Thottal Thodarum

Apr 29, 2010

Darling –2010

prabhas-darling-wallpapers-2 ப்ரபாஸ், கருணாகரன், காஜல் அகர்வால், நம்ம் பிரபு, ஜி.வி.ப்ரகாஷ்குமார் என்று ஆந்திராவில் சம்மருக்கு எதிர்பார்ப்பை ஏற்றியிருந்த படம்.

ப்ரபாஸ் ஒரு ஜாலியான இளைஞன், அவனை ஒரு பெண் ப்ரபோஸ் செய்கிறாள். ஆனால் பரபாஸோ மறுக்கிறான். இதனால் மனம் உடைந்த அந்த பெண் சூசைட் செய்ய முயல்கிறாள். அந்த பெண்ணின் தாதா அப்பன் ப்ரபாஸின் நண்பர்களை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெண்ணை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்ட, தான் ஏற்கனவே காதலித்தவன் என்றும், அவள் தற்போது ஒரு விபத்தினால் கோமாவில் இருப்பதாகவும் அவளுக்காகத்தான் உயிர் வாழ்வதாய் சொல்கிறான். இவனின் கதையை கேட்ட தாதா, மனம் இறங்கி அவனையும், நண்பர்களையும் விடுவிக்கிறான். நிஜ வாழ்வில் அவன் சின்ன வயதிலிருந்து மனதில் இருக்கும் நந்தினியை நினைத்து சொல்லிய கதை, நிஜத்தில் அவள் வரும் போது நடந்ததா? என்பதுதான் கதை
darlingreview படம் முழுவதும் ப்ரபாஸ் இளமை துள்ளலோடு வளைய வருகிறார். ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் நன்றாக இருக்கிறது. படத்தில் நம் மனதை அள்ளுபவர் காஜல் அகர்வால். அவ்வளவு க்யூட். அதுவும் சுவிட்சர்லேர்ந்து எபிஸோடில் அந்த லொக்கேஷன்களும், அதில் தேவதை ட்ரஸில் சுற்றும் காஜலும் அய்ய்ய்ய்ய்யோ.. அவ்வளவு க்யூட். காஜலுக்கு வலிக்காமல் கன்னத்தில் ஒரு முத்தமிடவேண்டும் போலிருந்தது.

நம்ம பிரபு தான் ப்ரபாஸின் அப்பா.. விரைவில் தெலுங்கு கேரக்டர் ஆர்டிஸ்டிகளுக்கு புளி கரைக்க போகிற நடிப்பு. அவ்வள்வு ஆப்டான நடிப்பு.
prabhas-darling-wallpapers-3
படத்தின் முக்கிய முதுகெலும்பு ஒளீப்பதிவாளர் ஆண்ட்ரூ. அருமையான குளுகுளூ ஒளிப்பதிவு. இம்மாதிரியான படங்களுக்கு முக்கியமான விஷயம் இசை. அந்த விஷயத்தில் ஜி.வி.ப்ரகாஷ்குமாரின் இசை பெரிய லெட்டவுன் என்றுதான் சொல்ல வேண்டும். பாடல்களும் சரி. பின்னனி இசையிலும் சரி.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

கதை திரைககதை இயக்கம் கருணாகரன். இவர் இன்னும் தொலிப்ரேமா ஹாங் ஓவரிலேயே இருக்கிறார் என்பதை அவரது ஒவ்வொரு படக் காட்சிகளிலேயே தெரிகிறது. சுவிட்சர்லேந்து லவ் ட்ராக்கில் தனக்கு பேஸ் ரீடிங் தெரியும் என்று காஜலை அலைய வைக்கும் ப்ரபாஸிடம், தன் காதலை சொல்ல ப்ரபாஸிடம் தன் முகத்தை மட்டுமே காட்டி அவன் தெரிந்து கொள்ள்ட்டும் என்று காஜல் நிற்கும் இடம் க்யூட். ஆனால் ரெண்டாவது பாதியில் பிரபுவின் நண்பர்கள்,குடும்பம், குழந்தைகள், ஊரிலிருந்து வரும் காஜலை காதலிக்கும் இன்னொரு இளைஞன், அவனின் நண்பர்கள், எல்லாம் வருஷம் 16ஐ ஞாபகப்படுத்துகிறது. கருணாகரன் இன்னமும் தமிழ் நாட்டை மறக்கவில்லை என்பது தெரிகிறது. ப்ரபாஸின் தங்கை தன் காதலனை கைபிடிப்பதற்காக, தன் தந்தையின் பூர்வீக் சொத்தை விற்றாவது தனக்கு வரதட்சணை கொடுக்க சொல்லும் காட்சி ஸ்வீட் செண்டிமெண்ட்.
Darling - ok

கேபிள் சங்கர்

Apr 27, 2010

City Of Gold –(2010)

city-of-gold-01-10x7 மகேஷ் மஞ்ரேக்கர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல முகம் கொண்டவர். ஆனால் இவர் இயக்கியிருக்கும் ப்டம் தான் சிட்டி ஆப் கோல்ட்.  சிட்டி ஆப் ஆப்பர்சூனிட்டி என்றழைக்கப்படும் மும்பையை பற்றிய படம்.
மும்பை பம்பாயாய் இருந்த 80களில் அங்கே இருந்த மில்களையெல்லாம் மூடிவிட்டு, ரியல் எஸ்டேட் ஏறுமுகமாய் இருந்த நேரத்தில் மில்கள் எல்லாம் மால்களாய் மாறிய நேரத்தில் நடந்த கதை. மில்லை மட்டுமே நம்பி இருக்கும், குடும்பங்களையும், அவர்களின் வாழ்க்கையையும், சொல்லும் கதை.
city-of-gold-1v மில் தொழிலாளி குடும்பதலைவன், தலைவி, அவளின் எழுத்தாளர் மகன், கிரிக்கெட் பைத்திய, பக்கத்து வீட்டு குழந்தையில்லா மாமியுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இரண்டாவது மகன், மிடில் க்ளாஸ் மனப்பான்மையில் கனவுகளூடன் வாழும் மகள், அந்த ஏரியாவிலேயே ரவுடித்தனம் செய்து வாழும் கடைசி மகன், பக்கத்து வீட்டு குழந்தையில்லா மாமி, அவளின் குண்டு கணவன், மகளின் மளிகைகடை காதலன், மில் ஓனரின் மகன், யூனியன் தலைவர் ராணா, அவரது உதவியாளர் கோவிந்த், அவரின் திக்குவாய் மகன், லோக்கல் தாதா, ஹிஸ்டரிக்கலாய் மாரோ..மாரோ என்று உன்மத்தம் பிடித்தலையும் அந்த சிறுவன் என்று கேரக்டர்களால் உருவாக்கப்பட்ட கதை.

இவர்களை சுற்றியே கதைகளம் ஓடுகிறது. சில சமயம் கொஞ்சம் பழைய வாசனை டிவி சீரியல் காட்சிகளை பார்க்கிறோமா என்று யோசிக்க வைத்தாலும், அவைகளில் உள்ள உண்மைத்தனத்தினால் அதை தாண்டி பார்க்க முடிகிறது. படத்தில் ப்ரச்சனைகள் ஒரு நெக்ஸஸ் போல இவர்களூக்குள் வளைந்து, நெளிந்து சிக்கலாகி ஓடுகிறது.
city-of-gold
படத்தின் பெரிய பலம் நடிகர்கள். எல்லோருமே தங்கள்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். யூனியன் தோழராக வரும் கோவிந்தின் நடிப்பு அவ்வளவு எதார்த்தம், ஒவ்வொரு முறையும், முதலாளியுடன் மோதும் காட்சியாகட்டும், அடிக்க முற்படுவதாகட்டும்,ஒரு கட்டத்தில் கோபத்தில் அவரை அடிக்குமிடமாகட்டும் ம்னுஷன் நிற்கிறார். அதே போல அவரின் திக்குவாய் பையன், ரவுடிப்பையனுடன் சேர்ந்து சுற்ற, ஒரு கட்டத்தில் முதலாளியால் கோவிந்தை போட்டுதள்ள லோக்கல் தாதாவிடம் காசு கொடுக்க, அதை செய்ய ரவுடித்தனம் செய்யும் கடைசி பையனிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவன் தன் நண்பனின் அப்பா என்று தெரியாமல் இரண்டு லட்ச ரூபாய் பணத்துக்காக முகம் கூட பார்க்காமல் கொன்றுவிட, தான் செய்த செயலாம் மனம் உடைந்து, பெரிய தாதாவால் பணம் ஏமாற்ற பட்டு, அவனை பழி தீர்க்க, அவனை கொன்று அவனிடமிருந்து பணம் பறித்து, அப்பாவின் காரியத்துக்கு வரும் போது தன் ந்ண்பனாலேயே கொல்லப்படும் காட்சியில் அந்த திக்குவாய் நடிகரின் நடிப்பு தூள்.

குடும்பத்தலைவியாய் எல்லா பிரச்சனைகளுக்கும் மிக இயல்பான பதட்டத்தோடு, தன் குடும்பத்தின் மீது அளவற்ற பாசத்தை கொட்டும் தாயாய் சீமா பிஸ்வாஸ். பிள்ளைகளின் வருமானத்தை நம்பி இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களூக்கான சாப்பாட்டை கொடுத்துவிட்டு தன்னை கவனிப்பதாய் குற்றம் சொல்லும் கணவனிடம் எலலாவற்றையும் முடித்துவிட்டு, மெல்ல தன் கணவனின் அருகில் உட்கார்ந்து வாஞ்சையுடன், செல்ல கொஞ்சலுடன் டீ சாப்பிட கூப்பிடும் அந்த காதல் அருமை.
city-of-gold-5aவேலையின்மையினால் வறுமையின் உக்கிரத்துக்கு பல பெண்கள் விபச்சாரம் செய்யும் அளவுக்கு போய் குடும்பத்தை காப்பாற்றும் நிதர்சனம் கொடுமை. அதே போல தன்னை திருமணம் செய்வதாய் ஏமாற்றி கர்பமாக்கிய  மளிகை கடைக்காரனிடமே, தன் திருமணத்துக்கு பிறகு பணத்துக்காக படுக்கும் மகள்,  தன் தம்பி தொலைத்த பணத்துக்காக தன் கிட்னியை விற்று காப்பாற்றும் வெற்று பயலான எழுத்தாளர் பெரிய மகன் என்று கதற, கதற, நெஞ்சுவலியில் படுக்கும் தந்தை, சிரித்துக் கொண்டே இறக்கும் அம்மா போன்ற என்பதுகளின் க்ளிஷே  காட்சிகள் நம்மை சூழ்ந்து அடிக்கிறது.
அஜித் ரெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்கு ஏற்றதாய் இருக்கிறது. பின்னனி இசையும் ஓகே. குறைந்த பட்ஜெட் படமாய் எடுத்திருப்பார்கள் என்பது படத்தின் இருக்கும் காட்சிகளின் அமைப்பிலும், பேக்ரவுண்டிலும் தெரிகிறது.

