Thottal Thodarum

Nov 2, 2015

கொத்து பரோட்டா -02/11/15

வரி விலக்கு அளிக்கப்படும் தொகை பொது மக்களுக்கே அன்றி தயாரிப்பளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கிடையாது என்பதை கோர்ட் தெளிவாக சொல்லியிருப்பது வரவேற்க்க தக்க விஷயம். என்ன இதே போல சில மாதங்களுக்கு முன் கோர்ட் இதோ போன்ற தீர்ப்பை சொன்ன போது சென்னையில் தேவி திரையரங்கம் மட்டும் வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு வரியில்லாம டிக்கெட் விற்க, அதற்கு மற்ற திரையரங்க உரிமையாளர்களிடமிருந்தும், விநியோகஸ்தர்களிடமிருந்தும், எதிர்ப்பு வர, மீண்டும் 120 ரூபாய்க்கே விற்க ஆர்மபித்தார்கள். கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்துவதில் நம் அரசிற்கு இருக்கும் அக்கறை அந்த அளவுக்குத்தான்.  அரசே கவலைப்படாத போது எப்படி தொழில் செய்கிறவர்கள் கவலைப்படப் போகிறார்கள் மதிக்கப் போகிறார்கள்? பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறதென்று. ஒரு வகையில் டாக்ஸ்ஃப்ரீ இல்லாமல் இருந்தால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு நான்கைந்து லட்சம் வெட்டிச் செலவு மிச்சம்.
@@@@@@@@@@@@@@@@@@@
லூக்ஸ் அரங்கம் கை மாற்றப்பட்ட விஷயத்தை சவுக்கு தளத்தில் ஒரு வருடத்துக்கு முன்பே தெள்ளத் தெளிவாய் அதற்கான டாக்குமெண்டுகளின் காப்பியோடு வெளியிட்டு விட்டார்கள். அஃபீஷியலாய் தற்போதுதான் லூக்ஸ் எஸ்.பி.ஐயிடமிருந்து, ஜாஸ் சினிமாவிற்கு மாறியிருக்கிறது என வெளியே சொல்லியிருக்கிறார்கள்.  உடனே ஏதோ புதிய செய்தியை தருவது போல ஹிந்து பத்திரிக்கையும், மற்ற பத்திரிக்கைகளும் சவுக்கு எழுதிய அதே போஸ்ட்டை தங்கள் லேங்குவேஜில் புதிதாய் கண்டுபிடித்தது போல எழுதுவது செம்ம காமெடியாய் இருக்கிறது. தற்போதெல்லாம் பத்திரிக்கைகள் அவர்களது ஆதரவு நிலைக்கு ஏற்ப எதை எப்போது வெளீப்படுத்துவது என்று யோசித்து தெரியப்படுத்துவதற்குள்  இணையம் மூலம் செய்திகள் பரவிவிடுகிறது. நிலைமை அப்படியிருக்க, புதிதாய் பொங்குவது என்ன கணக்கென்றே தெரியவில்லை. சரி.. ஃபோரம் மாலில் உள்ள அரங்குகள் யார் வசம் என்று இப்போதாவது முன்னமே சொல்ல ஆரம்பியுங்களேன். வாழ்க ஜனநாயகத்தின் நான்காவதுதூண்
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
அஞ்சாறு லட்சம் மிச்சம் தயாரிப்பாளருக்கு இந்த டாக்ஸ் ஃப்ரீ மக்களுக்குத்தாங்கிற ஹைகோர்ட் தீர்ப்பால.

சவுக்கு எழுதியதை ஒரு வருடம் கழித்து ஆதாரத்தோடு வெளியிடுகிறது தி ஹிண்டு. இதான் உன் டக்கா?:)

பெரியாரைப் பத்தி பேசுற அதே வாய்தான் ஜாதிகளைப் பத்தியும் பேசுதுங்க.. இவங்கள நம்பி ஓட்டு போட்டு. ம்ஹும்

though predictable and usual horror content, shakalaka shankar and dhanraj steels the show ‪#‎RajuGariGadhi‬

