Posts

Showing posts with the label தந்தையர் தினம்

அப்பா

Image
”இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்? எங்கயோ விழான்னியே..?” “ஆமாம்பா.. பதிவர் சந்திப்பு ஆர்கனைஸ் பண்ணியிருக்கோம். இன்னைக்கு சாயந்திரம் முத மொதலா.. ஒரு மீட்டிங் ஹால்ல.. அதுக்கான ஏற்பாடு பார்கத்தான் போறேன். சரி நான் கிளம்பட்டா?” படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்து  இரு.. ஒரு விஷயம் உன் கிட்ட பேசணும்.” என்றார். நான் கிளம்பும் அவசரத்தில் இருந்தேன். அதே சமயம் ஒரு போன் அழைப்பு வந்தது. “சொல்லுங்கண்ணே… சரி.. ஏர்போர்ட்ல இருக்கீங்களா? ஓகே அப்ப போயிட்டு கூப்பிடுங்க” என்று போனை வைத்துவிட்டு நிமிர்ந்து ”அப்துல்லா” என்றேன் அப்பாவிடம். “நானும் அதைத்தான் கேட்கணுமின்னு இருந்தேன். என்ன ஆச்சு உன் ப்ராஜெக்ட்? ஏதாவது ப்ரோடியூசர் மீட் கிடைச்சுதா..? அவரு ப்ரெண்ட் மூலமா ஒருத்தரை பேசிட்டிருந்தியே..? என்ன சொல்றாங்க?” “பேசிட்டிருக்கேன்பா.. ஒரு மாசத்துல சொல்றேன்னு இருக்காங்க.. சரி.. நான் கிளம்பவா..?” நிமிர்ந்து என்னை பார்த்தவர்.. “ரொம்ப டயமாயிருச்சோ..?” ஆழமாய் பார்த்தார். அவர் பார்வை அவ்வளவு சரியாக இல்லை. ஒரு மாதிரி கண்கள் டயலூட் ஆகியிருந்தது. “என்ன காலையிலிருந்து படுத்திட்டேயிருக்கே. உடம...