இயக்குனர் மகேஷ் மஞ்ரேக்கர் இப்படத்தில் நாம் ஏற்கனவே பார்த்த பல பாலசந்தரின் படங்களின் காட்சிகளாய் தெரிந்தாலும், கதை சொல்லும் முறையில் நேர்மையாக இருப்பதாலும், ஆங்காங்கே சில நச் வசனங்கள், அருமையான நடிப்பு என்று எல்லாவற்றையும் ஒருகிணைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். என்ன கமர்சியல் படமாகவும் இல்லாமல் சீரியஸ் படமாகவும் இல்லாமல் திரிசங்கு நிலையில் படம் இருப்பதையும் மறுக்க முடியாது.
City of Gold - Optional
கேபிள் சங்கர்

Apr 26, 2010

கொத்து பரோட்டா –27/04/10

யுனிவர்சலின் அராஜகம்
சமீபத்தில் புதிய மொபைல் வாங்குவதற்காக யூனிவர்சல் தி.நகர் பிராஞ்சுக்கு சென்றிருந்தேன். ஏற்கனவே விசாரித்து வைத்திருந்த சில மாடல்களை பற்றி மீண்டும் விசாரித்தேன். வெளியே நான் விசாரித்த விலையை விட சுமார் 500-600 அதிகமாக இருந்தது. ஏன் இவ்வளவு அதிகமாக சொல்கிறீர்கள்? இதே தியாகராயா ரோடில் இருக்கும் கடையில் இதை விட இன்னும் குறைவாக விற்கும்போது இவ்வளவு அதிகம் விற்றால் எப்படி? என்றதும். அவர்கள் நான் குறிப்பிட்ட மாடல் நம்பரை கேட்டார்கள். நான் மீண்டும் சொன்னவுடன், நாங்கள் சொன்னது அடுத்த மாடல் என்றார்கள். சரி நான் கேட்ட மாடலின் விலையை சொல்லுங்க. என்றதும். நீங்க கேட்குற விலைக்கு எல்லாம் வாங்க முடியாது. என்று விவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கு கோபம் வந்தது. என்னுடன் வாருங்கள் நான் உங்களுக்கு வாங்கித்தருகிறேன். என்றதும், நீ கேட்கிற ரேட்டுக்கு பர்மா பஜார் பீஸ் தான் கிடைக்கும்.. நாங்க ஒரிஜினல் பீஸ் தான் தருகிறோம் என்று ஒருமையில் ஆரம்பிக்க, உன்னை யார் கடைக்கு வர சொன்னது போன்ற கேள்விகளை கேட்டவர் அக்கடையில் ஓனராக இருந்தாலே தவறு. ஊழியர் ஒருவர் கேட்க பெரிய ப்ரச்சனை ஆக, வேறு ஒருவர் வந்து என்னிடம் அவருக்காக மன்னிப்பு கேட்டு ப்ரச்சனையை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். universal the mobile expert  ஆக இருக்கலாம். A Poor & Arogant shop keepers
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஐ.பி.எல்
நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் ஆனது. மேட்ச் பிக்ஸிங், அது இது என்று பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று யோசித்து கொண்டிருந்த போது ஒரு ரன் அவுட், முதல் ரன்னிலேயே ஒருவர் அடுத்தவரை பற்றி கவலைப்படாமல், பிட்சைவிட்டு  வெளியே ஓடி, ரன் அவுட் ஆனார். இப்படி சில.. ஒரு வேளை பிக்ஸிங்தானோ..???
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

1800 கோடி பணமாகவும் சுமார் 800 கோடிக்கு நகைகளாகவும் மாட்டியிருக்கிறதாம். மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீட்டில். இப்படியெல்லாம் இருந்தா ஏன் மாவோயிஸ்ட்டு, நக்ஸலைட்டுன்னு வர மாட்டாங்க.. நம்ம ஊர்ல ”இவஙக” பண்ணுற அளும்புக்கு ”இங்கேயும்” ஏதாவது ஒரு ”ஸ்ட்டு” வந்திருவாங்கன்னு நினைக்கிறேன். மினிஸ்டரி ஆப் ஹெல்த்  துறையின் மந்திரியாகத்தானே முன்னாள் மத்திய மந்திரி அன்பு மணி இருந்தார்.? 1800 கோடி ஒரு நாள்ல அடிக்க முடியும்? எங்களை ஆட்சியில் அமர்த்தியபின் தவறு இருந்தால் ஏன் என்று கேளுங்கள் என்று மருத்துவர் அறிக்கைவிட்டார். அமைச்சர் ஆனதுக்கே முடியல.. ஏற்கனவே எங்க குடும்பத்திலேர்ந்து யாராவது அரசியலுக்கு வந்தா சாட்டையால அடிங்க்ன்னு அறிக்கைவிட்ட அய்யாதானே..!!!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
செவிக்கினிமை
ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், காம்பினேஷன் “ராவண்” படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. வழக்கமான டெக்னோ இசையாய் இல்லாமல் அநேகமாய் திரையில் படத்தோடு ஓடும் மாண்ட்ஜ் முறை பாடல்களாய் இருக்கும் என்று தோன்றுகிறது. முதல் பாடலான “பீரா..பீரா” பாடலும், “பெஹ்னே தே” பாடலும் நிச்சயம் ஹிட் லிஸ்ட் பாடல்களாயிருக்கும் என்று நம்பலாம். அதிலும் ‘பெஹனே தே” பாடலில் உள்ள ஒரு ட்ரான்ஸ் தனம் நிச்சயம் நம்முள் இறங்கி தலையாட்ட வைத்துவிடுகிறது. “தோக் தே கில்லி” பாடலும் கிட்டத்தட்ட இதே ரகம்தான்.

அதே போல் இஷ்கியா படத்தில் வரும் ”தில் தோ பச்சாஹே ஜி” பாடலை கேட்டிருக்கிறீர்களா? ராஹத் ஃபதே அலி கானின் குரலில் இருக்கும் ரானெஸ் உங்களை மயக்காமல் இருக்காது. இதற்கான வீடியோவில் பஸ்ஸில் நஸ்ருதீன் ஷாவுடன் வரும் பெண்ணின் கண்களீல் தெரியும் சிரிப்பையும்,ரியாக்‌ஷனை பாருங்க.. அவ்வளவு க்யூட்டாக இருக்கும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சாப்பாட்டுக்கடை
சென்னை தேவி தியேட்டரின் அப்படியே நேர் பின்புறம் சென்றால் ஒரு சின்ன கடையில் சரியான கூட்டம் இருக்கும். அது ஒரு சின்ன ஸ்வீட் மற்றும் காரம் விற்கும் கடை. அவ்வப்போது ஹிந்தி பட ஹீரோக்கள் இருக்கும் ஸ்டைலில் கடை ஓனர் பையன் டிரஸ் செய்து கொண்டு வியாபாரம் பார்ப்பான். மிக அருமையான சமோசாவும், கச்சோடியும், ப்ரெஷ்ஷாக அன்றைக்கு அன்று போடப்பட்ட ஜிலேபி, பால்கோவா, பாஸந்தி அட்டகாசமாய் இருக்கும். அதிலும் லஸ்ஸி அவ்வளவு திக்காக, புளிக்காமல் இருக்கும். எல்லா அயிட்டங்களும் ஒரு மந்தார இலையில்தான் வைத்து சர்வ் செய்யப்படும் இக்கடையில்  ஸ்பெஷாலிட்டி சமோசாவும், லஸ்ஸியும்தான். ஒரு சமோசா, நூறு கிராம் ஜிலேபி, ஒரு ஸ்வீடோ, ஸால்டோ, மசாலா ஜல்ஜீரா லஸ்ஸியோ சாப்பிட்டால் மத்யான லஞ்சே முடித்துவிடலாம். டிவைன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார விளம்பரம்
3 ஜி போன் சேவையை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட விளம்பரப்படம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார குறும்படம்
மேக்கிங்குக்காகவும், எடிட்டிங்குக்காகவும், இக்குறும்படத்தை பார்க்கலாம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார புத்தகம்
தஞ்சை ப்ரகாஷின் கதைகள். காவ்யா வெளீயீடு. மிக இயல்பாக கதை சொல்கிறார். மனிதனுக்கும், காமத்திற்குமான போராட்டத்தை முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே மிகச் சுதந்திரமாகவும், தைரியமாகவும் எழுதியிருக்கிறார். இன்னும் முழுவதுமாக படித்து முடிக்கவில்லை. முதல் கதையான அங்கிள் கதையும், ஜானுபாட்டி அழுது கொண்டிருக்கிறாளூம் நிழலாடிக் கொண்டேயிருக்கிறது. முழுவதும் படித்துவிட்டு சொல்கிறேன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தப்பர்த்த வாசகங்கள்
எல்லா பசங்களும் நேத்து ராத்திரி நல்லா ப்ர்பார்ம் பண்ணாங்க.. ப்ரீத்தி ஜிந்தா
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார தகவல்
Checkupக்கும் Pickupக்கும் என்ன வித்யாசம்?
நர்ஸ் நம்ம கையை பிடிச்சா அது செக்கப், அதே நர்ஸை நாம கைய பிடிச்சா அது பிக்கப்பு..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார தத்துவம்
மெழுகுவர்த்தியோட சைஸ் எப்படி இருந்தாலும் அது தரக்கூடிய ஒளி ஒரே அளவுதான். அதே போல் தான் நாம் வகிக்கும் பொறுப்பும் எவ்வளவு பெரியது என்று முக்கியமில்லை. அதை நிர்வகிக்கும், செயல்படுத்தும் திறமைதான் முக்கியம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஏ ஜோக்
சிறு பெண் குழந்தை ஒரு முறை அப்பா குளிக்கும் போது உள்ளே போய்விட.. அப்பாவின் லுல்லாவை பார்த்து “ இது என்ன? “ என்றதும், ஒரு மாதிரி சமாளிக்க, “இதான் கடவுள் கொடுத்த ஆப்பிள் மரம். இது இல்லைன்னா நாம இல்ல” என்று சொல்ல. அதை அம்மாவிடம் போய் சொல்ல, அம்மா கேட்டாள் “ அதில வேஸ்ட்டா ஒரு கிளை தொங்கிட்டு இருக்குமே அதை பத்தி சொன்னாரா?”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Apr 24, 2010

ரெட்டச்சுழி – திரை விமர்சனம்.

4305_1
தமிழ் சினிமாவின் இமயமும், சிகரமும் இணைந்து நடித்திருக்கும் படம், இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பு, அங்காடித்தெரு அஞ்சலி நடித்திருக்கும் படம், என பலவிதமான எதிர்பார்புகளோடு வெளியாகியிருக்கும் படம்..
ஒரு ஊரில் இரண்டு தாத்தா இருந்தார்கள். இருவருக்கும் நாற்பது வருஷ பகை. இவர்களின் பகை இவர்களின் கடைக்குட்டி வாரிசுகளுக்கும் தொற்றிக் கொள்ள, இரண்டு பக்கமும் பகை. ஒரு கட்டத்தில் பாலசந்தர் வீட்டு பையனும், பாரதிராஜா வீட்டு பெண்ணும் காதலிக்க, இதை தெரிந்த இரண்டு வீட்டு குட்டி பசங்கள் ஒன்று சேர்ந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா? பெரிசுகளிடையே இருந்த பகை தீர்ந்த்தா என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
rettai2 ஆரம்ப காட்சி முதலே ஒரு குழப்பம் கிளம்பிவிடுகிறது. இது சீரியஸ் படமா? அல்லது காமெடி படமா? என்று. ஏனென்றால் பாலசந்தர், பாரதிராஜா இருவரது நடிப்பும் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் காழ்ப்புணர்ச்சி ஏதோ காமெடி பட சீன்கள் போல இருக்கின்றதே தவிர கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லை. அப்படி காமெடி படம் தான் என்றால் அதிலும் சீரியஸ்னெஸ் இல்லை. அதிலும் இந்த தள்ளாத வயதில் கை நடுங்க துப்பாக்கி தூக்கி பாலசந்தர் மிரட்டும் காட்சியில் எல்லாம் சிரிப்புத்தான் வருகிறது. அவர்கள் மோதும் காட்சிகள் கூட காமெடியாய் செய்ய முயற்சி இருக்கிற்தே தவிர சீரியஸாக எதுவும் இல்லை. ப்ளாஷ்பேக்கில் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று சொல்கிறார்கள். அதற்கான காட்சியமைப்புகளில் படு காமெடியாய் இருக்கிறது.

படம் நெடுகிலும் வரும் சிறுவர்கள் வயதுக்கு மீறிய காதல் பேச்சுகளை பேசியபடி வருகிறார்கள். அதிலும் காதல் ஜோடிகளின் ப்ளாஷ்பேக்கில் இவர்கள் பருத்திவீரனை கிண்டல் செய்கிறார்களா? இல்லை அதை போலவே காட்சியமைத்திருக்கிறார்களா? என்று குழப்பம் வேறு. பத்து வயது பெண்ணிடம் மாமன் மகனாய் இருந்தாலும் முத்தம் கேட்டால் எந்த தாத்தா உதைக்காமல் இருப்பார்?. பாரதிராஜாவுக்கு கல்யாணமே ஆகவில்லை என்றால் அவரின் குடும்பத்தில் அஞ்சாறு பசங்கள் ஏது? கதாநாயகி யாருடய பெண்? இவருக்கு எப்படி பேத்தியாக முடியும். அதே போல் கதாநாயகன் பாரதிராஜாவின் தங்கச்சி பையன் அப்படியிருக்க, வீட்டை விட்டு ஓடிப்போகும் அவனை எப்படி எதிரியான பாலச்சந்தர் எடுத்து வளர்ப்பார்?.


இப்படி பல கேள்விகள். படத்தில் வரும் பையன் அர்ஜுன் அசத்துகிறான். டீச்சருடன் வரும் போதும், பாரதிராஜாவிடம் என்ன தோழரே எனும் போதும்,  க்ளைமாக்சில் பாலசந்த்ரிடம் நீ செத்து போ தாத்தா எனும் போது அட்டகாச படுத்துகிறான்.

