Thottal Thodarum

Nov 25, 2015

எண்டர் கவிதைகள் -27


கிளர்ந்தெழுந்து
அடங்கிவிட்ட காமம்
கொடுக்கும் அவ்வளவுதானா?
என்கிற உணர்வு
ருசிக்குமிருக்கிறது. 
கேபிள் சங்கர்

Nov 24, 2015

ஃபுட் வாக்

ஃபுட் வாக்
மாலை நேரம். ஸ்நேக்ஸ் டைம். உதவி இயக்குனர்களுடன் பேசி கொண்டிருந்தேன். என் அலுவலகத்தின் அருகில் இருக்கு ஒரு தள்ளுவண்டிக் கடையில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜியையும், அதற்கு பக்கத்து டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் கிடைக்கும் மசால் வடையையும் வாங்கி வரச் சொன்னேன். உதவியாளர் புதியதாய் சேர்ந்தவர் ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு, கிளம்பினார். சூடான ஒரு டீயுடன், லேசான சுளீர் மிளகாய் பஜ்ஜியும், மொறு மொறு மசால் வடையும் கொடுத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிய ஆரம்பித்தது. வாங்கி வந்த உதவியாளர் “எப்படி சார் இப்படி தேடித் தேடி கண்டுபிடிச்சி வச்சிருக்கீங்க. அட்டகாசம்” என்று சிலாகித்தபடி இன்னொரு வடையையும், பஜ்ஜியையும் கையில் எடுத்துக் கொண்டார். ”நாம சீன் பிடிக்கிறதுக்காக தேடியலையறோமில்லை அது போலத்தான்” என்றேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாலு பேராவது ஏரியா பேர் சொல்லி அங்க நல்ல சாப்பாட்டுக்கடை எதுனாச்சும் சொல்லுங்க என போன் பண்ணாத நாளே இல்லையென்று சொல்ல முடியும்.

Nov 23, 2015

கொத்து பரோட்டா - 23/11/15

ஏற்கனவே சென்னை மிதந்து இப்போதுதான் வடிய ஆரம்பித்திருக்கிறது. இப்போது திரும்பவும் அவ்வப்போது நாலு கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் கொட்டித் தீர்க்கிறது. இதற்கிடையில் அங்க ஏரி உடைஞ்சிருச்சு, இங்க ரோடெல்லாம் வெள்ளம், செம்பரம்பாக்கத்தை மறுக்கா திறந்துட்டாங்கன்னு எல்லாம் வாட்ஸப்பில் புரளி பரப்பி வருகிறார்கள். நண்பர்களோடு வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, தானே புயலில் செயல்பட்ட அளவில் பாதி செய்திருந்தால் கூட சென்னைக்கு விடிந்திருக்குமென்றார்கள். அதானே என தோன்றியது.

Nov 16, 2015

கொத்து பரோட்டா -16/11/15

பேய் மழை பெய்துகொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாய் நான் கே.கே.நகரிலிருந்து விருகம்பாக்கம் வரை மட்டுமே அதுவும் காரில் சென்று கொண்டிருக்கிறேன். அதுவும் ட்ராபிக் இல்லாத மதிய நேரமாய் பார்த்து. டி.நகர் பக்கமெல்லாம் போக வர தைரியமில்லை. பாதி நேரம் இருக்கும் சப்வேயெல்லாம் தண்ணீர் ரொம்பி நீச்சல் குளமாய் காட்சியளிக்கிறது. நடுவில் மழையில்லாத ஒரு நள்ளிரவில் என் தாய் மாமா அகால மரணமடைந்தார். மாஸிவ் அட்டாக். பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர் சப்வே எல்லாம் தண்ணீர் இல்லாமல் இருந்தது. அவர் செய்த புண்ணியம். மழைக்காலத்திற்காக எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யாத ஒர் அரசாங்கம். இருக்கும் வரை நமக்கென்ன என்று ப்ளாஸ்டிக் மற்றும் கழிவுகளால் சாக்கடைகளை அடைத்த பொது மக்கள் என மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீ செய்ய வேண்டியதுதானே என்று கேட்டால் நான் ஒருத்தன் செய்து சரியாகிவிடுமா? சமூகம் மாறணும் என்கிறார்கள். நாம் சமூகத்தின் ஒர் அங்கம் என்பதை மறந்துவிட்டு. 

Nov 9, 2015

கொத்து பரோட்டா -09/11/15

மால் உள்ள இடத்தில் பக்கத்தில் பார்க்கிங் திறப்பதுதான் தற்போது லாபகரமான பிஸினெஸ். ஏனென்றால் மால்கள் அடிக்கும் கொள்ளை அப்படி. பீனிக்ஸ் மாலுக்கு எதிரே ஒரு பைக் பார்க்கிங்.  இன்னொன்று பக்கத்தில் 200 அடி ரோட்டில். விருகம்பாக்கம் ஐநாக்ஸுக்கு அதன் பக்கத்தில் உள்ள சின்ன தெருவில் பைக் பார்க்கிங் இருக்கிறது. பிவிஆருக்கு எதிரே பைக் மற்றும் கார் பார்க்கிங் கூட உள்ளது.  என்ன காருக்கு கொஞ்சம் சீக்கிரம் போய் இடம் பிடிக்கணும் என்கிறார்கள். மற்றபடி வெறும் பத்து ரூபாய்க்கு காலை முதல் மாலை வரை கூட பார்க் செய்து கொள்ளலாம். ஆட்டோக்களின் கொள்ளையால் கால் டாக்ஸி வளர்ந்தது. அது போல மால்களின் கொள்ளையாய் தற்போது புதிய பார்க்கிங் இடங்கள். இதுவும் கடந்து போகாமல் இருக்கட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@

Nov 2, 2015

கொத்து பரோட்டா -02/11/15

வரி விலக்கு அளிக்கப்படும் தொகை பொது மக்களுக்கே அன்றி தயாரிப்பளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கிடையாது என்பதை கோர்ட் தெளிவாக சொல்லியிருப்பது வரவேற்க்க தக்க விஷயம். என்ன இதே போல சில மாதங்களுக்கு முன் கோர்ட் இதோ போன்ற தீர்ப்பை சொன்ன போது சென்னையில் தேவி திரையரங்கம் மட்டும் வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு வரியில்லாம டிக்கெட் விற்க, அதற்கு மற்ற திரையரங்க உரிமையாளர்களிடமிருந்தும், விநியோகஸ்தர்களிடமிருந்தும், எதிர்ப்பு வர, மீண்டும் 120 ரூபாய்க்கே விற்க ஆர்மபித்தார்கள். கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்துவதில் நம் அரசிற்கு இருக்கும் அக்கறை அந்த அளவுக்குத்தான்.  அரசே கவலைப்படாத போது எப்படி தொழில் செய்கிறவர்கள் கவலைப்படப் போகிறார்கள் மதிக்கப் போகிறார்கள்? பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறதென்று. ஒரு வகையில் டாக்ஸ்ஃப்ரீ இல்லாமல் இருந்தால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு நான்கைந்து லட்சம் வெட்டிச் செலவு மிச்சம்.