Posts

Showing posts with the label அரசியல்

செய்வீர்களா தி.மு.க தலைவரே?

இத்தனை நாள் மீடியாவின் முன்னால் கண்காணாமல் இருந்த தயாநிதி மாறன் தற்போது மீண்டும் தி.மு.க தலைவருடன்.  அதைப் பார்த்திலிருந்து மீடியா, இண்டெர்நெட், கேபிள் டிவி, என பல துறைகளில் உள்ள தொழிலதிபர்கள், லேசாய் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் அவர்களால் நிச்சாயம் இம்முறை கழக ஆட்சி வந்தால் அம்மாதிரியான இடர்பாடுகள் கொடுக்காது. சுதந்திரமாக தொழில் செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறியிருந்தாலும், இத்தனை நாள் இல்லாத ஆள் கிடைக்கிற கேப்பில் கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டிருப்பது. கண்கள் பனித்து, இதயம் இனித்து போல ஆகி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் மாறன் குடும்பத்தின் வியாபாரம் ஆக்கிரமிப்பு எந்த அளவிற்கு இருந்தது என அனுபவித்தவர்கள் அவர்கள். இதை வெளிப்படையாகவே சொல்லி அதற்காகவே தி.மு.கவிற்கு ஓட்டுப் போடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் அவர்களின் ஆளூமையில்லையா என்று கேட்டீர்களானால் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் தொழில் செய்கிற்வரக்ளுக்கு தொல்லை இல்லை. என்பது உண்மை. ...

ஆட்சி மாற்றம் கொடுக்கப் போகும் மாற்றங்கள்-2

திமுகவின் ஆட்சியாய் இருக்கும் பட்சத்தில் அம்மா.. அம்மா என்று ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் இல்லாது போகும். அம்மா உணவகம் பேரறிஞர் அண்ணா உணவகமாய் மாற வாய்ப்பு உண்டு. நிச்சயம். போன ஆட்சியில் அரசு மருத்துவமனையாய் மாறிய கட்டிடம் மீண்டும் தலைமை செயலகமாய் மாறும். அண்ணா நூலகம் சிறப்பாக இயங்கும். ஏற்கனவே அரை குறையாய் போடப்பட்ட ரோடுகள் மீண்டும் போடப்படும். கார்பரெஷன் கக்கூஸுகளின் காண்ட்ரேக்ட் மீண்டும் இம்முறை ஆட்சிக்கு வருகிறவர்களின் கைகளில் மாறும். அதிமுக ஆட்சியில் யாருக்கும் பெரிய அதிகாரமில்லை, நித்யகண்டம் பூர்ணாயுசு என்பது போல எப்போது வேண்டுமானாலும் பதவி போகலாம் என்ற நிலை இருக்கும். அது மாறும் கட்சியில் இருக்காது என்பதினால் பதவி கிடைத்தவர்களின் அதிகார ஆட்டம் அவரவர் ஏரியாக்களில் அதிகமாய் இருக்கும். போட்ட காசை எடுப்பதற்கு காசு வாங்கினாலும், நிச்சயம் வேலை நடக்கும்.  மேற் சொன்ன மாற்றங்கள் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அஃதே சீரிய முறையில்  நடக்கும்.  கேபிள் சங்கர்

பச்சை வயல் கனவு

Image
தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும், விலைவாசி கண்ட மேனிக்கு ஏறிக் கொண்டேயிருக்கிறது. பணவீககமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பற்றி கேட்டீர்களானால் அதற்கு சரியான பதிலை மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ இல்லை. பெட்ரோல் விலையுர்வை ரிலையன்ஸ் போன்ற கார்பரேட்டுகளின் ப்ரஷருக்கு தலைவணங்கி விட்டு, மாநில அரசுகள் வரிகளை குறைத்து மக்களுக்கு விலையை குறைக்கலாமே என்கிறது.  ஏன் அதையே மந்திய அரசு செய்யலாமே?. ஆனால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி காரணம் சொல்கிறார்களே தவிர பிரச்சனைக்கான சொல்யூஷனை யாரும் தருவதாய் இல்லை. ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் ஏறிய விலைவாசி மீண்டும் அது ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் குறைந்தால் குறைய வேண்டுமல்லவா.. ஆனால் குறைவதேயில்லை. அதனை மக்களும் கேட்பதில்லை. அரசும் கேட்பதில்லை. எதிர்கட்சி எழவும் எப்படியாவது மத்திய அரசு கட்சியின் பார்வையை தங்கள் பக்கம் திருப்புவதற்காக மெளனியாகவே இருந்து உறுத்தாமல் போராட்டம் நடத்துகிறேன் பேர்விழி என்று “போர்” ஆட்டம் ஆடுகிறது. தமிழ் நாட்டில் விளைகின்ற காய்கறிகள் எல்லாம் இப்போத...

