Thottal Thodarum

Oct 28, 2017

கொத்து பரோட்டா 2.0-44

கொத்து பரோட்டா 2.0-45
மூன்றே வாரத்தில் தமிழக சேட்டிலைட் சேனல்களின் ஜிஆர்.பியில் இரண்டாம் இடம் பிக் பாஸினால். ஊரே கண்டுகொள்ளாமல் இருந்த ஓவியாவுக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு. இன்னொரு புறம், ஊரே நம்ம ஊரு தமிழச்சி என்று கொண்டாடிய ஜூலி இந்த நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்தே அவரை பிடிக்காமல் போனவர்கள் அதிகம். அது போல போன வாரம் கோபிநாத்தின் விவாத நிகழ்ச்சியில் கல்யாணத்திற்கு முன்னான காதலை சொல்வது நல்லதா இல்லை சொல்லாமல் விடுவது நல்லதா? என்று பரபரப்பாக போனது. நான் சொல்லிடுவேன்,சொல்லியிருக்கேன் என்று சொன்னவர்கள் கூட சொன்னது தப்போ என்று யோசிக்குமளவுக்கு நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கையில், நான் எழுதிய துரோகம் எனும் சிறுகதை  நியாபகத்திற்கு வந்தது.  
துரோகம்
மிக சீரியஸாய் பெட்டுக்கு எதிரில் இருந்த எல்.சி.டியில் எஃப்டிவியை சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சட்டென அடுத்த சேனலை மாற்றநைட்டியில் வந்த பூஜா ஒரு செகண்ட் அவனை நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு, ஏதும் பேசாமல் அவனருகில் படுத்தாள். ஒரு வாரமாய் அப்படித்தானிருக்கிறாள்.
நடந்திட்டிருந்தவளூக்கு ஒரு இருவது வயசிருக்குமா? சும்மா சிக்குன்னு எப்படி நடந்தா இல்ல?”
சிவா  அவளின் கேள்விக்கு முக்யத்துவம் கொடுக்காதவன் போல முகத்தை வைத்துக் கொண்டு ம்என்றான்.
அப்ப ஏன் சேனலை மாத்தினீங்க..?”
பெரியதாய் எதற்கோ ஆரம்பிக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. உனககு பிடிக்காது அதனால
அப்ப எனக்கு பிடிக்காததை எல்லாம் எனக்கு தெரியாம செய்வீங்க.. அப்படித்தானே?’
எதுக்கு தேவையில்லாம டென்ஷனாகுறே..?”
எதுதான் தேவை உங்களுக்கு?”
சரி..ஓகே விடு நான் ஆர்க்யூ செய்யலை.. ஒரு வாரமாவே நீ டென்ஷன்ல தான் இருக்கே.. என்ன ஆச்சு..?”
சும்மா நடிக்காதீங்க.. சான்ஸ் கிடைச்சா டிவிக்கு சீட் பண்ற மாதிரி நிஜத்திலேயேயும் எவ்வளவு செய்யறீங்களோ..?’
ஏய்.. என்ன பேசுறே நீ? சரி.. நான் எஃப் டிவி பார்த்தேன். ஓகே ஒத்துக்கிட்டேன். ஐஸ்ட் ஒரு லூக்வார்ம் இன்ட்ரெஸ்ட். அவ்வளவுதான். இதுக்குப் போய் சீட்டிங், துரோகம்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே
அப்ப நீங்க இதுவரைக்கும் எனக்கு துரோகம் செய்யலைன்னு சொல்றீங்க..?”
சே..சே .. என்னாச்சு  இன்னைக்கு? உனக்கு போய் நான் துரோகம் செய்வேனா..?”

கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. அன்னைக்கு உங்க ஆபீஸ் ரம்யாவை கார்ல கொண்டு போய் அவங்க அம்மா வீட்டிற்கு ட்ராப் பண்ணிட்டு வந்தீங்களா இல்லையா.?”
அய்யோ ஆமாம் ட்ராப் பண்ணினேன். அதை பத்தி உன் கிட்ட போன்ல அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால்தான்னு சொல்லிட்டுதானே போனேன்.?”
அது ஒரு ப்ளான்.. சொல்லிட்டா எது வேணா செய்யலாமா..? இல்லை எனக்குத்தான் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?”
ஏய்.. விட்டா அறைஞ்சிருவேன்.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..
அஹா.. அது ஒண்ணுதானே குறைச்சல். அப்ப வேற யாரு?”
ஹேய் யார் என்ன சொன்னாங்க..? உன் ப்ரெண்ட் அனிதாவா?”
ஆங்அனிதா.. அவளா..? படுபாவிகூட இருந்தே குழிப்பறிக்கிறாளே..? சொல்லு அவளா. எனக்கு அப்பவே தெரியும்.. நீ அவ நம்ம வீட்டுக்கு வரும்போது வழிஞ்சு வழிஞ்சு பேசுறதும், அவ மாரையே பார்க்கறதும்அவளும் உன் கிட்ட நெருக்கமா பேசுறதும் அதும் என் முன்னாடியே..
தபாரூ.. பூஜா.. நிஜமாவே அறைஞ்சிருவேன்.. என்ன பேசிட்டே போறே. ஒரு ஆம்பளை நினைச்சான்னா வீட்டுல ஏதும் சொல்லாம எதை வேணும்னாலும் செய்ய முடியும்.
அதான் செய்யுறீங்களோ..?”
சரி என் கண்ணை பார்த்து சொல்லுங்க.. நீங்க எனக்கு துரோகம் செய்யலைன்னு?”
கண் சிவந்து அழ தயாராக இருந்த பூஜாவின் விழிகளை உற்று பார்க்க, சற்று தயங்கி, பின் நிறுத்தி நிதானமாய் உற்று பார்த்து இல்லைஎன்றான் சிவா.
பாருங்க..பாருங்கடக்குனு இல்லைன்னு சொல்ல முடியுதா? முடியலைல்ல.. மனசு குறுகுறுக்குது.. அதான் பொய் சொல்றீங்க
ஏய் யார் என்ன சொன்னாங்க உன்கிட்ட..? “
ஏன் யாராவது சொன்னாத்தான் எனக்கு தெரியுமா? நான் என்ன சின்ன பப்பாவா.?”
அதை விட மோசம். எதையோ மனசில வச்சிட்டு பேசறே நீ?”
எதையுமில்ல.. அன்னைக்கு உன் மொபைல்ல  ஒரு பொண்ணு உங்களை கேட்டாளே.. அவ யாரு..?”
பூஜா அன்னைக்கே சொன்னேன் அவ என் தூரத்து உறவு, கசின் சிஸ்டர்னு
அவவளவு நேரம் சிரிச்சு, சிரிச்சு பேசுனீங்க?’
அவளும் நானும் சின்ன வயசில அவங்க ஃபேமிலி இங்க இருந்த போது ஒண்ணா விளையாடுவோம் அதை பத்தி பேசி.. சிரிச்சோம்.  ஏன் எல்லாத்தையும் சந்தேகமா பாக்குறே?
அப்ப அன்னைக்கு ஒருத்தி ஏதோ பேங்குலேர்ந்து லோனுக்காக பேசினவகிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசுனீங்களே.. “ 
அவ என் கம்பெனியில ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒர்க் பண்ணவ.. குரல் கேட்டதும், ஞாபகம் வந்திச்சு.. அதான் சிரிச்சு பேசினேன் அது தப்பா..?
எல்லாத்துக்கு ஒரு பதில் வச்சிருப்பீங்க..? “ என்று குப்புறபடுத்து குலுங்க, ஆரம்பித்தாள்.
சிவாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏன் இப்படி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறாள் பூஜா.. ஏய்.. எழுந்திரு.. என்ன பண்றே?’
ம்.. அழறேன். என்னை நினைச்சு அழறேன். என் வாழ்க்கைய நினைச்சு அழறேன். என்னடா இது அழறாளே..? தூக்கி வச்சி சமாதானம் பண்ணுவோம்னு ஒருத்தனுக்கு தோணுதா? மனசில கொஞ்சமாவது லவ், பாசம் இருந்தாத்தானே?”
நான் தூக்கினா நடிக்கிறேன், பாசாங்கு செய்யறேன்னு சொல்லிடுவியோன்னு பயமா இருக்கு
ஒரு கணம் ஆழமாய் சிவாவை உற்றுப் பார்த்தாள். சிவா.. என்னை பார்த்து சொல்லு.. உன் மேல சத்தியமா சொல்லு.. நீ எனக்கு இதுவரை ஒரு வாட்டிக்கூட துரோகம் பண்ணதில்லை..?”
நிச்சயமா இல்லைம்மா.. இதை எப்படி ப்ரூப் பண்ணனும்னு சொல்லு செய்யறேன். கல்யாணத்துக்கு முன்னாடி அங்க இங்க கேர்ள்ப்ரெண்ட்ஸோட சுத்தினது உண்டுதான். அதையும் உன்கிட்ட சொல்லியிருக்கேன். நீ என் செல்லம்டா.. ராணி.. உனக்குப் போய் துரோகம் செய்வேனா..? உனக்கென்ன குறை..? உனக்காக நான் என்ன செய்யணும் சொல்லு செய்யறேன். பட் ப்ளீஸ் என்னை சந்தேகப்படாதே
அப்ப நீ எனக்கு துரோகம் செஞ்சதேயில்லையா..?”
நிச்சயமா இதுவரைக்கும் மட்டுமில்ல இனிமேலும்என்ற சிவாவை பார்த்து கலங்கிய கண்களுடன் ஏறிட்டு மெதுவாய் பார்த்து..
நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்ங்க..என்றாள் பூஜா.. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Inside Edge
பர்ஹான் அக்தர், எக்ஸெல் தயாரிப்பு. அமேசானின் முதல் இந்திய, இந்தி வெப் சீரிஸ்தான் இந்த இன்சைட் எட்ஜ். கரெக்ட் கிரிக்கெட் பற்றிய கதை தான். அதிலும் ஐ.பி.எல்லைப் பற்றி, அதன் பின்னணி, அரசியல், வீரர்களிடையே ஆன போதைப் பழக்கம், தொடர்புகள், புதிய ப்ளேயர்களை பயன்படுத்தும் முறை, ஜாதி அடக்குமுறை, டான்களின் பின்னணி, நடிகை நடிகர்கள் ஓனர் என்று வலம் வர இழக்கும் விஷயங்கள், முக்கியமாய் பெட்டிங் என செம்ம ஸ்டோர்க் அடித்திருக்கிறார்கள். இந்த டீம். ஐபிஎல்லுக்கு பதிலாய் பி.பி.எல். மும்பை டீமின் ஒனராய் கிட்டத்தட்ட மார்கெட் இழந்த நடிகை. டீமை தக்க வைத்துக் கொள்ள பணமில்லாத நிலையில், விவேக் ஓபராய், துபாய் பாயின் பவரை வைத்துக் கொண்டு, டீமை விலைக்கு வாங்குகிறான். டீமை வாங்கி எப்படி தன் வழிக்கு கொண்டு வந்து, டீமில் உள்ளவர்களை பிக்ஸிங் செய்து, கோடி கோடியாய் சம்பாதிக்கிறான்? அதற்கு உடன் படாத  டீமின் கேப்டன், கோச், புதிய பவுலிங் கண்டுபிடிப்பான மிக இளைஞனை மிரட்டி பணிய வைப்பது, டீமின் கோ ஓனரான நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவன் நடத்தும் ஆட்டம். வாயு ராகவன் எனும் தமிழக ப்ளேயர், ஆனால் மும்பைக்காக ஆடுகிறவன். துடிப்பானவன், எல்லா கெட்ட பழக்கங்களும் கொண்டவனாய் இருந்தாலும் சிறந்த ஆட்டக்காரன். அவனுடய தங்கை டீம் ஸ்டாடிஸ்டிக் பார்க்கிறவள். வெளிநாட்டு ப்ளேயரை மிரட்ட பயன்படுத்தப்படும் ஓரின சேர்க்கை, ட்ரக்ஸ்.உயர் ஜாதி ஸ்பின்னர். அதே ஊர் வன்னான் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் புதிய பவுலர். ஜாதி தெரியாமல் ரூமிற்கு அழைத்து வந்து விட்டு, அவனை இடது கையால் கூட தொடாமல் விரட்டும் ஜாதி வெறி. கேப்டன் பதவி, கிரிக்கெட்டின் மீது ஆழ்ந்த பற்றினால் வாழ்க்கை இழக்கும் கேப்டன். அவனது மனைவி. இன்பர்மேஷன் இஸ் வெல்த் என்பது போல் சகல விதத்திலும் தகவல்கள் மூலம் காரியத்தை சாதிக்கும் மீடியேட்டர் பெண். ஹரியானா டீமின் ஓனர் அவ்வளவாய் ஆங்கிலம் வராதவர். என செம்ம கேரக்டர்கள். சும்மா அடித்து ஆடியிருக்கிறார் ரிச்சா சட்டா, விவேக் ஓபராய் போன்றோர்கள். க்ளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனமாய் இருந்தாலும் இன்ஸைட் எட்ஜ் சிக்ஸரே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 25, 2017

