Thottal Thodarum

Feb 7, 2018

கொத்து பரோட்டா 2.0-24

கொத்து பரோட்டா 2.0-54
Saheb Bibi Golaam
பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விமர்சகர், இயக்குனர் என பன் முகம் கொண்ட ப்ரீதம் டி. குப்தாவின் இயக்கத்தில் 2016ல் வெளிவந்த வங்காள மொழிப் படம். இவருடய முந்தைய படமான ”பாஞ்ச் அத்யாய்” கமர்ஷியல் வெற்றியையும், விமர்சனகளிடையேவும் மிகுந்த வரவேற்பை பெற்ற ரொமாண்டிக் ஜெனர் படம். இது முற்றிலும் வேறான கதைக்களன். ஜிம்மி, ரிட்டையர்ட் போலீஸ். தற்போதைய தொழில் காண்ட்ரேக்ட் கில்லர். ஜெயா ஒர் குடும்பத்தலைவி. ஆனால் பார்ட் டைம் விபச்சாரி. ஜிகோ டாக்ஸி ட்ரைவர். அவனுக்கு கல்லூரி மாணவியான ரூமிக்கும் காதல். ஜிம்மிக்கு ஒரு  காண்ட்ரேக்ட் வருகிறது. அரசியல்வாதியின் பையனான அவனை பாலோ செய்கிறான். அவனது நடவடிக்கைகளை கண்காணித்து, அவன் தினமும் ஒரு ஃபேமிலி டைப் விபச்சார விடுதிக்கு செல்கிறதை கண்டுபிடிக்கிறான். ஒரு தினத்தை குறித்து அவனை கொல்ல தயாராகிறான். அந்த தினமும் வருகிறது. துப்பாக்கியை எடுத்து குறிபார்த்து தனக்கு முதுகு காட்டி நிற்கிறவனை சுடுகிறான். அவனை அணைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முகம் க்ளோஸப்பிற்கு போக, அவளின் கதை ஓப்பன் ஆகிறது.

ஜெயா ஒரு பெண் குழந்தைக்கு தாய். மொனாட்டனியான வாழ்க்கை, மாமியார். கண்டு கொள்ளாத கணவன் என விரக்தியின் எல்லையில் பயணித்துக் கொண்டிருக்கும் டிபிக்கல் மிடில் க்ளாஸ் பெண். மதியம் பெண்கள் குழுவில் பேசிக் கொண்டிருக்கும் போது தங்களது செக்ஸுவல் மற்றும் பணத்தேவைகளுக்காக புருஷனை நம்பாமல் சந்தோஷமாய் இருக்க பல வழிகள் இருப்பதாய் உடனிருப்பவர்கள் சொல்ல, எப்படி என்று ஆர்வம் அவளுள் கிளறப்பட, தினமும் ஆபீஸ் போவது போல, மேடம் வீடு இருப்பதாகவும், பேமிலி பெண்களை விரும்புகிறவர்கள் அங்கே வருவார்கள். அவர்களுடன் நாம் சந்தோஷமாகவும் இருந்து கொண்டு பணமும் சம்பாதிக்கலாம் என்று சொல்ல, சலனப்பட ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் கணவனின் நடவடிக்கைக்கு காரணம் அவனின் கே உறவு என்பதை தெரிந்து கொண்டு, கிட்டத்தட்ட அவனை பழிவாங்கும் உணர்வுடன் அந்த விடுதியில் சேர்கிறான். தன்னுடய பேண்டஸிக்களை அடைய வாழ ஆரம்பிக்கிறாள். அவளை அணைத்தவன் தான் குண்டடிப்படுகிறான்.

