
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, ஒரே நாளில், ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சிகளில் ஒரே படம் சுப்ரமணியபுரம் திரையிட்டார்கள்.. சன் டிவியிலும், ஜீதமிழிலும். மீடியாவில் உள்ள பல பேருக்கு எப்படி இப்படி நடக்கும் என்று கேள்வி எழுந்தது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கும் அந்த கேள்வி எழுந்தது.
பரபரப்பாக ரொம்ப நாளாக விரைவில், விரைவில் என்று விளம்பரபடுத்தி வந்த் ஜீதமிழ் தொலைக்காட்சியினர் ஏன் திடீரென சன் அறிவிப்பை மறுக்கவில்லை..? அந்த படத்தை பெரிய விலை கொடுத்து தங்கள் டீவியில் ஒளிப்பரப்பும் உரிமையை பெற்றிருந்தார்கள்.. நாடோடிகள் படத்தை கூட அவர்கள் தான் வாங்கியிருக்கிறார்கள் என்று செய்தி.. இப்படியிருக்க இந்த படத்தினால்.. விழா நாளில் ஆவர்களின் சேனலின் டி.ஆர்.பி எகிற வைக்க இருந்த நல்ல வாய்ப்பை எப்படி பகிர்ந்து கொண்டார்கள்..?
இதற்கு பின்னால் சன் டிவி, ஜிடிவிக்கும் இருக்கும் 15 வருட பிரச்சனையும் புகைகிறது. கலாநிதிமாறன் முதன் முதலில் சேனல் ஆரம்பிக்க ஐடியா வந்தவுடன், அப்போது இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல், ஓரே சேனல் என்கிற புகழோடு இருந்த நேரத்தில் அதில் தினமும் ஒரு மூன்று மணிநேரம் தங்களது தமிழ் ஒளிபரப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய, ஜீடிவி நிறுவனர் சுபாஷ் சந்திராவை பார்க்க போயிருந்தார்.. சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டு, பார்க்காமலேயே முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் சுபாஷ்.. இந்த அவமானத்துக்கு பிறகு கலாநிதி மாறன் வெகுண்டு எழுந்து,போராடி பல சாட்டிலைடுகளை மாற்றி வாடகைக்கு எடுத்து இன்றைய சாம்ராஜ்யத்தை அமைத்த விஷயம் வரலாறு..

ஆனால் சுபாஷினால் பட்ட அவமானம் மட்டும் ஆறவேயில்லை..கலாநிதிக்கு.. காத்திருந்தார். தங்களது சுமங்கலி கேபிள் விஷன் ஆரம்பிக்கும் முன்பு தமிழ் நாட்டில், சென்னையில் அப்போது இருந்த எம்.எஸ்.ஓ எனப்படும் மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் என்று இருந்தவர்களில் முக்கியமான நிறுவனமாயிருந்தது ஜீ டிவியின் சகோதர கம்பெனியான சிட்டி கேபிள்.. மற்றும் ஏ.எம்.என்.. தங்களது கம்பெனி ஆரம்பிக்கப் பட்டவுடன் முதல் களபலியாய் சன் போட்டது சிட்டி கேபிளைதான். அதன் பிறகு தமிழ் நாட்டில் அவர்களின் நிறுவனத்துக்கான அறிகுறி ஏதுமில்லை.
2001ல் ஜீ தனது தமிழ் சேனல் ஆசையை பாரதி என்று ஆரம்பிக்க, ஆரம்பித்த சில காலங்களிலேயே மூடுவிழா நடத்தினார்கள். அதற்கும் பல காரணங்கள் பிண்ணனியில் இருக்கிறது. பிறகு அவர்கள் தமிழில் சேனல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் தங்களுடய பலத்தை வைத்து தள்ளிப்போட வைத்த விஷயமும் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் ஜீ இந்திய பிராந்திய மொழிகளில் கவனம் கொள்ள ஆரம்பிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, என்று எல்லா பிராந்திய மொழிகளிலும் ஆரம்பிக்க, தமிழிலும் காலூன்ற மட்டும் வருடங்கள் ஆனது என்னவோ நிஜம்..
இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தில் பிரபலமான எம்.எஸ்.ஓவான ஆர்.பி.ஜி தங்களுடய நெட்வொர்கை விற்கபோவதாய் தெரிய, அந்த நேரத்தில் பெங்காலி சேனல் ஆரம்பிக்க முஸ்தீப்புடன் இருந்த சன், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அதை வாங்கி தங்களது சேனலை நிலைநாட்டிக் கொள்ள நினைத்திருந்த போது ஜீயும் தனது பெங்காலி சேனலை ஆரம்பிக்கவிருந்தது.எப்படி சன் தெற்கு பிராந்திய மொழிகளில் முதன்மையாய் இருந்ததோ, அதே போல் ஜீ மற்ற ஏரியாக்களின் பிராந்திய மொழிகளில் நம்பர் ஒன்னாக இருந்த நேரம். வேறு சேனல்களூம் இல்லாத நிலையில் புதிய ஸ்டாராங் எண்ட்ரியான சன்னை உள்ளே அனுமதிக்க மனமில்லாமல், போட்டி போட்டுக் கொண்டு, தங்களுடய அரசியல், பண பலம் எல்லாவற்றையும் பயன் படுத்தி ஆர்.பி.ஜியை கைபற்றியது.. அதன் பின் சன்னின் பெங்காலி சேனல் கனவு தள்ளிப்போடப்பட்டது.

இந்த தொழில் போட்டியில் உள்ளே ஓடும் வன்மம் தான் இப்போது வெளிவந்திருக்கிறது.. தமிழில் ஜீதமிழ் ஆரம்பித்த நேரம் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடுமபத்திற்கும் இடையே லடாய் இருந்த நேரம்.. அதனால் அப்போது அரசின் ஆதரவோடு இருந்த எம்.எஸ்.ஓவில் உடனடியாய் கிட்டத்தட்ட ப்ரைம்பேண்டில் அலாட்மெண்டும், செட்டாப் பாக்ஸுகளில் பிரதானமும் கிடைக்க, சில மாதங்கள் மக்களிடையே தெரிந்து கொஞ்சம், கொஞ்சமாய் ரீச் ஆக ஆரம்பிக்க, அந்த நேரத்தில் எஸ்.ஸி.வியிலும் அவர்களின் சேனலை தெரியவைக்க அலைய வைத்தது.
பின்பு கண்கள் பனித்து, இதயம் இனித்தவுடன், மீண்டும் தன் முழு கட்டுப்பாட்டை எடுத்த எஸ்.ஸி.வி.. முன்னாள் அரசு ஆதரவு எம்.எஸ்.ஓவை தூக்கிவிட்டு.. தன் முழு வீச்சை பரப்பியது. தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் தன்னுடய நெட்வொர்கை வைத்திருக்கும் எஸ்.சி.வி.. தன்னுடய நெட்வொர்க்கில் ஒரு சேனலை ஒளிபரப்ப, கேரேஜ் பீஸ் என்று ஒரு தொகையை வாங்கிக் கொண்டுதான் ஒளிபரப்பும். இதுதான் எல்லா எம்.எஸ்.ஓக்களும் செய்வார்கள்.. அவர்களின் தொழில் லாபமே இந்த் கேரேஜ் பீஸிலிருந்துதான். உலகம் பூராவுமே இதுதான் நடைமுறை.. டிடி.எச்சுக்கு இதே நடைமுறைதான்.
வருடத்துக்கு சுமார் ஆறு கோடி ரூபாய் கொடுத்து தமிழகம் எங்கும் உள்ள தங்களது நெட்வொர்க்கில் ஒளீபரப்ப ஒப்பந்தம் போட்டது ஜீ. ஆனால் ப்ரைம்பேண்ட்டில் இல்லாததால்.. அவர்களுக்கான ரீச் இல்லை.. அதுமட்டுமில்லாமல் சென்னையில் செட்டாப் பாக்ஸ் முறையில் இருப்பவர்கள் டிஜிட்டலில் வரும் சிக்னலில் உள்ள சேனலகளை பார்ப்பார்களே தவிர, அனலாகில் உள்ள சேனல்களை மாற்றி பார்ப்பதில்லை.. எனவே.. வேறு வழியில்லாமல் ஜீ தங்களது சேனலின் நிலைப்பாட்டை தகக வைத்துக் கொள்ள பணிந்து போய் தங்களது சூப்பர் ஹிட் தமிழ் பட உரிமையை சன்னுடன் ஷேர் செய்ய முடிவு செய்தது.. படம் ஒளிப்பரப்பான அடுத்த நாள் ஜீதமிழ் சன் நெட்வொர்க்கில் டிஜிட்டல் நெட்வொர்க்கில் வந்துவிட்டது.
இப்போதைக்கு ஜீ பணிந்தது போல் இருந்தாலும், பின்னால் பாய்வதற்கும் தயாராய் இருக்கும் என்றே தோன்றுகிறது..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..