்திற்கு போய் ஏதாவது செய்ய வேண்டும், இல்லையே அதை தொடக்கூடாது. இப்படி ஒரு குழப்பமான திரைக்கதை படத்தின் போக்கை குழப்புவதோடு மட்டுமல்லாமல்.. ஒரு கட்டத்தில் யார் மேல் கதை ட்ரவலாகிறது என்ற விஷய்ம் மாறி கொண்டேயிருக்க, ரீமா மீதே போய் கொண்டிருக்கும் கதை திடீரென்று கார்த்தியின் மேல் வர, பார்திபனுடன் சேர்ந்து போரிடும் போது ஏதோ பெரிதாய் நடக்கப் போகிறது என்று என்னும் போது ஏதும் நடக்காததால் சொதப்பிவிடுகிறது.
Aayirathil-Oruvan-trailer படத்தில் பாராட்ட படவேண்டிய ஒரு நபர் யார் என்று கேட்டால் நிச்சயமாய் அது ரீமா சென் தான். அதகள படுத்துகிறார். ஆண்ட்ரியாவின் வீட்டிற்குள் நுழைந்து பேச ஆரம்பிக்கும் போது ஒரு ஹைஃபை பாடி லேங்குவேஜுடன் அறிமுகமாகிற இடத்திலேயே நம் நெஞ்சத்தில் நிற்கிறார். இரண்டு கைகளிலும் ரிவால்வரை மாற்றி, மாற்றி சுடுகிற ஸ்டைலில் நிற்கிறவர் கொஞ்சம் செட்டிலாகிறார். பாண்டிய பெண்ணாய் மாறி பார்த்திபனுடன் அவனை புணர்ந்து இரத்தம் கலக்க, ஆவல் கொள்ளும் காட்சிகளில் அப்படியே சம்மணமிட்டு உட்காருகிறார். அதன் பிறகு அவரின் அட்டகாசம் அடி தூள் தான். பார்த்திபனும்,ரீமாவும் மாற்றி மாற்றி கொடுந்தமிழில் வசனம் பேசி, வாள் சண்டையிட்டு, சண்டையின் வீரியம் மூலம், அவளின் காமமும், பழிவாங்கும் உணர்ச்சியையும் ஒரு சேர வெளிப்படுத்தும் போது ருத்ர தாண்டவே ஆடுகிறார். ஹாட்ஸ் ஆப் ரீமா.

ஆண்ட்ரியாவுக்கு பெரிதாய் வேலையில்லை, பாதி படத்துக்கு பிறகு அவர் எதற்கு இருக்கிறார். ஏன் இருகிறார் என்று கேள்வி கேட்கக்கூட காட்சிகள் இல்லை. கார்த்தியின் ஆரம்பக் காட்சிகள் ஆர்ப்பாட்டமாய் இருந்தாலும் கதையில் அவருக்கென ஏதும் ஸ்பெஷாலிட்டியான விசயங்களோ, அல்லது அவரை சுற்றி கதையோ செல்லாததால் பெரிதாய் சொல்வதற்கில்லை. பார்த்திபன் சோழ அரசனாக கரு கருவென வித்யாசமாக இருந்தாலும், சில சமயங்களில் நடிக்கிறேன் பேர்வழி என்று ஆவென வாயை பொளந்து கத்தும் காட்சிகளில் சோழனை நாமே கொல்லலாம் என்று தோன்றுகிறது
Aayirathil-oruvan-Stills-039 ஒளிப்பதிவு ராம்ஜி, படம் முழுக்க இவரின் உழைப்பு தெரிகிறது. முக்கால் வாசி காட்சிகள் சி.ஜியாகவே வருவதால், சி.ஜி பல இடங்களில் பல் இளிக்கிற காட்சிகளில் எல்லாம் ஒளிப்பதிவாளருக்கு பெயர் சொல்லவில்லை. சில இடங்களில் அட பொட வைக்கவும். இசை ஜி.வி.பிரகாஷ்குமார். படத்தில் இரண்டு பாட்டு தான் வருகிறது. நெல்லாடிய பாடலும், உன் மேல ஆசை தான் பாடலும் ஏற்கனவே ஹிட். பின்னணி இசையில் அவர் போக வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது.

படம் முழுவதுமே ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் உழைப்பு படம் நெடுக தெரிகிறது. அந்த பழங்கால கட்டிடங்கள் ஆகட்டும், சோழர் காலத்திய அணிகலங்கள் ஆகட்டும் ஒவ்வொரு சீனிலும் பளிச்சென்று தெரிகிறார். அதே போல் காஸ்டியூமர் இரும் அலி அவர்களின் கைவண்ணமும் அருமை.

ஒவ்வொரு இக்கட்டிலிருந்து அவர்கள் தப்பிப்பதில் மிகவும் கற்பனை வறட்சியே இருக்கிறது. நடராஜர் சிலை நிழலில் ஓடும் காட்சிகள், மெக்கனாஸ்கோல்ட், போன்ற பழைய ஆங்கில படங்களை ஞாபகப்படுத்தினாலும், நன்றாக இருக்கிறது. அது போல இரண்டாம் பாதியில் வரும் கிளேடியேட்டர் சீன் செம இழுவை. படம் நெடுகிலும் ரத்தமும் கோரமும் அதிகம்.

முதலில் செல்வாவை பாராட்டி ஆக வேண்டும் இம்மாதிரியான கதை களத்தை தெரிந்தெடுத்தற்காக, அதே நேரத்தில் அவரை குறை சொல்லியும் ஆகவேண்டும் இவ்வளவு குழப்பமான திரைக்கதை அமைத்ததினால். பல காட்சிகள் செல்வா டச் இருக்கவே செய்கிறது. ஆரம்ப காட்சிளிலும், சோழ மன்னனின் அரசாட்சியில் பஞ்சத்தில் மக்கள் அலைய, ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் வந்து அரசனின் முன் தன் முலையை காட்டி அதை அழுத்தி பீச்சி தன்னிடம் தன் குழந்தைக்கு பால் இல்லை ரத்தம் தான் வருகிறது என்று வெளிப்படுத்தும் காட்சியிலும், தான் ஒரு வெர்ஜின்தான் என்பதை நிருபிக்க நின்ற வாக்கில் ரீமா நம்பர் ஒன் போக அதை பிடித்து யூரினல் டெஸ்ட் செய்வதும், இடுப்பை அழுத்தி அவள் ஏற்கனவே சூலுற்றவளா என்று செக் செய்யும் காட்சியாகட்டும், பார்த்திபனும் ரீமாவும் போடும் சண்டையில் பார்திபனிடம் கோபமும், ரீமாவிடம் கோபமும், தாபமும், காமமுமாய் போடு சண்டைக் காட்சியும், போர் காட்சிகளும் என்று ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார்.
Aayirathil-Oruvan-61 ஆனால் இவை எல்லாம் தெளிவான திரைகதையில்லாத்தால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. ரியாலிட்டியையும், பேண்டஸியையும் ஒரே களத்தில் வைத்து சோழனையும், ரீமாவையும் ஒரு காலத்தில் வாழ விட்டு பல சமயங்களில் இது ரிஜமா கற்பனையா என்ற குழப்பத்தை காட்சிக்கு காட்சி ஏற்றிவிட்டு விடுவதால் படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது பங்கி அடித்தார் போல் இருந்தாலோ, பக்கத்தில் உள்ளவரிடம் அது சரி படத்தோட கதை என்ன என்ற கேள்வி கேட்பதையோ நிச்சயம் தவிர்க்க முடியாது. பல இடஙக்ளில் இது ஒரு பின்நவீனத்துவ படமோ என்று தோன்றுகிறது பெரும்பாலான வெகுஜன ரசிகர்களுக்கு படத்தில என்ன சொல்ல வருகிறார்கள் என்கிற கேள்வியுடன் தான் வெளிவருகிறார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் – இருந்திருக்க வேண்டியவன்தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

120 comments:

Muthukumar said...

Romba kolapama irukey...

Karthik's Thought Applied said...

gud one to read before going to it tomm :)

butterfly Surya said...

ஆயிரத்தில் ஒருவன் – இருந்திருக்க வேண்டியவன் ///////////

அப்ப இல்லையா..??

கேபிள்ஜி..இந்த தடவையும் எஸ்கேப்பா..??

makku plasthri said...

படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது பங்கி அடித்தார் போல் இருந்தாலோ
என்னுடன் படம் பார்த்த நண்பனின் முகம் அப்படித்தான் இருந்தது.

butterfly Surya said...

தமிழ் மணத்துல இணைச்சாச்சு..??

எத்தனை மைனஸ்ன்னு பார்க்கலாம்..

Unknown said...

என்ன சொல்றீங்க,

படம் பாக்கலாமா வேணாமா?

தர்ஷன் said...

