Thottal Thodarum

Nov 25, 2014

கோணங்கள் - 8

கோணங்கள் - 8: ஆஹா + ஓஹோ = ஸ்வாகா!அனுபவங்கள் மட்டுமே கசப்பான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் கண் முன்னால் இருக்கும்போது அவர்களது முன்மாதிரிகளை ஏற்றுக்கொள்ளத் திரையுலகில் தடையாக இருப்பது எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஈகோ. ஃபைனான்சியர்கள் எல்லோரும் தயாரிப்பாளர்கள் அல்ல என்று சொன்னதால் பலரின் கவனத்தையும் பெற்றேன். படம் தயாரித்துத் தோற்ற ஒரு ஃபைனான்சியர், “நான் தோற்றதற்கான காரணம் இப்போது புரிஞ்சிருச்சு, அதனால்தான் பைனான்ஸ் மட்டும் பண்றேன்” என்றார். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் பண்ணியவர்களின் நிலையே இப்படியென்றால் இன்று புதிது புதிதாய் வரும் சாப்ட்வேர், மற்றும் ரியல் எஸ்டேட் பின்னணி கொண்ட தயாரிப்பாளர்களின் கதை?

Nov 24, 2014

கொத்து பரோட்டா -24/11/14

என் ட்வீட்டிலிருந்து
Naa Bangaru thalli. receiving extrodinary reports in chennai iam happy

எங்களாலத்தான். அவங்க ஒண்ணியும் பண்ணலை.
‪#‎ஏனிந்தநாரப்பொழப்பு‬

எவ்வளவோ வாட்டி கேட்டுட்டேன். இன்னும் பிடிபடலை..


பசங்க மனசு பேரரசு படம் மாதிரி பொண்ணுங்க மனசு நோலன் படம் மாதிரி ‪#‎தொட்டால்தொடரும்‬ இம்பாக்ட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 18, 2014

கோணங்கள் -7

கோணங்கள் 7 - விடாது கருப்புகும்கி படப்பிடிப்பில் ஒத்துழைக்கும் யானை

பெரிய நடிகர்கள், இயக்குநர், டெக்னீஷியன்கள் உள்ளடங்கிய புராஜெக்டா என்று பார்த்துத்தான் ஒரு படத்துக்கு ஃபைனான்சியர் பணம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு அந்த புராஜெக்டை ஆரம்பித்திருக்கும் தயாரிப்பாளரின் சொத்து, அவர் தயாரித்த முந்தைய படங்களின் ட்ராக் ரெக்கார்ட் ஆகியவற்றையும் பார்க்கிறார்கள். கொடுத்த காசைத் திரும்ப வாங்க முடியவில்லையென்றால் படத்தின் விநியோக ஏரியாவையோ, அல்லது சாட்டிலைட் ரைட்ஸையோ ஹோல்டிங் வைத்திருப்பார்கள். இவர்களது நோக்கமே வட்டியும், முதலும்தான்.