இயக்குனர் தாமிரா பாலசந்தரின் சீடர் என்பதை ஆங்காங்கே வரும் வசனங்களிலும், காட்சியமைப்புகளிலும் தெரியபடுத்துகிறார். ”உசிரவிட பிடிச்சிருக்கு” ”2011ல நாம தான்யா..” “சேரன்மாதேவியின் முதல்வரே” “பூர்ஷ்வா” வை பற்றிய விளக்கம் கூறும் காட்சி. முக்கியமாய் ஒரு குட்டி பெண்ணுக்கு குஷ்பு என பெயர் வைத்து அவர் எப்போது பேசினாலும் நீ பேசாதே என்று சொல்ல, ஏன் என்று கேட்டால் நீ பேசினாலே பிரச்சனை ஆகிடுது. என்பதும். கோயிலுக்குள் போகும் போது கும்பலில் ஒரு சிறுவன் “ஏய் குஷ்பூ செருப்ப வெளிய விட்டு வா.. இல்லாட்டி அதுக்கு ஒரு பிரச்சனை ஆகப் போவுது போன்ற வசனங்கள் பாலசந்தர் டச்.  மற்றபடி முதல் பாதி மிகப் பெரிய கொட்டாவி.. சும்மா இழு இழுவென இழுக்கிறது. பின்பாதியில் சீரியஸாய் கதை சொல்கிறேன் என்று ப்ளாஷ்பேக், அதற்கான போராட்டம் என்று தடால் புடால் என சீன்களை வைத்திருக்கிறார்கள். முதல் பாதி காமெடியும் ஏறாமல், இரண்டாம் பாதி சீரியஸும் ஏறாமல் ஒரு மாதிரி குழப்பியடித்திருக்கிறார்.
rettaisuzhi நடிப்பு எனும் பட்சத்தில் பாலசந்தரை பற்றி ஏதும் சொல்ல முடியாது. நிறைய நாடகத்தனம்தான் தெரிகிறது. நாகேஷ் தெரிகிறார். முகத்தின் மீசையே பாதி கெடுத்துவிடுகிறது.  பாரதிராஜா அஞ்சலியிடம் பேசும் காட்சியிலும் க்ளைமாக்ஸிலும் ஸ்கோர் செய்துவிடுகிறார். அஞ்சலி அழகாய் இருக்கிறார் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். புது கதாநாயகனுக்கு அச்சுபிச்சு காதலன் வேடம். அதை செவ்வனே செய்திருக்கிறார். அழகம் பெருமாள் வேறு நடுவே வந்து மலையாளம் பேசிவிட்டு போகிறார். கருணாஸ் மீண்டும் அபூர்வ சகோதரர்கள் போலீஸ் மேட்டரை ஆங்காங்கே எடுத்துக் கொண்டு நெளிய வைக்கிறார். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.

படத்தில் பாராட்டபடவேண்டிய இருவரில் ஒருவர் ஒளிப்பதிவாளர் செழியனும், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும். முதலாமவர் உறுத்தாத ஒளிப்பதிவை தந்திருக்கிறார் என்றால், பின்னவர் மிக அருமையான  பின்னனி இசையை அளித்திருக்கிறார்.  பாடல்களில் பெருசாய் ஏதும் ஈர்க்கவில்லை என்பது வருத்தமே

மிகவும் எதிர்பார்த்திருந்த படம் மொக்கையாகிவிட்டதே என்ற வருத்தம் என்னைப் போலவே தியேட்டரில் படம் பார்க்க வந்திருந்த சொற்ப்ப பேர்களுக்குள்ளும் உலவியது. படத்தின் ரிசல்டை குறிக்கும் குறியீடாகத்தான் எடுத்துக் கொள்ள வேணும்

ரெட்டச்சுழி = சுழி………..ம்ஹும்.

டிஸ்கி:
சாந்தமில் முதல் காட்சியின் போதுபடத்தில் நடித்திருந்த முக்கிய கதாபாத்திரமாய் வலைய வரும் சிறுவன் அர்ஜுனுடனும்,(நிஜமாகவே செம ஸ்மார்ட் பையன்) மற்றும் சிறுவயது பாரதிராஜாவாக நடித்தவர்களின் குடும்பத்தினர்களுடன் மற்றும் சில நடித்தவரக்ளுடன்  படம் பார்த்தேன். நடிகர் அபிஷேக், சாய்ராம் போன்றவர்கள் வந்திருந்தார்கள். 

Apr 22, 2010

”ஆமென்”

”ஆமென்” என்கிற புத்தகம் வெளிவந்த ஆறே மாதங்களில் 12 பதிப்புகளை கண்டிருக்கிறது. இதை எழுதிய பெண் தலைமறைவாக இருக்கிறாராம். அவர் பெயர் சகோதரி ஜெஸ்மி.

இவரது புத்தகத்தில் பாதிரியாரால் பாலியல் ரீதியான பலாத்காரத்துக்குள்ளாகி தான் பட்ட வேதனைகளை, கொடுமைகளை பற்றி எழுதிய புத்தகம் தான் அது. இப்புத்தகம் உலகம் முழுக்க பலமான அதிர்வுகளை ஏற்படுதியுள்ளது என்றால் அது மிகையில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் இவர் ஆமென் புததகத்தின் இரண்டாவது பாகத்தை எழத ஆரம்பித்திருக்கிறார். இவர் எழுதிவரும் புத்த்கத்தின் மூலமாய் வறுமையினால் வாடும் அப்பாவி பெண்கள் சேவைக்காக தங்களை அர்பணித்து திருச்சபைகளில் கன்யாஸ்த்திரிகளாய் தஞ்சம் அடைபவர்களை, பாதிரியார்கள் பாலியல் ரீதியாய் சித்திரவதை செய்வதை பற்றி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் புத்தகமாய் இருக்கும் என்கிறார் ஜெஸ்மி.

சமீபத்தில் கூட ஊட்டியில் ஜோசப் பழனிவேல் ஜெயபால் என்கிற பாதிரியார் மீது அமெரிக்காவில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டு அது கிட்டத்தட்ட நிருபிக்கப்பட்ட நிலையில் இவர் அங்கிருந்து தப்பி இங்கே ஊட்டியில் குஜாலாக இருந்திருக்கிறார். இதற்கு பிஷப்புகளின் ஆதரவும் உண்டு. இப்போது கூட ஏதோ ஒருபிரஷரில் தான் விஷயம் வெளியே வருந்திருக்கிறது.

இந்த விஷயமும் பத்திரிக்கைகளில் வெளிந்தது. நித்யாந்தாவை போட்டு கிழிகிழி என கிழிதத பத்திரிக்கைகள், பதிவர்கள் யாருமே இச்செய்தியை பற்றி ஒரு வரி செய்தியாய் அங்கொன்றும், இங்கொன்று எழுதியதை தவிர பெரியதாய் எழுதியதாய் தெரியவில்லை. இம்மாதிரியான விஷயங்களில் எல்லா மத சாமியார்களும், ஒரு மார்கமாகவே இருக்கிறார்கள். தவறு செய்யும் யாரையும் ஒரே பார்வையில் தான் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு இந்து மத சாமியார்கள் செய்யும் செயல்களை பற்றிய செய்தி வந்தவுடனேயே ஆளாளுக்கு பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். அது என்ன காரணம் என்றே தெரியவில்லை. ஒரு வேளை பிரபலமாய் இருக்கும் சாமியார்களை பற்றி எழுதினால் தான் தங்கள் புத்தக விற்பனை ஏறும் என்ற எண்ணமோ? இல்லை அந்த ஒரு நாளுக்கான பதிவுகளுக்கான ஹிட்சுகளை ஏற்ற ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்களோ? என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

இதை நான் எந்த விதத்திலும் நித்யானந்தாவுக்கு ஆதரவாக எழுதியதாய் நினைக்க வேண்டாம். அவன் செயதது மகா அயோக்கிதனம். அனால் அவனை பற்றி எழுதிவிட்டு, மற்ற மத சாமியார்கள் செய்வதை கண்டு கொள்ளாமல் இருப்பது அதைவிட அயோக்கியததனமாய் எனக்கு படுகிறது.

எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் மத சாமியார் ஒருவர் எங்கள் ஏரியாவில் சிறுவர்களை வைத்து செய்த ஹோமோ செக்ஸுவல் விஷயங்களுக்காக மாட்டினார். ஒரு பெரிய பிரச்சனையான அந்த விஷயம் காதும், காதும் வைத்ததுபோல, போலீஸாராலும், பத்திரிக்கையினாலும், அரசியல் மற்றும் மதவாதிகளின் ஹெவி பிரஷிரினாலும் அமுக்கப்பட்டு. அவர் மட்டும் வேறு ஏரியாவுக்கு காலி செய்யப்பட்டார். இது நடநத்து சென்ற ஆட்சியில்.

தவறு என்று வரும் போது அது யாராக இருந்தாலும் சுட்டிக் காட்டப்படுவது அவசியம். பத்திரிக்கைகளோ, அரசாங்கமோ செய்ய தவறினால் கூட பதிவர்களாகிய நாம் அதை மத சார்பின்மையோடு செய்வது நம் கடமை.

Apr 21, 2010

Phoonk 2 –(2010)

x
phoonk ஏற்கனவே முதல் பாகம் பார்த்தவர்களுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. முதல் பாகத்தில் தன்னுடன் தொழில் செய்யும் ஒரு பெண் தன்னை ஏமாற்றுகிறாள் என்று கண்டுபிடித்து அவளை வெளியே அனுப்புகிறான் கதாநாயகன். அவள் அவனை பழி வாங்க.. அவனின் வீட்டிற்கு பில்லி சூனியம் வைக்கிறாள். அதனால் அவனது பெண்ணுக்கு பேய் பிடித்து எக்ஸார்ஸிஸ்ட் போல ஆகிவிட, பேய் பூதங்களை நம்பாத கதாநாயகன் அவளுக்கு மருத்துவ ரீதியாய் ட்ரீட்மெண்ட் செய்ய, இன்னொரு பக்கம் அவனது மனைவி மாந்திரீகத்தை அணுக, இருக்கும் பிரச்சனைகளுக்கு நடுவே மாந்திரீகம் இருக்கிறது என்று மனைவியும், இல்லை என்று கணவனும் சண்டைப் போட்டுக் கொள்ள், ஒரு கட்டத்தில் கணவன் நம்பி ஒரு கண் தெரியாத மாந்திரீகனை அழைத்து பில்லி சூனியத்தை கண்டுபிடித்து, பேயிடமிருந்து விடுவிக்கிறான். ஏவிவிட்டவள் இறக்கிறாள்.

இரண்டாவது பாகத்தில் இறந்து போன அந்த பெண் ஆவி ரூபமாய் கதாநாயகனின் குடும்பத்தை தொடர்கிறாள். காட்டில் குழந்தைகள் மூலமாய் ஒரு பொம்மை ரூபத்தில் வீட்டிற்குள் நுழைய, கொஞ்சம், கொஞ்சமாய் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனின் மனைவிக்குள் பேய்யா இறங்கிவிடுகிறாள் செத்துப் போனவள். அவ்வப்போது சந்திரமுகியாய் மாறி, தன் கணவனிடம், உன்னை கொல்ல மாட்டேன் உன் குடும்பத்தை கொஞ்சம், கொஞ்சமாய் அழிக்கிறேனா இல்லையான்னு பார். என்று சவால் விடுகிறாள் மனைவி ரூபத்தில் இருக்கும் பேய்.
Phoonk-2 மனைவி ரூபத்தில் இருக்கும் பேய் அவனையும், அவன் குடும்பத்தையும் பழிவாங்கியதா.? அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை ஒரே ரத்தமயமாய் காட்டியிருக்கிறார்கள். படம் நெடுக பேய் வந்த பிறகு கார்பரேஷன் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவது போல ரத்தமாய் கொட்டுகிறது.

படத்தில் பாராட்டபட வேண்டிய முக்கிய விஷயம் கேமரா. வழக்கமாய் ஆர்.ஜிவியின் படங்களுக்கான கோணங்களுடன். பின்னணி இசை பெரிதாய் பயமுறுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓரிரு காட்சிகளை தவிர..
நடித்திருக்கு நடிகர்கள் அனைவரின் நடிப்பினால் பல காட்சிகள் உயிரூட்ட பட்டிருக்கிறது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சியில் சுதீப்பின் நடிப்பும், அவனது மனைவிக்கு அந்த வீட்டில் ஏதோ தப்பாக் இருக்கிறது என்று உணர்ந்து சுதீப்பிடம் அழும் காட்சி.