மின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்

பேஸ்புக் ஹிட்
சென்ற வாரம் மலையாளப்படத்தைப் பற்றி எழுதியவுடன் அது என்ன படம் என்று பல பேர் கேட்டிருந்தார்கள். அது நண்டுகளூடே நாட்டில் ஒர் இடைவேளா. நிவின் பாலி நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்தும் அளித்த படம். இந்தக்கதையை எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாய், அழுகாச்சியாய் இல்லாமல் எடுத்தார்கள் என்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது. வழக்கமாய் இம்மாதிரியான கதைகளில் பார்ப்பவர்களின் தொண்டையை அடைக்கும் சோகமே வெற்றிக்கான அளவுகோல். ஆனால் இவர்கள் இப்படத்தில் கொண்டாடுகிறார்கள்.கண்களில் திரையிடும் கண்ணீருக்கிடையே சிரிக்கிறார்கள்.

நிவின் பாலி லண்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரது அம்மா சாந்திகிருஷ்ணா.அப்பா லால். வீட்டில் தங்கை, அவளுடய கணவன், வயதான தாத்தா, என ஜாயிண்ட் பேமிலி. ஒர் சுபயோக சுபதினத்தில் சாந்திகிருஷ்ணா தனக்கு மார்பக புற்று நோயாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். அவரே தைரியமாய் டெஸ்டுக்கும் போய் நிற்கிறார். ஆம் ஸ்டேஜ் 2 என்று முடிவான போதும் தளரவில்லை. இதை தெரிவிக்காமல் மகனை உடனடியாய் இந்தியாவுக்கு வரும் படி அழைக்கிறார். இம்மாதிரியான திடீர் அழைப்புகள் எல்லாம் கல்யாணத்துக்காகத்தான் என்று நண்பன் ப்ளைட்டில் சொல்ல, அந்த கனவுடன் தரையிரங்குகிறான் மகன். வந்து பார்த்தால் இந்த செய்தி. வீடே இடிந்து போய் மரண அமைதியாய் இருக்க, இந்த மாதிரி நீங்கள் இருப்பதை பார்ப்பதற்கு நான் செத்தே போய்விடலாம் என்று கூற, எல்லோரும் தங்கள் சோகத்தை மறைத்து, கொண்டு உடன் பட ஆரம்பிக்கிறார்கள். சாந்திகிருஷ்ணாவுக்கு என்ன ஆனது என்பதுதான் கதை.

படம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்கு வழக்கமான மலையாளப்படம் போல பேசியே மாய்ந்தார்கள். சாந்திகிருஷ்ணாவின் கேன்சர் மேட்டருக்கு அப்புறம் கதை சூடு பிடிக்க ஆரம்பித்தது. கீமோ ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முதல் முறை கிளம்பும் போது அதற்காக பயந்து போய் மனைவியுடன் மகனை அனுப்பி வைக்கும் லாலின் எமோஷன். நான் பயப்படவெல்லாம் இல்லை என்று ரியாக்ட் செய்யுமிடம் நவரசக்கூத்து. ஹாஸ்பிட்டலில் அம்மாவின் கீமோ அறைக்குள் முகம் வாடிக் பரிதாபமாய் அமர்ந்திருக்கும் நிவினிடம், அம்மாவும், நர்ஸும் மிகச் சாதாரணமாய் கீமோ பற்றி சொல்லி, நீயல்லவா தைரியமாய் ஆதரவாய் இருக்க வேண்டுமென்று சொல்லுமிடம். தன் அப்பாவின் கீமோவுக்காக வரும் நாயகி. அவளுடனான மிக இயல்பான நட்பு. வீட்டில் தாத்தாவை பார்த்துக் கொள்ள முடியாமல் ஆண் நர்ஸை பிக்ஸ் செய்யும் இண்டர்வியூவின் போது. ஆண் நர்ஸ் போடும் கண்டீஷன்கள். என்னை தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு டின்னருக்கு போகக்கூடாது. என்னையும் கூட்டிட்டு போகணும். தொடர் கீமோவினால் முடி இழந்து, கீமோவினால் ஏற்படும் உடல், மற்றும் மன உபாதைகளால் ஏற்படும் மூட் ஸ்விங் காட்சிகள்  என மிக அழகாய் ஒர் நுணுக்கமான ஃபீல் குட் திரைப்பட அனுபவத்தை கொடுத்துவிட்டார்கள்.

