Thottal Thodarum

Apr 17, 2010

சிவப்பு மழை- திரை விமர்சனம்

Sivappu_Mazhai_Movie_Pics_04 கின்னஸ் சாதனைக்காகவே எடுக்கப்பட்ட படம். அதாவது மொத்த படத்தையும் 12 நாட்களில் தயாரித்து, வெளியிட தயாராக்கிய படம். என்று கின்னஸ் சாதனை செய்த படம்.
Sivappu_Mazhai_Movie_Pics_06 மத்திய அமைச்சரின் பெண்ணை கடத்தி வைக்கிறான் ஒரு இலங்கை இளைஞன். அவனுடய ஜெயில்வாசி சகாக்களை விடுதலை செய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறான். அதை செய்ய மறுத்தால் மத்திய மந்திரியின் பெண்ணை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். ஒரு பக்கத்தில் போலீஸ் மந்திரியின் பெண்ணை மீட்பதற்காக போராடுகிற்து. இன்னொரு பக்கம் மந்திரி பெண்ணுக்கு தன்னை கடத்திய இளைஞன் தீவிரவாதி இல்லை நல்லவன் என்று புரிந்து அவனுக்கு உதவுகிறாள்.  அவன் ஏன் இவளை கடத்தினான், எதற்காக அந்த இரண்டு ஜெயிலில் உள்ள ஆட்களை விடுதலை செய்யச் சொன்னான் என்பதை முடிந்தவரை இண்ட்ரஸ்டாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
Sivappu_Mazhai_Movie_Pics_08 முதல் பாதி ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் ரெண்டாவது பாதியில் வரும் இலங்கை பிரசசனையில் வில்லன்கள் தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் ராணுவ உடை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் சிங்கள வீரர்களா..? அல்லது விடுதலை புலிகளா..? சிங்கள ஆள் என்றால் அவன் ஏன் தமிழ் நாடில் வ்ந்து ஒளிய வேண்டும்? விடுதலை புலி என்றால் அவர்கள் ஏன் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் கதாநாயகனின் மனைவியை கற்பழித்து கொல்ல வேண்டும்? ஒரு எழவும் புரியவில்லை.
படம் முழுக்க அவ்வப்போது காமெடி செய்கிறேன் பேர்வழி என்று விவேக்கும், அவரது சகாவும் வந்து சரியான ப்ளேடு போட்டு போகிறார்கள். முடியலை. தேவையில்லாமல் அங்காங்கே பாடல்கள் என்ற இடைசொருகல்கள் வேறு.
Sivappu_Mazhai_Movie_Pics_12 மிக குறுகிய கால தயாரிப்பாய் இருப்பதால் விளையக்கூடிய், அதுவும் மூன்று யூனிட்டுகள் ஷூட் செய்த காட்சிகள் ஒன்றுக்கொன்று மேக்கிங்கில் சொதப்பியிருப்பது நன்றாக தெரிகிறது.
மீரா ஜாஸ்மின் ஆரம்ப காட்சியில் மயக்கமாகி, பின்பு தெளிந்து, ஒரு டூயட் பாடிவிட்டு “எஸ்” சாகிறார். கதாநாயகன் ஜோசிம்மின் நடிப்பும், அவரது இலங்கை தமிழும், அவரின் ஒட்டு தாடி போலவே ஒட்டாமல் இருக்கிறது. மந்திரி சுமன் இருக்கும் சிறு அறையில் அங்கும் இங்கும் அலைந்தபடி டென்ஷனாவதை தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. கமிஷனராக வரம் ராஜிவ், மந்திரியின் நண்பனாகவும் இருப்பதால் “டென்ஷன் ஆகாதடா.. நாங்க பாத்துக்கறோம். பீ கூல்” என்று திரும்ப திரும்ப கூறி நம்மை டென்ஷனாக்குகிறார்.
சிவப்பு மழை – கின்னஸுக்காக பாராட்டலாம்
கேபிள் சங்கர்
Post a Comment

18 comments:

King Viswa said...

கேபிளாரின் விமர்சனத்தில் முதலில் கமென்ட் இடுவது - நானே தான்.

King Viswa said...

//“டென்ஷன் ஆகாதடா.. நாங்க பாத்துக்கறோம். பீ கூல்” என்று திரும்ப திரும்ப கூறி நம்மை டென்ஷனாக்குகிறார்//

நச். இதைத்தான் எதிர்பார்த்தோம்.

Unknown said...

எப்புடின்னே இந்த மாதிரி படங்களை பாக்குறீங்க,
பாத்துதான் பாத்தீங்க அப்புறம் விமர்சனம் எழுதி எங்களைவேறு படிக்கசொல்லி,
வெயில் தாங்கலைப்பா ...........

shortfilmindia.com said...

இது போன வாரம் பார்த்தது.. ரெண்டு நாளா ஊருல இல்லை அதான். நாஙக் மட்டும் தியேட்ட்ர்ல பாக்குறோம்.. நீங்க படிக்க மாட்டீங்களா.. :)

கேபிள் சஙக்ர்

சைவகொத்துப்பரோட்டா said...

கின்னசுக்காக பாராட்டுகிறேன்.

CrazyBugger said...

தெய்வமே.. தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே.. எப்பூடி உங்களாலே மட்டும்? சிவப்பு மழை பாத்துட்டு எதுக்கு கண்ணுள்ளே சிவப்பு வாங்கணும்?

settaikkaran said...

இந்த மீரா ஜாஸ்மினோட பெரிய தொந்தரவாப் போச்சுங்க! ஏன் இப்படி மொக்கைப்படங்களிலே நடிக்கிறாங்களோ தெரியலே! பார்க்கவும் முடியலே; பார்க்காம இருக்கவும் முடியலே! :-)

பனித்துளி சங்கர் said...

நல்லவேளைக்கு உங்க விமர்சனம் படித்ததால் நேரம் மிச்சம் . நன்றி தல .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

neenda naalkalukku piraku DEVA. Music eppadi

புலவன் புலிகேசி said...

:))

Kolipaiyan said...

No Comment.... :)

pichaikaaran said...

" கின்னஸுக்காக பாராட்டலாம் "

பெருந்த்னமைக்கு நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2010/04/1.html

Please visit my blog

angel said...

Written by கே.ஆர்.பி.செந்தில்

எப்புடின்னே இந்த மாதிரி படங்களை பாக்குறீங்க,
பாத்துதான் பாத்தீங்க அப்புறம் விமர்சனம் எழுதி எங்களைவேறு படிக்கசொல்லி,
வெயில் தாங்கலைப்பா ....

i too repeat the same and especially the last two words. however i must thnk u since u prevented us frm watching such films

Anonymous said...

கேபிளாரின் விமர்சனத்தில் முதலில் கமென்ட் இடுவது - நானே தான்.----no no am the first
am the first
am the first.

supera erku anney..

nandri marupadium

nanthan first vanthu comments poduven..

nandri valga valamudan.

v.v.s(varuthapadtha vaasippor sangam)
complan surya.

kanagu said...

இப்படி ஒரு படம் கூட வந்துருக்க்கா???

விவேக் காமெடி படத்துக்கு படம் மோசமா இருக்கு :( :(

Thamira said...

எப்போ எங்கே வந்தது இந்தப்படம்? ஒண்ணியும் தெரியலை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இலங்கையில் இந்த படத்திற்குத் தடையாமே...