மிலிந் கட்கர் இயக்கியிருக்கிறார். இவர் தான் பூங் முதல் பாகத்தில் ரைட்டர். இரண்டாவது பாகத்தில் முதல் பகுதி முழுவதும் சும்மாவாவது பில்டப் கொடுத்தே நோக அடிக்கிறார். இரண்டாவது பாதியில் சுறுசுறுப்பாய் இருந்தாலும் கடைசி காட்சிகளில் வரும் ஓவர் ரத்தமும், பெரியதாய் போராட்டம் ஏதும் இல்லாத காட்சியமைப்புகளால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. அநேகமாய் பூங் 3 வரும் என்றுதான் தோன்றுகிறது.
Phook – Nothing Extraordinary



கேபிள் சங்கர்

Apr 19, 2010

கொத்து பரோட்டா – 19/04/10

asus கோபிக்கு போயிருந்தேன் நம்ம ஈரோட்டு கதிருக்கு போன் செய்தபோது மாலை ஒரு நிகழ்ச்சி இருப்பதாகவும் நிச்சய்ம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என்னை பிக்கப் செய்து கொள்வதற்கு ஒரு ஏற்பாட்டையும் செய்து வைத்தார். அந்த விழா மரங்களின் தந்தை என்றழைக்கப்படும் அய்யாசாமி அய்யாவுக்கும். காஞ்சிக் கோவில் நாகராஜன் அவர்களுக்கும், நாமக்கல் கலெக்டர் சகாயம் அவர்களால் பாராட்டு விழாவுக்கான லயன்ஸ் க்ளப் ஏற்பாடு செய்திருந்த விழாதான். அய்யாசாமி அய்யா இதுவரை 3000 மரங்கள் வளர்த்திருக்கிறார். திரு நாகராஜன் அவர்கள் அவருடய ஏரியாவை சுற்றி சுமார் பத்தாயிரம் மரங்கள் வளர்த்திருக்கிறார். அவர்களுடன் காரில் பயணித்த போது பேசியது மிகவும் சந்தோஷமாக இருந்த்து. உடல் நிலை மற்றும் வயது காரணமாய்  தளர்வடையாமல் இன்னமு தங்கள் கஷ்ட ஜீவனத்தினூடே இதை செய்து கொண்டிருக்கும் இருவரையும் வாழும்பெரியார் என்று கலக்டர் அவரக்ள் பாராட்டியது தகும். நாகராஜனின் பேரன் அவனது பள்ளியில் இரண்டு மரங்களை வளர்க்கிறானாம். இதை பற்றிய விரிவான ஈரோடு கதிரின் பதிவை படிக்க
############################################################
கொஞ்ச காலமாய் லிவ்விங் டு கெதர் கான்செப்ட் தமிழ் நாட்டில் பரவ ஆரம்பித்து மிகவும் ஆழமாய் ஊடூருவ ஆரம்பித்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் ஆண், பெண் இருவருக்குமான பொருளாதார சுதந்திரம் தான் என்கிறார்கள் மன நல வல்லுனர்கள். கமிட்மெண்ட் இல்லாத ஒரு வாழ்க்கை, பகிர்ந்து கொண்டு வேலை செய்யும் மனப்பான்மை, யாரும் யாரையும் டாமினேட் செய்யாத வாழ்க்கை, இதனால் வாழ்ககை சுகமாக போகிறது என்கிறார்கள் இந்த ஜோடிகள். இதே உணர்வு திருமண பந்தத்தில் கிடைப்பதில்லை என்றும். திருமண பந்தத்தில் ஏதும் ஸ்பெஷலாக இல்லை என்றும் அது சமுதாயத்தால் உன்னதமான விஷயம் என்று பெரிதாக்கப்பட்டது என்கிறார்கள். எனக்கு தெரிந்த லிவிங் டு கெதர் ஜோடிகள்.
############################################################
arumbu-meesai-kurumbu-paarvai-audio-launch-stills_1_051415123 arumbu-meesai-kurumbu-paarvai-audio-launch-stills_13_051858123
சென்ற வாரம் அரும்பு மீசை குறும்பு பார்வை என்கிற படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு, சென்றிருந்தேன். படத்தின் இணை தயாரிப்பாளர் என்னுடய நண்பர். சமீபகாலத்தில் சுமார் ஆயிரம் பேர் வந்திருந்த பாடல் வெளியீட்டு விழா இதுவாகத்தான் இருக்கும் என்று என் எண்ணம். அழைப்பிதழையே வித்யாசமாய் அனுப்பியிருந்தார்கள். படத்தின் ஸ்டில்களோடு, வைரமுத்துவின் பாடல் வரிகளை அந்த கால பாடல் புத்தகம் போல அடித்துக் கொடுத்திருந்தார்கள். வெளியீட்டு விழாவை ஒரு நாலு வயது பெண் குழந்தைக்கு தேவதை போல வேடமிட்டு சுவையான தமிழில் பேசியது அதி மதுரம். அதே போல் இணைதயாரிப்பாள்ர் படத்தில் ஒத்துழைத்த உதவி இயக்குனர்களுக்கும், ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டுக்கும் நன்றி சொன்னது நெகிழ்வாக இருந்தது. வெளியே வரும் போது ஆளுக்கு ஒரு சுருக்கு பை அதில் பெருவிளங்காய் உருண்டை, கொடுக்காப்புளி, நாவல் பழம் என்று கிராமத்து அயிட்டங்களாய் கொடுத்தது இன்னும் இண்ட்ரஸ்டிங். வெளியிடப்பட்ட பாடல்களில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர் வெற்றிவீரன் பாரதிராஜாவின் சீடராம். பார்போம் வித்யாசமான விளம்பரங்கள், மூலம் கவனிக்க வைத்திருக்கும் இக்குழுவினரின் படம் எந்தளவுக்கு நம் கவனத்தை கவரும் என்று.
###########################################################
சாப்பாட்டுக்கடை
சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலஸுக்கு எதிராய் ஒரு இரவு நேர கையேந்தி பவன் இருக்கும். முருகன் இட்லிகடை இட்லியைவிட நன்றாக இருக்கும் சகாயவிலையில். இட்லிக்கு சால்னாவை விட காரசட்னி பெஸ்ட். சூடான சுவையான இட்லிக்கு..
###########################################################
இந்த வார குறும்படம்
நண்பர், பதிவர் திருப்பூர் ரவிக்குமார் எழுதி இயக்கியபடம். படம் கொஞ்சம் நீளம் என்றாலும்.. மிக சுவாரஸ்யமாய் தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவை அழகாய் சொல்லியிருக்கிறார்.

Kannamoochi
Uploaded by mathavaraj. - Classic TV and last night's shows, online.
###########################################################
இந்த வார தத்துவம்
வெற்றி பெற்றவர்களின் கதைகளை படிக்காதே. தோல்வியடைந்தவர்களின் கதைகளை படி ஏனென்றால் தோல்வி கதைகளில் தான் வெற்றியடைவதற்கான வழிகள் உள்ளது. பிடரல் காஸ்ட்ரோ.
############################################################
இந்த வார கண்டுபிடிப்பு
சம்சாரம் ஒரு மின்சாரம்னு சொல்றாங்க அப்ப சின்ன வீட்டை என்னன்னு சொல்வாங்க? ஜெனரேட்டர்னுதான்.
###########################################################
ஏ ஜோக்
ஒரு பாலைவனத்தில் வேலை செய்யும் தன் கம்பெனி ஆளூக்கு அவனுடய செக்‌ஷுவல் வறட்சியின் காரணமாய் ஒரு அழகாம பெண்ணுடன் ஒரு வாரம் டூர் அனுப்பியது கம்பெனி. ஒரு வாரம் கழித்து வேலைக்கு திரும்பியவனிடம் உடன் வேலை செய்பவர்கள் எல்லாம் கூடி நின்று என்னாச்சு சொல்லு என்று ஆர்வத்துடன் கேட்க, அவன் மூணாவது நாள் என்னாச்சுன்னா.? என்று ஆரம்பித்தான். முதல் நாளிலேர்ந்து ஆரம்பி என்றார்கள் நண்பர்கள். அதைத்தான் சொல்றேன்.. மூணாவது நாள் அன்னைக்கு தான் அவ கேட்ட கொஞ்சம் பாத்ரூம்போயிட்டு வந்திரட்டுமா..?
############################################################
கேபிள் சங்கர்

Apr 17, 2010

சிவப்பு மழை- திரை விமர்சனம்

Sivappu_Mazhai_Movie_Pics_04 கின்னஸ் சாதனைக்காகவே எடுக்கப்பட்ட படம். அதாவது மொத்த படத்தையும் 12 நாட்களில் தயாரித்து, வெளியிட தயாராக்கிய படம். என்று கின்னஸ் சாதனை செய்த படம்.
Sivappu_Mazhai_Movie_Pics_06 மத்திய அமைச்சரின் பெண்ணை கடத்தி வைக்கிறான் ஒரு இலங்கை இளைஞன். அவனுடய ஜெயில்வாசி சகாக்களை விடுதலை செய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறான். அதை செய்ய மறுத்தால் மத்திய மந்திரியின் பெண்ணை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். ஒரு பக்கத்தில் போலீஸ் மந்திரியின் பெண்ணை மீட்பதற்காக போராடுகிற்து. இன்னொரு பக்கம் மந்திரி பெண்ணுக்கு தன்னை கடத்திய இளைஞன் தீவிரவாதி இல்லை நல்லவன் என்று புரிந்து அவனுக்கு உதவுகிறாள்.  அவன் ஏன் இவளை கடத்தினான், எதற்காக அந்த இரண்டு ஜெயிலில் உள்ள ஆட்களை விடுதலை செய்யச் சொன்னான் என்பதை முடிந்தவரை இண்ட்ரஸ்டாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
Sivappu_Mazhai_Movie_Pics_08 முதல் பாதி ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் ரெண்டாவது பாதியில் வரும் இலங்கை பிரசசனையில் வில்லன்கள் தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் ராணுவ உடை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் சிங்கள வீரர்களா..? அல்லது விடுதலை புலிகளா..? சிங்கள ஆள் என்றால் அவன் ஏன் தமிழ் நாடில் வ்ந்து ஒளிய வேண்டும்? விடுதலை புலி என்றால் அவர்கள் ஏன் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் கதாநாயகனின் மனைவியை கற்பழித்து கொல்ல வேண்டும்? ஒரு எழவும் புரியவில்லை.
படம் முழுக்க அவ்வப்போது காமெடி செய்கிறேன் பேர்வழி என்று விவேக்கும், அவரது சகாவும் வந்து சரியான ப்ளேடு போட்டு போகிறார்கள். முடியலை. தேவையில்லாமல் அங்காங்கே பாடல்கள் என்ற இடைசொருகல்கள் வேறு.
Sivappu_Mazhai_Movie_Pics_12 மிக குறுகிய கால தயாரிப்பாய் இருப்பதால் விளையக்கூடிய், அதுவும் மூன்று யூனிட்டுகள் ஷூட் செய்த காட்சிகள் ஒன்றுக்கொன்று மேக்கிங்கில் சொதப்பியிருப்பது நன்றாக தெரிகிறது.
மீரா ஜாஸ்மின் ஆரம்ப காட்சியில் மயக்கமாகி, பின்பு தெளிந்து, ஒரு டூயட் பாடிவிட்டு “எஸ்” சாகிறார். கதாநாயகன் ஜோசிம்மின் நடிப்பும், அவரது இலங்கை தமிழும், அவரின் ஒட்டு தாடி போலவே ஒட்டாமல் இருக்கிறது. மந்திரி சுமன் இருக்கும் சிறு அறையில் அங்கும் இங்கும் அலைந்தபடி டென்ஷனாவதை தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. கமிஷனராக வரம் ராஜிவ், மந்திரியின் நண்பனாகவும் இருப்பதால் “டென்ஷன் ஆகாதடா.. நாங்க பாத்துக்கறோம். பீ கூல்” என்று திரும்ப திரும்ப கூறி நம்மை டென்ஷனாக்குகிறார்.
சிவப்பு மழை – கின்னஸுக்காக பாராட்டலாம்
கேபிள் சங்கர்

Apr 16, 2010

ஜில்லுனு காத்து . .. ஜன்னலை சாத்து.

ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்...

சில மாதங்களுக்கு முன் சென்னை  உள்ள பெண்கள் கல்லூரியில் நடந்த கல்சுரல்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராய் கூப்பிட்டிருந்தார்கள். பம்மலில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது,  ரயில்வே ஸ்டேஷனில் நின்றபடி, சைட் அடிப்பதற்காகவே பல்லாவரத்தில் இறங்காமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி எல்லோரையும் ”அனுப்பி” வைத்துவிட்டு அடுத்த ரயிலை பிடித்து அவசர அவசரமாய் காலேஜுக்கு போன நாட்கள் ஞாபகம் வந்தது. இப்போது அந்த காலேஜில் நடக்கும் விழாவுக்கு நடுவர்.