Nov 17, 2014

கொத்து பரோட்டா -17/11/14

சென்ற வாரம் ரிலீஸான தமிழ் படங்கள் ஏழுக்கு மேல். சென்னை தேவி கருமாரியில் நான்கு புது திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. பகல் காட்சிக்கு வந்திருந்த ஆட்கள் மொத்தமே 6 பேர் இருந்தார்கள். எந்த படம் ஓடும்னே தெரியலை. பார்த்த நண்பர் சொல்லி புலம்பினார். பக்கத்து ஐநாக்ஸில் சற்றே தெரிந்த நடிகர் நடிகை நடித்த புதுப்படத்திற்கு டிக்கெட் எடுத்தேன் மொத்தமே அறுபது பேருக்கு மேல் தியேட்டரில் ஆள் இல்லை.  400 பேருக்கு மேல் அமரும் அரங்கமது. ஆனால் படம் பார்க்க உட்கார்ந்த அரை மணி நேரத்தில் பேஸ்புக்கில் எல்லா ஊர்களிலும் ஹவுஸ்புல் என்கிற ரேஞ்சுக்கு ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியே வரும் போது ஏதோ ஒரு வெப்சைட்காரர்கள் மக்கள் ரிப்போர்ட்டுக்காக காத்திருந்தார்கள். என்னுடன் வந்த ஆட்கள் உட்பட முதல் இருபது பேர் எதுவுமே சொல்லாம போனார்கள்.  வந்த ஏழு படங்களில் மூன்று படங்களுக்கு நிறைய ஊர்களில் வாண்ட் ஆப் ஆடியன்ஸ். முதல் காட்சி கூட போடப்படாமல் தூக்கப்பட்டது. இப்படி ஒரு பக்கம் போகிறது என்றால் இன்னொரு பக்கம் புரிகிறதோ புரியலையோ நோலனின் இண்டர்ஸ்டெல்லர் வார நாட்களில் கூட ஹவுஸ்புல்லாக போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் என்ன ரொம்பவே பயமாத்தான் இருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 12, 2014

கோணங்கள் -6

கோடம்பாக்கத்தின் அப்பாவி ஆவிகள்!
ஒரு படத்தில் இருந்தது போல ஏழு காட்சிகள் காப்பியடித்த படத்தில் தொடர்ந்து இல்லையென்றால் அது காப்பிரைட்டில் வராது என்னும் நம்பிக்கை காலம் காலமாகப் பலரையும் கதை திருடும் சோம்போறிகளாக்கியிருக்கிறது.
கதைத் தாக்கம், கதை உருவல், கதைத் தழுவல் என்று கதைத் திருட்டுக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டாலும் சுட்டகதை வெட்டவெளிச்சமாகும்போது பாதிக்கப்பட்டவருக்குக் கடைசிவரை கடுக்காய் கொடுக்கப் போராடுவதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது. திருடப்பட்ட கதையில் உருவான படம் வெற்றிபெற்றுவிட்டால் மற்ற மொழிகளின் ‘ரீமேக் உரிமை’ பல லட்சங்கள், கோடி என்று விலைபோவதால், அதில் பலனடையப்போவது முழுக்கவும் கதையின் காப்பிரைட்டை வைத்திருப்பவர்தான்.

Nov 10, 2014

கொத்து பரோட்டா -10/11/14

தொட்டால் தொடரும்
தொட்டால் தொடரும் படத்தின் புதிய 30 செகண்ட் டீசர். விரைவில் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும். வரி விலக்கிற்காக காத்திருக்கிறோம்.உங்கள் கருத்துக்காக.. எங்களது புதிய டீசர்
####################################

Nov 5, 2014

கோணங்கள் -5

கூட்டத்தில் சிக்கிய குழந்தைகள்!

நிறைமாதத்தில் இருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நிலைதான் இன்று கோலிவுட்டில் பரிதவிப்பவர்களின் நிலையும். “படம் எடுக்கிறதுன்னா என்ன விளையாட்டு வேலையா? அப்படியே படம் எடுத்துட்டாலும், ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பிரசவ வேதனை. அதனாலதான் லேப்லேர்ந்து பிரிண்டை எடுக்கிறதை டெலிவரின்னு வச்சிருக்கான்” என மறைந்த தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் சொல்வார். அவர் சொன்னது 200 சதவிகிதம் உண்மை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் லேப், ப்ரிண்ட், டெலிவரி என்னும் முறை மாறியிருந்தாலும், ரிலீஸ் செய்ய முற்படும்போது கிடைக்கும் வலி முன்பைவிட மோசம். நார்மல் டெலிவரியே கிடையாது எல்லாமே சிசேரியன்தான்.