இம்மாதிரியான படங்கள் மிகவும் பாஸிட்டிவான விஷயம். பெரிய நடிகர்கள் நடிக்கும் போது நல்ல படங்களுக்கான வரவேற்பு அதிகமாகும். இன்னும் நல்ல படங்கள் வர வாய்பளிக்கும். இல்லாவிட்டால் மாஸ் காட்டுகிறேன் என்று ரெண்டாவது படத்துலேயே அந்த ஸ்டார். இந்த ஸ்டார் என்று பெயர் போட்டுக் கொள்ளவே பழக வேண்டியிருக்கும்.
ஒரு காலத்தில் பிட்டு படங்கள் என்றால் மலையாளப்படம் என்றிருந்த நிலையை, சிபிஐ டைரிக் குறிப்பு, வந்தனம், ஐயர் தி க்ரேட், நியூ டெல்லி, என மடை மாற்றிவிட, நடுவில் மீண்டும் மொனாட்டனியாய் படங்கள் வந்து கொண்டிருக்க, புதிய அலை இளைஞர்கள் இயக்குனர்களாய் வர, புதுசு புதுசாய்கதை சொல்ல ஆரம்பித்த  வேகம் இன்று வரை தொடர்கிறது. நல்ல படங்களின் வெற்றி இன்னும் பல நல்ல படங்களை வெளிக் கொண்டு வரும் ஊக்கியாக, ரசிகர்கள் நமக்கு கொண்டாட்டமாய் அமைகிறது.

மலையாளப்படங்கள் எல்லாமே அற்புதத்துக்கு மிக அருகில் என்பது போல என்று நினைக்காதீர்கள். எல்லா மொழிப் படங்களிலும் மொக்கைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் தமிழில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஒன்று நிஜமாகவே படம் நன்றாக இருப்பது. இல்லாவிட்டால் போலியாய் காவியம், பெண்ணியம், மாஸ்டர் ஸ்ட்ரோக், என பேஸ்புக், டிவிட்டரில் மட்டும் கொண்டாடப்படுவது.

ஒரு காலத்தில் இந்த ஷோஷியல் மீடியாக்கள் மூலம் படங்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்து நிஜமாகவே ஒரிரு நல்ல படங்கள் இதன் மூலம் வரவேற்க்கப்பட, எப்படி மற்ற மீடியாவை கரப்ட் செய்தார்களோ அப்படி இங்கேயும் ஆள் வைத்து, காசு கொடுத்து கரப்ட் செய்ய தயாரிப்பாளர்களே ஆர்மபித்துவிட்டார்கள். படம் வெளிவருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னமே ஷோ போட்டு சோஷியல் மீடியா ஆட்களை கொண்டு ஆஹா ஓஹோ என பாராட்ட வைப்பது. அதன் மூலம் முதல் நாள் மக்களை கூட்டுவது. ஒரு விதத்தில் முதல் நாள் கூட்டம் கூட வைக்கும் முயற்சி சரி என்றாலும், ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது என்பது போல, ஓவராய் கூவி, படம் பார்க்க வந்தவன் என்னத்துக்கு இப்படி கூவினாங்க? என்று வெளியே போய் நாலு நல்ல வார்த்தை கூட சொல்லாம போய்விடுவான். அப்படி சமீபத்தில் ஸ்பெஷல் ப்ரிவ்யூ போடப்பட்டும் ஆன்லைனில் கொண்டாடப்பட்ட படங்கள் எல்லாமே பேஸ்புக், ட்விட்டரில் மட்டுமே வெற்றி பெற்ற படங்கள். இவற்றின் பல படங்களின் வசூல் லட்சங்களில் மட்டுமே.

ஆள் வைத்து கொண்டாடும் கூட்டம் ஒரு புறமென்றால் இன்னொரு பக்கம் காவிய இயக்குனர்கள், ஹீரோக்களின் ரசிக குஞ்சுமணிகள். இவர்கள் ஆர்ப்பாட்டம் தான் தாங்க முடியாது. இவர்கள் நுணுக்கமாய் தேடிப்பிடித்து கொண்டாடும் காட்சிகளை வேறு இயக்குனரோ, நடிகரோ நடித்திருந்தால் கழுவி கழுவி ஊற்றுவார்கள். ப்ராண்ட் நேமோடு அட்டாச் ஆகி, சம்பந்தப்பட்டவர்களுக்கே புரியாத குறியிடுகளை கண்டு பிடித்து திக்கு முக்காட வைப்பதில் இவர்கள் விற்பன்னர்கள். என்ன முதல் வாரம் என்ன தான் முட்டுக் கொண்டுத்தாலும் மீண்டும் அவர்களால் ஒரு பேஸ்புக் ஹிட்டை மட்டுமே கொடுக்க முடியும். தட்ஸ் ஆல்.