உள்ளே நுழைந்ததும் எங்கே பார்த்தாலும் பிஸியாய் மாணவிகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கல்சுரல்ஸ் என்பதால் மற்ற கல்லூரியிலிருந்து மாணவர்களும் வந்திருந்ததால், அவர்களுடன் சில மாணவிகள் மட்டும் தைரியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள்  பேசிக் கொண்டிருப்பதை மற்ற பெண்கள் பார்க்கிறார்களா? என்று நோட்டம் விட்டபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி பேசும் போது அவர்களின் பாடி லேங்குவேஜ் மிக அழகு. மாணவிகள் முக்கால்வாசி பேர் புடவையில்தானிருந்தார்கள். அவர்கள் முகம் முழுவதும் புடவை கட்டியிருக்கும் பெருமையும், சந்தோசமும், ஸ்டைலுமாய் அவ்வப்போது முந்தியை  முன்பக்கம் இழுத்துவிடுவதும், அட்ஜெட்ஸ் செய்து கொள்வதுமாய் இருந்தார்கள். மாணவர்களுக்கு சிறிதும் சளைத்தவர்களல்ல என்பது போல செம விசில், ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம்.
ஆட்ஸாப் என்று ஆளுக்கொரு ப்ராடெக்டை கொடுத்துவிட்டு அதை பற்றி விளம்பரம் கான்ஸெப்டை பிடித்து, நடித்துக் காட்ட வேண்டும் என்பதுதான் போட்டி.சுமார் பதினைந்து காலேஜிலிருந்து வந்து போட்டியில் கலந்து கொண்டார்கள். சரியாக ஒவ்வொரு அணியினரும் ஐந்து நிமிடம் ஸ்டேஜில் பர்பாமென்ஸ் செய்ய வேண்டும், அந்த இடைபட்ட நேரத்தில் மற்றொரு டீமுக்கு அவர்களுடய ப்ராடெக்டை தெரிவு செய்து கொண்டு அவர்களது ட்ர்னுக்காக ரெடியாகவேண்டும்.
அவர்கள் லிஸ்டில் கொடுத்திருந்த ஒரு சில ப்ராடெக்ட்டுகள் மேடையில் நடித்து காட்ட முடியாத படி அபத்தமாகவும் இருந்தது. எம்.பி.3ப்ளேயர் அதில் ஒன்று. பெரும்பாலான மாணவிகள் பெயரை கொடுத்துவிட்டிருந்தார்களே தவிர கொடுத்த ஐந்து நிமிடங்களில் ஏதும் தயார் செய்து கொள்ளவே இல்லை. அதே போல அவர்களுக்கு ப்ராடெக்டுகளின் உபயோகங்களை பற்றிய விஷயஙக்ள் கூட மிக குறைவாகவே தெரிந்திருந்தபடியால். மேடைக்கு வந்து இரண்டாவது நொடியில் நடித்து முடித்துவிட்டார்கள். திருமப் திருமப் தேய்ந்து போன ரெக்கார்ட் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். பல பேர் மேடைக்கு வந்ததும் வெட்கப்பட்டு, “ஏய். நீதான்பா..பேசணும்” என்றெல்லாம் பேசிக் கொண்டது சிரிப்பாக இருந்தது.
முதலிலேயே காலேஜ் ஹெ.ஓ.டி சொல்லியிருந்தார். நீஙக்ள் ஏதாவது குழுவை பாராட்டிவிட்டால் போது அடுத்து வருபவர்கள் அதையே தங்கள் கான்செப்டில் வைத்துவிடுவாரக்ள் என்று அதையும் மீறி ஒரு குழுவினர் தங்கள் வியாபார சேல்ஸ் உயர்வை லைனாக மாணவர்களை ஒவ்வொரு உயரத்தில் குனிய வைத்து, அவர்களை பச்சை குதிரை தாண்டுவதை போல தாண்டி தங்கள் வியாபார உயர்வை காட்டியதை பாராட்டிய பின், அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லோரும் அதே உக்தியை பின்பற்றியது ம்ஹும்.
வெளியிலிருந்து வந்து ஒரு ஆண்கள் கல்லூரி இறுதியில் வெற்றி பெற்றது. அவர்கள் எடுத்துக் கொண்ட ப்ராடெக்ட் ஃபேன். கிடைத்த ஐந்து நிமிடங்களையும், கிடைத்த மேடையையும் முழுவதுமாய் உபயோகப்படுத்தினார்கள். மிகுந்த நகைச்சுவையோடு கன்செப்டுகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களது கேப்ஷன் தான் இருக்கிறதிலேயே தூள் “ஜில்லுனு காத்து. ஜன்னலை சாத்து”

டிஸ்கி: அன்று சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களிடையே என்னுடய குறும்படமா “ஆக்ஸிடெண்ட்” திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் என் குறும்படம் திரையிடப்பட்டு கரகோஷங்களுடனான பாராட்டை பெற்றது என் சினிமா தேடலுக்கான வெறியை இன்னும் ஏற்றிவிட்டது என்றால் மிகையாகாது.

கேபிள் சங்கர்

Apr 13, 2010

பார்கிங் எனும் பகல் கொள்ளை

ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்...

sathyam theater pic சென்னையில் எனக்கு தெரிந்து ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களில் கூட சைக்கிளுக்கு 3 ரூபாயும், பைக்குக்கு 5 ரூபாயும், கார்களுக்கு 10 ரூபாயும் வாங்கி கொண்டிருந்தார்கள். பின்னாளில் பல காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களில் சைக்கிள் பார்க்கிங் என்பதே இல்லாமல் வழக்கொழிந்துவிட்டது.

சென்னையில் பைக் பார்க்கிங்குக்கு பத்து ரூபாய் வாங்கிய புண்ணியத்தை கட்டிக் கொண்டவர்கள் சென்னையில் ஏன் தமிழ் நாட்டிலேயே முதல் முதலாய் மல்ட்டிப்ளெக்ஸ் எனும் கான்செப்டை அளித்த சத்யம் தியேட்டர் நிறுவனத்தினர் தான். அருமையான உள் கட்டமைப்பு வசதியோடு ஒளி, ஒலி அமைப்புடன், முதல் தரமான வசதிகளூடன் அமைக்கப்பட்ட தியேட்டருக்கு மக்களின் அமோக ஆதரவினால் இன்றளவிலும் சென்னையின் மிக சிறந்த மல்ட்டிப்ளெக்ஸாக உருவெடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

முதலில் பைக்குக்கு பத்து ரூபாய் என்பது கஷ்டமாக இருந்தாலும், மெல்ல, மெல்ல அது பழகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் அவர்கள் நீங்கள் டிக்கெட் வாங்குவதற்கென்று ஒரு அரை மணி நேர இலவச பார்க்கிங் வசதி வைத்திருக்கிறார்கள். அதற்கென ஒரு ஆளை போட்டு அரை மணி நேரத்திற்கு பின் நீங்கள் அங்கேயே வண்டியை வைத்திருந்தால் அதற்கு 50 ரூபாய் வரை ஃபைன் கட்ட வேண்டியிருக்கும். இவர்கள் பத்து ரூபாய் வாங்க ஆரம்பித்தவுடன் பக்கதில் இருந்த உட்லாண்ட்ஸ் வாங்க ஆரம்பித்தது. அவர்கள் கூட பரவாயில்லை, சென்னையில் மிக விஸ்தாரமான பார்க்கிங் இடம் கொண்ட தியேட்டர்களில் உட்லாண்ட்ஸ், பைலட், சத்யம் ஆகியவை ஆகும். ஆனால் இவர்கள் அளவுக்கு தியேட்டரில் ஒலி,ஒளி வசதியோ, கட்டமைப்பு வசதியோ, பார்க்கிங் வசதியோ, இல்லாத தியேட்டர்களான மெலடி, ஜெயப்ரதா( இப்போது மூடப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு வரி பாக்கியினால்) போன்றவைகளும் வாங்க ஆரம்பித்ததுதான். கேட்டால் சத்யம்ல வாங்கறாங்க இல்லை.. என்று சொல்கிறார்கள். சத்யமில் தியேடட்ர் பூராவும் வேர்காம ஏஸி போடுறாங்க நீஙக் போடுறீங்களா? சீட் எல்லாம் நல்ல வசதியா வச்சிருக்காங்க நீ வச்சிருக்கியா என்று யாரும் கேட்பதில்லை. என்னை தவிர.
kamala theatre சரி எல்லோரும் தியேட்டர் வசதிகளை மேம்படுத்துறாஙக்ளோ இல்லையோ பார்க்கிங் ரேட்டையும், டிக்கெட் ரேட்டையும் சத்யம் தியேட்டரை பார்த்து ஏத்திட்டானுங்க. இவனுங்களுக்கு அப்பன் ஒருத்தன் அரம்பிச்சான். சென்னை சிட்டி செண்டர்ல ஐநாக்ஸுனு ஒண்ணை. சென்னையில் மால் கான்செப்டில் வந்த முதல் தியேட்டர் என்று சொல்லலாம். இங்கு படம் பார்க்க மட்டும் வருபவர்களுக்கு தியேட்டர் ஆரம்பித்த சில நாட்கள் தனியே பார்க்கிங் என்று பத்து ரூபாய் வாங்கினார்கள். பின்பு சில நாட்களீலேயே முதல் இரண்டு மணி நேரத்திற்கு பத்து ரூபாயும், அடுதத் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து ரூபாயும் வாங்க ஆரம்பித்தார்கள். உள்ளே போகும் போதே தியேட்டரா என்று கேட்டு விட்டு பதினைந்து ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். இங்கும் என்னை போல் சிலர் மட்டும் தான் முதல் இரண்டு மணிநேரங்களுக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு போகும் போது மேலும் சில மணி நேரங்கள் ஆகியிருந்தால் அதற்கேற்ற பணத்தை வாங்கிக் கொள்வார்கள்.  இந்த தியேட்ட்ரில் நீங்கள் டிக்கெட் ஆன்லைனில் வங்கினால் பரவாயில்லை டிக்கெட் நிச்சயம் என்று வண்டியை பார்க்கிங் செய்யலாம். ஆனால் இங்கே டிக்கெட் இருக்கிறதா இல்லையா என்று பார்பதற்கே பத்து ரூபாய் தண்டம் அழ வேண்டும். வெறும் சினிமா மட்டுமே பார்க்க வருபவன் டிக்கெட் இருக்கிறதா இல்லையா என்று பார்பதற்கே பத்து ரூபாய் ஆழ் வேண்டும். டிக்கெட் இல்லையென்றால் பணம் எள்ளுதான்.

அடுத்த புலி நம்ம உதயம் தியேட்டர் இவனுங்க தியேட்டர்ல வீக் எண்டுல படம் பார்க்க பார்க் பண்ணிட்டு உள்ளே போறதுகுள்ள படம் இண்டெர்வெல் விட்டுருவான். அதே லட்சனம் தான் நம்ம சாந்தி,  தேவி காம்ப்ளெக்ஸ் எல்லாம்.

சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டராக இருந்து இரண்டு ஸ்கிரீன் தியேட்டராக மாறிய கமலா தியேட்டரின் அழும்பு அதை விட அநியாயம். பைக் பார்க்கிங் டைரக்டாக பதினைந்து ரூபாய். அம்மாம் பெரிய மாலே முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு ரேட்டும், அடுத்து வரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ரேட் வாங்கும் போது, இவர்களுக்கென்ன மூத்திர சந்து போல இரண்டு இடங்களை தவிர மிக குறுகலான பார்க்கிங் வசதியுள்ள இவர்கள் தியேட்டருக்கு  பதினைந்து ரூபாய் கொள்ளை.

மால்காரர்கள் சொல்லும் ஒரு காரணம் இங்கே வருபவர்கள் படம் மட்டும் பார்ப்பதில்லை. குறைந்த பட்சம் ஜோடியாக வருபவர்கள் வண்டியை வைத்துவிட்டு நான்கு முதல் ஆறு மணிநேரம் சுற்றி விட்டுதான் வருகிறார்கள். இவர்களில் யார் சினிமாவுக்கு போனவர்கள். யார் சும்மா விண்டோ ஷாப்பிங் செய்தவர்கல் என்று எங்களூக்கு தெரியாது. அதனால் தான் அவ்வாறு வாங்குகிறோம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள். ஏன் வாங்க முடியாது தியேட்டருக்கு என்று தனியே பார்க்கிங் லேன் போட்டுவிட்டால் கண்டு பிடிக்கலாமே.?
parking ticket இதெல்லாம் கொடுமை, கொடுமை என்று குதித்தால் இன்னொரு கொடுமை வந்து இங்க கூத்தாடுது. அதான் புதுசா திறந்திருக்கிற பி.வி.ஆர் சினிமாஸ்தான். அம்பா மால்ல பார்க்கிங் எல்லாம்  அருமையா பேஸ்மெண்டுல வண்டிய வெய்யில்ல காய வைக்காம எல்லா ப்ரோட்டீன் குறைஞ்ச .. கொண்ட பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் ரேட்டில் நீங்க மயக்கமே போட்டு விடுவீர்கள். இவர்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய். பின்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பத்து ரூபாய். நீங்கள் நாலாவது ப்ளோரில் இருக்கு தியேட்டருக்கு சென்று கவுண்டரில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்கவே பத்துரூபாய் அழ வேண்டியிருக்கும்.  இதை விட கொடுமை என்னவென்றால் வார இறுதி நாட்களில் முதல் ஒரு மணிக்கு பத்து ரூபாயும், அடுத்து வரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இருபது ரூபாயும் வாங்குகிறார்கள். ஸோ.. நீங்க ஒரு படம் பார்க்க போனால் தியேட்ட்ர் காசு 120 ருபாயும், குறைந்த பட்சம் அரை மணி நேரம் முன்னதாக இருக்க வேண்டிய பட்சத்தில்  மூன்று மணி நேரத்திற்கு சாதாரணமாக முப்பது ரூபாயும், வார இறுதி நாட்களுக்கு 50 ரூபாயும் பார்க்கிங்குக்கு மட்டும் செலவாகும்.
inox chennaiஇவ்வளவு புலம்பல்களின் நடுவில் பி.வி.ஆர் தியேட்டரை பற்றி சொல்லியாக வேண்டும் மிக அருமையான டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்புடன், ஒரு சீட்டிற்கும், மற்றொரு சீட்டிற்கும் ஒருவர் கை இன்னொருவர் மீது படாது, அதே போல் யார் காலும் மிதிபடாமல் நடக்கும் வகையிலும் அமைக்கப்பட்ட அருமையான தியேட்டர். ரசிக்குமபடியான இண்டீரியர், அற்புதமான ஏஸி, பயோ டெக்னாலஜியின் மூலமாய் தண்ணீரே கிட்டத்தட்ட பயன்படுத்தாத கழிவறைகள் என்று அட்டகாசப் படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் விற்கும் ஸ்நாக்ஸ் விலையை தவிர, குறைந்த பட்ச விலையே 50 ரூபாயிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அத்துனை தியேட்டரிலும் டிஜிட்டல் புரொஜெக்‌ஷனை நிறுவியிருக்கிறார்கள். இவர்களின் சீட்டிங் வழக்கமாய் எல்லா தியேட்டர்களில் இருப்பது போல பின்னால் இருக்கும் வரிசை ஏ விலிருந்து ஆரம்பிக்காமல் திரைக்கு முன்னால் இருக்கும் வரிசையிலிருந்து ஏ வரிசை ஆரம்பிக்கிறது. விரைவில் கோயம்பேடு ரோகிணி  தியேட்டருக்கு  ஆப்பு வரும்  என்று தெரிகிறது. மேலே சொன்ன எந்த வித வசதிகளும் இல்லாமல் அவர்கள் தியேட்டரில் குறைந்த பட்சம் முதல் வாரத்தில் 100 ரூபாய் தான் டிக்கெட். விரைவில் அவர்கள் தியேட்டரை  புதுப்பிக்காவிட்டால் மக்களிடம் பப்பு வேகாது என்றே சொல்லுவேன்..