//படத்தில் பாராட்ட படவேண்டிய ஒரு நபர் யார் என்று கேட்டால் நிச்சயமாய் அது ரீமா சென் தான். அதகள படுத்துகிறார்.//

வழிமொழிகிறேன்

//அது போல இரண்டாம் பாதியில் வரும் கிளேடியேட்டர் சீன் செம இழுவை. படம் நெடுகிலும் ரத்தமும் கோரமும் அதிகம்.//

உண்மை எப்படா முடிப்பாங்க என்று ஆனது

//பல சமயங்களில் இது ரிஜமா கற்பனையா என்ற குழப்பத்தை காட்சிக்கு காட்சி ஏற்றிவிட்டு விடுவதால் படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது பங்கி அடித்தார் போல் இருந்தாலோ, பக்கத்தில் உள்ளவரிடம் அது சரி படத்தோட கதை என்ன என்ற கேள்வி கேட்பதையோ நிச்சயம் தவிர்க்க முடியாது.//

அத்தனை குழப்பமாகவா இருக்கிறது.

நேரமிருந்தால் இதையும் வாசியுங்கள் கேபிள் சார்

http://sridharshan.blogspot.com/2010/01/blog-post_2761.html

Prathap Kumar S. said...

இந்த முயற்சியை பாராட்டாமல்விட்டால் இது போன்ற வித்தியாசனமான முயற்சிகள் குறையும் கேபிள் அண்ணே...
திரைக்கதையில் குளறுபடி இருந்தாலும் கதைகளத்திற்கு ஒரு சல்யுட் அடிக்கலாம் தவறில்லை.

Romeoboy said...

தலைவரே பார்த்திபன் நடிப்பை குறை கூறியதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் பார்த்திபன் மற்றும் ரீமாவின் ஆதிக்கமே இருந்தது, அந்த மேட்டர் சீன் ரெண்டு பெரும் போட்டி போட்டு நடித்து இருகிறார்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாருக்கும் இதே உணர்வுதான் தல.. இரண்டாம் பாதியை கொஞ்சம் செப்பனிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.. இது மாதிரியான படங்கள் ஓட வேண்டும்.. பார்ப்போம்..:-)))

gulf-tamilan said...

பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் எப்படி?ஹிட் ஆகுமா?

யாழிபாபா said...

enna ippadi sollitinga
3varusa work kugavathu avangalukkum directorkum konjam nalla vithama solli irukkalame
anyway nan unga vimarsam paarthuttu than padam paarpen
neenga eppo padam edukka poreenga
athukku vimarsanam yaaruuuuuu?

க ரா said...

அண்ணா என்னாதான் இருக்கட்டுமே.. இந்த வேட்டைகாரன் மாதிரி நாலு படம் வர எடத்தில இந்த மாதிரி படம் வரது நல்லது இல்லயா...

butterfly Surya said...

கேபிள். மைனஸ் ஒன்று விழுந்தாச்சு. இன்னொன்று எங்கே..??

பாலா said...

அஞ்சு மணி நேரம் ட்ரைவ் பண்ணினா.. அட்லாண்டாவில் போய் படம் பார்க்கலாம்.

அந்த அளவுக்கு படம் வொர்த்தா சங்கர்? இல்ல டிவிடியில் பார்த்துக்கலாமா??

பாலா said...

இன்னொன்னு தாங்க அது!

க ரா said...

\\ஹாலிவுட் பாலா said...
இன்னொன்னு தாங்க அது!\\
தல நம்ம ஊருல இந்த படம் போட மாட்டங்களா...

யாழிபாபா said...

UNGA VIMASANATHUKKUTHAN MINUS
PADATHUKKU ILLA

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்கள் விமர்சனம் எனக்கு வருத்தத்தையே தருகிறது.

கொஞ்சம் சொதப்பி இருந்தாலும், முயற்சிக்காகப் பாராட்ட வேண்டியதுதானே!!

திங்களன்று அலுவலகம் செல்லும் பொழுது உங்கள் விமர்சனத்தை அன்பர்கள் FWD செய்வதன் மூலன் குறைந்தது 10 ஆயிரம் பேராவது படித்திருப்பார்கள்.

"எங்க கேபிளே சொல்லீட்டாருப்பா.." படம் "சுமார்" தானாமான்னு நண்பர்கள் சொல்வது கேட்க ஆரம்பித்துள்ளது.

பாவம் படக்குழுவினர்.. படத்தை ஓட்டுவதற்கு சன் தொலைக்காட்சி போல ஊடக ஆதரவும் இருக்காது.

//ஆயிரத்தில் ஒருவன் – இருந்திருக்க வேண்டியவன்//

மூன்று வருட உழைப்பு.. ஹூம்.. உங்கள் விமர்சனத்தை செல்வா பார்ப்பாராகா :))

பா.ராஜாராம் said...

so,

இவ்வளவு விஷயங்கள் இருக்கு.புதுசா..

அப்ப,கண்டிப்பா படம் பார்த்துருவோம்...

Mugilan said...

கேபிள்'ஜி உங்களுடைய விமர்சனத்தை பார்த்து சற்று வருத்தமே மிஞ்சுகிறது! படத்தில் கமர்ஷியல் விடயங்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்! ஒரு வெகு ஜன ஊடகத்தில் சங்கத்தமிழ் கொஞ்சுவதை எந்த படத்தில் பார்த்து இருக்கிறீர்கள்? இந்த படத்தில் அதை பார்த்ததுமே உடல் சிலிர்த்தது! அந்த ஒரு காரணத்திற்காகவே இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்! தமிழ் ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது! பார்த்திபனும் ரீமாசென்னும் நிறைவாகவே நடித்து இருக்கின்றார்கள்!

செந்தில் நாதன் Senthil Nathan said...

படம் பார்க்காம நான் கருத்து சொல்ல கூடாது!! அதனால இப்போதைக்கு "no comments". ஒரே ஒரு கமெண்ட்..

//! ஒரு வெகு ஜன ஊடகத்தில் சங்கத்தமிழ் கொஞ்சுவதை எந்த படத்தில் பார்த்து இருக்கிறீர்கள்?//

//இந்த வேட்டைகாரன் மாதிரி நாலு படம் வர எடத்தில இந்த மாதிரி படம் வரது நல்லது இல்லயா..//

யோசிக்க வைக்கும் வினாக்கள்!!

Muthu Pandi said...

Wrong Review. Sorry cable Better Luck Next Time. (Vara Vara Cabliar Aananda Vikatan Pola Aanaram)

தாராபுரத்தான் said...

எங்களை மாதிரி ஆட்களுக்கு இது புதுசுங்க.நல்லா ரசித்து பார்த்தேன்.

naaivaal said...

மொதல்ல ஒரு வணக்கம் கேபிள் சார்.

எனக்கு ஒரு டவுட்டு , நீங்களும் சினிமாவில் இருக்கிங்க
ஆனா வர வர ஒரு படத்த பத்தியும் நல்ல விதமா சொல்ல மாட்றீங்க

படத்துல என்ன குறை கண்டுபிடிக்கலாம்னு படம் பார்த்தா
எல்லா படமும் அப்படித்தானே இருக்கும் .

நீங்க சொல்லற அளவுக்கு படம் ஒன்னும் மோசமில்ல

சி.வேல் said...

வணக்கம்
இரண்டு தமிழ் ஆசிரியர்களை வைத்து தமிழ் வசனம் எழுதிவிட்டால் படம் ஓடிவிடுமா முகில் , தமிழுக்கு ஏன் இந்த சோதனை

சி.வேல் said...

வணக்கம்
இரண்டு தமிழ் ஆசிரியர்களை வைத்து தமிழ் வசனம் எழுதிவிட்டால் படம் ஓடிவிடுமா முகில் , தமிழுக்கு ஏன் இந்த சோதனை

சி.வேல் said...

வணக்கம்
இரண்டு தமிழ் ஆசிரியர்களை வைத்து தமிழ் வசனம் எழுதிவிட்டால் படம் ஓடிவிடுமா முகில் , தமிழுக்கு ஏன் இந்த சோதனை

சி.வேல் said...

வணக்கம்
இரண்டு தமிழ் ஆசிரியர்களை வைத்து தமிழ் வசனம் எழுதிவிட்டால் படம் ஓடிவிடுமா முகில் , தமிழுக்கு ஏன் இந்த சோதனை

Mugilan said...
This comment has been removed by the author.
Mugilan said...

@ சி. வேல் //இரண்டு தமிழ் ஆசிரியர்களை வைத்து தமிழ் வசனம் எழுதிவிட்டால் படம் ஓடிவிடுமா முகில்//

வணக்கம் திரு வேல்
நாம் தமிழ் சினிமா ரசிகர்கள்!
சண்டைகாட்சிக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
பாடலுக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
கவர்ச்சிக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
இன்னும் எதற்கு என்றே தெரியாமல் பல மொக்கை படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
ஏன் முதல்முறையாக தாய்மொழி உணர்வுடன் ஒரு படத்தை ஓட வைக்கக் கூடாது!
படத்தில் சோழர் இனஅழிப்பை பார்க்கும்போது உங்களுக்கு இலங்கையில் நம் இனம் அழியும் உணர்வு வரவில்லையா?
பைந்தமிழ் வசனங்களை கேட்கையில் தமிழுக்கு என்றும் அழிவு கிடையாது என்று மனம் நெகிழவில்லையா?
ஏற்கனேவே அன்பே சிவம் படத்தை தோல்வி அடையச் செய்து, தமிழர்களுக்கு ரசனை கிடையாது என்ற அவப்பெயரை அடைந்தோம். மீண்டும் அந்த தவற்றை செய்ய வேண்டுமா? தமிழில் புது முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டாமா?
மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்! கொள்வோர் கொள்க!

