3 IDIOTS –Hindi Film Review
காணாமல் போன தன் நண்பனை தேடி அலையும் மற்ற இரு நண்பர்கள் தங்களின் கடந்த காலத்து காலேஜ் வாழ்க்கையை நினைத்து பார்க்க என்று ஆரம்பிக்கிறது கதை. இஞ்ஜினியரிங் காலேஜில் படிக்கும் மூன்று இளைஞர்களின் கதை. போமன் ஈரானி நடத்தும் டெல்லியின் முக்கியமான இஞ்ஜினியரிங் காலேஜில், பொருளாதார முறையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் மூன்று இளைஞர்களான, அமீர், மாதவன்,ஷர்மான். அமீர் ஒரு பணக்கார வீட்டு இளைஞன், மாதவன் ஒரு மிடில்க்ளாஸ், ஷர்மான் வறுமைக் கோட்டுக்கு மிக அருகில் இருப்பவன். இவர்களுக்குள் நடந்த அந்த சில வருட காலேஜ் வாழ்க்கையையும் அவர்களின் வெற்றி தோல்விகளையும் இவ்வளவு சுவைபட சொல்ல முடியுமா..? முடியும் என்றிருக்கிறது இந்த குழு. ஆரம்பத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். மாதவனின் கேரக்டரை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒருபழைய ஏர்கண்டிஷனரை காட்டி தங்களுடய பொருளாதாரத்தை பற்றி மகனிடம் சொல்லும் அப்பா, இன்னொரு பக்கம் ஷர்மானின் வழக்கமான பரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் தங்கை, உடல்நலமில்லாத அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெ...