பி.பி-10
நண்பர் முரளிகுமார் பத்மநாபன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன். இந்தப் பதிவோட விதிகள்: 1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். 2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் 3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம். 4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். 5. இந்த விதிமுறை என்னை தொடருக்கு அழைத்த பரிசலின் எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இது தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால் நானும் அதை ஆமோதிக்கிறேன்.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். மேலுள்ள விதிகளை சில இடங்களில் மீறியிருக்கேன். விதின்னாலே மீறுவதுதானே விதி..!!!!! 1.அரசியல்வாதி பிடித்தவர் : யாருமில்லை.. எல்லாருமே திருட்டு …..பசங் க பிடிக்காதவர்: முக்கியமா ராமதாஸ் 2. நடிகர் பி...