Paleo God said...

ஜி.. ::))))))

naaivaal said...

மொதல்ல ஒரு வணக்கம் கேபிள் சார்.

எனக்கு ஒரு டவுட்டு , நீங்களும் சினிமாவில் இருக்கிங்க
ஆனா வர வர ஒரு படத்த பத்தியும் நல்ல விதமா சொல்ல மாட்றீங்க

படத்துல என்ன குறை கண்டுபிடிக்கலாம்னு படம் பார்த்தா
எல்லா படமும் அப்படித்தானே இருக்கும் .

நீங்க சொல்லற அளவுக்கு படம் ஒன்னும் மோசமில்ல

டைம் இருந்தா எங்களையும் கொஞ்சம் கவனிங்க
http://confusekamal.blogspot.com/

creativemani said...

கேபிள் அண்ணா.. சீக்கிரம் "குட்டி" விமர்சனம் போட்டு மக்களைக் காப்பாத்துங்க.. உட்கார முடியல..

Cable சங்கர் said...

@ முத்து குமார்
:))

@கார்த்திக்
நிச்சயம் தியேட்டரில் போய் பாருங்கள்

@பட்டர்ப்ளை சூர்யா
அப்படி சொல்ல முடியாது..


@மக்கு ப்ளாஸ்திரி

நிறைய பேரின் கருத்து அதுவாகத்தான் இருக்கு. படம் பார்த்து ஏதோ சொல்லவர்றாருனு தெரியுது.. ஆனா என்னன்னு தெரியலைங்கிறதை எங்க பார்த்தாலும் கேட்கபடுகிற் கேள்வியாய் இருக்கிறது..

@பட்ட்ர்ப்ளை சூர்யா
ஒன்னா.. இப்ப கிட்டத்தட்ட பத்து..

@தர்ஷன்

தர்ஷன் குழப்பம் எனக்கில்லை.. நான் இதைவிட குழப்பமான திரைக்கதையுள்ள படஙக்ளை பார்த்திருக்கிறேன். வெகுஜனங்கள் அபிப்ராயத்தைதான் சொல்லியிருக்கிறேன்

நிச்சயம் உங்க பதிவை படிக்கிறேன்

@நாஞ்சில் பிரதாப்
அண்ணே நீங்க விமர்சனத்தை படிக்காமல் எழுதியிருக்கிறீர்கள். செல்வாவை, ரீமாவை, ஆர்ட் டைரக்‌ஷனை, எல்லாவற்றையும் பாராட்டாமல் இருக்க முடியாது. திரைக்கதையில் குளறுபடி இருந்தால் எப்படி அய்யா படம் பார்பவர்களை இழுக்கும்? ஒரு சினிமா என்பது மூன்று மணி நேரம் இயக்குனரும் ஆடியன்சும் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் அதற்கு அவர் சொல்ல நினைப்பதை செல்லுலாயிட் மூலம் ஆடியன்சுடம் பகிர வேண்டும்

Cable சங்கர் said...

!@ரோமியோ
என்னை பொறுத்த வரையில் பல இடங்களில் ஓவர் ஆக்டிங்.. சில இடங்களில் ஓகே.

@கார்த்திகை பாண்டியன்
செப்பனிடவெல்லாம் முடியாது சுமார் 20 நிமிஷம் கட் செய்ய போகிறார்கள். அது இன்னமும்சுத்தம்.


@கல்ப்-த்மிழன்
பொங்கலுக்கு வந்த படங்களில் நல்ல ஓப்பனிங்.. ஆனால் அது சஸ்டெயின் ஆகாது என்கிறது ரிப்போர்ட்

@ராமசாமி கண்ணன்
என்னை பொறுத்த வரைக்கும் எல்லா சினிமாவும் ஒன்றுதான். நல்லது கெட்டது எல்லாம் கிடையாது..

Cable சங்கர் said...

@yalibaba
மூன்று வருஷ உழைப்பு, அது இது என்கிற உட்டாலக்கடிஎல்லாம் நம்மைபோல ஆட்களுக்குததான். மற்ற்வர்களுக்கெல்லாம் நீ எப்படி எடுத்தாலும் அவனுக்கு புரியலைன்னாதூக்கி போட்டுட்டு போயிருவான்.

என் படத்தை விமர்சனம் ஆளா இல்லை.. நிச்சயம் உலக படம் எடுக்க மாட்டேன். கமர்ஷியல் படமே

Unknown said...

SUN Tv-le velai seiringala??????

Cable சங்கர் said...

@பாலா
நோ கமெண்ட்ஸ்

@யாலிபாபா
நன்றிகள் பல..

Cable சங்கர் said...

@செந்தில்நாதன்
//உங்கள் விமர்சனம் எனக்கு வருத்தத்தையே தருகிறது.

கொஞ்சம் சொதப்பி இருந்தாலும், முயற்சிக்காகப் பாராட்ட வேண்டியதுதானே!! //


நீங்களும் விமர்சனத்தை படிக்காமல் எழுதியிருக்கிறீர்கள். கடைசி பஞ்ச் லைனை வைத்து எழுதியிருக்கிறிர்கள். விமர்சனத்தில் ஒவ்வொரு இடத்தில் காட்சிகளை விவரித்து ரசித்து ,ரசித்து பாராட்டியிருக்கிறேன். பிடிக்காததை பற்றி சொல்லியும் இருக்கிறேன்.


//திங்களன்று அலுவலகம் செல்லும் பொழுது உங்கள் விமர்சனத்தை அன்பர்கள் FWD செய்வதன் மூலன் குறைந்தது 10 ஆயிரம் பேராவது படித்திருப்பார்கள்.

"எங்க கேபிளே சொல்லீட்டாருப்பா.." படம் "சுமார்" தானாமான்னு நண்பர்கள் சொல்வது கேட்க ஆரம்பித்துள்ளது.//

விமர்சனங்கள் இந்த அளவிற்கு ரீச் ஆவதற்கான காரணம் பெரும்பாலான மக்களின் எண்ணத்தை ஓட்டி இருப்பதால் தான் என்று தோன்றுகிறது. நிச்சயம் போய் பார்க்க வேண்டும்.

//பாவம் படக்குழுவினர்.. படத்தை ஓட்டுவதற்கு சன் தொலைக்காட்சி போல ஊடக ஆதரவும் இருக்காது.//

நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. ஓட்டுவதற்கு என்று.. சன் தன் நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள ஓட்ட வேண்டிய கட்டாயம்.. இருக்கிறது..

//ஆயிரத்தில் ஒருவன் – இருந்திருக்க வேண்டியவன்//

மூன்று வருட உழைப்பு.. ஹூம்.. உங்கள் விமர்சனத்தை செல்வா //பார்ப்பாராகா :))//

என்ன தான் நான் படத்தை பாராட்டி எழுதியிருந்தாலும் கடைசியாய் எழுதியிருக்கும் பஞ்ச் லைன் தான் விமர்சனமாக நிறைய பேர் கருதியிருக்கிறார்கள். அப்படித்தான் செல்வாவின் படமும்.. என்னதான் படம் முழுக்க, மூன்று வருடம் உழைத்திருந்தாலும்.. கடைசியாய் படம் விட்டு வெளியே வரும் போது.. தோன்றுவிஷயம் தான்.. படத்தின் ரிசல்ட்.

Cable சங்கர் said...

@பா.ராஜாராம்

நிச்சயம் தியேட்டரில்பாருங்க ராஜாராம்

@முகிலன்
நான் கமர்ஷியல் ஆள் தான். என்னுடய ரசிப்புத்தன்மையை நிச்சயம் மற்றவர்களிடம் திணீக்க மாட்டேன். நீங்கள் சொல்லும் தமிழைபற்றியும் பாராட்டியிருக்கிறேன்.

@@செந்தில்நாதன்
நிச்சயம் தியேட்டர்ல பாருங்க..

@முத்துபாண்டி..

நன்றி

@தாராபுரம்
சந்தோஷம்

@நாய்வால்
இருந்தா உண்மைய சொல்லக்கூடாதா..? ஏன் சொல்லவில்லை.. உ.போ.ஒ, ஈரம், பசங்க, என்று சென்ற வருடம் ரசிகர்களாலும், வெகுஜனத்தினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட படஙக்ளை நான் நல்லாருக்குன்னுதானே சொல்லியிருக்கேன்.

@சி.வேல்
அப்படியில்லை வேல். நிச்சயம் அந்த முயற்சியை பாராட்ட வேண்டும். நம் முதாதையர் பேசிய தமிழை மீண்டும் பேச முயற்சி செய்தமைக்கு நிச்சயம் பாராட்டவே வேண்டும்.

@பலாபட்டறை

நன்றி..

@அன்புடன் மணிகண்டன்
:))

ஷண்முகப்ரியன் said...

ஆயிரத்தில் ஒருவன் – இருந்திருக்க வேண்டியவன் //


இது சூப்பர்,ஷங்கர்.

Cable சங்கர் said...

/SUN Tv-le velai seiringala??????//

நீஙக் வேட்டைக்காரன் விமர்சனம் படிக்கலையா.?
:))

Unknown said...

