Posts

Showing posts with the label media

அன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி

Image
நாம் தனி மனிதனாய் எதாவது ஒரு விஷயத்தை செய்தியாக்கவோ, அல்லது அதை பூதாகாரமாய் ஊதி ப்ரச்சனையாக்கவோ முடியுமா? நிச்சயம் முடியாது. இன்றைய கட்டத்தில் அதற்கு செய்தி ஊடகங்களின் ஆதரவில்லாமல் எதுவும் செய்ய முடியாது. சரி செய்தி ஊடகங்கள்தான் அதைச் சரியாக செய்கிறதா? என்றால் அதுவும் பெரிய கேள்விக்குறிதான்.  மற்ற மாநிலங்களில் எல்லாம் கூட பரவாயில்லை. நம் தமிழ் நாட்டு ஊடகங்களில் இரண்டே வகைதான். ஒன்று ஆளும்கட்சி ஆதரவு இன்னொன்று எதிர்ப்பு. இதிலே எதிலும் சேர்த்தியில்லாமல் நடுநிலை என்று முழங்கிக் கொண்டிருக்கும் சில ஊடகங்களை லிஸ்டில் வைத்துக் கொள்ள முடியாது. மீடியா நினைத்தால் எதை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களின் மனதில் பிரளையங்களை ஏற்படுத்த முடியும். உதாரணம் சன் டிவியில் வளர்ப்பு மகன் திருமணத்தைக் காட்டியே ஆட்சியை பிடித்ததும், அவர்கள் கொடுத்த டிவியிலேயே 2ஜி மேட்டர் நாறிப் போய் தோற்றதையுமே சொல்லலாம். ஆனாலும் தமிழில் சொல்லிக் கொள்கிறார்ப் போல டெம்ப்ளேட் செய்திகளைத் அளிக்காமல், நிஜமான தமிழனின் ப்ரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் சேனல்களோ, பத்திரிக்கைகளோ வெகுவாக இலலை என்பது வருத்தத...