Oct 10, 2017

மின்னம்பலம் கட்டுரை -விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா?

விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா?
விவேகம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து இணையமெங்கும் ப்ளூ சட்டைக்காரர் எனும் விமர்சகரை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாலை காட்சியிலிருந்து வெளிவந்த ரசிகர்கள் உட்பட விமர்சனம் ரெண்டும் கெட்டானாய் இருக்க, இணைய விமர்சகர்கள் ஆளாளுக்கு வலிக்காமலும், வலித்தா மாதிரி காட்டிக் கொள்ளாமலும், படம்னா இதுதாண்டா படம் என்று அஹா ஓஹோ என பாராட்டியும் விமர்சனங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ப்ளூ சட்டைக்காரர் மட்டும் வழக்கம் போல கழுவி ஊத்தி விட்டார்.  ஒவ்வொரு முறை பெரிய பட்ஜெட், நடிகர் படம் வரும் போதும் இதே பிரச்சனை தான். ஆரம்பத்திலிருந்து இன்று வரை இணையத்தில் வரும் விமர்சனங்களால் எங்களுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றே சொல்லி வந்தாலும், நிஜத்தில் இதற்கான பாதிப்பு இருக்கிறது என்று  திரையுலகத்தினர் நம்புகின்றார்கள் என்றே தோன்றுகிறது. இல்லாவிட்டால் இத்தனை கூப்பாடு தேவையேயில்லை.

ஒரு காலத்தில் பத்திரிக்கை விமர்சனங்களைத் தவிர வேறு விமர்சன ஊடகமேயில்லாத நிலையில் பாஸ் மார்க் வாங்கினாலே ஒரளவுக்கு தப்பிச்சோம் என்று ஒரு பத்திரிக்கை விமர்சனத்துக்காக காத்திருந்த நிலையெல்லாம் போய்., சினிமா செய்திகளுக்காகவும், நட்பிற்காகவும், பத்திரிக்கை கொண்ட கொளைக்காகவும், அங்கே பணியாற்றியவர் என்பதற்காகவும், நூற்றுக்கு முப்பது மார்க்தான் கொடுத்தாலும் நாலு பக்க விமர்சனம் போடும் நிலையாகிவிட்ட படியால் அச்சு விமர்சனம் மீதான நம்பிக்கை இழந்த நிலையில் தான் வலைப்பூக்களின் வருகை, காமன் மேன்களிடமிருந்து விமர்சனங்கள் வர ஆரம்பித்து, கொண்டாட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். இன்றைக்கு வீடியோ விமர்சனங்களுக்கு எவ்வளவு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறதோ அதே அளவிற்கு இல்லாவிட்டாலும் ஆதரவு இருந்ததென்னவோ நிஜம் தான்.

எந்தவித வருமானமும் இல்லாமல், தன் பேஷனுக்காக மட்டுமே படம் பார்த்து விமர்சனம் எழுதியதால் அதில் நேர்மை இருந்தது. அதை பயன்படுத்த நினைத்து ஒரு சில இயக்குனர்கள் வலைப்பூ எழுகிறவர்களுக்காக தனி காட்சி போட்டுக் காட்டிய நிகழ்வெல்லாம் நடந்து இருக்கிறது. எப்போது அப்படியான காட்சி தனியே போட ஆரம்பித்தார்களோ, அப்போதே விமர்சங்கள் நம்மளையும் கூட்டி போய் தனியா படம் காட்டினாங்களே? என்ற ஆதங்கத்துடன் ஒரு பக்கமும், நமக்காக படம் போட்டுக் காட்டினாங்களே அப்படின்னா நாம இன்னும் கண்ணும் கருத்துமா எழுதணும்னு இன்னும் நுணுக்கமா பார்த்து கழுவி ஊத்தறதுதான் அதிகமாச்சு.  வீடியோ பிரபலமாக, அதற்கு ஷிப்ட் ஆனவர்கள் கொஞ்சம் தான் என்றாலும் விஷுவலில் கிடைக்கும் வீச்சுக்கு இணை வேறு ஏதுமில்லை என்பதால் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் மொபைல் கேமரா மொதற்கொண்டு கிடைக்கிற கேமராவில் எல்லாம் படம்பிடித்து விமர்சனம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இத்தனை பேர் உள்ள கூட்டத்தில் நான்கைந்து பேர் மட்டுமே லட்சங்களில் ஹிட்ஸும், வருமானமும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஒரு பிரபல நடிகரின் படத்தை திட்டினால் அவரது எதிர் பார்ட்டி நடிகரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று வரிந்து கட்டிக் கொண்டு, திட்டியும், பாராட்டியும் மீம்ஸ் போட்டும் மக்கள் ஒரு வாரத்துக்கு கொண்டாட்டமாய் இருக்க, தயாரிப்பாளர்கள், மூன்று நாளைக்கு பிறகு விமர்சனம் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனியார் அவர்கள் செலவில் தியேட்டருக்குப் போய், படம் பார்த்து விமர்சனம் செய்வதை தடுக்க முடியாது என்று தெரிந்தே. படம் நன்றாக இல்லை என்று சொல்லாதே என்றும், பார்த்து சொல்லுங்க என்று போன் போட்டு ரசிகர்கள் பேசுவது ஒருபக்கமென்றால், சம்பந்தப்பட்ட இயக்குனர், தயாரிப்பாளரே பேசும் நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். இது மட்டுமில்லாமல் பல பிரபல இயக்குனர்கள் அவர்களை அழைத்து, பட சூட்டிங், நடிப்பதற்கு ஒரிரு காட்சிகளில் வாய்ப்பு, இல்லாவிட்டால் டப்பிங்கிற்கு முன்னால், டப்பிங்கிற்கு பின்னால், என நான்கைந்து வர்ஷன்களை காட்டி இன்ஸ்டண்ட் விமர்சனம கேட்டு கரக்‌ஷன் எல்லாம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் அடுத்த வாரம் நம்ம படம் வருது விளம்பரம் போட்டிருங்கன்னு விளம்பரம் வேற கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களின் விமர்சனத்தால் கொதித்த ரசிகர்கள் மானாவாரியாக போன் அடித்து பேசி, அவரை வாயைக் கிண்டி, வார்த்தையை பிடுங்கி, தங்கள் தலைவரை திட்டிட்டான் என்று ஆடியோவை வீடியோவாக போட, ஆளாளுக்கு ப்ளூ சட்டைக்காரை திட்டி தனி வீடியோ எடுத்து போட இத்தனை நாள் பார்க்காதவன் கூட யார்ராவன் ப்ளூ சட்டைக்காரன் என்று தேடி சாதாரணகம்வே நான்கைந்து லட்சம் ஹிட்ஸ் பார்க்கிறவரை, 20 லட்சம் ஹிட்ஸுக்கு வழி வகை செய்து கொண்டிருக்கிறார்கள்.