//@முகிலன்
நான் கமர்ஷியல் ஆள் தான். என்னுடய ரசிப்புத்தன்மையை நிச்சயம் மற்றவர்களிடம் திணீக்க மாட்டேன். நீங்கள் சொல்லும் தமிழைபற்றியும் பாராட்டியிருக்கிறேன்.
//

அந்த முகில் வேறு நான் வேறு.. நான் இன்னும் படம் பாக்கலை..

Unknown said...

A commendable effort 4m Selva ,Kudos 2 him.A Milestone in Indian Cinema,But the most worrying thing is that being in Tamilnadu fans are unable to understand the tamil spoken in Second half.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நேற்று என் மைத்துனர் படம் பார்த்துவிட்டு வந்து படம் சூப்பர். ஆனா யாருக்கும் எளிதாக புரியாது என்று சொன்னார்.

Unknown said...

intha padathil varum tamil varthaikal puriya villai endru sonnal.. avar kal muthalil nam ethakaya nam panpadai illanthirikkirrom endru enniparungal

வெற்றி said...

இந்த விமர்சனத்தில் எனக்கு வருத்தமே மிச்சம்..

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது..தமிழில் ஒரு வித்தியாசமான முயற்சி..சில குறைகள் இருக்கலாம்..அதனாலென்ன ?

சங்கர் said...

என்னையும் ரோமியோவையும் சைதை ராஜுக்கு அனுப்பிட்டு, நீங்க எங்க போய் படம் பார்த்தீங்க?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

படத்தை பார்த்துவிடுவது என்றிருக்கிறேன்.

மரா said...

விமர்சனம் அருமை. கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்.

guru said...

கேபிள் அண்ணனுக்கு வணக்கம்,

உங்களுடைய விமர்சனத்தை படித்த பிறகே ஒரு படத்திற்கு செல்லலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பேன்....

இந்த படத்தின் ஹீரோ நீங்கள் சொல்வது போல் ரீமாதான்...அதற்கப்புறம் ஆர்ட் டைரக்டர் சந்தானம் அதற்குப் பிறகுதான் மற்றவர்களெல்லாம்....

படத்தின் இடைவேளையின் பொழுது அனைவரும் பேயறைந்தது போல்தான் இருந்தார்கள்...

ஆனால் இந்த படத்தை பார்த்து விட்டு இறுதியில், பல பேர் என்ன சொல்ல வருகிறார்கள் ஒன்னுமே புரியவில்லைன்னு சொல்லுகிறீர்கள்..

ஆனால் படத்தின் தொடக்கத்திலேயே இது ஒரு கற்பனை என்றே சொல்லிவிட்டார்கள்...அதனால் இறுதியில் சோழ சாம்ராஜ்யம் இன்னும் அழியவில்லை என்று சொல்கிறார்கள்..இதில் இதற்கு மேல் புரிவதற்கு என்ன இருக்கிறது...

என்னை பொருத்தவரை படம் எனக்கு பிடித்துள்ளது..ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன்.....

நர்சிம் said...

//Mugilan said...
@ சி. வேல் //இரண்டு தமிழ் ஆசிரியர்களை வைத்து தமிழ் வசனம் எழுதிவிட்டால் படம் ஓடிவிடுமா முகில்//

வணக்கம் திரு வேல்
நாம் தமிழ் சினிமா ரசிகர்கள்!
சண்டைகாட்சிக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
பாடலுக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
கவர்ச்சிக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
இன்னும் எதற்கு என்றே தெரியாமல் பல மொக்கை படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
ஏன் முதல்முறையாக தாய்மொழி உணர்வுடன் ஒரு படத்தை ஓட வைக்கக் கூடாது!
படத்தில் சோழர் இனஅழிப்பை பார்க்கும்போது உங்களுக்கு இலங்கையில் நம் இனம் அழியும் உணர்வு வரவில்லையா?
பைந்தமிழ் வசனங்களை கேட்கையில் தமிழுக்கு என்றும் அழிவு கிடையாது என்று மனம் நெகிழவில்லையா?
ஏற்கனேவே அன்பே சிவம் படத்தை தோல்வி அடையச் செய்து, தமிழர்களுக்கு ரசனை கிடையாது என்ற அவப்பெயரை அடைந்தோம். மீண்டும் அந்த தவற்றை செய்ய வேண்டுமா? தமிழில் புது முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டாமா?
மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்! கொள்வோர் கொள்க!
//

மிகப்பிடித்திருந்தது பாஸ்.. நல்லா சொல்லி இருக்கீங்க முகிலன்.

பொன் மாலை பொழுது said...

ஒன்று புரிகிறது செல்வராகவன் பழைய இங்க்லீஷ் படங்களை, Ten Commandments and Meckennas Gold போன்ற பழைய படங்களை DVD இல் பார்த்துள்ளான் என்று புரிகிறது இந்த செல்வராகவனுக்கு என்று தயாரிப்பாளர்கள் கிடைத்து விடுவது தமிழ் நாட்டின் கொடுமை.இவன் வெறும் பாலுணர்வு அடிப்படையில் படம் எடுக்கும் கயவன்.

ரவி said...

நீங்களும் படம் எடுக்கத்தானே போறீங்க ? அப்ப வெச்சுக்கறோம்..

:))))

நல்ல முயற்சிகளை பாராட்டுங்கய்யா. !!! கன்ஸ்ரக்டிவ் க்ரிட்டிஸிசம் என்பது வேறு, வெறும் க்ரிட்டிஸிசம் என்பது (அதாவது இப்போது நீங்கள் செய்வது) வேறு.

எப்போதும் குறையே சொல்லிக்கொண்டிருந்தால், காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல ஆகிவிடும்.

Cable சங்கர் said...

/ஆனால் படத்தின் தொடக்கத்திலேயே இது ஒரு கற்பனை என்றே சொல்லிவிட்டார்கள்...அதனால் இறுதியில் சோழ சாம்ராஜ்யம் இன்னும் அழியவில்லை என்று சொல்கிறார்கள்..இதில் இதற்கு மேல் புரிவதற்கு என்ன இருக்கிறது...//

உங்களுக்கு புரிந்தது போல், மற்ற வர்களூக்கு புரியவில்லையே.. அதுதான் குறை.. இன்று விமர்சனம் எழுதியிருக்கும் பல பேர் என்னிடம் கேட்ட கேள்விகளை சொன்னால் அவ்ர்களின் விமர்சனத்தை குறை சொன்னதாகிவிடும்.;0

Cable சங்கர் said...

/நல்ல முயற்சிகளை பாராட்டுங்கய்யா. !!! கன்ஸ்ரக்டிவ் க்ரிட்டிஸிசம் என்பது வேறு, வெறும் க்ரிட்டிஸிசம் என்பது (அதாவது இப்போது நீங்கள் செய்வது) வேறு.
//
கன்ஸ்ரக்டிவ் க்ரிட்டிஸிசம் பற்றி பேச் முதலில் விமர்சனத்தை முழுசாய் படிக்க வேண்டும்.. அதன் பிறகு பேசலாம் ரவி.. இது என் விமர்சனம். நான் எழுதுவது வெறும் க்ரிடிஸிசம் என்பது உஙக்ள விமர்சனம்.. சோ.. ஒப்பீனியன் டிபர்ஸ்.. கடைசியில் யார்ரின் கருத்து பாக்ஸ் ஆபீஸில் எடுபடும் என்று பார்ப்போம். நிச்சயம் நான் எடுக்கும் படத்தை யார் என்ன விமர்சனம் செய்தாலும் நோ.ப்ராப்ளம்.. நீங்கள் செய்யும் போதே அதை பற்றி கவலை படாதவன்..:)

Subha said...

@sukku-mankikkam,
what ever may be, who gives us the right to use disrespectful words against someone...avan ivan????? think about it.

குப்பன்.யாஹூ said...

quickly upload in the net yaa, want to see

Ashok D said...

நாஞ்சில் பிரதாப் மற்றும் முகிலனை வழிமொழிகிறேன்.

கேபிள்ஜி என்னாச்சு வழக்கமா சறுக்கமாட்டிங்க... உடனே எண்டர்ரு கவிதை எழுதி சரிபண்ணுடுங்க.. :)))

வெற்றி said...

உங்கள் விமர்சனத்தின் மூலம் 3 வருட கடின உழைப்பை மூன்றே நிமிடங்களில் தவிடுபொடி ஆக்கி விட்டீர்கள்..

தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகளை கீழே தள்ளி விட உங்களை போல இரண்டு விமர்சகர்கள் போதும்..படத்தின் குறைகளை முதல் நாளே எழுத வேண்டுமென என்ன கட்டாயம்?

BTW இதுவரைக்கும் மைனஸ் வோட்டு போட்டதில்லை..இப்போது போட்டு விட்டேன்..

பதிவை தவிர்த்து ஒரு கேள்வி..மைனஸ் வோட்டின் பயன்கள் என்ன?

வஜ்ரா said...

