காதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்
சக பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள் தெலுங்கில் “கம்யம்’ என்ற பெயரில் வெளிவந்து கமர்சியலாகவும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர அள்ளிய படம். படத்தின் பெயரை வைத்து காதல் கதை என்று நினைக்கிறவர்களுக்கு, காதலை விட மேலான வாழ்கையை நோக்கி செல்லும் படம். தன் காதலியை தேடி அலையும் அபிராம் என்கிற ஒரு கோடீஸ்வர இளைஞன் வழியில் சந்திக்கும் நிகழ்வுகள் மூலம் வாழ்கையை புரிந்து கொள்கிறான். வழக்கமான காதல் கதையாய் இல்லாமல் காதல் மூலமாய் வாழ்கையின் தேடல்களை தர முயற்சித்திருப்பதால் வித்யாசமான படமாய் அமைகிறது. மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்கிற படத்தின் தாக்கம் படத்தில் இருந்தாலும், இயல்பான திரைக்கதையால் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார்கள். அபிராம் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரன். ஜானகி என்கிற டாக்டர் பெண்ணை துரத்தி, துரத்தி காதலிக்கிறான். ஜானகி ஒரு சோஷியல் கான்ஷியஸ் இருக்கிற மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே வாழ்கிற பெண். அபிராமோ.. அவனுடய வாழ்கையில் மற்றவர்களுக்கான இடமே இல்லாதவன். இவர்கள் இருவருக்கும் காதல் வர இருக்கும் தருணத்தில் ஒரு விபத்தினால் அவர்கள் பிரிகிறார்கள். அதற்கு பிறகு ஜானகியை க...