தான் தப்பானவனை சுட்டுவிட்டோம் என்று தெரிகிறது ஜிம்மிக்கு. அவனை காப்பாற்ற தூக்கிக் கொண்டு ஓடுகிறான். ஜிக்கோ டாக்ஸி ட்ரைவர். இளைஞன். அந்த விடுதிக்கு வாடிக்கையாளரை கொண்டு வருகிறவன். அவனுக்கு ஜெயாவுக்குமிடையே ஏதுவுமில்லை என்றாலும் ஒர் சின்ன பாச பிணைப்பு இருக்கிறது. ஒர் நள்ளிரவில் மிகு போதையில் டாக்ஸியில் ஏறும் ரூமியை ட்ராப் செய்கிறான்.  அவர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாய் நெருக்கம் உண்டாகிறது. தாய் தந்தை விவாகரத்துக்கு பிறகு தாந்தொன்றியாய் சுற்றியலையும் அவளுக்கு இவனின் இணக்கமான அன்பு பிடித்து காதல் வயப்படுகிறாள். தன் தந்தையிடம் கூட சொல்கிறான். அவனை சந்திக்க அவளுடய அப்பா தேதி கொடுக்க,  ஜிக்கோவை வரச்சொல்லி காரை எடுக்கிறாள். அதற்கு பிறகு நடக்கும் சம்பவம் தான் இப்படத்தின் கோர் பாயிண்ட். அந்த துப்பாக்கி சூடு மீட்டிங் பாயிண்ட்.  விறுவிறு திரைக்கதை. நல்ல நடிப்பு. சிறப்பான டெக்னிக்கல் விஷயங்கள். என இண்ட்ரஸ்டிங் பொக்கே.  டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Revelation
ஆங்கிலப் பெயர் என்றாலும் தமிழ் படம் தான். இண்டிபெண்டண்ட் திரைபடம். இம்மாதிரியான திரைப்படங்களுக்கு டிஜிட்டல் மீடியம் ஒர் வரப்பிரசாதம். திரையரங்குகளில் இம்மாதிரியான படங்களுக்கு நிச்சயம் கமர்ஷியல் வரவேற்பு கிடைக்காத நிலையில் அங்கே ரிலீஸ் செய்வதை விட, இம்மாதிரியான ப்ளாட்பார்மில் வெளியிட்டு வெற்றி பெருவது சந்தோஷமான விஷயம். பூஷன் பிலிம் பெஸ்டிவலில் திரையிட தெரிவு செய்யப்பட்ட படம்.

நடுத்தர வயது மனோகர் தன் பாரலைஸ்ட் தாயுடன் கொல்கத்தாவுக்கு குடி வரும் தமிழன். அதே வீட்டில் சேகர் – ஷோபா தம்பதியினர் வசிக்கிறார்கள். தமிழர்கள். சேகர் ஒர் ஆங்கில பத்திரிக்கையில் நிருபராய் வேலை செய்கிறான். மனோகரின் தாயை பார்த்துக் கொள்ள ஷோபாவிடம் உதவி கேட்க, அவள் தானே பார்த்துக் கொள்வதாய் சொல்கிறாள். மனோகர், ஷோபாவிற்குமான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் வளர ஆர்மபிக்க, சேகரின் பத்திரிக்கை ஆசிரியர் திவ்யா எனும் புதிய இண்டர்னுடன் சேர்ந்து கொல்கத்தாவில் உள்ள பேண்ட் களைப் பற்றி ஆர்டிக்கள் எழுத சொல்ல, அவர்கள் இருவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள். அவர்களின் நெருக்கமும் கொஞ்சம் கொஞ்சமாய்  நெருக்கமாகிறது. அவளுக்கு 60 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவும் அளவிற்கு. இரண்டு ஜோடிகளின் நெருக்கமும் உடல் ரீதியாய் நெருக்கமாக முனைய, அங்கே சேகரும், இங்கே மனோகரும் தவிர்க்கிறார்கள்.  தவிர்ப்பதற்கான காரணம்? சேகர், ஷோபா தம்பதிகளிடையே இருக்கும் வெறுமைக்கான காரணம்?. மனோகர் ஷோபாவை இக்னோர் செய்வதற்கான காரணம் போன்ற எல்லாவற்றிக்கும் விடை க்ளைமேக்ஸில் வெளிப்படுகிறது.

சேத்தனை பல படங்களில் சீரியல்களில் நாம் பார்த்திருப்போம். நிஜமாகவே அவரின் திறமைக்கு சரியான தீனிப் போட்டிருக்கும் படம். லஷ்மிப்பிரியாவின் மிக இயல்பான நடிப்பு இதில் பெரிய ப்ளஸ்.