//
ஏற்கனேவே அன்பே சிவம் படத்தை தோல்வி அடையச் செய்து, தமிழர்களுக்கு ரசனை கிடையாது என்ற அவப்பெயரை அடைந்தோம். மீண்டும் அந்த தவற்றை செய்ய வேண்டுமா? தமிழில் புது முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டாமா?
மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்! கொள்வோர் கொள்க!
//

அன்பே சிவம் போன்ற கம்யூனிஸ்டு கருமாந்திரக்குப்பையெல்லாம் ஹிட் ஆச்சுன்னா தமிழ் நாடு அழிந்துவிட்டதுன்னு அர்த்தம். தமிழகம் அழியவில்லை. அன்பே சிவம் ஓடவில்லை.

தமிழ் வாழுதுன்னா, அது தனித்தமிழ் தருதலைகளால் அல்ல, அவர்களால் தமிழை சாகடிக்க முடியவில்லை என்பதே அர்த்தம்.

உண்மையான கற்பனையுடன் கூடிய படங்கள் நிச்சயம் ஓடும். பேசப்படும். ஒரு டிரெண்ட் செட்டராக அமையும்.

இண்டியானா ஜோன்ஸ், மெக்கன்னாஸ் கோல்ட் மம்மி, பார்த்து இன்ஸ்பிரேஷன் பெற்று செய்யப்படும் படங்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்து, எவ்வளவு சிரமப்பட்டு செட் போட்டு எடுத்தாலும், அது அடுத்தவன் கற்பனை தான். ஒரிஜினாலிட்டி அதில் இல்லை. ஒரிஜினாலிட்டி இல்லாட்டி படம் ஊத்திக்கும்.

வெற்றி said...

உங்கள் பதிவை படிப்பவர்கள் பாமரர்கள் அல்ல..அவர்களுக்கு படம் கண்டிப்பாக புரியும்..

வெற்றி said...

//வஜ்ரா said...
அன்பே சிவம் போன்ற கம்யூனிஸ்டு கருமாந்திரக்குப்பையெல்லாம் ஹிட் ஆச்சுன்னா தமிழ் நாடு அழிந்துவிட்டதுன்னு அர்த்தம்//

உங்களுக்கு புரிந்தது அவ்வளவுதான்..அதற்கும் மேல் அன்பை போதித்த படம் அது..

வெற்றி said...

//குப்பன்.யாஹூ said...

quickly upload in the net yaa, want to see//

தயவு செய்து தியேட்டரில் சென்று படம் பார்க்கவும்..

Unknown said...

கொஞ்சம் கூட ஒத்துக்க மாட்டேன் கேபிள் :(...படத்துல கொஞ்சம் மைனசும் இருந்தாலும், இப்படி ஒரு Genre இருக்குன்னு ஒரு பாதை காமிச்சுருக்கும் செல்வாவ கண்டிப்பா பாராட்டனும்...இப்படி ஒரு படம் ஓடினாத்தான் கொஞ்சம் நல்ல படம் வரும்...இல்லன்னா வேட்டைக்காரன் மாதிரி வரும் குப்பைகளை பாத்து புலம்ப வேண்டிதான் :(

joe vimal said...

முட்டாள்களின் தேசத்தில் இந்த மாதிரி படம் எடுத்த செல்வராகவன் 1000 ல் ஒருவன் .


பின்நவீனத்துவ பிதாமகன்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாப்போம் !!.கேபிள் பன்ச் லைன் சற்றே கடுமையானது இன்னும் பார்க்காதவர்கள் பாதிக்கப்படலாம்-just my thought .

ரீமா சென் ,செல்வா,ராம்ஜி,சந்தானம் ,தயாரிப்பாளர் இவர்கள் அணைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

aayriathil oruvan -attempt to raise tamil cinema's standard .

p.s :no offense to your review

gulf-tamilan said...

//நிச்சயம் தியேட்டரில்பாருங்க ராஜாராம்//

இங்க தியேட்டர் கிடையாது பாஸ்!!!(சவுதி அரேபியா)

அத்திரி said...

அண்ணே படத்த பாத்துட்டு உங்க கிட்ட பேசுறேன்

Yasin said...

Cable Anna, This is the first time am seeing anger in ur replies to the comments. Dont know why.

Am going to see the movie tomorrow for Selvaragavan. BTW, What does
mean for பின்நவீனத்துவm?. Someone please explain. Thanks.

The EMPEROR said...

முட்டாள் தனமான விமர்சனம்.

//எப்போதும் குறையே சொல்லிக்கொண்டிருந்தால், காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல ஆகிவிடும்.//
100% உண்மை

The EMPEROR said...

தயவு செய்து //ஆயிரத்தில் ஒருவன் – இருந்திருக்க வேண்டியவன் // மாத்துங்கள்

க. தங்கமணி பிரபு said...

பொங்கல் வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் சார்! நான் இன்னும் படம் பார்க்கல! விமர்சனம் படிக்க ஆர்வமா வந்தேன்! ஆனா நீங்க முழுக்கதையையும் உங்க கண்ணோட்டத்துல சொல்றது, படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை குறைக்கிறது! உங்க விமர்சனத்தை எதிர்பார்த்து வந்த இடத்துல, இவ்வளவு கதை விவரம் தெரிஞ்சா அந்த படத்தை எப்படி சுவாரஸ்யமா பார்க்கறது? ஏறக்குறைய சில விஷயங்களை கட்டாயப்படுத்தறீங்களோன்னு தோனுது! கதை சொல்றத குறைச்சிக்கலாமுன்னு தோனுது! மற்றபடி உங்க விருப்பம்! வாழ்த்துக்கள்!!

வஜ்ரா said...

//
வெற்றி said...

உங்களுக்கு புரிந்தது அவ்வளவுதான்..அதற்கும் மேல் அன்பை போதித்த படம் அது..
//

அத்தகய போதனையெல்லாம் நாங்கள் புத்தர்கிட்டயோ/காந்திகிட்டயோ கேட்டுக்குறோம்...சினிமாவில போதனை எல்லாம் செஞ்சா வேதனையா இருக்கும்.

போதனை என்ற ரோதனையெல்லாம் செஞ்சா படம் ஊத்திக்கும்...இது தான் அதில் கமல் கற்ற நீதி.

நீங்களும் சீக்கிரம் கற்றுக்கொள்வீர்கள். வாழ்க வழமுடன்.

Anonymous said...

நான் இன்னும் படம் பார்கவில்லை..ஆனால் விமர்சனம் சற்று கடுமையாக இருந்தாற்போல ஒரு தோற்றம். நண்பர்கள் சொன்னது போல இது போன்ற மாற்று முயற்சிகளை உங்கள் போன்றோர் ஊக்குவிக்கும் விதமாகவே விமர்சனம் செயலாம் ( பஞ்ச் முதற்கொண்டு). அயனுக்கு நீங்கள் காட்டிய கனிவை இதற்கும் காட்டி இருக்கலாம் :)

நவீன் said...

வணக்கம் கேபிள் ஜி ,
சமீபமாய் வரும் எந்த ஒரு திரை படத்தின் விமர்சமும் இது போல
கதை சரி இல்லை, திரைக்கதை சரி இல்லை ன்னு சொல்லுறீங்க...
சுமாராய் இருக்கற படத்தையும் விமர்சனம் படிச்சா படத்தை பொய் பக்க வைக்கணும்...
அதை பார்த்து கை கொட்டி பரிகாசம் பண்ண கூடாது...
ஒரு திரைப்படத்தின் உயிர் அதன் திரைக்கதை தான்.. எல்லா
திரை கதை ஆசிரியரும் மிகச்சரியாய் திரைக்கதை அமைத்து விடுவது இல்லை
அமைக்கவும் முடியாது.... இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம் என்று
நாசூக்காய் சுட்டி கட்ட வேண்டியதை... முகத்தில் அடித்தார்ப்போல் கமெண்ட் போடதீங்க
கதை களன் புதிது...
புகைப்பட கலை அருமை...
இராம் அலி ...
பிரகாஷ் மூன்று பாடல்கள் .. சில இடங்களில் அவரின் பின்னணி இசை
ரீமா சென் .. னின் அட்டகாசமான நடிப்பு
பார்த்திபனின் அந்த தளர்ந்த நடை...
எதுவுமே நல்ல இல்லையா...
எழுபது சதம் நல்ல இருக்கற படத்துக்கு
இருந்து இருக்க வேண்டியவன்னு விமர்சனம் எழுதறது ரொம்பவுமே கொடுமை..

எந்த ஒரு முயசியையும் இப்படி கடுமையாய் விமர்சனம் செய்யாதீர்கள்...

அவதார் - என்று ஒரு படம் வந்துச்சு.. ஆஹா ஓஹோ வென பாராட்டி விட்டு
அதில் ஒரு பத்து சதம் முயற்சி செய்யும் நம்மவர்களை பார்த்து கேலி செய்வது
வருத்தம் அளிக்கிறது...
அவர்கள் உயரத்திற்கு அவர்கள் தாண்டுகிறார்கள்.. நம்ம உயரத்திற்கு நம்ம தாண்டுவோம்..

அந்த கடைசி வரி கமெண்ட் எடுத்துருங்க ....

இந்த விமர்சனத்தையும் பாருங்க...

http://www.parisalkaaran.com/2010/01/blog-post_14.html


http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/01/blog-post_14.html

தமிழில்இனிமேலும் இப்படிப்பட்ட முயற்சிகள்வரவேண்டும் என்பதற்காகவே
கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய படம்.

வஜ்ரா said...