ஹய்ய்யா மழை.. மழை.. மழை.. சந்தோஷம்.. தண்ணிப் பிரச்சனை தீரட்டும்

நம்பிக்கை தான் வாழ்க்கை என்பது சமயங்களில் அபத்தமாகவும் தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@
தினத்தந்தி தனது ஆங்கில பத்திரிக்கை எடிஷனை ஆரம்பித்திருக்கிறது டி.டி நெக்ஸ்ட் என்கிற பெயரில் சென்னை பதிப்பு இலவசமாய் தமிழ் தினத்தந்தியோடு. ரெண்டு நாட்கள் தான் ஆகிறது என்கிற படியால் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. அதுவும் முதல் நாள் பக்கங்கள் பாதிக்கு விளம்பரங்கள்மட்டுமே இருக்க, ஒண்ணியும் சொல்றதுக்கு இல்லை. ஆனால் தந்தியின் ஆங்கில பத்திரிக்கைக்கு தினமலர் தினத்தந்தியில் வாழ்த்து விளம்பரம் கொடுத்திருந்தது ஒரு பக்கம் ப்ளாங்காய் பார்த்தால் நல்ல விஷயமாக தோன்றினாலும், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகங்களில் ஏதோ உள்குத்தாய் இருப்பது போல எனக்கு மட்டும் தான் படுகிறதா? டவுட்டு
@@@@@@@@@@@@@@@@@@@
மீயூசிக் வீடியோ
புஷ்பநாதன். சில வருடங்களுக்கு முன் அவரின் நாய் சேகர் என்று நினைக்கிறேன் அக்குறும்பட வெளியீட்டிற்கு என்னை சிறப்பு அழைப்பாளராய் அழைத்திருந்தார். காமெடி படம். ஒல்லியாய் மிக அமைதியாய் இருந்தார் புஷ்பநாதன். ஹெச்.ஆராய் பார்த்த வேலையை உதறிவிட்டு சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டுமென்ற வெறியோடு அக்குறும்பட முயற்சியில் இறங்கியிருந்தார். பின்பு என்னிடம் உதவியாளராய் வாய்ப்பு கேட்டார். அச்சமயம் நான் படம் ஆரம்பிக்கவில்லை. அதனால் தொடர்பில் இருக்குமாறு சொல்லி வேலைய மட்டும் விட்டுவிடாதீர்கள் என்று அறிவுறுத்தினேன். அறிவுரையை கேட்டதாய் சரித்திரம் பூகோளம் இல்லையென்று உங்களுக்கு தெரியாததில்லை.  அதனைத் தொடர்ந்து வேலையை விட்டுவிட்டு, ஒர் சிறு முதலீட்டு திரைப்படத்தில் உதவி இயக்குனராய் பயணிக்க ஆரம்பித்தார். பசியும் பஞ்சமும் உடன் வேலைப் பார்க்க ஆரம்பித்தது. மெல்ல உண்மை புரிந்து குடும்ப ப்ரச்சனை மேலோங்க, மீண்டும் கல்லூரி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். சினிமா எனும் விடாது கருப்பு அவரை விடாமல் துரத்த, வேலையை விடாமல் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் குறும்பட முயற்சி. அதை விடாமல் போட்டிகள் நடக்கும் விழாக்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்தல் என்று தொடர்ந்து விடா முயற்சி. தற்போது அது மீசிக் வீடியோவுக்கு பாடல் எழுதி இயக்கும் அளவிற்கு மட்டுமில்லாமல் அவ்வீடியோவில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். சென்னை பேச்சுலர்ஸ் எனும் இந்த மீயூசிக் வீடியோ பாடல் நன்றாகவே வந்திருக்கிறது. இவரின் வளர்ச்சிக்காக, ஒவ்வொரு முறை ஸ்கிரிப்ட் சைடிலும், டெக்னிக்கல் சைடிலும், மேலும் ஒரு குறும்படத்தில் நடிக்காமல் விட்ட வகையிலும், இந்த மியூசிக் வீடியோவை மேலும் நல்ல சிங்கிளாய் வெளிவர எனக்கு தெரிந்த சில மீயூசிக் கம்பெனிகளுக்கு அறிமுகம் செய்தததைத் தவிர பெரிதாய் ஏதுமில்லை. பட் நல்ல வளர்ச்சி. சூப்பர் சிங்கர் திவாகர் மற்றும் சின்னாவின் குரலில், புஷ்பநாதனின் பாடல், நடிப்பு மற்றும் இயக்கத்தில் சென்னை பேச்சுலர்ஸ். உங்கள் பார்வைக்காக..