பிவிஆர் காரர்கள் நிச்சயம் மாலின் முகப்பிலேயே அவர்களது பாக்ஸ் ஆபீஸுக்கான ஒரு கவுண்டரை நிச்சயம் திறக்க வேண்டும். அதே போல் சினிமா டிக்கெட் வாங்குபவர்களுக்கு மட்டுமாவது சத்யத்தை போல டெம்பரவரி பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் இல்லையேல் டிவிடியே நமஹ என்று வீட்டிலிருந்தே படம் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் ரசிகர்கள்.

ஏதோ கலைஞர் புண்ணியத்தில் அதிகபட்சமாக 120 ரூபாய்க்கு இவ்வளவு வசதிகளோடு தமிழ் நாட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதே வசதியுள்ள மற்ற மாநில பிவிஆர் மற்றும் இதர மல்ட்டிப்ளெக்ஸ்லி எல்லாம் முதல் வாரத்தில் குறைந்த பட்சம் 300 ரூபாய் வரை போகும். ரசிகர்கள் பொன் முட்டையிடும் வாத்து தான் அதற்காக முழுவதாக அறுக்க நினைத்தால் அவர்கள் இழக்கப் போவது தியேட்டர் ரசிகர்களைத் தான். 

டிஸ்கி: இந்த லட்சணத்தில் வண்டிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது ஸ்பேர்பார்ட்ஸ் காணாமல் போனாலோ நிர்வாகம் பொறுப்பல்ல என்று ஒரு டிஸ்கி வேறு காசை வாங்கிக் கொண்டு.

கேபிள் சங்கர்

Apr 12, 2010

கொத்து பரோட்டா –12/04/10

விரைவில் வரப்போகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நக்கீரன் கோபாலிடம் ஒரு நேர்காணல் படப்பிடிப்பு நடத்தினோம். நேர்காணலில் புலனாய்வு பத்திரிக்கையாளரின் பணி மற்றும் அப்பணியின் பிண்ணனி என்ன என்பது பற்றி நிறைய பேசினார். அப்போது பல சமயம் பணம் கொடுத்துக் கூட செய்திகளை பெற்றிருக்கிறதாக சொன்னார். பேட்டி எடுத்தவர் சட்டென அதை பிடித்துக் கொண்டு மற்றவர்கள் லஞ்சம் வாங்கினால் அதை பற்றி உங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு அவர்க்ளின் முகத்திரையை கிழிக்கிறீர்களே? இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை பெறுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே..? என்று மடக்கியவுடன், நக்கீரன் கோபால் சிரித்தபடி அண்ணாசாலையில் 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் போக வேண்டும், அதை மீறி போனால் அவர்களை பிடித்து தண்டிப்பதுதான் ஒரு போலீஸ்காரன் வேலை. அதிக வேகத்தில் வண்டி ஓட்டிப் போகிற ஒருவனை சட்டப்படி ஓட்டக்கூடிய 50 கி.மீட்டரில் அவனை துரத்தினால் 100.கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டுபவனை பிடிக்க முடியுமா? அதனால் அவனை பிடிக்க 110 கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டினால் தான் பிடிக்க முடியும். அது போலத்தான் பணம் கொடுத்து செய்திகளை சேகரிப்பது என்றாரே பார்கலாம். இண்டலிஜெண்ட் பதில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
மணிசர்மாவின் இசையில் சுறா படத்தில்  ”தஞ்சாவூர் ஜில்லாக்காரி” நிச்சயம் ஹிட் பட்டியலில் வரப் போகும் பாடலாய் தெரிகிறது. அதேபோல் சமீப காலத்தில் நிறைய முணுமுணுத்த பாடல் நாணயம் படத்தில் வரும் “நான் போகிறேன் மேலே..மேலே” தான்.  ஜீன்ஸ் படத்தில் வரும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலை ஞாபகப்படுத்தினாலும்..ஸ்வீட் மெலடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார செய்தி
இந்தோனிஷியாவில் ஒரு இளைஞர் தன்னுடய “லுல்லா”வை கட் செய்து காக்கா ஓஷ் செய்துவிட்டாராம். காரணம் காதல் தோல்வி. தன் காதலி தன்னை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டதால் மனமுடைந்து அப்படி செய்துவிட்டாராம். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் இவரின் “லுல்லாவை” கிணற்றில் தூக்கி போட்டு விட்டதால் இவர் பிழைத்தாலும்  “லுல்லா” இல்லாமல் தான் இவர் வாழவேண்டுமாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
உலகமே எதிர்பார்க்கும் ஒரு ஹீரோவை பற்றிய குறும்படம்.  இதற்கான லிங்க் அனுப்பிய ஆதிக்கு நன்றிகள் பல. http://en.tackfilm.se/?id=1270958903718RA28


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம் நீ வேகமாய் நடக்க விரும்பினால் தனியாக நட. நெடுந்தூரம் நடக்க விரும்பினால் சேர்ந்து நட – ரத்தன் டாடா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார கிசுகிசு
தமிழகம் முழுவதையும் தன் கேபிளால் ஆண்டு கொண்டிருக்கும் சகோதரர்கள் நிறுவனத்துக்கு எதிராய் புதியதாய் ஒரு கேபிள் நெட்வொர்க் “அ”னாவின் ஆதரவில் ஏப்ரல் 14ல் ஆரம்பிக்க போகிறதாம். ஒரு வருடத்துக்குதான் கையில் காலில் எல்லாம் விழுந்து ‘அ”னாவுடன் பேசி செட்டில் ஆகியிருக்கு நிலையில் மீண்டும் தலை தூக்கியிருக்கும் புது நிறுவனைத்தை எப்படி டீல் செய்வது என்று குழம்பியிருக்கிறார்களாம் சகோதரர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ ஜோக்
விவாகரத்துக்காக கோர்ட்டில் கவுன்ஸிலிங்கிலிருக்கும் கணவன் மனைவியிடம் குழந்தைகள் யார் வளர்பது என்ற பிரச்சனை வரும் போது மனைவி அவர்கள் தன் குழந்தைகள் என்றும் தான் தான் வளர்ப்பேன் என்று வாதாட, கணவன் அமைதியாய் ஜட்ஜிடம் “சார். கோக் மெஷின்ல நான் காசு போட்டவுடன் கோக் வருது. அப்ப அந்த கோக் மெஷினுதா இல்லை என்னுதா..?”
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேபிள் சங்கர்

Apr 10, 2010

Omkara-2006

 omk6d  எப்படி இந்த படத்தை மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. மக்பூல் பார்த்த போதே விஷால் பரத்வாஜின் கதை சொல்லும் முறையில் இம்ப்ரஸானவன் நான். அதிலும் இப்படத்தில் விஷால், அஜய்தேவ்கன், சாயிப் அலிகான், கரீனாகபூர், விவேக் ஓபராய்,கொங்கனா சென் என்று நடிகர் பட்டாளம் அணிவகுத்திருக்கும் இப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் விட்டது ஆச்சர்யமாகத்தானிருக்கிறது.

ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ”வை தழுவி எடுக்கப்பட்ட படம். ஓமி என்கிற ஓம்கார் உ.பியில் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திவரும் ஒரு தலைவன். அவனுக்கு இடதும் வலதுமாய் லங்டாவாய் சாயிப் அலிகானும், கேசுவாக விவேக் ஒபராயும் இருக்க, ஓமி தன்னுடய கிராமத்தின் அடுத்த தளபதி போன்ற போஸ்டுக்கு கேசுவை தெரிவு செய்துவிடுகிறான். இதனால் அவன் மேல் பொறாமை பட ஆரம்பிக்கும் லங்டா, கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பற்றிய பல விஷயங்களை தவறாய் ஓமியிடம் போட்டு கொடுக்க ஆரம்பிக்க, ஓமியின் காதலியான டாலிக்கும், கேசுவுக்கும் இடையே காதல் என்கிற திரியை போட்டு கொளுத்த ஆரம்பிக்க,  ஒமியின் குடும்ப நகையை, அதுவும் டாலிக்கு கொடுத்ததை, இந்து அதை திருடி கொண்டு விட, அதை வைத்து லங்டா பற்ற வைக்கும் திரி பற்றிக் கொண்டு ஓமிக்கும், டாலிக்கும் திருமணம் நடக்கும் நாளுக்குள் லங்டா நிருபிக்கவில்லையென்றால் அவனை கொன்று விடுவேன் என்று ஓமி சொல்லிவிட்டு போக, லங்டா, கேசுவின் காதலியான பிபாசாவிடம் அந்த நகையை கேசுவுன்  மூலமாய் கொடுத்து அவள் மூலம் இவர்களின் எதிரியான ஒரு அரசியல் வாதியை கொலை செய்ய போகும் இடத்திற்கான தகவலை பெற கொடுக்க சொல்கிறான்.
omkara16dq தன் குடும்ப நகையை நடனமாடி பிழைக்கும் பிபாசுவின் இடுப்பில் பார்த்த ஓமிக்கு, கேசுவுக்கும் டாலிக்குமிடையே இருக்கும் காதல் தான் தன் குடும்ப நகையை கேசுவிடன் கொடுக்க வைத்திருக்கிறது என்று நம்ப ஆரம்பித்து திருமண நாள் அன்று இரவு லங்டா, பிபாசாவுடன் கேசுவின் வீட்டிற்கு போய் அவனை அழைத்துவந்து சுட்டு கொல்ல, அதே நேரத்தில் ஓமி தான் உயிருக்கு உயிராய் காதலித்த டாலியை அவளின் துரோக செயலுக்காக என்று முகத்தில் தலைகாணியை அழுத்து கொல்கிறான். அதை கண்ட லங்டாவின் மனைவி இந்துவுக்கு அந்த நகையை பற்றிய விஷயம் தெரிய வர அதை தான் தான் திருடினேன் என்றும் அநியாயமாய் ஒரு அப்பாவியை கொன்று விட்டாய் என்று கதறுகிறாள்.
omkara-wallpaper கேசுவை கொன்று விட்டு வரும் லங்டாவுக்கு நிலைமை புரிய, என்ன சொல்வது என்று புரியாமல் நிற்க, தான் செய்த விஷயஙக்ளுக்கெல்லாம் கொஞ்சம் கூட குற்றா உணர்வு இல்லாமல் தன் நிலையை விளக்க முயற்சிக்க, அவனை வெளியேற்றுகிறான் ஓமி. தலைகுனிந்த நிலையில் வீட்டை நோக்கி வரும் லங்டாவை அவன் மனைவி இந்துவே கோடாலியால் அவனை வெட்டி கொல்கிறாள்.

