Posts

Showing posts with the label தமிழ்மகன்

கொத்து பரோட்டா - 11/02/13

Image
இணையத்தில் கொஞ்சம் கில்மாவான படங்களை பார்க்க வேண்டுமென்றால் பலான வெப்சைட்டுகளுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் சமீப காலமாய் கூகுளின் மூலமாய் வெகுஜன இணையதளங்களில் வரும் விளம்பரங்களில் டூபீஸில் பெண்களின் மார்பு மற்றும் இடையை மட்டுமே படங்களாய் போட்டு, வீட்டில் போரடித்துக் கொண்டிருக்கும் பெண்களை சந்திக்க விருப்பமா? என்று அழைக்கும் விளம்பரமும், இன்னொரு  பக்கம் பெட்டில் மார்பகத்தை அழுத்தியபடியான ஒரு படத்துடன் ஏன் என்னை முயற்சி செய்யக்கூடாது? என்ற அழைப்போடு படங்களைப் போட்டு அந்தந்த இணையதளங்களுக்கான லிங்கை க்ளீக் செய்ய வைக்கிறார்கள். சாதாரண சினிமா வெப்சைட்டுகளில் கூட இத்தகைய விளம்பரங்கள் வர சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவ்விளம்பரங்களைத் தாண்டித்தான் வந்தாக வேண்டியிருக்கிறது. கூகுள் நிறுவனத்தில் விளம்பர கணக்கு வைக்கும் முன்பு நமது தளத்தை வயது வந்தோர்க்கான தளமா? என்றெல்லாம் விசாரித்துத்தான் விளம்பரம் வெளியிடவே அனுமதி கொடுக்கும். அப்படிப்பட்ட பட்சத்தில் வெகுஜன தளங்களில் இம்மாதிரி விளம்பரங்களை கூகுள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது என்ற உண்மை ஒரு புறம் கில...