//
affable joe said...

முட்டாள்களின் தேசத்தில் இந்த மாதிரி படம் எடுத்த செல்வராகவன் 1000 ல் ஒருவன் .
//

அப்ப அறிவாளி தேசத்துல போயி படம் எடுக்கவேண்டியது தானே...இல்ல இது அறிவாளிகளுக்கான படம் என்று போஸ்டரில் அச்சடிக்கவேண்டியது தானே !

உங்களுக்குத் தேவையான வீடியோ.

கடவுள் பாதி மிருகம் பாதி.. said...

கேபிள் சார் !! ஒரு சில நண்பர்கள் சொன்னது போல தான் சார் நானும் பீல் பண்றேன் .. உங்க விமர்சனங்கள் என்னை போன்ற சினிமாவ பற்றி அதிகம் அறியாதவர்கள் , பாமர ஜனங்க விரும்பற மாதிரி ரொம்ப ஞாயமா இருக்கும் .. முக்கியமா எந்த படத்தையும் பாசிடிவ்வா அப்ரோச் பன்வீங்க .. ஆனா ரீசெண்டா உங்க விமர்சனங்கள் எல்லாம் ரொம்ப ஒரு தலை பட்சமா இருக்கு அதாவது படத்தினுடைய தப்புக்கள் நெறைய சொல்றீங்க.. :( .. இதனால படத்த பாக்கும்போது அந்த சீன்கள் எல்லாமே ஒரு நெகடிவா தான் தெரியுது.. (ப்ளீஸ் vettaikaran is an Exception)
என் நண்பர்கள் கிட்ட படங்களோட விமர்சனம் படிக்க உங்க வெப் அட்ரஸ் தான் கொடுக்கிறேன்.. i will say, if u want Quality and honest picture about a movie then please read cable sankar's review .. ஆனா ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு நீங்க கொஞ்சம் உங்க levela increase பண்ணிகிட்டீங்கனு நெனைக்கறேன்.. அதாவது நீங்க எங்க பார்வைல பாக்காம ஒரு expertise levela எழுதிட்டீங்க .. அதான் lighttaa Feelingu ஆகிடுச்சு.. :(
நா எதுனா தப்பா சொல்லி இருந்த மன்னிச்சுக்குங்க தல ..

joe vimal said...

வஜ்ரா தயவு செய்து இந்தியாவிற்கு திரும்பி வந்து விடாதீர்கள் இங்கு ஏற்கனவே அதிகமாக இருகிறார்கள் மூடர்கள் .

@நவீன் நச் பா

வஜ்ரா said...

//
affable joe said...

வஜ்ரா தயவு செய்து இந்தியாவிற்கு திரும்பி வந்து விடாதீர்கள் இங்கு ஏற்கனவே அதிகமாக இருகிறார்கள் மூடர்கள் .
//

உங்கள் டிக்ஷனரியில் (அகராதியில்) நானெல்லாம் முட்டாளாகவே இருக்க விரும்புகிறேன்.

என்னையும் ஒரு முட்டாள் என்று சர்டிஃபிகேட் கொடுத்ததுக்கு மிக்க நன்றி.

உங்கள் சர்டிஃபிகேட்டை தயவு செய்து ஒரு விழா ஏற்பாடு செய்து கவர்னரை அழைத்து எனக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். தன்யனாவேன்!

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நாங்களும் விமர்சனம் எழுதுவோம்ல ?!

ஆயிரத்தில் ஒருவன் என்னுடைய விமர்சனம் .....

http://desandhiri.blogspot.com/2010/01/blog-post_15.html

Punnakku Moottai said...

கேபிள்,
மற்ற பதிவாளர்கள் தங்கள் விமர்சனத்தில் படம் நன்றாக உள்ளது என்றே எழுதியுள்ளனர். எதற்கும் இன்னொரு முறை படம் பாருங்கள்!!

//ஆனால் படத்தின் தொடக்கத்திலேயே இது ஒரு கற்பனை என்றே சொல்லிவிட்டார்கள்...அதனால் இறுதியில் சோழ சாம்ராஜ்யம் இன்னும் அழியவில்லை என்று சொல்கிறார்கள்..//

இன்னும் சோழர் அழியவில்லை. இது உண்மை!

ஏனென்றால் நான், என் தந்தை, என் மகன் மற்றும் என் தம்பிகள் இன்னும் இருகின்றோம். நாங்கள் இன்றும் எங்கள் பெயர்களில் சோழர்களின் முன் பின் அடைமொழிகளை போடுகிறோம். தற்சமயம் நான் பயன் படுத்துவதில்லை. ('புண்ணாக்கு மூட்டை' என்ற அடைமொழி அல்ல.)

இப்படிக்கு,
பாலா,
நைஜீரியா
+234 708 999 6984

prince said...

Machan vimarsanam romba pramatham unmaya solli kalakkittinga.....hatsof.....ungal pani sirakka vazhthukkkal


entum anbudan
ezhavarashan

Raman Kutty said...

//இது ரிஜமா கற்பனை// ரீமாவா..???

Unknown said...

/SUN Tv-le velai seiringala??????//

நீஙக் வேட்டைக்காரன் விமர்சனம் படிக்கலையா.?
:))
9:59 AM

வெளியிலிருந்து எச்சில் துப்புவது எளிது. ஆனாலும் சொல்கிறேன்.

Yes. I read all comments. But, i can say no one to realize Tamil movie. Here comparative with other languages more than other regional languages and no one to realize actual comparatives. So, i was surprised at your end also. I'm not great fan of any one but i saw every blogger's have their own fan(s) and it turn review or whatever most of not actual reality instead of aggressive.

This movie particularly cant give within linted budget even though Kamal also. So, we must engage him. I said help producer to lift him and you can expect film come soon from other end. Otherwise will see another 10 years for VETAIKARAN, SURA and more.........

கார்க்கிபவா said...

ஆளாலுக்கு மூனு வருஷ உழைப்பு உழைப்புன்னு சொல்றாங்க. எனக்கு புரியல. இயக்குனரின் தவறான திட்ட்மிடுதல்களாலும், ஸ்ரிப்ட்டே தயார் செய்யாம ஷூட்டிங் போனதாலும் ஏற்பட்ட தாமத்ததிற்கு என்ன செய்ய முடியும்? எவ்ளோ கஷ்டப்பட்டா எனக்கு என்ன? அவுட்புட் நல்லா இருக்கா? அதை விட்டு முயற்சியை பாராட்டுனுமாம்.

முதலில் உலக திரைப்பட கலைஞர்களின் பலத்தை புரிந்துக் கொள்வோம். முழு ஸ்க்ரிப்ட்டும் தயார் ஆன உடனே ஷூட்டிங் செல்வோம். அதை விட்டு..

Cable சங்கர் said...

/ஆளாலுக்கு மூனு வருஷ உழைப்பு உழைப்புன்னு சொல்றாங்க. எனக்கு புரியல. இயக்குனரின் தவறான திட்ட்மிடுதல்களாலும், ஸ்ரிப்ட்டே தயார் செய்யாம ஷூட்டிங் போனதாலும் ஏற்பட்ட தாமத்ததிற்கு என்ன செய்ய முடியும்? எவ்ளோ கஷ்டப்பட்டா எனக்கு என்ன? அவுட்புட் நல்லா இருக்கா? அதை விட்டு முயற்சியை பாராட்டுனுமாம்.
//

அவங்க படமெடுத்த காமெடிய விட இது தான் பெரிய காமெடி..

Cable சங்கர் said...

/ஆளாலுக்கு மூனு வருஷ உழைப்பு உழைப்புன்னு சொல்றாங்க. எனக்கு புரியல. இயக்குனரின் தவறான திட்ட்மிடுதல்களாலும், ஸ்ரிப்ட்டே தயார் செய்யாம ஷூட்டிங் போனதாலும் ஏற்பட்ட தாமத்ததிற்கு என்ன செய்ய முடியும்? எவ்ளோ கஷ்டப்பட்டா எனக்கு என்ன? அவுட்புட் நல்லா இருக்கா? அதை விட்டு முயற்சியை பாராட்டுனுமாம்.
//

அவங்க படமெடுத்த காமெடிய விட இது தான் பெரிய காமெடி..

Cable சங்கர் said...

/ஏனென்றால் நான், என் தந்தை, என் மகன் மற்றும் என் தம்பிகள் இன்னும் இருகின்றோம். நாங்கள் இன்றும் எங்கள் பெயர்களில் சோழர்களின் முன் பின் அடைமொழிகளை போடுகிறோம்//

அப்ப கார்த்தி தூக்கிட்டு போனது உங்க ஒரவுக்கார பையன்களா..கொஞ்சம் போன் பண்ணி போடுங்க.. உங்க அட்ரஸை சொல்றதுக்கு.. இல்லாட்டி செகண்ட் பார்ட்டு எடுத்துற போறாங்க..:))

Cable சங்கர் said...

/கேபிள்ஜி என்னாச்சு வழக்கமா சறுக்கமாட்டிங்க... உடனே எண்டர்ரு கவிதை எழுதி சரிபண்ணுடுங்க.. :)))
//

அசோக் யார் சறுக்கியது.. என்னை பொறுத்த வரை வெற்றிதான்..:)))

Kumky said...