அரைகுறையாய் சுடப்பட்ட கேசு பிழைத்தெழுந்து நேரே ஓமியின் வீட்டிற்கு வர, அங்கே கொல்லப்பட்டிருக்கு டாலியை பார்த்து கலங்கி நிற்க, தன் சந்தேகத்தால் எல்லாவற்றையும் இழந்த நிலையில் தன்னை சுட்டுக் கொண்டு இறக்கிறான் ஓமி.

படம் பூராவும் மனிதனின் அடிப்படை குணங்களான பொறாமை, துரோகம், காதல், வஞ்சம் என்று அக்குணங்களால் ஏற்படும் விபரீதங்களை கொண்ட திரைக்கதை. ஒத்தெல்லோவை இந்தைய கிராமத்தின் கதையாய் மாற்றியமைத்து கதை சொல்லியிருக்கும் விதம் அருமை. வழக்கமாய் விஷாலில் கதை சொல்லும் முறையில் இருக்கும் அதே பெர்பெக்‌ஷன் இதிலும்.

படம் முழுக்க ஓமியாகவும், லங்டாவகவும் அஜய் தேவக்னும், சாயிப் அலிகானும் வாழ்ந்திருக்கிறார்கள். அஜ்யின் ஆரம்ப காட்சிகளில் அவர் ஒரு பெரிய குழுவின் தலைவன் என்பதை உணர்த்தும் காட்சிகளில் இருக்கும் பாடிலேங்குவெஜ் அருமை. டாலிக்கும் அவருக்குமான காட்சிகளில் அவர்களூடே இருக்கும் ஒரு இயல்பான ரொமான்ஸ் கொள்ளை அழகு. லங்டாவாக வரும் சாயிப்பின் நடிப்பும் அபாரம். ஒற்றைகாலை சற்றே தாங்கி, தாங்கி நடக்கும் நடையாகட்டும், கேசுவின் மேல் பொறாமை கொண்டு மெல்ல அது பழிவாங்கு உணர்வாய் மாறும்மிடத்தில் அவரது நடிப்பாகட்டும், முக்கியமாய் டாலிக்கும், கேசுவுக்கு இடையே ஏதோ என்று ஓமியின் மனதில் உருவேற்றும் காட்சிகள் என்று தன் அபாரமான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.
omkara_pic-large டாலியாக கரீனா, எனக்கு அவ்வளவாக பிடிகாத நடிகை. ஆனால் இப்படத்தில் என்னை கவர்ந்துவிட்டார். குடும்ப நகையை இடுப்பில் கட்டிக் கொண்டு வ்நது ஓமியின் முன்னால் வெட்கத்துடன் நிற்கும் காட்சி, ஓமியின் மேல் கண்மூடித்தனமான காதலை வெளிப்படுத்துவதற்காக டைட்டானிக் பாடலை கற்றுக் கொண்டு அவனுக்காக பாட முயற்சிக்கும் காட்சி, அவர்களுக்குள் நடக்கும் அனல் பறகும் உடலுறவு காட்சி, முதல் முதலாய் தன்னை அடித்த ஓமியை நினைத்து அழுது கொண்டிருக்க, அதை பார்த்த இந்து என்னவேன கேட்க, சற்றே அழுது ஓமி தன்னை அடித்ததாய் சொல்லிவிட்டு மீண்டும் சமாளித்து, காதலின் போது என்று சொல்லுமிடம். கடைசி முதலிரவு காட்சியில் அவளை சந்தேகப்பட்டு ஓமி கேட்கும் கேள்வியின் சூடு தாங்காமல் கலங்கி போய் அவனை எப்படி நம்ப வைப்பது என்றறியாமல் அவனை அணைத்து அழும் காட்சி, தன் கணவனாலேயே அவள் கொல்லப்படும் காட்சி மயிற்கூசெரிய வைக்கும் நடிப்பு. கலக்கிட்டீங்க கரீனா.

இந்துவாக வரும் கொங்கனாவின் நடிப்பும் அருமை. இவர் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் கதை சொல்லும் அடுத்த நிகழ்வுக்கு லிங்க் இருப்பதால் இவரது நடிப்பு மிகவும் பிடிக்கிறது. அதிலும் சாயினுடன் இவர் உறவு கொள்ளும் காட்சியில் இவரது முகத்தில் தெரியும் வெட்கத்தை பாருங்கள் .. அய்யடா.. அட்டகாசம்.

அரசியவாதி நஸ்ரூதீன் ஷா, கேசுவாக வரும் விவேக் ஓபராய்,கேசுவின் காதலியான பிபாசு பாசு,ராஜ்ஜூவாக வரும் தீபக் என்று படத்தில் வரும் அத்துனை கேரக்டர்களும் தனித்துவமாய் இருக்கிறார்கள்.

தஸ்டக் ஹுசேனின் ஒளிப்பதிவு அட்டகாசம், ஒரு சில லோ லைட் காட்சிகளை தவிர.  அதே போல் வசனங்கள் மிக நுணுக்கமான் யோசித்து எழதப்ப்ட்டிருக்கிறது. “ஒரு மகளாய் தகப்பனுக்கு உண்மையாய் இருக்க முடியாதவள், காதலுக்கு உண்மையாக இருப்பாள் என்று என்ன நிச்சயம்” என்பத் போன்ற வசனங்களின் ஆழம் அதிகம்.

விஷால் பரத்வாஜின் இசையில் வரும் பாடல்கள் ப்டத்தோடு வருவதால் நெருடவில்லை. பின்னணி இசை எங்கே போடவேண்டும் என்று தெரிந்து சரியான இடத்தில் போட்டிருக்கிறார். இவரது திரைக்கதை ஆங்காங்கே மெதுவாக சென்றாலும், கதை சொல்லும் போது ஏற்படும் அத்துனை தாக்கங்களையும் நம்முள்ளே கொண்டு செல்ல அதுவே ப்ளஸ் பாயிண்டாகி விடுகிறது. பல நுணுக்கமான காட்சிகளை படமாக்கியிருக்கும் விதத்தில் இயக்குனர் பளிச்சிடுகிறார்.

OMKARA – A BRILLIANT FILM TO WATCH

கேபிள் சங்கர்

Apr 9, 2010

Joyfull சிங்கப்பூர்-7 நிறைவு பகுதி

DSC_6007 DSC_6008
அடுத்த நாள் காலையிலேயே குளித்து முடித்து ரெடியாகிவிட்டேன். பதிவர் ரோஸ்விக் விக்டர் பிரபாவின் வீட்டிற்கே வந்து விட்டார். அவருடய நண்பரும் என்னுடய வாசகருமான ராஜ் உடன். ராஜ் பதினைந்து வருட சிங்கப்பூர்வாசி.
DSC_5999 IMGA0329
DSC_5949 DSC_5931
நல்ல டால் அண்ட் ஸ்லிம் பர்சனாலிட்டியாய் இருந்தார். மணக்க, மணக்க கொங்கு தமிழ் பேசுகிறார். பார்த்தவுடன் ரொம்ப நாள் பழகியவர் போல் பழகுகிறார். அவ்வளவு இயல்பு. பழகிய ஒரே நாளில் நெருக்கமாகி போனவர். இவர் டன்ஹில் புகைக்கும் ஸ்டைல் நன்றாக இருக்கும். இவர் ஒரு தகவல் களஞ்சியம். சிங்கப்பூரை பற்றி பல விஷயங்களை அருமையான ஜுராங்பார்க் டிரைவின் போது சொல்லி வ்ந்தார். அவரின் ஜிபிஎஸ் பெண் அவ்வப்போது நேராக போ, லெப்டில் திரும்பு, ரைட் திரும்பு, கேமரா இருக்கிறது, என்று சொல்லிக் கொண்டே வந்தது. வழி மாறிவந்துவிட்டால் கூட அடுத்த கணம் மாற்று வழி காண்பித்தது.
DSC_5913 DSC_5969
DSC_5914 DSC_5917
சிங்கப்பூரை விட மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவாம். அதற்காகவே ரோட் வழியாக கிட்டத்தட்ட காலி டாங்குடன் மலேசியா சென்று அங்கிருந்து புல் கேங்குடன் வருவார்களாம். அதை கண்காணிக்க அங்கே ஆட்கள் இருக்கிறார்களாம். சிங்கப்பூரில் ஒன்னறை டாலர் என்று கேள்வி. மார்கெட் நிலவரத்தை போல ஏறும் இறங்குமாம்.
DSC_5946 DSC_5973
ஜுராங் பார்க் மிக அருமையாய் அமைதியாய் இருந்தது, நிச்சயம் அங்கு நடக்கும் பறவைகள் ஷோவை மிஸ் பண்ணக் கூடாது. க்யூட். அங்கிருந்த அமைதியும், அரிய வகை பறவைகளையும் பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷமாய் இருந்தது.
DSC_5907 DSC_5974
DSC_5967 DSC_5951
மதியமாகிவிட்டபடியால் பசிக்கு மீண்டும் லிட்டில் இந்தியா தலப்பாகட்டி பிரியாணிக்கு வந்தோம். அங்கிருந்த பெண்ணிடம் ஆளுக்கு ஒன்றை ஆர்டர் செய்ய அவள் மெனு கார்டில் உள்ள் அத்தனை அயிட்டஙக்ளை விட்டு வேறு அயிட்டங்களை சொன்னாள். மிக அழகாய் எங்களை கோபப்பட விடாமல் சமாளித்து ஆர்டர் எடுத்தாள். அவள் அழகாகவும் இருந்தாள். அவளுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அதை பார்த்த ராஜ்.. “பாருங்க.. நாங்களும் தான் இந்த ஊர்காரவுங்க.. எங்க கிட்டயெல்லாம் பேசுறாளா பாருங்க..? எல்லாத்துக்கு ஒரு முவ ராசி வேணும்ங்க” என்றார்.
DSC_6004 DSC_5928
அருமையான சாப்பாட்டை முடித்துக் கொண்டு மதியம் மொத்த சிங்கப்பூரையும் காரிலேயே ஒரு ரவுண்ட் அடித்தார். இரவில் சுற்றுவதை விட பகலில் சிங்கப்பூரை பார்பதற்கும், காரில் சுற்றுவதற்கும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வழக்கமாய் முன் சீட்டில் உட்காரவே மாட்டேன். ஏனென்றால் டிரைவருடன் நானும் வெறும்காலில் கார் ஓட்டி வருவேன். டென்ஷனாக்வே இருப்பேன். ஆனால் ராஜின் டிரைவிங் அவ்வளவு ஸ்மூத். அதற்கு முக்கிய காரணம் ராஜின் டிரைவிங்க மட்டுமில்லாமல், வழுக்கிச் செல்லும் சிங்கப்பூர் ரோடுகளும், டிராபிக்கை மதிக்கும் டிரைவர்களும், மீறினால் விதிக்கப்படும் ஃபைன்களும் தான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
DSC_5971 DSC_5965 DSC_5908
சிங்கப்பூரில் ஒரு முறை விதியை மீறினால் ஒரு தண்டனையும், தொடர்ந்து விபத்துகளில் ஈடுபட்டால் பிறகு லைசென்ஸ் கேன்சல் செய்துவிடுவார்களாம். பைக்குகளை பார்பதே அறிதாய் இருந்தது. அப்படியே பார்த்தாலும் ரேஸ் பைக் போல ஒரு மாதிரி குனிந்து கொண்டு ஓட்டும் வண்டிகளையும், எம்.80 போன்ற வண்டிகளையும் தான் பார்க்க முடிந்தது. டூவீலர் லைசென்ஸ் வாங்குவதற்குள் தாவூ தீர்ந்துவிடுமாம். நம்ம ஊர் போல எட்டு போட சொல்வார்களாம். கிட்டத்தட்ட படுத்து எழுந்திருக்க வேண்டும் என்றார் ராஜ்.
Image0466 DSC_6036
DSC_6047 DSC_6052

அதே போல லாட்டரி சீட்டு வாங்குவதில் சீனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். ஆன்லைன் லாட்டரிக்கு க்யூவில் நின்று பணம் கட்டி விளையாடுகிறார்கள். சாதாரணமாகவே சீனர்கள் சூதாடுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்று கேள்வி. மிக சிரத்தையாய் சீட்டை எடுத்து ஆறு, ஆறு நம்பர்களை பென்சிலால் கருப்படித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச வருடஙக்ளுக்கு முன்னால் எவனோ ஒரு பங்களாதேஷிக்கு ஒரு மில்லியன் அடித்ததாம்.
DSC_6065 DSC_6072
DSC_6078 DSC_6080

