Posts

Showing posts with the label கொத்து பரோட்டா

கொத்து பரோட்டா 2.0-66

கொத்து பரோட்டா 2.0-66 Raju Kari Gadhi 2 முதல் பாகம் முழுவது சிறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது. அதிரிபுதிரி வெற்றியின் காரணமாய் அதே தயாரிப்பாளர் இம்முறை மாமனார் மருமகளை வைத்து எடுத்திருக்கிறார்கள். நாகார்ஜுன், சமந்தாவைத்தான் சொல்கிறேன். வழக்கம் போல ஒரு தனி பங்களா. அதை விலைக்கு வாங்கி ரிஸார்ட் நடத்தும் மூன்று இளைஞர்கள். மூன்று இளைஞர்களில் ஒருவர் ஒரு பிகரை உசார் செய்து அறைக்கு போகும் போது வித்யாசமான அனுபவங்கள் கிடைக்கிறது. போர்ன் படம் பார்க்க விரும்பும் போதும், இன்னொரு இளைஞர் தன் காதலியுடன் ஸ்கைப்பில் அவரை டாப்லெஸாக காட்டு என்று கேட்கும் போதும், அமானுஷ்யங்கள் நடக்க, வியாபாரம் படுத்து விடும் என்று பயப்பட ஆர்மபிக்கிறார்கள். அப்போது வருகிறார் நம் நாகார்ஜுன். பேய் ஓட்டுகிறவர் என்று சொல்லாமல் அவரை மெண்டலிஸ்ட் என்கிறார்கள். பேசும் போதே எதிராளியின் மனங்களை படித்து, போலீஸுக்கு ஒரிஜினல் குற்றவாளிகளை பிடித்துக் கொடுக்குமளவுக்கு மிகுந்த திறமைசாலி. அவரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அங்கேயிருப்பது பேய் தானா? அப்படியானால் ஏன் அது அங்கேயிருக்கிறது. கில்மா விஷயங்கள் நடக்கும் போது மட்டும் ஏன் ஆ...

கொத்து பரோட்டா 2.0-65

கொத்து பரோட்டா 2.0-65 கந்து வட்டி, காரணமானவர்களை அரஸ்ட் செய் என்று கூக்குரலிட்டு ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி, பிரச்சனைக்குரிய படங்களுக்கு போட்டிருந்த தடை விலகியது. பஞ்சாயத்துக்களின் வீரியம் குறைந்தது. இதனிடையில் விஷால் திடீர் அரசியல் பிரவேசம் திரையுலகினரை கலகலக்க வைத்திருக்கிறது. நடிகர் சங்க தேர்தல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் என அடுத்தடுத்து ஒவ்வொரு பதவியாய் போட்டியிட்டு பெற்றவர் இப்போது ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்.எல்.ஏவுக்காக போட்டியிருகிறார். கமல் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து மெல்ல ஆழம் பார்த்துக் கொண்டிருக்க, வரும்.. ஆனா வராது என்கிற ரீதியில் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இன்னும் போர் வரவில்லை என்றெல்லாம் வழக்கம் போல பத்திரிக்கைகளுக்கு தீனி போடும் அறிவிப்புகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் ரஜினி இவர்களுக்கிடையே விஷாலின் இந்த திடீர் அரசியல் நுழைவை பலர் ஆதரிக்கவும் பாராட்டவும் செய்திருக்கிறார்கள். இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே விஷாலை பதவி விலக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இயக்குனர் சேரன் தலைமையில் தமிழ் திரைப்பட த...

கொத்து பரோட்டா 2.0 -63

கொத்து பரோட்டா 2.0 கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன் கொடுத்த மிரட்டல்கள் தான் என்கிற அவரின் கடிதமும் தான். உடனே கந்து வட்டி பைனாசியர், ஏற்கனவே ஜி.வியின் சாவுக்கு காரணமானவர். அரசியல் பலம் காரணமாய் அராஜகம் செய்கிறவர், வீட்டிற்குள் வந்து பெண்களை மானபங்கப்படுத்தி விடுவார் என்றும், பணம் கொடுக்க வேண்டியவரை கூட்டிக் கொண்டு போய் ஒர் அறைக்குள் நிர்வாணமாய் நிற்க வைத்து, திட்டுகிறவர் என்றெல்லாம் டெரர் செய்திகள் மீண்டும் வர ஆரம்பிக்க, தமிழ் சினிமாவே கந்துவட்டியால் அவதிப்படுகிறது என்று கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாய் கந்துவட்டி செழியனை கைது செய்ய வேண்டுமென்று விஷால் ஒரு பக்கம் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் அவரிடம் தொடர்ந்து பணம் வாங்கி படமெடுத்து வரும் பல தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் அன்பு செழியன் மீது பழி சொல்கிறார்கள் என்றும், அவர் நல்லவர் எங்கள் வகையில் இது வரை எந்த மாதிரியான தொந்தரவும் செய்ததில்லை என்று பத்திரிக்கையாளர்களைக் ...