ஆரம்பக் காட்சிகளிலிருந்து இறுதி வரை இறுக்கமான, மெதுவான லெந்தி விஷுவல்கள், கமர்ஷியல் பட ஸ்டைல் எடிட்டிங் இல்லாமல், நிறுத்தி நிதானமாய் போவது. மிகக் குறைந்த வசனங்களில் காட்சிகளின் கனத்தை, அது கொடுக்க வேண்டிய  உணர்வை சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் சேத்தன், லஷ்மி ஆகியோரின் நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பது, மிக மெல்லிய ரீ ரிக்கார்டிங். மிக இயல்பான கொல்கத்தாவை விஷுவலாக்கியிருப்பது. படம் நெடுக மெதுவான போக்கை வேண்டுமென்றே வைத்திருப்பதும்,  யாருக்கு என்ன பிரச்சனை என்பது வெளிப்படும் போது அந்த மெதுத்தன்மை நியாயமாகப்படுகிற சாமர்த்தியம். துரோகம், குற்றவுணர்ச்சி, இந்திய திருமண உறவு, போன்றவற்றை மிக திறமையாய் கையாண்டிருப்பது என இயக்குனர் விஜய் ஜெயபால் அழுத்தமாய் முத்திரை பதித்துள்ளார். நிச்சயம் கமர்ஷியல் பட விரும்பிகளுக்கான பரிந்துரையில்லை. நல்ல படங்களை விரும்புகிறவர்களுக்கான பரிந்துரை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரேடியோபெட்டி
இந்தப்படமும் 2015ஆம் ஆண்டு பூஷன் பிலிம் பெஸ்டிவலிலும், இண்டியன் பனோரமாவிலும், மாட்ரிட்டிலும் தெரிவான இண்டிப்பெண்டண்ட் தமிழ்ப்படம். உலக சினிமாக்களில் மூத்தவர்களின் வாழ்க்கையை எவ்வளவு அழகாய் படமாக்குகிறார்கள். இதைபோல எல்லாம் எங்கே நம்மூரில் என்று பொலம்பிக் கொண்டிருக்காமல் 70 வயது முதியவரின் வாழ்க்கையைப் பற்றி படமெடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி விஸ்வநாத்.

70 வயது முதியவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுடய ஒரே மகன் தனிக்குடித்தனமிருக்க, முதியவர் ஒரு கம்பெனியில் வேலைக்கு போய்விட்டு அதில் வரும் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்க, அவரின் ஒரே எண்டர்டெயின்மெண்ட் வால்வு ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதுதான். அது அவரின் அப்பா அவருக்கு கொடுத்தது. அதில் அவர் தன் அப்பாவை பார்த்துக் கொண்டிருப்பதாய் சொல்கிறவர். தன் இயலாமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டின் மின்சார செலவுக்கான காரணம் ரேடியோ பெட்டிதான் என்று வாக்குவாதம் செய்ய, ரேடியோ பெட்டியை தூக்கிப் போட்டு உடைக்கிறான் மகன். ரேடியோ பெட்டி போனதில் இருந்து வாழ்க்கையின் எல்லா சந்தோஷத்தையும் இழந்த்வராகிறார். ட்ரான்ஸிட்டர் எல்லாம் அவருக்கு செட்டாகமல் போக, மெல்ல அவரின் காதுக்குள் ரேடியோ ட்யூனாக ஆர்மபிக்கிறது. அவருக்குள் ரேடியோ கேட்க ஆரம்பிக்கிறது. அதனால் வரும் பிரச்சனைக்கு விடை என்ன என்பதுதான் கதை.

வயதான காலத்தில் பார்த்து பார்த்து வளர்த்த மகனே அவர்களை கைவிடுவது. ஒவ்வொரு பைசாவுக்கும் அவனை எதிர்பார்ப்பது. முதியவர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் ரியாக்ட் செய்யும் மகன்களின் நிலை. அதனால் அவர்கள் படும் அவதி என மிக அழகாய் சொல்லப்பட்டுள்ள படம். முதியவராய் நடித்த லஷ்மணனின் நடிப்பு மிக அருமை. கொஞ்சம் மெதுவாக செல்லும் படம் தான் என்றாலும் நிச்சயம் ரசிக்கத்தக்க படைப்பே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Feb 6, 2018

சினிமா வியாபாரம் - 4 - 7 ஏரியாக்கள் 9 ஆன கதை.