விமர்சனம் என்பதற்கான எதிக்ஸ் மாறிப் போய் பல காலமாகிவிட்ட நிலையில் இன்னமும் நமக்கு சாதகமான விமர்சனம் மட்டுமே சொல்லப் பட வேண்டுமென்று நினைப்பது சரியான விஷயம் இல்லை என்றே தோன்றுகிறது. சன் டிவி திரை விமர்சனம் என்று கிழித்து தொங்க விட்ட காலத்தில் இதே போன்ற பல எதிர்ப்புகள் கிளம்பியதெல்லாம் உண்டுதான். தற்போது அவர்களும் நடிகர் நடிகை பேட்டிக்காகவும், விளம்பரத்துக்காகவும்,  பத்திரிக்கை லெவலுக்கு வந்துவிட, இணைய வீடியோக்கள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கே விமர்சனம் செய்கிறவர்கள் அனைவருமே நேர்மையாய் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நேர்மையாய் இல்லாவிட்டால் எப்படி பத்திரிக்கை, டிவிக்காரர்கள் தங்களது ஆடியன்ஸை இழந்தார்களோ அதைப் போல இழந்துவிடுவார்கள் என்கிற நிலையின்மை அதிகமாக இருக்க, படம் ஓடுவது ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இவர்களது விமர்சனங்களின் வாழ்வும் ஆதே ஒரு வாரம் என்கிற போது  “சர்வைவா” ஆகத்தான் போய்க் கொண்டிருக்கிறது விமர்சனம் செய்கிறவர்களின் நிலையும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறாவர்கள் நிலையும்..