கொத்து பரோட்டா 2.0-62

கொத்து பரோட்டா 2.0-62 கல்வியின் பெயரில் கொள்ளையடிக்கும் இன்ஞினியரிங் கல்லூரி என் மகனை பி.டெக் சேர்க்க பணம் கட்டிய போது கல்லூரி பஸ் வேண்டுமென்றால் 26-30 ஆயிரம் வரை சொன்னார்கள். கிலோமீட்டர் கணக்கிட்டு. அதுவும் ஆப்ஷன் தான் என்ன இப்போதே பணம் கட்டவில்லையென்றால் பின்பு பஸ் வசதியை பெற முடியாது என்ற லேசான பயமுறுத்தல் மட்டுமே இருந்தது. என் மகனின் நண்பன் எஸ்.எஸ்.என் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு கல்லூரி பஸ் பீஸ் 46 ஆயிரம் ரூபாய். நீ பஸ்ஸில் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி.. 46ஆயிரம் பீஸ் கட்டியே தீர வேண்டும். அவனுடன் படிக்கும் பெண் கல்லூரியிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் வீடு. ஆனாலும் அவள் கல்லூரி பஸ்ஸுக்கு பீஸ் கட்டியாக வேண்டும் என்று வசூலிக்கிறார்கள். கல்லூரி பீஸுடம் இந்த தொகையையும் கட்டாயமாய் கட்டியே ஆக வேண்டும். கல்விக்கான தொகையே பெரும் பாராமாய் பெற்றோர்களுக்கு இருக்க, இம்மாதிரியான கட்டாய கொள்ளைகளை யார் தட்டிக் கேட்பது?. பெற்றோர்களும் நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் போதுமென்று கேள்வி கேட்க வழியில்லாமல் பணம் கட்டி விடுகிறார்கள். இது முதல் வருடம் மட்டுமல்ல நான்கு வருடங்களுக்கும் இத...

கொத்து பரோட்டா 2.0-61

கொத்து பரோட்டா 2.0-61 மாதக்கடைசி. உதயம் தியேட்டரிலிருந்து காசிக்கு போக அசோக் பில்லரில் ஒரு சிக்னல் இருக்கும். அது ஒன்வே தான் இருந்தாலும் அங்கே முனையில் இருக்கும் கோவிலருகே மக்கள் கிராஸ் செய்ய என அந்த சிக்னல் வைக்கப்பட்டிருப்பதாய் சொல்வார்கள். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து என்றைக்கும், எப்போதும் அங்கே ஆட்கள் கிராஸ் செய்வதோ, அல்லது, வண்டிகள் நின்றோ போனதே கிடையாது. இத்தனைக்கும் பில்லர் அருகே தான் போலீஸ் தன் பரிவாரங்களோடு எப்போதும் இருப்பார்கள். இரவு நேரங்களீல் பேரிகேட் போட்டு, டிரிங் அண்ட் ட்ரைவ் கேஸ் பிடிப்பார்கள். மேற்ச் சொன்ன மாதக்கடைசி நாட்களில் ஒரு நாள் வழக்கம் போல வண்டியை திருப்பினேன். குடுகுடுவென ஓரத்தில் மறைந்திருந்த ஒரு போலீஸ் வண்டியின் குறுக்கே வந்து நின்று ஓரம் கட்ட சொன்னார். காரை ஓரம் கட்டினேன். கதவருகில் வந்து நின்று இறங்குங்க என்றார். நான் வண்டியை ஆப் செய்து சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே, இறங்கியபடி. “என்ன விஷயம்? என்றேன். தெரிந்தே. சிக்னல் மீறிட்டீங்க. பைன் கட்டிட்டு போங்க என்றார். அப்படி கட்டணும்னா கட்டுறேன். ஆனால் நீங்க எதுக்கு ஒளிஞ்சுட்டு ஓடி வந்து பிடிக...