பைரஸியும் சினிமாவும் -4

பைரஸியும் சினிமாவும் -3
டிஜிட்டலானாதால் இருக்கும் பாதுகாப்பின்மை ஒரு ரிஸ்க் என்றாலும், பெரும்பாலானவர்களின் அடிப்படை நேர்மையினால் பைரஸிக்கு துணை போகாவிட்டாலும், ஒரு சில படங்களின் வீடியோக்கள், ஏன் சில படமே வெளிவந்ததற்கான காரணம் அங்கிருந்த மனசாட்சி இல்லாத ஒரு சில அரைவேக்காட்டு பண தேவை மிகுந்த அப்ரசண்டிகள் தான் காரணம்.

முன்பெல்லாம் வெளிநாட்டு வீடியோக்கள் மூலம் வந்ததைப் போல டிஜிட்டல் கேமராக்களின் வளர்ச்சி இன்றைக்கு மொபைலிலேயே அட்டகாச படமெடுக்கும் வசதி வரை வந்து விட்டதால் சுலபமாய் போய்விட்டது. தியேட்டர் ஆப்பரேட்டர்களின் உதவியுடன் கேமரா பிரிண்டுகள் வெளிவர ஆரம்பித்தது. பல தியேட்டர்களை ஒரிஜினல் ஓனர்கள் நடத்தாமல் லீசுக்கு விட்டு விட்டு மாச காசு மட்டுமே வாங்கிக் கொண்டிருக்க, பெரும்பாலான பி, சி செண்டர் தியேட்ட்ரகளின் ஓனர்கள் தியேட்டர் மேனேஜரும், ஆப்பரேட்டருமாகவே இருக்க, சொற்ப சம்பளம், இவர்களின் தேவையை அதிகரித்திருக்க, லம்பாய் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கிடைக்கக் கூடிய வாய்ப்பை யார் வேண்டாமென்று சொல்லுவார்கள்?. இப்படியாக தியேட்டர் பிரிண்டுகள் வர ஆரம்பிக்க, க்யூப், யூ எப்.ஒ போன்ற நிறுவனங்கள் எந்த தியேட்டரிலிருந்து படமெடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க, சாப்ட்வேரெல்லாம் வைத்திருந்தாலும் அதை கண்டுபிடிக்க, கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாவது ஆகிவிடுகிறது. சூப்பர் ஹிட் படமே மூணு வாரத்துக்கு மேல் ஓடுவதில்லை என்பதால் இனிமே யார் பைர்ஸி எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன என்கிற மனநிலையில் தயாரிப்பாளர் போய்விடுகிறார்கள்.

இதுதான் பைரஸிக்காரர்களுக்கு சாதகமாய் ஆகிப் போனது. 24 படம் பைரஸி வெளியான போது அதன் தயாரிப்பாளர் இந்த முறையில் எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்று கண்டுபிடித்தார். பிவிஆர் பெங்களூர் என்று தெரியவந்தும், அந்த நிறுவனத்தின் மேல் எந்தவிதமான ஆக்‌ஷனுக்கு எடுக்கப்படவில்லை. அந்த நிறுவனமோ ஏதோ போனால் போகட்டும் என்று வருத்தக் கடிதம் மட்டுமே கொடுத்தது. இவர்கள் மீது பாயாத சட்டம் எப்படி சின்ன தியேட்டர்காரர்கள் மீது பாயும்?. நாளை அதே தியேட்டரில் இவர்களின் படத்தை மீண்டும் வெளியிட நின்றுதானே ஆக வேண்டுமென்ற காரணத்தினாலும், பெரும்பாலான படங்கள் ஓடுவதில்லை என்பதாலும்  லோக்கல் ஸ்டேஷனில் ஆப்பரேட்டரின் கம்ப்ளெயிண்ட் கொடுப்பதோடு மட்டும் பைரஸிக்காக எடுத்த முயற்சியாய் போய்விடுகிற நிலை தான் இன்றைக்கும்.