சில சமயங்களில் நடிக்கிறேன் பேர்வழி என்று ஆவென வாயை பொளந்து கத்தும் காட்சிகளில் சோழனை நாமே கொல்லலாம் என்று தோன்றுகிறது....

செல்வாவையே கொன்றால் என்ன என்றுதான் தோன்றுகிறது...
இதைவிட மோசமான வனமுறையை பார்க்கமுடியாது....
உச்சக்கட்ட சொதப்பல்.

Ashok D said...

//அசோக் யார் சறுக்கியது.. என்னை பொறுத்த வரை வெற்றிதான்..:)))//

தலைவரே... உண்மைதான்! திரைக்கதைல நம்ம ஆளுங்க கோட்டவிட்டுருங்க... மத்தப்படி ஓக்கே :)

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

தமிழின் மிக சொற்பமான பேண்டஸி திரைப்பட முயற்சிகளில் பாராட்டபட வேண்டிய முயற்சி. நீங்கள் சொல்வது போல செல்வராகவன் முத்திரை பல இடங்களில் இருந்தாலும் - அவை பெண் உடல் சார்ந்த ஒரு பாலியல் அரசியலை முன்வைத்து நகர்தலை தவிர்க்க முடியவில்லை - இது தவறென்றும் சொல்ல முடியாது - உலக சினிமாக்களும் இப்படிதான் முதலில் ஆரம்பித்தன.

பரிசல்காரன் said...

Cable,
எல்லாத் பின்னூட்டத்துக்கும் பதில் சொன்னீங்களான்னு பார்த்தேன்.

இல்ல... முக்கியமா இந்தப் பின்னூட்டத்துக்கு உங்க விரிவான பதிவை, பதிவாவே போடணும்னு கேட்டுக்கறேன்.


//BTW, What does
mean for பின்நவீனத்துவm?. Someone please explain.//

ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

ஒரு நிபந்தனை: கவிதையா போட்டுடாதீங்க.. ஓகே?

பரிசல்காரன் said...

@ கும்க்கி

//இதைவிட மோசமான வனமுறையை பார்க்கமுடியாது....//

இருக்கு பாஸ். ஃபோன்ல கூப்பிடுங்க சொல்றேன்.

Suthershan said...

Padam paravayillai... mosam sollum alavuku illai..

மாயோன் ! said...

படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..

ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..

சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..

கதை இது தான்..

கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..

யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..

அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..

எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?

முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..

பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..

நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..

மாயோன் ! said...

படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..

ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..

சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..

கதை இது தான்..

கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..

யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..

அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..

எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?

முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..

பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..

நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..

Ashok D said...

மாயோன்.. சிறப்பு :)

Sabarinathan Arthanari said...

உங்களுக்கு ஒரு கோரிக்கை
http://sabaritamil.blogspot.com/2010/01/blog-post.html

“இப்படம் தோற்கின் தமிழ் சினிமா உலகத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்விற்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நாம் இன்னும் குருவி, வேட்டைகாரன், வில்லு, பரமசிவன், வரலாறு போன்ற மக்கள் விரும்பும் (?) படங்களை பார்க்க நேரிடும் என்பதை நினைத்து பாருங்கள்.

அண்ணன் கேபிளார் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தாலும், இப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தனி இடுகை இட கேட்டு கொள்கிறேன். சுருக்கமாக சொல்வதெனில் பார்த்திபனுக்கும், செல்வராகவனுக்கும் தமிழக விருது நிச்சயம்; தேசிய விருதுக்கு மிகபிரகாசமான வாய்ப்பு உள்ளது.

D*A*R*A*N said...

பாராட்டப்பட வேண்டிய முயற்சி....நம் மக்களின் முயற்சியை நாம் பாராட்டியே ஆகா வேண்டும்...

vettippayapullaiga said...

sir avatar padathukum nammoda tamil padam viatnam colony (prabhu koundamani)rendukkum kathai ottrumai irukku kavanichingala atha pathi eluthungalen!!!!!!

கிள்ளிவளவன் said...

இந்த விமர்சனத்தை பார்த்தால்ஆயிரத்தில் ஒருவன் நல்ல இருக்கோ இல்லாயோ ஆனால் உங்கள் விமர்சனம் சறுக்கி விட்டது.

ஜோ/Joe said...

என்னுடைய பார்வை இங்கே
http://cdjm.blogspot.com/2010/01/blog-post.html

நாடோடி said...

இந்த ஆனாஒனா படத்தை பற்றி இரண்டு பேர் மட்டுமே உண்மை விமர்சனத்தை கொடுத்துள்ளீர்கள்.. முதலாமவர் கேபிளார், இரண்டாவது நீங்கள் கார்க்கி..

தசாவதார குப்பைக்கும் நம்ம வலையுலக அறிவாளிகள் சொன்ன விமர்சனம் எவ்வளவு கடினமாக உழைச்சிருக்காங்க அதுக்காகவாவது பார்க்கலாம்னு.. இப்பையும் அது repeatuu..என்னமோ போங்க

உழைப்பை பாராட்டுவோம்.. படம் மொக்கை.. வரலாறுகளை திரித்து, விட்டாலாச்சாரியா பாணியில் எதை எதையோ போட்டு குழப்பி நம்மையும் குழப்பி ஏன் ஏன்??.. இந்த கொலைவெறி??

தோழர் மதிமாறன் சொல்ற மாதிரி இப்படி ஒலப்பி படம் எடுப்பதற்கு பதில் கரகாட்டகாரன் போல நம்ம மக்கள் ரசிக்கும் படங்களை கொடுக்கலாமே..

பொதுவா மளையாளிகள்தான் அவங்க படங்களில் நம்மை பாண்டி பாண்டினு அசிங்கப்படுத்துவாங்க.. இந்த செல்வராகவனுக்கு என்ன கடுப்போ பாண்டியர்கள் மேல்.. இந்த படத்தை நம்மாளுக ஆளுக்கொரு அர்த்தம் கற்பிக்கிறாங்க.. உண்மையில செல்வராகவெனுக்கே தெரியாது என்ன சொல்ரோம்னு!! என்னத்தை சொல்ல!!!

வாழ்த்துகள் கேபிளார்.. வெகுசன மக்களின் பார்வையில் விமர்சனம் தொடரட்டும்..

நாடோடி said...

//முதலாமவர் கேபிளார், இரண்டாவது நீங்கள் கார்க்கி..//

மன்னிக்க நீங்கள் என்பது உங்களைதான் குறிக்கிறது

கேபிளார் மற்றும் கார்க்கி... அவருக்கு இட்ட பின்னூட்டம் இது..

nl said...

அந்த தீவின் சோழர்களை நம் நாட்டின் தமிழர்களுக்கு என் உறவுகளுக்கு நிகராக பார்க்க முடிந்தது. ஒரு நிஜக்கதை படமாக்கப் பட்ட உணர்வு. அடக்கப்பட்ட மக்களின் குமுறல் நிச்சயம் பதிவுகளாக்கப் பட வேண்டும், தணிக்கைகளை மீறி என்ற நோக்கத்துக்காக படம் எடுக்கப் பட்டிருக்கிறது, வியாபாரத்துக்காக இல்லை. படம் எடுக்க பணம் வேணும், உங்கள் எல்லாரிடமும் பணம் இருந்தால் கூட இப்படி படம் எடுக்கவோ, விடுதலை வாங்க போராடவோ முடியும் என்றில்லை. சும்மா படம் பாக்காமலே, மாற்றான் கருத்துக்கு மறுப்புரை சொல்லும் இந்த கருத்துசுதந்திரம் பதிவுலகில் தடை செய்யப்பட்ட வேண்டும் முதலில்.

லோகேஷ்வரன் said...

நிச்சயம் இது தவறான விமர்சனம் .......அவர்கள் திரைக்கதையில் சறுக்கவில்லை நீங்கள் தான் சறுக்கி உள்ளிர்கள்...மைனஸ் வோட்டு போட்டதற்கு மன்னிக்கவும் ......

லோகேஷ்வரன் said...

தமிழனை தமிழன் தட்டி கொடுக்கா விட்டாலும் திட்டி கெடுக்காமல் இருந்தாலே போதும். தமிழினம் தன்னாலே தலைநிமிரும்.

Unknown said...

மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்பும் தற்போதைய தமிழகர்களுக்கு இது புரியாத புதிர் போல் இருக்கும்...

மசாலா நிறைந்த படங்களை பார்பவர்களுக்கு இது புரியாது.....!

ஒரு சோழ பேரரசின் எண்ணங்களை அச்சு அசலாக சொல்லிய செல்வாவிற்கு பாராட்டுக்கள்....


நல்ல முயற்சி.....!

Unknown said...

மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்பும் தற்போதைய தமிழகர்களுக்கு இது புரியாத புதிர் போல் இருக்கும்...

மசாலா நிறைந்த படங்களை பார்பவர்களுக்கு இது புரியாது.....!

ஒரு சோழ பேரரசின் எண்ணங்களை அச்சு அசலாக சொல்லிய செல்வாவிற்கு பாராட்டுக்கள்....


நல்ல முயற்சி.....!

Unknown said...

மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்பும் தற்போதைய தமிழகர்களுக்கு இது புரியாத புதிர் போல் இருக்கும்...