கொத்து பரோட்டா 2.0-60

கொத்து பரோட்டா 2.0-60 இந்த தமிழக அரசு கேளிக்கை வரியால் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. மல்ட்டிப்ளெக்ஸுகளில் 150 ரூபாய் வரை விலையை வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்லியும் கூட, அனைத்து மல்ட்டிப்ளெக்ஸுகளும் வேணாம் எங்களுக்கு 120 ரூபாய் போது என்றிருக்கிறார்கள். பி.வி.ஆரும், ஐநாக்ஸும், இரட்டை வரி விதிப்புக்காக கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கள் திரையரங்குகளை மூடி, எதிர்ப்பு தெரிவித்திருந்த நேரத்தில், மெர்சல் ரீலீசின் போது சத்யமும், ஏஜிஎஸ்ஸும், அவர்களது திரையரங்குகளின் கடைசி நேரம் வரை மெர்சல் புக்கிங் ஆரம்பிக்காமலேயே இருந்தார்கள். காரணம் அவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்குமான 150-120 ரூபாய் பிரச்சனைதான். 150 ரூபாய் டிக்கெட் விலைக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி எல்லாவற்றையும் சேர்த்து 204 ரூபாய் வருகிறது. அத்துடன் ஆன்லைன் டிக்கெட் விலையும் சேர்த்தால் 240 வந்துவிடும். முதல் மூன்று நாட்களுக்கு பெரிய நடிகர்கள் படத்திற்கு வேண்டுமானால் ஆட்கள் வருவார்கள். ஆனால் அதன் பின்பு எங்களது அரங்குகளுக்கு புட்பால் குறைந்துவிடும். அப்படி குறைந்தால் எங்களது திரையரங்கின் புட் அண்ட் பிவரேஜ் பிஸ...

கொத்து பரோட்டா 2.0-59

சென்சார் எனும் கொடுங்கோலன். ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனால் தான் அதற்கு பேர் டெலிவரின்னு வச்சிருக்காங்க என்று நடிகர் சத்யனின் அப்பா அடிக்கடி சொல்லுவார். இன்றைய தேதிக்கு நிலைமை மிக மோசம். தயாரிப்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு நிலையை தாண்டி வருவது என்பது அசாத்யமான விஷயமாகிக் கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான நிலை சென்சார். ஏற்கனவே சென்சாருக்கும் நம் திரையினருக்குமிடையே பல விதமான வேறுபாடுகள். பிரச்சனைகள். ஹிந்தி படத்தில் காதலர்கள் கிஸ்ஸடித்தால் “யூ”. அதே நம்மூரில் அடித்தால் “ஏ” என பலவிதமான கலாச்சார வழிகாட்டிகளோடு சிறப்பாக செயல்படுகிறவர்கள் நம்மூர் சென்சார் போர்ட் ஆட்கள். இதில் பெரிய படத்தில் கெட்ட வார்த்தை, டபுள் மீனிங், ரத்தகளறியாய் காட்சி வைத்தாலும் முன்பிருந்த வரிவிலக்கிற்காக “யூ” கொடுப்பார்கள். எவனாவது சின்ன தயாரிப்பாளர் கொஞ்சமே கொஞ்சம் ரத்தம் தூரத்தில் தெளித்தார்ப் போல காட்டினால் கட்டுடன் ‘ஏ” கொடுப்பார்கள். இப்படியான ஓரவஞ்சனைகளை பற்றியும், இவர்கள் தின்றே தீர்க்கும் டிபன் வகையராக்கள் பற்றியும் எழுத நிறைய இருந்தாலும் இன்றைய தயாரிப்பாளர்கள் தலையாய...