Nov 3, 2014

கொத்து பரோட்டா -03/11/14

அசோக்நகர் பஸ்ஸ்டாண்ட்
ஞாயிறு இரவு. அவ்வளவாக கூட்டமில்லை. கிட்டத்தட்ட எல்லா பஸ்களும் காலியாக்வே இருந்தது. கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள். நண்பர் செந்தில் மன்னார்குடி பஸ்ஸுக்காக காத்திருந்தார். பஸ்ஸுக்கு காத்திருக்கையில் பணக்காரன் அவனுக்கான வசதி கிடைச்சா காசைப் பத்தி கவலைப்படமாட்டான். ஏழை அதிகமா காசு கேட்டா சண்டைக்கு வருவான். அதிகமான மிடில் க்ளாஸ்தான் ரெண்டுத்துக்கும் போக முடியாம அவஸ்தை படுவான் என்று சொல்லிக் கொண்டிருக்க, மதுரைக்கு போக பக்கா கிராமத்து குடும்பம் ஒன்று ஆட்டோவில் வந்திரங்கியது. மீட்டரைப் பார்த்து காசை சரியாய் கொடுத்தவர்கள் மதுரை பஸ்ஸுக்காக காத்திருக்க, ஒரு பஸ் ரொம்ப நேரமாய் ஆட்களுக்காக காத்திருக்க, இவர்களைப் பார்த்த பஸ்காரன் “அண்ணே மதுரைண்ணே.. வாங்க..” என்றதும் “எவ்வளவு?” என்று கேட்டார் பெருசு. உடன் நான்கு டிக்கெட்டுகள் என்று கண்ணாலயே கணக்குப் போட்டு, தோராயமாய் ஒர் அமெளண்டை சொல்ல, அது கட்டுப்படியாகாது என பெண்கள் கூட்டம் அமைதியாய் முகத்தை திருப்பியது. அவர்களது ரியாக்‌ஷனைப் பார்த்த பெருசு “வேணாம்பா.. நீ ஆள் ஏத்தி கிளம்பறதுக்கு லேட்டாவும்” என்று மறுத்தார். “அண்ணே.. அப்படியெல்லாம் இல்லைண்ணே.. இது மதுரை வேல்முருகன் பஸ்ஸு ஆள் ஏத்திட்டெல்லாம் போக வெயிட் பண்ண மாட்டோம். எல்லாம் ஆன்லைன்லேயே புக்காயிருச்சு” என்றான் அரை மணி நேரமாய் ஆள் ஏற்ற காத்திருக்கும் வண்டிக்காரன்.  லிஸ்டையெல்லாம் காட்டி “அண்ணே.. சொன்னா நம்புங்கண்ணே.. ஏசி வண்டிண்ணே.. ஏறி உள்ளார பாருங்க.” என்று கிட்டத்தட்ட கெஞ்சாத நிலையில் மாடுலேஷன் கேட்க, உடன் வந்த பெண்கள் “அய்ய.. ஏசியெல்லாம் நமக்கு ஒத்துக்காது. நீ வா” என்று பெருசை அழைத்தார்கள். வண்டிக்காரன் என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென முழித்துவிட்டு நாலு டிக்கெட்டை விட மனசில்லாமல் “அண்ணே.. ஏசியெல்லாம் கொஞ்சம் நேரத்தில ஆஃப் பண்ணிருவாங்கண்ணே.. வாங்க வண்டிய ஒரு வாட்டி வந்து பாருங்கண்ணே..” என்று கெஞ்சியும் வேலைக்காகம் நொந்து போய் திரும்பியவனை இன்னொரு ஆள் தோள் மீது கை வைத்து நிறுத்தி “தம்பி ஏசி வண்டின்னு தானே சொல்லி காசு வாங்கின.. இப்ப என்னடான்னா.. கொஞ்சம் நேரத்தில ஆப் பண்ணிருவேங்குறே.. நீ என் காசைக் கொடு நான் வேற வண்டி பாத்துக்குறேன்” என்றார். வண்டிக்காரன் முகம் போன போக்கை பார்க்க பாவமாய் இருந்தது. அண்ணே வேல்முருகன்ணே.. பாவம்ணே.. புள்ள பாடா படுது கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்கண்ணே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@