சாப்பாட்டுக்கடை
வழக்கமான செட்டிநாடு, காரைக்குடி, மதுரை என்று லோக்கல் சுவைகளையே சாப்பிட்டு வருபவர்களுக்கு வித்யாசமான மலேசிய உணவு வகைகளை சுவைத்து பார்க்க ஆசையாய் இருந்தால் சென்னையில் போக வேண்டிய இடம் ஃபெலிடா நாசிக் கண்டார் தான். திநகர் தியாகராயர் ரோடில் பழைய நாகேஷ் தியேட்டருக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது ஃபெலிடா நாசிக் கண்டார். சுவையான மலேசிய உணவு வகைகளுக்கான ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்ட். Pelita Nasik kaNdar ஐஸ் கச்சாங்குடன், சரவணக்குமரன், பலா பட்டறை சங்கர், மணிஜி இவர்களின் பரோட்டாக்கள் அவ்வளவு சுவையாக இருக்கும் என்பது ஏதோ மிகைப்படுத்தி சொல்வதற்கான வார்த்தையில்லை நிஜமாகவே அவ்வளவு சுவை. பரோட்டாவுடன் அவர்கள் கொடுக்கும் தால்சாவும், இல்லாவிட்டால் இன்னொரு தால்சா, மீன்,மற்றும் இன்னொரு கிரேவி காம்பினேஷனை ருசித்தால் தெரியும், மட்டன் பரோட்டா, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு என்று பரோட்டா வகைகளிலேயே அதகள படுத்தியிருப்பார்கள். அப்படியே சாப்பாடு என்று போனால் அயம், மீ கோரிங்.. சாப்பாடு எல்லாம் இருக்கிறது.. என்னதது அயம், மீ கோரிங் என்று கேட...