கடையடைப்பு

Image
ரெண்டு நாள் முன்பு விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடையடைப்பு அறிவித்திருந்தது. தமிழ் நாட்டில் பெரியதாய் என்ன சின்னதாய் கூட எந்தவிதமான சலசலப்பும் இல்லாமல் புஸ்ஸென போனது கடையடைப்பு. ஒரு வேளை அரசு ஆதரவுடன் நடந்திருந்தால் நிச்சயம் இந்த கடையடைப்பு மாபெரும் வெற்றியாக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து விரைவில் தேர்தலை சந்திக்கப் போகும் நேரத்தில் பகைத்துக் கொள்ள மனமில்லாமல் தி.மு.க அரசு அமைதி காத்திருக்கிறது. சரி… இவர்கள் தான் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டோமானால். ப.ம.க வோ… எதுக்கு ஆதரிக்கணும்.. அப்புறம் பின்னாடி சீட்டும், பையனுக்கு ராஜ்ய சபா எம்.பியும், மந்திரி பதவியும் போயிருமோன்னு, எங்க போய் முட்டிகிட்டா பித்தம் தெளியும்னு தெரியாம வாய மூடிட்டு உட்காந்துட்டாங்க. இந்த லட்சணத்துல 2011ல இவங்க ஆட்சின்னு நாலு வருஷம் முன்னாடி அறிக்கை வேற. ஆ..ஊன்னா மைனாரிட்டி திமுக அரசுன்னு சொல்லிட்டிருக்கிற அதிமுக தலைமை எந்தவிதமான பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தாம வாயை மூடிட்டு எதுக்கோ காத்திட்டிருக்கிற மாதிரி போயிருச்சு. அது சரி ஒருவேளை கூட்டம் கூட்டி வேலை செய்ய ...

ஆட தெரியாத ஆட்டக்காரி..

Image
ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் ஜெயலலிதா மட்டும் லூசுத்தனமாய் ஒரு அறிக்கை விடுவார். மின்ண்ணு ஓட்டு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று. ஒவ்வொரு முறை ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போதும் மிண்ணனு இயந்திரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், திமுகவுக்கு விழுகிறது என்று சொல்லிவிட்டு தான் செல்வார். அவர் அப்படி சொல்ல ஆரம்பித்த தேர்தலில் அவர் தான் வென்றார். ஆனாலும் இதை ஒரு வழக்கமாகவே சொல்லி வருகிறார். இப்போது அவரின் வழியை பின்பற்றி.. பமக தலைவர் மருத்துவரும் அவரே ஒரு புரோக்ராய் செய்த ஒரு மினியேச்சர் மின்ணனு இயந்திரத்தை வைத்து டெமோ காட்டியிருக்கிறார். அப்படி புலம்பும் லிஸ்டில் லேட்டஸ்டாய் ஒருவர் சேர்ந்திருக்கிறார். நம்ம விஜயகாந்த். வருகிற இடைதேர்தலில் மிண்ணனு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது  என்று கோர்ட்டை நாடியிருக்கிறார். எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் இவர்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகள் வெளிவந்திருக்கிறதாக தெரியவில்லை. அப்படி ஒவ்வொரு ஆளும்கட்சியும் எளிதாய் ப்ரோக்ராம் செய்து வெற்றி பெற முடியுமானால், எதற்காக இப்படி இழுபறி அரசாகவோ, மைனரிட்டி அரசாகவோ வரும...

கலைஞர் “டிவி”

Image
அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தின், நான்காவது கட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அதை பற்றிய செய்தியை தினசரியில் பார்த்து கொண்டிருந்தபோது, எனது நண்பர் ஒருவர் காச் மூச்சென்று கத்த ஆரம்பித்தார். என்னவென்று கேட்டதும் பெரும ஆரம்பித்தார். நண்பருக்கும் இலவச டிவி கிடைத்திருக்கிறது. வாங்கி மூன்றே மாதத்தில் வழக்கம் அது தன் வேலைய காட்டி பீஸாகி விட, டிவிக்கு வாரண்டி கார்டு இருக்குமே என்று அதை தேடி பார்த்து, அதிலிருந்த அட்ரஸுகளை தேடியிருக்கிறார். நண்பர் கோடம்பாக்கம் அருகில் உள்ளதால், அருகேயிருந்த கோடம்பாக்கம் அட்ரசுக்கு போய் தேடியிருக்கிறார். தெருமுழுக்க தேடியதில் அதில் குறிப்பிட்டிருந்த 34ஆம் நம்பர் மட்டும் காணவில்லை, மிகுந்த பிரயாசைக்கு பிறகு, தேடியதில் ஒரு குட்டி சந்தினுள், சிறிய பெட்டி கடை போன்ற அமைப்பில் கொஞ்சம் கூட சர்வீஸ் செண்டருக்கான முகாந்திரமும் இல்லாத, ஏதோ துணிகளையெல்லாம், வைத்து ஒரு பெரியவர் வியாபாரம் செய்து கொண்டுருந்திருக்கிறார். ...