Oct 6, 2017

கொத்து பரோட்டா -2.0-43

கொத்து பரோட்டா 2.0-44
Dialouge in the dark
“நீங்கள் அடையப் போவது ஒரு வித்யாசமனா அனுபவம். உள்ளே சென்ற பின் திரும்பி வர நினைத்தால் உங்கள் பணம் திரும்பத் தர இயலாது. அதனால் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் அங்கே செலவிடும் நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையின் திரில்லிங்கான நிமிடங்கள்” என்பது போன்ற வாசகங்களைப் படித்துவிட்டும் தயாராய் வாசலின் முன் குடும்பத்துடன் நின்றோம். வெளிச்ச மண்டலத்தின் அடுத்த பக்கம். சுவர் முழுவதும் கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. ஸ்லைடிங் டோர் திறந்த மாத்திரத்தில் உள்ளிருந்து அழகிய பெண் குரல் கொஞ்சம் ஆளுமையாய். “சுதிர் யாரையும் உள்ளே அனுப்பாதே. ஆட்கள் வருகிறார்கள்” என்றாள். நான்கைந்து பேர் வெளிவந்த மாத்திரத்தில் அழைத்து வந்தவரின் கை பிடித்து நன்றி சொன்னதில் ஆழ்ந்த அன்பு இருந்தது போல தெரிந்தது. அவர்கள் போன மாத்திரத்தில் அதே பெண் குரல் உங்கள் பெயர்களை தெரிந்து கொள்ளலாமா?”  என்றாள். சொன்னோம். அடுத்த கணம் வெளிக்கதவு சாத்தப்பட்டது. சட்டென்று கருகும்மென்ற இருட்டு. லேசாய் வயிற்றை புரட்டியது. ”ஐயம் பீலிம் அன் கன்பர்டபிள் திரும்ப போயிரலாமா?” என்றேன். மனைவியும், மகன்களும் சிரித்தபடி “நோ” என்று சொன்னது சுற்றிலும் கேட்டது.
”சங்கர் சார்.. எல்லோரும் உங்கள் முன் இருப்பவர்களின் தோள்களை பிடித்துக் கொள்ளுங்கள். நான் உங்களை வழி நடத்துகிறேன் என்று அவரின் கைகளை கொடுத்தார்.
உங்க பேர்?
“சரிதா”
கைகளை பற்றிக் கொண்டேன். பெண்ணின் கை. பிடித்த விதத்தில் அதுரமாய் இருந்தது.
”உங்களின் ஒரு கையை வலது பக்கமாய் வைத்தால் சுவர் இருக்கும். இங்கே எங்கேயும் படிகள் கிடையாது. ப்ளாட் தரை தான். வலது பக்க சுவரை பாலோ செய்து வந்தால் இடது பக்கம் ஒரு திருப்பம் வரும் அப்போது உங்களது வலது கைகளை உங்கள் முன் இருப்பவர்களின் தோள்களில் மாற்றிக் கொண்டு, இடது கையை இடது பக்கம் இருக்குற சுவரை பாலோ செய்யுங்கள். உங்கள் இடத்தை சுலபமாய் அடைய முடியும்.” என்றாள்
இருட்டு பழக கொஞ்சம் நேரம் ஆகுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். பழக ஆரம்பிக்கவில்லை போல. நிறுத்தி நிதானமாய் நடக்க ஆரம்பித்தோம்.
“உங்களது இருக்கை வந்துவிட்டது சங்கர் சார். உங்களது வலது பக்கம் ஒரு சேர் உள்ளது இல்லையா? என்று என் கையை எடுத்து அதன் மேல் வைத்து, “அதை பாலோசெய்தால் மூன்றாவது சேரில் நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். உங்களுடன் வந்தவர்கள் அதை பாலோ செய்தால் அவரவர்களின் இடத்தில் உட்கார முடியும் என்றாள்.
தடவித் தடவி ,என் சேரைப் பார்த்து உட்கார்ந்தபடி, பிடித்திருந்த என் மகனின் கையை அழுத்தி, “டேய் அம்மாவோட கைய சரியா பிடிச்சிக்க.இதோ பார் என் பக்கத்து சேர். அதுல உக்காரு.. ம்மா.. நீயும் இவன் கைய சரியா பிடிச்சிக்க உட்கார்ந்த உடனே சொல்லு.. “ என்றேன் . என் குரலில் பதட்டமிருந்தது. ஏன் இன்னமும் இருட்டு எனக்கு பழகவில்லை? கண்ணாடி போட்டுக் கொண்டு இருட்டில் பார்க்க முடியாதவன் நான் ஒருவனாய்த்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.  
”உக்காந்துட்டீங்கன்னா.. உங்களுக்கு முன்னாடி ஒரு டேபிள் இருக்கு. அதுல ஒரு ப்ளேட் இருக்கா?” என்றாள் சரிதா.
தடவி பார்த்தார்ல் டேபிளிலும் அதன் மேல் ஒரு ட்ரேயும் இருக்க, “யெஸ்” என்றோம்.
உங்களது டோக்கனை கொடுக்கள் என்றாள்.
பூ போன்ற டோக்கனை எடுத்து கொடுத்தோம்
“ஓகே வெஜ். கொஞ்சம் இருங்கள்” என்று அவள் நகர, அவள் நகரும் திசையை லேசாய் உணர முடிந்தது. இருட்டு இன்னும் பழகவில்லை.
‘இங்க வேற யாராச்சும் இருப்பாங்க இல்லை?”
“டோண்ட் வொரி சார்.. என்னை கூப்பிடுங்கள் அல்லது உங்களுக்கு உதவ சலீம் இங்கிருக்கிறான். “ என்றதும் ‘ஆமாம் சார் என்ற குரல் பின்பக்கத்திலிருந்து வந்தது. கைகழுவ சானிடைசர் கொடுக்கபடும் போதே “ உங்கள் முன் ட்ரேயில் மூன்றடுக்கு கேரியர் ஒன்று உள்ள்து. அதில் உங்கள் உணவு இருக்கிறது. எப்படி இதை அன்பேக் செய்கிறீர்களோ அது போலவே நீங்கள் சாப்பிட்டபின் பேக் செய்து வைக்க வேண்டும்.”
வெளிச்சத்திலேயே கீழே சிந்தி சாப்பிடுகிறவன் இருட்டில் எப்படி? என்ற யோசனையை மீறி சின்ன சவால் உள்ளுக்குள் எட்டிப் பார்க்க, ஒவ்வொன்றாய் அன்பாக் செய்ய ஆரம்பித்தோம். முதல் அடுக்கில் பன்னீரும், காலிப்ளவர் ட்ரை சப்ஜி, நான்கு சப்பாத்திகள் ஒரு பேப்பரில் மடித்து வைத்திருக்க, அடுத்த அடுக்கில் ஏதோ ஒரு புலவ், ஒரு இனிக்கும் சப்ஜி குருமா இருந்தது. அமைதியாய் சாப்பிட்டோம். இன்னமும் இருட்டு பழகவேயில்லை. சமீபத்தில் இவ்வளவு அமைதியாய் பேசாமல் சாப்பிட்டதேயில்லை. அவ்வப்போது பக்கதில் இருக்கும் மகன்,மனைவியின் கையை தேடிப் பிடித்து அழுத்திக் கொண்டேன். எனக்கென்னவோ அந்த அழுத்தில் என்னுள் இருந்த பதட்டம் குறைந்து, அன்பை வெளிப்படுத்த முயன்றதாய் தோன்றியது.  சாப்பிட்டு முடித்தபின் அவர்கள் சொன்ன படி மூன்றடுக்கை சரியாய் பிக்ஸ் செய்துவிட்டோம். கை துடைத்து, நீங்கள் கிளம்பலாம்  என்றால் சொல்லுங்கள் உங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றாள் சரிதா. தயார் என்றோம். சலீம் இவர்களை அழைத்துப் போங்கள் என்றதும் வந்த வழி நியாபகம் வந்தது.

முதலில் வலது பக்கம் நுழைந்து சிறிது நேரத்தில் இடது பக்கமாய் திரும்பி, நேரே போய் உட்கார்ந்தோம். ஸோ.. இப்போது நேரே போய், வலது  பக்கமாய் பாலோ செய்து, இடது பக்கம் திரும்பிப், போக வேண்டும் என்ற சலீம் என் கையை பிடித்து அழைத்துச் செல்லும் முன்பே எனக்கு ரூட் புரிந்தது. இருட்டு பழகியிருந்தது.