கொத்து பரோட்டா 2.0-58

கொத்து பரோட்டா 2.0-58 படிக்கிற பழக்கம் வழக்கொழிந்து கொண்டே வருகிறது என்பது எப்படி உண்மையோ அதே அளவுக்கு ஓரமாய் படிப்பவர்கள் உருவாகிக் கொண்டும் இருக்கிறார்கள். படிப்பவர்கள் இல்லாமலா சேத்தன் பகத்தில் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கிறது என்பீர்களானால் நியாயமாய் நம் நாட்டின் மக்கள் தொகைக்கு கோடிக் கணக்கில் விற்க வேண்டும். சினிமாவில் தற்போது வரும் பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு படிக்கும் பழக்கமே சுத்தமாய் இல்லை என்பதும், அதை விட எழுதும் திறமை  அட்லீஸ்ட் கம்ப்யூட்டரிலாவது எழுதும் பழக்கம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். மேக்ஸிமம் ட்விட்டரில் ரெண்டு வரியும், பேஸ்புக்கில் நாலு வரியும் மட்டுமே இவர்களின் மொத்தமான எழுத்துப் பணி. வெறும் சினிமா பார்த்தே படமெடுக்க வருகிறார்கள். அதனால் தான் பெரும்பாலான தற்போதைய படங்களில் கேரக்டர்கள் மனதுக்கு நெருக்கமாய் இருப்பதில்லை. என்னிடம் உதவியாளராய் வர விரும்பும் இளைஞர்களிடம் நான் கேட்பது ரெண்டே ரெண்டு கேள்விதான். புத்தகங்கள் படிப்பாயா? சமீபத்தில் பார்த்து மிகவும் பிடித்த படமெது?. என்பதுதான். முதல் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் பொன்னியின் செல்வனையும...

கொத்து பரோட்டா 2.0-57

கொத்து பரோட்டா 2.0-57 டெலிகாலர்களிடமிருந்து வரும் கால்களை மிக மரியாதையாய் ஹேண்டில் செய்பவன் நான். பர்சனலாய் பல இளம் பெண்கள் இத்துறைக்கு வந்து கால் செய்யப்படும் கஸ்டமர்களின் நடவடிக்கைகளினால் படும் கஷ்டங்களை நேரடியாய் பார்த்து, என் தொட்டால் தொடரும் படத்தின் நாயகி கேரக்டரையும் டெலி காலர் கேரக்டருக்கு வடிவமைத்திருந்தேன். ஒரு காலத்தில் டெலி காலர்கள் நன்கு படித்து, மிக நல்ல சம்பளத்திற்கு வேலை செய்த காலமெல்லாம் போய். இன்று எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்திற்கும், டார்கெட் கமிஷனுக்குமாய் வேலை செய்யும் நிலை. தினம் டார்கெட். மேனேஜரின் ப்ரெஷர். டெலி காலர் குரலைக் கேட்ட மாத்திரத்தில் கோபப்பட்டு கட் செய்யும் கஸ்டமர்கள். என ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் கிளுகிளு வேலைகளையும் செய்யும் கஸ்டமர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல குரல் வளம் என்று பேசிப் பேசி கடலைப் போட்டு, பிக்கப் செய்தவர்கள் பலர். பல சமயம் எனக்கு கால் செய்யும் பெண்கள் பேசி விட்டு, “சார்.. நான் திரும்ப கூப்பிடுறேன் உங்க காலர் டோன் ரொம்ப நல்லாருக்கு. போனை எடுத்திறாதீங்க” என்ற கோரிக்கையோடு நான்கைந்து முறை தொடர்ந்து அடிப்பவர்கள்...

கொத்து பரோட்டா 2.0-55

ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப் போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பத்துடனே 18 முதல் 28 சதவிகித ஜி.எஸ்.டியை திரையரங்குகள் வசூலித்துக் கொண்டிருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு கடந்த சில மாதமாய் தியேட்டர் அதிபர்கள் வசூலை செட்டில் செய்வதில் பல குழப்பங்கள். காரணம் மேற்ச் சொன்ன கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பம் காரணம். திடீரென ஆறு மாதத்திற்கு முன் தேதியிலிருந்து பணத்தை கட்டுங்கள் என்ற சட்டம் போட்டுவிட்டால் விநியோகஸ்தர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது என்ற பயத்தில் பல தியேட்டர்கள் வசூலான தொகையை கொடுக்காமலேயே இருக்கிறது. இந்த லட்சணத்தில் இப்போது தடாலென தமிழ் சினிமாவிற்கு பத்து சதவிகிதம் வரி மற்ற மொழி படங்களுக்கு 20 சதவிகிதம் வரி என்று அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் முன்பு கேளிக்கை வரி அரசின் நிர்ணையிக்கப்பட்ட 120 ரூபாய்க்குள் இருந்தது. அதாவது 120 ரூபாயில் முப்பது சதவிகித வரியும் சேர்ந்தது. ஆனால் ஜி.எஸ்.டிக்கு பிறகு 120 ரூபாய் அப்படியே திரையரங்குக்கும் விநியோகஸ்தர...