தியேட்டர் பிரிண்டெல்லாம் மீறி உடனடி பிரிண்டுகள் வெளிநாட்டு உரிமை கொடுக்கப்படுமிடத்திலிருந்தே வர ஆரம்பித்தது. ஏற்கனவே சொன்னபடி வீடியோ  கேசட் காலத்திலேயே இந்த பிரச்சனை இருந்தது. அது இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான சின்ன படங்கள் எப்.எம்.எஸ் விற்பனையாகும் போதே வெளிநாட்டு தியேட்டர், வீடியோ, சாட்டிலைட், இண்டர்நெட் என அத்துனை உரிமைகளையும் அடியில் கண்ட சொத்துக்கள் அத்தனையும் என்கிற ரீதியில் எழுதி வாங்கிக் கொண்டு போய்விடுவதால் படம் வெளியான அன்றைக்கே அவர்கள் டிவீடி போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் முன்பெல்லாம் அங்கிருந்து ப்ரிண்ட் போட்டு சென்னைக்கு அனுப்புவார்கள் ஆனால் டெக்னாலஜியும் அதற்கான செலவுகளும் அதிகப்படியாவதால் ரைட்ஸ் வாங்கிய அன்றே ஹார்ட் டிஸ்கை வெளிநாட்டுக்கு அனுப்பவதற்கு முன்னாலேயே இங்கேயே மாஸ்டர் காப்பி எடுத்து விற்பனைக்கு கொடுத்துவிட்டுத்தான் ப்ளைட் ஏறுகிறார்கள். அங்கே விற்பது தனி. பல சின்ன படங்கள் சொன்ன தேதியில் வெளியாகாமல் தள்ளிப் போய்விடும் நேரத்தில் இம்மாதிரியான முறையில் படங்கள் வெளியான கதை அதிகம். படமும் வெளியே தெரியாத காரணத்தால், பைரஸியும் வந்தது தெரியாமல் போய் விடும்.


இணையத்தில் அபார வளர்ச்சி சிடி, டிவிடி வியாபாரத்தை மொத்தமாய் அழித்தது. இன்றைக்கும் டிவிடியில் படம் பார்க்கிறார்கள் என்றும், காப்பி போட்டவர்களை கைது செய்ததாய் தகவல்கள் வந்தாலும், பைரஸி மட்டும் குறையவேயில்லை. இணையம் இவர்களை இன்னமும் ரகசியமாக்கி வியாபாரத்தை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் வெளிநாட்டு உரிமை தான் என்று சொல்லலாம். பெரும்பாலான பெரிய படங்கள் இங்கே வெளியாகும் நாளுக்கு முதல் நாள் இரவே வெளியாகிறது. அப்படி வெளியாகும் படங்கள் உடனடியாய் தியேட்டர் பிரிண்டுகள் டிஜிட்டல் கேமராக்களால் எடுக்கப்பட்டு டோரண்டுகளில் அப்லோட் செய்யப்படுகிறது. ரெண்டொரு நாளில் சின்ன படமாய் இருந்தால் ஹெச்டி பிரிண்டும், பெரிய படமாய் இருந்தால்  ஒரு வாரத்தில் தரமான ஹைடெபனிஷன் ப்ரிண்டுகளும் வந்துவிடுகிறது. நீங்கள் வெளிநாட்டு உரிமையை விற்பதால்தானே வருகிறது என்று கேட்பீர்கள். பட் யோசித்து பாருங்கள் பல 50 -60 கோடி போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சுமார் 10-15 கோடி வரை வெளிநாட்டு உரிமையில் கிடைக்கும் எனும் போது இந்த பைரஸியெல்லாம் அவர்கள் கண்ணுக்கே தெரியாது. ஆனால் சொல்லலாம் பைரஸி இல்லையென்றால் இன்னமும் அதிகம் சம்பாதிக்கலாமே என்று?  ஒரு வேளை ஓடாமல் போய்விட்டால் முன்பு வாங்க இருந்த விலையில் பத்து சதவிகிதம் கூட வியாபாரம் ஆகாது என்பதால் அந்த ரிஸ்க் எடுக்க யாரும் தயாராய் இல்லை? அப்படியென்றால் வெளிநாட்டு உரிமைதான் பெரிய பிரச்சனையா? அங்கே யார் இதை தொழிலாய் செய்கிறார்கள்? இதனால் இவர்களுக்கு என்ன லாபம்? என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..