மசாலா நிறைந்த படங்களை பார்பவர்களுக்கு இது புரியாது.....!

ஒரு சோழ பேரரசின் எண்ணங்களை அச்சு அசலாக சொல்லிய செல்வாவிற்கு பாராட்டுக்கள்....


நல்ல முயற்சி.....!

Unknown said...

மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்பும் தற்போதைய தமிழகர்களுக்கு இது புரியாத புதிர் போல் இருக்கும்...

மசாலா நிறைந்த படங்களை பார்பவர்களுக்கு இது புரியாது.....!

ஒரு சோழ பேரரசின் எண்ணங்களை அச்சு அசலாக சொல்லிய செல்வாவிற்கு பாராட்டுக்கள்....


நல்ல முயற்சி.....!

Unknown said...

மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்பும் தற்போதைய தமிழகர்களுக்கு இது புரியாத புதிர் போல் இருக்கும்...

மசாலா நிறைந்த படங்களை பார்பவர்களுக்கு இது புரியாது.....!

ஒரு சோழ பேரரசின் எண்ணங்களை அச்சு அசலாக சொல்லிய செல்வாவிற்கு பாராட்டுக்கள்....

நல்ல முயற்சி.....!

chosenone said...

முதலில் அவர் என்ன எடுக்க நினைத்தாரோ அதிலிருந்து சற்று நகர்ந்து வேறொரு திசையில் பயணிக்கிறார்….
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் செல்வா ,ஷங்கர் ரேஞ்சுக்கு இறங்கி இருப்பது தான்.

ஷங்கர் பொருட்செலவில் பிரமாண்டம் காட்டுவார்.
{{உதாரணம் :ஒரு கோடியில் ஒரே ஒரு ஜட்டி காய்கிறது .அதே கோடியில் 100-150 ஜட்டிகள் கலர்-கலராக டிசைன் டிசைன் ஆக தலை கீழாக தொங்க போட்டால் அவருக்கு அது தான் பிரமாண்டம் .}
அனால் செல்வாவோ இதில் திரைகதை பிரமாண்டம் ,கற்பனயில் பிரமாண்டம் ,இசையில் பிரமாண்டம் பட்ஜெட்டில் பிரமாண்டம்,கவர்ச்சியில் பிரமாண்டம்,தூய தமிழில் பிரமாண்டம் ,ஆங்கிலத்தில் சண்டை போட்டு தூசனம் பேசுவதிலும் பிரமாண்டம்… என்று தமிழ் மக்களுக்கு ஒரு பிரமாண்ட திரை விருந்தை தருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்… அனால் என்ன பயன் ? எத்துணையோ பேருடைய உழைப்பும்,பொருட்செலவும்,காலமும்…. பிரமாண்டம் என்ற வார்த்தை மாயைக்குள் சிக்குன்று ,…தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இருக்க வேண்டிய படைப்பு, பாதி செய்து முடித்த மன்பானயாக காட்சியளிக்கிறது.
ஒரு unique creationகாக உழைக்காமல் நான எவ்வளவு பெரிய டைரக்டர் என்று காட்டுவதற்காகவே சம்மந்தமே இல்லாமல் பல காட்சிகள் கோர்த்து,அந்த ஒவ்வொரு காட்சிளையும் பிரமாண்டம் காட்டுவதற்காக என்னென்னமோ செய்கிறார். என்னை பொறுத்தவரையில் படத்தின் இரண்டாவது பாதி “குட்டி குட்டி பிரமாண்ட குறும்படங்களின் தொகுப்பே” அன்றி ஒரு பிரமாண்ட திரைப்படம் என்று சொல்ல முடியாது.

மொத்தத்தில் தமிழ் சினிமாவின் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கவேண்டியவன் ,,,பத்தோடு பதினொன்றாக வீதியில் நிற்கிறான் .

Indian said...

//ஒரு சோழ பேரரசின் எண்ணங்களை அச்சு அசலாக சொல்லிய செல்வாவிற்கு பாராட்டுக்கள்....
//

Public attempting to learn it's history through movie (Aayirathil Oruvan) and novel (Ponniyin Selvan) is a matter of concern.

What is the use of Selva stating that this movie is a "work of fiction"?

I hope this alarming situation is understood by everyone, especially the creators who sought to make "fantasy".

Indian said...

Just another thought.

Some are talking about 3000 crore vs 30 crore disparity. That Selva would have come up with a superior product had he got 3000 crore for his disposal.

Alleged Avatar cost = 300 million USD = 30 crore USD

Alleged A.O cost = 30 crore INR = 300 million INR

Both of them spend the money in their local curreny

Jim Cameron didn't have the luxury of blowing his greenback in inexpensive locations like India.

Similarly, Selva didn't burnt his budget in expensive locations.

I guess they indeed had a level-playing field in this regard.

Also, Cameron didn't cast
"popular stars" to add to his production cost. The savings he would have used in CG and other important areas. Think of A.O without these star casts.

Hence this comparison/justification may not be tenable.

நிராதன் said...

There are 4 songs totally included in film. So u havnt u seen clearly. Am i right??

ARV Loshan said...

தனது 16 ஆவது கிராண்ட் ஸ்லாமை சட்டையில் பட்ட தூசைத் தட்டி விடுவது போல அவ்வளவு லாவகமாக, பிரித்தானிய வீரர் அண்டி மறேயைத் தோற்கடித்து தன வசப்படுத்தினார் பெடரர்.

கேபிளார், உங்கள் திரை விமர்சனங்களை எப்போதுமே ரசிப்பவன் நான். நீங்கள் சொல்லும் குறை,நிறைகள் பொதுவாகவே என் மனவோட்டத்துக்கு அமைவதுண்டு.
ஆயிரத்தில் ஒருவனிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் சரியாகவே தோன்றினாலும், இரண்டாம் பாதியில் வருகின்ற காட்சியமைப்புக்களின் பின்னனிகளைப் பற்றி வேண்டுமென்றே தவற விட்டீர்களா? அல்லது நீங்கள் அந்த எண்ணத்தில் யோசிக்கவில்லையா?
சாதாரணர் பலருக்கே புரிந்த விஷயம் உங்களுக்கு புரியாதது அல்லது நீங்கள் எழுதாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இப்படிப்பட்ட முயற்சிகளைப் பாராட்டுவது சரி.. கொஞ்சம் இவற்றை மக்களிடம் சேர்க்கவேண்டியது வலையுலக விமர்சகர்களில் தலைமையானவர் என்பதால் உங்கள் பொறுப்பில்லையா?

//affable joe said...
முட்டாள்களின் தேசத்தில் இந்த மாதிரி படம் எடுத்த செல்வராகவன் 1000 ல் ஒருவன் .


பின்நவீனத்துவ பிதாமகன்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாப்போம் !!.கேபிள் பன்ச் லைன் சற்றே கடுமையானது இன்னும் பார்க்காதவர்கள் பாதிக்கப்படலாம்-just my thought .

ரீமா சென் ,செல்வா,ராம்ஜி,சந்தானம் ,தயாரிப்பாளர் இவர்கள் அணைவருக்கும் என் வாழ்த்துக்கள்.//

நச்..//Mugilan said...

@ சி. வேல் //இரண்டு தமிழ் ஆசிரியர்களை வைத்து தமிழ் வசனம் எழுதிவிட்டால் படம் ஓடிவிடுமா முகில்//

வணக்கம் திரு வேல்
நாம் தமிழ் சினிமா ரசிகர்கள்!
சண்டைகாட்சிக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
பாடலுக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
கவர்ச்சிக்காக படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
இன்னும் எதற்கு என்றே தெரியாமல் பல மொக்கை படங்களை ஓட வைத்து இருக்கின்றோம்!
ஏன் முதல்முறையாக தாய்மொழி உணர்வுடன் ஒரு படத்தை ஓட வைக்கக் கூடாது!
படத்தில் சோழர் இனஅழிப்பை பார்க்கும்போது உங்களுக்கு இலங்கையில் நம் இனம் அழியும் உணர்வு வரவில்லையா?
பைந்தமிழ் வசனங்களை கேட்கையில் தமிழுக்கு என்றும் அழிவு கிடையாது என்று மனம் நெகிழவில்லையா?
ஏற்கனேவே அன்பே சிவம் படத்தை தோல்வி அடையச் செய்து, தமிழர்களுக்கு ரசனை கிடையாது என்ற அவப்பெயரை அடைந்தோம். மீண்டும் அந்த தவற்றை செய்ய வேண்டுமா? தமிழில் புது முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டாமா?
மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்! கொள்வோர் கொள்க!

6//
அருமை முகிலன்.. நானும் உங்கள் கட்சியே..
இந்தப் படம் புரியவில்லை,பிடிக்கவில்லை, இதை விட நிகழ்காலப் படங்கள் பெட்டர் என்று சொல்பவர்களை குருவி,குசேலன்,வீராசாமி படங்களை தொடர்ந்து பார்க்கசொல்லி தண்டனை கொடுக்கவேண்டும்

ARV Loshan said...

எனது பின்னூட்டத்தில் என்னுடைய அடுத்த பதிவின் சில வசனங்களும் வந்துவிட்டன.. சோ சாரி.. ;)