அதே போல் பேங்க்குகள் மொத்தம் ரெண்டு பேர் மூன்று பேருடன் நடக்கிறது. ஒரு பெரிய ஏடிஎம் செண்டரில் காலையில் இருந்து மாலை வரை ஆட்கள் இருக்கிறார்கள் அவர்கள் கூட ஏதாவது அவசர உதவிக்குத்தான். மற்றபடி எல்லாமே மிஷின் தான். நாலாப்பக்கமும், அக்கவுண்ட் பாலன்ஸ் பார்க்க, பணம் எடுக்க, பணம் போட, பாஸ் புக் பிரிண்ட் அவுட் எடுக்க என்று எல்லாவற்றிக்கும் மிஷின் தான். மீறி பிரச்சனை என்றால் இருக்கவே இருக்கு கால் செண்டர் போன். பகலில் வேலை செய்யும் ஆட்கள். இம்மாதிரி நிறைய சிறிய ப்ராஞ்சுகளை பார்த்தேன்.
எல்லா இடத்திலும் நாம் கண்காணிக்கபடுகிறோம் என்பது ஒரு மாதிரி உறுத்தலாய் இருந்தாலும். பழகிவிட்டால் ஏதும் உறுத்தாது என்றுதான் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் வலிக்காமல் காசு வசூலிக்கிறார்கள். பார்க்கிங்குக்கு கூட ப்ரீபெய்ட் கூப்பன் வாங்கி வைத்துக் கொண்டு, போகும் போது பார்க்கிங் கூப்பனை எடுத்து அதில் நேரம், தேதி, எத்தனை மணிக்கு வந்தோம், எவ்வளவு நேரம் பார்க்கிங் செய்யப் போகிறோம் என்பதற்கான சரியான கூப்பனை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கும் வீட்டுற்கு ஓலை வருமாம்.
DSC_6095 DSC_6096
சிங்கப்பூர் குழந்தைகள் நிறைய பேர் மிகச்சிறிய வய்திலேயே கண்ணாடி அணிந்திருப்பது பற்றி பேச்சு வர, அதற்கு பெயர் “Lasy Eyes”  என்றார் ராஜ். டாக்டரிடம் கேட்ட போது அவர் சொன்னது “சிங்கப்பூர் முழுக்க மிக அருகருகில் கட்டடங்கள், கட்டடங்கள், தேடும் தொலைவிலேயே சைன் போர்டுகள், பெரிய பெரிய எழுத்துக்களில் அடையாளங்கள் என்று தொலைவில் தேடிப்பார்க்கும் வேலையே இல்லையாதனால் குழந்தைகளில் பார்வை தூரம் மிக குறைந்த அளவே பார்க்க பழகிவிட்டதால் வரும் பிரசசனை இது. இதற்கு சரியான தீர்வு. அவுட்ஸ்கர்டுகளுக்கு கூட்டி போய் தூரத்தில் தெரியும் மரம் செடி கொடிகள் போன்ற விஷயங்களை பார்க்க பழக்குவதுதான் தீர்வு. என்று சொன்னாராம் டாக்டர். ஆயிரம் வசதிகள் இருந்தும் புதுசா வருது பாருங்க வியாதி.
DSC_6099 DSC_6108
பின்பு அங்கிருந்து ஏதாவது பீச்சுக்கு போகலாம் என்றார் ராஜ். பீச் என்றதும் அலைகள் கரையில் முத்தமிடும் பீச் என்று கற்பனை கடலில் மிதந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏதோ தேங்க வைக்கப்பட்டிருக்கும் ஏரி தண்ணீர் கரையில் அடிக்குமே அது போல இருந்தது கடல். மணலே ஒரு முப்பதடிக்குதான் இருக்கும். ஷாங்கி பீச். ஆங்காங்கே சில பேர் மட்டும் தண்ணீரின் அருகில் நின்று கொண்டிருக்க, நாங்கள் சீரியஸாய் பேச ஆரம்பித்தோம். மற்ற பதிவர்கள் எழுத்தை பற்றி ராஜ் தன் அபிப்ராயத்தை கூறி பாராட்டினார். என் எழுத்தை மிகவும் சிலாகித்தது வெட்கமாய் இருந்தது.  அப்போது ஜோசப் போன் செய்தார். மாலை எந்த வேலையும் வைக்க வேண்டாம் உங்களை பார்க்க மிகவும் ஆவலாய் ஒரு நண்பர் வாசகர் இருப்பதாகவும் மீண்டும் இரவு லிட்டில் இந்தியாவில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு போனை வைத்தார். ரோஸ்விக்கும் உங்களை பார்க்க என் நண்பர் வாசகர் ஒருவரையும் அங்கு வர சொல்லியிருப்பதாய் சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
DSC_6070 DSC_6074
இந்நேரத்தில் ரோஸ்விக் எனும் விக்டரை பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஊருக்கு போகும் போதே அண்ணன் அப்துல்லா சொன்னார். ரோஸ்விக்குனு ஒருத்தர் இருப்பாரு. அவரு இருந்திட்டா போதும் பொழுது தன்னால ஓடிரும். ரொம்ப..ரொம்ப. ரொம்ப நல்ல மனுஷன்னு சொன்னாரு. ஆனா அவரு சொன்னதை விட ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்ல மனுஷன். அவ்வளவு இனிமையான வெள்ளந்தியான மனிதர். இவ்வ்ளவு இயல்பாய், அன்பாய் ஒரு மனுஷன் பழக முடியுமான்னு நினைச்சா ஆச்சர்யமாக இருகிறது. எதற்கெடுத்தாலும் சிரிப்புத்தான்  மனுஷனுக்கு. முக்யமாய் நண்பர்கள் முகம் கோணாமல் பேசுவதில் மன்னர். இவருடன் இருந்தால் உங்கள் பொழுது இனிமையான பொழுதுதான். பாசக்கார மனுஷன்.
DSC_6017 DSC_6018
மாலை மீண்டும் லிட்டில் இந்தியா வந்த்தும், ஜோசப், பாலா, இரவிசந்திரன், தீபன், ராஜ், ரோச்விக், நான் எல்லாரும் ஒன்று சேர, பரஸ்பர அறிமுகம் ஆன பிறகு ரவிச்சந்திரனுடனும், தீபனுடனும் பேச ஆரம்பித்தேன். தீபன் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணி புரிகிறார். குறைவாகவே பேசினார். என்னை சந்தித்ததில் மிகவும் சந்தோஷம் கொண்டதாக சொன்னார். கொஞ்சம் எக்ஸைட்டாகவே இருந்தார். நினைவு பரிசு ஒன்றை அளித்தார். எப்போது ஒரு சிரிப்பு அவர் முகத்தில் இருந்து கொண்டேயிருந்தது.
DSC_6021 DSC_5975
ரவிச்சந்திரன் பழைய யாஹு குருப், திண்ணை, மரத்தடி காலத்திலிருந்து இருக்கும்  ப்ளாகரமும் கூட, சிங்கையில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் முக்கிய பொருப்பில் இருப்பவர். அதற்கான எந்தவிதமான பாசாங்குகளும் இன்றி இன்றைய ட்ரீட் என்னுடயது வாருங்கள் எல்லோரும் சாப்பிட போகலாம் என்றார். அருகிலேயிருந்த மால்குடி என்று நினைக்கிறேன் அந்த உணவகத்துக்கு சென்றமர்ந்தோம். மிக கனிவான உபசரிப்பு. பல விஷயங்கள் பற்றிய அறிவு என்று இண்ட்ரஸ்டிங்கான பர்சனாலிட்டியாக இருந்தார். அவர் தொடர்ந்து என் பதிவுகளீன் வாசகன் என்றும், விண்ணை தாண்டி வருவாயா விமர்சனம் பற்றியும் பேசினார். தீபனும் அதை பற்றி பேச ஆரம்பித்தார். பின்னர் பேச்சு  பல திசைகளை சுற்றி வந்து கிளம்பினோம். மிக அருமையான சந்திப்பு மீண்டும் எப்போது அவர்களை சந்திப்பேனோ என்ற வருத்தம் கலந்த சந்தோஷத்தில் முடிந்தது. மீண்டும் யூஷுனுக்கு பயணம். ராஜுடம் மீண்டும் ச்ந்திப்பதாய்  நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். ரோஸ்விக் ”அண்ணே நாளைக்கு காலையில நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி பர்சேஸ் முடிச்சிட்டு, ஒரு மூணு மணிக்கா கிளம்பினோம்னா ஏர்போர்ட் எல்லாம் சுத்தி காமிச்சிட்டுட்டு உங்களை ஏத்திவிட்டுட்டுதான் கிளம்புவேன்” என்றார்.
DSC_6027 DSC_6026
அடுத்த நாள் காலையில் பிரபாவிடம் விடை பெற்றுக் கொண்டு யூஷுன் பஸ் டெப்போவுக்கு வந்து நின்றேன். ரோஸ்விக் கையில் ஒரு பாக்கெட்டோடு காத்திருந்தார். அண்ணே இந்த ஊரு சிக்கன் பப்ஸ் சாப்பிடலை இல்லை அதுக்காத்தான் உங்களுக்கு வாங்கி வச்சிருக்கேன் என்று சொல்லி சுடச்சுட ஒரு பப்ஸை கொடுக்க அருமையாய் இருந்தது வெஜிட்டபிள்பப்ஸ். உடனே போய் வேறு சிக்கன் பப்ஸையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, முஸ்தபா போய் பெட்டியை வைத்துவிட்டு, குழந்தைகளுக்கான சாக்லெட் பாக்கெட்டுகளை அள்ளிக் கொண்டோம். அவரும் தன் பங்குக்கு என் குழந்தைகளுக்கு சாக்லெட்டுகளும், சென்னையில் உள்ள நண்பர்களுக்கு நினைவு பரிசுகளையும் வாங்கி கொடுத்தனுப்பினார்.
DSC_6113 DSC_6117
பஸ்ஸில் வரும் போது சிங்கப்பூர் வாழ்க்கையை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்.  ஷேரிங்கில் இருப்பதை பற்றியும், அதன் கஷ்ட நஷ்டஙக்ளை பற்றியும். தன் சம்பாத்யத்தில் அவரின் தாய், தந்தையை அழைத்து வந்து சிங்கை, மலேசியா, இந்தோனேஷியா சுற்றிக் காட்டியதை ச்ந்தோசமாக சொன்னார். விரைவில் கொஞ்சம் காசு சேர்ந்த்தவுடன் தன் தம்பியையும் அவர் மனைவியையும் அழைத்து வந்து சுற்றி காட்ட வேண்டும் என்றார். ஸோ..க்யூட். 
DSC_6073 DSC_6062
மேலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வெளியே வரும் சமயம் சாமி நான் அங்குதான் வருகிறேன் உங்களை வழியனுப்ப விமான நிலையம்  வரமுடியாது அதனால் லிட்டில் இந்தியாவிலேயே உங்களை சந்திக்கிறேன் என்று வ்ந்து சந்தித்துவிட்டு கிளம்பினார். அப்போது ஒரு போன். யாரென்று பார்த்தால் நண்பர் ராஜ் தான். உங்களை வழியனுப்ப நானும் வருகிறேன். நானும் லிட்டில் இந்தியாவிலிருந்து உங்களை பிககப் செய்து காரில் நான் ட்ராப் செய்கிறேன். இன்று லீவு போட்டு விட்டேன் என்றார். பாசக்கார மனிதர்.  சுமார் மூன்று மணிக்கு அங்கிருந்து கிளம்பி நேராக ஷாங்கி ஏர்போர்டுக்கு இறக்கிவிட்டு விட்டு, போக மனசில்லாமல் போனார் மனிதர். ராஜ் ஐ மிஸ் யூ.
DSC_6087 DSC_6120
DSC_6124 DSC_5857
பின்பு நானும் ரோஸ்விக்கு எல்லா டெர்மினலையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு பட்ஜெட்டுக்கு வரும் போது ஏழு மணி ஆகிவிட்டிருந்த்து. அங்கே ஜோசப், வெற்றிக் கதிரவன், ஜெகதீசன், என்று மீண்டும் நண்பர் பட்டாளம். நான் அங்கே வ்ந்து பார்க்க முடியாமல் போனது சிங்கை நாதனை மட்டும்தான் என்று நினைத்த போது அங்கே வந்து நின்றார் சிங்கை நாதன் கையில் தந்தூரி சிக்கனுடன். எனக்கு பசிக்காம். நான் நெகிழ்ந்து போய் விட்டேன். கொஞ்ச நேரத்தில் பதிவர் கருப்பு அங்கே வர  இன்னும் பேச்சு களை கட்ட, பிரிய முடியாமல் எல்லோரையும் பிரிந்து வந்தேன். ஒரு வாரம் திகட்ட, திகட்ட அன்பை மட்டுமே வழங்கி என்னை திக்கு முக்காட செய்துவிட்ட இவர்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன்? இவ்வளவு சந்தோசத்தை, நட்பை, குதூகலத்தை, அன்பை எனக்கு பெற்றுத் தந்த பதிவுலகத்திற்கும் நன்றிகள் பல. இதை எழுதும் போது என் கண்களில் கண்ணீர் துளிகள் திரண்டு திரையின் எழுத்துக்களை மறைக்கிறது.அன்பு காட்டி நெகிழ்வித்த உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி .I MISS YOU ALL MY DEAR FRIENDS. SEE YOU SOON….
DSC_6116 DSC_6121

கேபிள் சங்கர்