வெளிச்சம் வரும் கதவு அருகே இருந்த எலக்ட்ரானிக் உபகரணத்தில் லேசர் வெளிச்சம் வெகு நேரத்திற்கு பிறகு லேசாய் கண்களுக்கு தெரிய கூசியது. ”உங்களது உணவும், இந்த புதிய அனுபவமும் உங்களுடய இந்த மாலை பொழுதை இனிமையாக ஆக்கியிருக்கும் என்று நம்புகிறேன். இங்கு உங்களுக்கு உதவிய சலீம் சரிதா ஆகிய நாங்கள் கண் பார்வையற்றவர்கள். உங்களுக்கு எங்களது உணவும், சர்வீஸும் பிடித்திருந்தது என்றால் அதை உங்களது பீட் பேக் பகுதியில் தெரியபடுத்தினால் தன்யன் ஆவேன் என்று கதவை திறந்தான். பளீரென்ற ப்ளோரசண்ட் வெள்ள வெளிச்சம் கண்களை தாக்க, சலீம் குள்ளமாய் நின்றிருந்தான். அவனுக்கு வெளிச்சம் தாக்கவேயில்லை. அவனின் கையை பிடித்து “ நன்றி சலீம். நிச்சயம் எழுதுகிறேன்” என்று நாங்கள் சொன்ன விதத்தில் நெகிழ்ந்த அன்பிருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Prison Break Season 1
2005ல் அமெரிக்க சீரியல் உலகை ஒரு கலக்கு கலக்கியது இந்த பிரசன் ப்ரேக். இந்த சீரிஸின் பாதிப்பில் ஏகப்பட்ட தமிழ், மற்றும் இந்திய மொழிப் படங்கள் நிறைய வந்திருந்தாலும், கத்தியில் ஜெயிலிருந்து தப்பிக்கும் ப்ளான் காட்சி அப்பட்டம். சரி விடுங்கள். கதைக்கு வருவோம். லிங்கன் பரோஸ் ஒரு கொலை குற்றவாளி. அமெரிக்க வைஸ் ப்ரெசிடெண்டின் சகோதரனை கொலை செய்ததற்காக, ஃபாக்ஸ் ரிவர் ஜெயிலில் மரண தண்டனைக்காக காத்திருப்பவன். மைக்கேல் ஸ்கோபீல்ட், அவனுடய தம்பி. புத்திசாலி. அதிகம் பேசாதவன். ஸ்ட்ரக்சுரல் இன் ஜினியர். செய்யாத கொலைக்காக ஜெயிலில் அடை பட்டிருக்கும் தன் சகோதரனை அங்கிருந்து தப்பிக்க வைக்க ஒர் குற்றத்தை செய்து ஜெயிலினுள் நுழைகிறான். ஸ்ட்ரக்சுரல் இன் ஜினியரான அவன் அந்த ஜெயிலின் வரை படத்தை தன் உடல் முழுவதும் மேப் போல பச்சை குத்திக் கொண்டு, அடுத்தடுத்து தான் செய்ய வேண்டிய அத்துனை காரியத்துக்கான குறிப்பும் அவன் உடலில். ஆஸ் யூஸ்வல் தப்பிக்க நினைக்கும் போது நடக்கும் இடர்கள், தேவையில்லாத நபர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம். கடைசி நேரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய இக்கட்டு, நம்பிக்கை, துரோகம், கொலை, டாக்டர் சாராவுடனான காதல். அந்தக் காதலினால் ஏற்படும் தயக்கம், என எல்லா உணர்வுகளையும் கலந்து கட்டிய பக்கா ஆக்‌ஷன் சீரியல்.


ஆரம்பித்த எபிசோடிலிருந்து இருபது சொச்ச மொத்த எபிசோடும் அட்லிரினை பம்ப் செய்யாமல் விடாது. அதிலும் கடைசி இரண்டு எபிசோடுகள். பிபியின் உச்சம். இந்த சீரியலின் சக்ஸஸ் கேரக்டரைசேஷன்கள் தான். எதற்கு அசராத மைக்கேல், சட்சட்டென உணர்ச்சி வசப்படும் லிங்கன், நேர்மையான சிறை அதிகாரி, கொஞ்சம் அப்படி இப்படியாய் இருந்தாலும் அம்மா கோண்டு சிறை ஆபீசர் அமைதியான சிறை டாக்டர் சாரா, அடாவடி டி.பேக், அதிகாரிகளின் சூழ்ச்சியால் சிறைக்கு வந்து மனைவி குழந்தைக்காக தப்ப நினைக்கும் ராணுவ அதிகாரி. முன்னால் டான், என எல்லாருமே செம்ம கேரக்டர்கள். முக்கியமாய் மைக்கேல் ஸ்கோபீல்டாய் நடித்திருக்கும் வெண்ட் வொர்த் மில்லரின் நடிப்பு அட்டகாசம். இவரின் அத்துனை மேனரிசங்களையும் அப்படியே நம்மூர் மகேஷ் பாபுவிடம் பார்க்கலாம். ஆங்காங்கே கொஞ்சம் நம்ப முடியாத உட்டாலக்கடி காட்சிகள் தடாலென்று தூக்கியடித்தாலும். செம்ம.. சீரிஸ்.. அதிலும் முதல் பாகம் முடிக்குமிடம் நிச்சயம் அடுத்த பாகத்தை தேடச் செய்யும்.