@@@@@@@@@@@@@@@@@@
நம்ப முடியாத விஷயம் தான், காணாமல் போன ஏரி, குளம்,  என கேள்விபட்டிருக்கிறோம். அல்லது தூர்க்கப்பட்டு, காணாமல் அடிக்கப்பட்டு, அதில்  வீடு கட்டி, கிரப்பிரவேசம் செய்து கொண்டிருக்கும் இந்நாளில் தூர்ந்து போன ஏரியை மீண்டும் செப்பனிட்டு, மீண்டும் ததும்பி நிற்கும் ஏரியாய்  பிரம்மாண்டமாய் மீட்டிருக்கிறார்கள் வாலாஜா ஏரியை மீட்டதன் மூலம் விவாசயத்தை மீட்டிருக்கிறார்கள். நிலத்தடி நீர் நிலையை ஏற்றியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் மட்டுமல்ல, அதில் நமக்காக பாடுபட ஆர்வமாயிருந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சுகன் தீப் சிங் போன்ற அரசாங்க அதிகாரியின் முயற்சியும்,  ஒவ்வொரு பொதுதுறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அந்த  ஏரியா சுற்றுப்பட்ட ஊர்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டுமென்ற சட்டத்தை முன்னிறுத்தி என்.எல்.சியே அந்த ஏரியை மீட்கக்கூடிய முழு செலவையும் ஏற்க வேண்டுமென்று முன் வைத்து கோரிக்கை ஏற்க செயலில் இறங்கினார் கலெக்டர்.  தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் போராட்டம், என  சில பல வருடங்கள் போராட்டங்கள் போனது.  தற்போது 2014ல் ஆரம்பிக்கப்பட்டு நம் கண் முன்னே ஏரி ததும்பும் தண்ணீரோடு. அதன் டீடெய்ல்டு ரிப்போர்ட்..  
@@@@@@@@@@@@@@@
 ரெண்டு நாள் மழைக்கு சென்னை நாறுகிறது. ததும்புகிறது இன்னும் சில இடங்களில். ஏற்கனவே மோசமான ரோடுகள் தற்போது மேலும் மோசமாகி பல்லிளிக்கிறது. இதை திமுக அனுதாபி அல்லது அதிமுக (அ) அனுதாபியாகவோ சொல்லவில்லை. ஒரு தமிழ் குடிமகனாக.. அய்யோ.. தமிழ் நாட்டின் நல் குடிமகனாக  அடச்சே.. சரி.. தமிழ் நாட்டில் வாழ்கிறவனாகச் சொல்கிறேன. முந்தா நாள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து அம்பிகா எம்பயர் வருவதற்கு சுமார் முக்கால் மணி நேரம் ஆகியிருக்கிறது. அதற்கு பிறகு செம்ம காலி.. காரணம் தண்ணீர் தேங்கியிருப்பதால் பெரிய வண்டிகள் தவிர, வழக்கமாய் தண்ணீர் தேங்கிய ரூட்டில் பயணித்தவர்களைத் தவிர, டூவீலர்கள், சிறு கார்கள், புதியதாய் தண்ணீர் தேங்கும் பக்கம் போக பயந்தவர்கள்  ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் ட்ராபிக் போலீஸ் இல்லாமை. கோயம்பேடுக்கு பிறகு, அரும்பாக்கம் பக்கத்தில் போலீஸ் இருந்தார்கள் அதன் பிறகு வரும் பெரியார் பாதை  சிக்னலில் போலீஸ் இல்லை. இதனால் நம் மக்களையும் சும்மா சொல்லக்கூடாது. நான் முந்தி நீமுந்தி என போட்டிப் போட்டு ட்ராபிக் ஜாமை மேலும் அதிகமாக்கினார்கள்.
@@@@@@@@@@@@@@@
இன் லூப்
@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why was the guitar teacher arrested?
For fingering a minor.
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல தொகுப்பு.

கலையன்பன் said...

மிகவும் மனதை கவர்ந்த முக்கிய செய்தி,
வாலாஜா ஈரி மீண்டும் மீட்கப்பட்ட தகவல்.

nimmathiillathavan said...

Very very Nicesongs both. Nice melody.hats off to u also