கேபிள் ஆப்பரேட்டர் என்கிற வர்கத்தையே ஒழிக்கப் போகும் மத்திய அரசும் மாநில அரசும்.
அட என்ன தலைப்பே காண்டர்வர்சியா இருக்கே? என்று யோசிப்பவர்களுக்கு ஆம் காண்டர்வர்சி மட்டுமல்ல ஒட்டு மொத்த சென்னையே வருகிற ஜுன் 30 நள்ளிரவுக்கு பிறகு சென்னையில் உள்ள அத்துனை கேபிள் இணைப்பு பெற்ற தொலைக்காட்சி பெட்டிகளும் அணையப் போகிறது. அடுத்த நாள் முதல் அத்துனை டிவிக்களும் தெரிய வேண்டப்பட வேண்டுமென்றால் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் முறையில் சுமார் நாற்பது லட்சம் வீடுகளில் செட்டாப் பாக்ஸ் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் சென்னையில் டி.டி.எச் எனப்படும் நேரடி ஒளிபரப்பு வைத்திருப்பவர்களும், ஏற்கனவே கண்டீஷனல் ஆக்சஸ் திட்ட்த்திற்காக செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இது என்ன கலாட்டா என்று இது பற்றி எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பது போல தோன்றினாலும், சென்னையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் ஆப்பரேட்டர்கள் தங்கள் வாழ்க்கையின் மிக மோசமான நிலையில் தினமும் ஒரு மீட்டிங், தினமும் ஒரு ஏற்பாடு ஏதாவது செய்ய முடியுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன முடிவு என்று தெரியாமல். இருப்பது இன்னும் 15தே நாள்தான். அதற...