Posts

Showing posts with the label siruthai

சிறுத்தை

Image
எஸ்.எஸ்.ராஜமெளலியின்  தெலுங்கு விக்ரமார்குடுவின் தமிழ் ரீமேக். தெலுங்கிலிருக்கும் அதே மணம், குணத்தோடு அப்படியே கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான ரவிதேஜாவின் படங்களுக்கென்றே ஒரு பார்முலா இருக்கிறது. ஒரு மிடில் க்ளாஸ் கேரக்டர், முதல் பாதி முழுவதும் காமெடி, இண்டர்வெல்லுக்கு முன்னால் ஒரு திடீர் பிரச்சனை, க்ளைமாக்ஸில் சுபம். அதற்கு முன்னால் கலர் கலராய் செட்டு போட்டு ஒரு குத்துப் பாட்டு என்பது தான் அது. ஆனால் படிப்பதற்கு மிகவும் சுலபமாய் இருக்கும் இவ்விஷயத்தை திரையில் அதே பரபரப்போடு காட்ட, ரவிதேஜாவின் நடிப்பு எவ்வளவு முக்கியம், திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பது அதை ரீமேக்கும் போது தெரியும். அதில் கொஞ்சமும் சளைக்காமல் அடித்து ஆடியிருக்கிறார்கள். கார்தியும், சந்தானமும் திருடர்கள். ஒரு பாழடைந்த தியேட்டரில் தாங்கள் ஆட்டையை போட்ட பொருட்களை வைத்துக் கொண்டு சந்தோஷமாய் வாழ்பவர்கள். நடு நடுவே கார்த்தியை பார்க்கும் சில பேர் அவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல முயல்வதும், இவரை பார்த்து சில பேர் பயந்து நடுங்கி போன் செய்வதுமாய் அலைவதும், இன்னொரு கும்பல் இவரை கொல்ல நினைத்து தொடர்வ்துமாய் பரப்ரவென ...